Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 216

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 216

by Thenaruvi Tamil Novels
6 views

அத்தியாயம் 216: விலகி செல்கையில் நெருங்க துடிக்குதே (பார்ட் 1)

வருணின் அறையில்…

 தன்னுடைய ஒரு கையை முட்டுக் கொடுத்து படுத்து கொண்டு அதில் தன்னுடைய தலையை சாய்த்து கொண்டு ரித்திகா என்ன செய்கிறாள் என்று பார்த்து கொண்டு இருந்தான் வருண் . முதலில் வருணின் மீது இருந்து பொறுமையாக எழுந்து அவன் அருகே அமர்ந்த ரித்திகா, தன்னுடைய மெல்லிய உடலை அப்படியும் இப்படியும் வளைந்து தன் மீது இருந்த மல்லிகை பூ சரங்களை மெதுவாக எடுத்து கொண்டு இருந்தாள். அவள் டான்சர் என்பதால் இயல்பாகவே அவளுடைய உடலுக்கு நல்ல பிளக்ஸபிரிட்டி இருந்தது. 

ரித்திகா இன்னும் அவள் வெளியே செல்லும்போது அணிந்து இருந்த அதே புடவையை தான் அணிந்து இருந்தாள். ஆனால் காலையில் பின்னலிட்டு இருந்த அவளுடைய நீண்ட கூந்தலை இப்போது விடுதலை செய்து ஒரே ஒரு கிளிப் மட்டும் போட்டு அதை காத்து வைத்து இருந்தாள். அதனால் சீலிங் ஃபேனின் உதவியால் அவளுடைய கூந்தல் நடனமாடத் தொடங்கியது. ரித்திகா தன்னுடைய உடலை அசைத்து வளைத்து அந்த மல்லிகை சரங்களில் தன் மீது  இருந்து அகற்றுவது கூட வருணின் கண்களுக்கு நளினமான அசைவுகள் நிறைந்த நடனமாக தான் தெரிந்தது. 😍 இதில் அவள்  அசைந்ததில் அவள் அணிந்து இருந்த சேலையும் அவ்வப்போது அசைந்து அசைந்து எலுமிச்சை நிற தேகத்தை உடைய மங்கை அவளின் திருமேனியை கொஞ்சம் கொஞ்சமாக காட்டிவிட்டு மறைத்து கொண்டது. 

வருண் அவளுடைய ஒவ்வொரு அசைவுகளையும் தன்னை அறியாமல் தன் வாயை பிளந்து கொண்டு பார்த்து ரசித்து கொண்டு இருந்தான். 😍 🥰 எப்படியோ போராடி தன் மீது இருந்த அனைத்து மல்லிகை பூ சரங்களையும் எடுத்து கீழே போட்டுவிட்டு பெருமூச்சு ஒன்றை விட்ட ரித்திகா வருணை பார்த்து, “அப்படியே இருங்க நான் உங்க மேல இருக்கிறதையும் எடுக்கிறேன்.” என்று சொன்னவள், தான் ஏதோ ஒரு முக்கியமான வேலையை செய்யப் போவதை போல் தன்னுடைய முகத்தை மிகவும் சீரியஸாக வைத்துக் கொண்டு அந்த மெத்தையில் மண்டியிட்டபடி வருணை சுற்றி சுற்றி வந்து அவன் மீது இருந்த அனைத்து மல்லிகை சரங்களையும் ஒவ்வொன்றாக அகற்றினாள். 

 அதில் அவ்வப்போது வருணை ரித்திகாவின் மெல்லிய விரல்கள் தீண்டி சென்றது. அந்த சிறிய தீண்டல்கள் கூட  ஏதோ செய்தது  அவனை  கிரங்க செய்தது. அதனால் இவள் தன்னுள் என்ன மாயத்தை செய்து கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக வருண் ஆளையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது திடீரென்று அவனை திரும்பிப் பார்த்த ரித்திகா, “அவ்ளோ தான். இது இரண்டு மேலேயும் நீங்க படுத்து இருக்கீங்க. அதனால என்னால எடுக்க முடியல.” என்று சொன்னவள், கலைப்பாக வருணின் அருகே அமர்ந்தாள். அந்த அறையில் ஏசி ஓடியும், சீலிங் ஃபேன் சுற்றியும் கூட ரித்திகா இவ்வளவு நேரம் மிகுந்த சிரக்தை உடன் செய்த அந்த வேலையால் அவளுடைய மலர் மேனியில் ஆங்காங்கே சில வியர்வை துளிகள் மலர்ந்து இருந்தன. 

அதை கவனித்தபடி அவளை தலை முதல் கால் வரை பார்த்த்த வருண், அவளுடைய கழுத்தில் இருந்து சுரந்து அவளுடைய ஆடைக்குள் பயணித்து விட வேண்டும் என்று ஆர்வத்தில் புதிதாக துளிர்த்த ஒரு வியர்வைத் துளியின் மீது வருணின் பார்வை பட்டது. 😍 அதை கண்டவுடன் அவன் என்னை நினைத்தானோ தெரியவில்லை. அவன் மெதுவாக ரித்திகாவின் அருகே செல்ல தொடங்கினான். திடீரென்று அதை கவனித்த ரித்திகா, “என்னங்க… என்னாச்சு…???” என்று பதட்டமான குரலில் திக்கி திக்கி கேட்டாள். 

அவளுடைய அந்த கேள்விகளை எல்லாம் புறக்கணித்த வருண் மண்டியிட்ட படி அவள் அருகே அமர்ந்து அவருடைய முகத்தில் அருகே மிகவும் நெருக்கமாக குனிந்தான். அவன் தன் அருகே வரவர பயந்து போன ரித்திகாவின் இதயம் பதட்டத்தில் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. ❤️ “இவர் இந்த ஃபர்ஸ்ட் நைட் எல்லாம் வேண்டாம்னு தானே எல்லாத்தையும் கலைச்சு போட்டாரு. இப்ப என்ன ஆச்சு இவருக்கு அதுக்குள்ள ஒரு வேளை மூடு மாறிடுச்சோ…!! ஐயைய்யோ.. அப்படி எல்லாம் இருக்க கூடாது. ப்ளீஸ் முருகா என்னை காப்பாத்து.” என்று நினைத்த ரித்திகா, தன்னுடைய கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.

ரித்திகாவின் அருகே சென்ற வருண், அவளுடைய சங்கு கழுத்தில் இருந்த அந்த வியர்வைத் துளியை தன்னுடைய இரு விரல்களால் சுண்டி விட்டான். அவன் என் தன்னை ஏதோ செய்யப் போகிறான் என்று நினைத்து அதை எதிர்பார்த்து தயாராக இருந்த ரித்திகாவின் உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது. 😍 🥰 வேகமாக ரித்திகா அருகே இருந்து எழுந்த வருண், அவளை திரும்பியும் பார்க்காமல் வேகமாக ரெஸ்ட் ரூமிற்குள் சென்று புகுந்து கொண்டான். 

“அட ச்சீ… இவ்ளோ தானா.. இதுக்கு தான்  இவ்ளோ பில்டப்பா…??” என்று நினைத்த ரித்திகா தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டு, அவளும் தன்னுடைய அறையில் தனக்கென இருக்கும் ரெஸ்ட் ரூமிற்கு குளிப்பதற்காக சென்று விட்டாள். ரெஸ்ட் ரூமிற்குள் வந்த வருண் அங்கு இருந்த கண்ணாடியில் தன்னுடைய முகத்தை பார்த்தான். அவனுடைய உடல் ரித்திகாவை நினைத்து தகித்துக் கொண்டு இருப்பதை ஆனால் உணர முடிந்தது. இதற்கு முன் இறுதியாக இது அவனுக்கு ஜான்வியிடம் தோன்றிய உணர்வு. அவளுடைய இறப்பிற்குப் பின் இப்போது தான் இப்படி உணர்கிறான் வருண். அதனால் இந்த உணர்வை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்கு தெரியவில்லை. 

இப்படியே அவன் ஜான்வியையும் ரித்திகாவையும் பற்றி மாறி மாறி யோசித்து கொண்டு இருக்க, ஒரு வேளை தான் ஜான்வியின் இடத்தில் ஒரு நாளிலேயே ரித்திகாவை வைத்து பார்க்கத் தொடங்கி விட்டோமா என்று வருண் உடைய மனசாட்சி அவனையே கேள்வி கேட்க; ஒரு நாள் செண்பகம் அவனிடம் “அட போடா உங்க கல்யாணத்துக்கு அப்புறம் ரித்திகா
உன்னோட பொண்டாட்டின்ற நினைப்பு உனக்கு எப்படி வராம போகுதுன்னு நானும் பாக்கிறேன்.” என்று சொன்னது அவனுக்கு இப்போது ஞாபகம் வந்தது.

அதை நினைத்துப் பார்த்தவனுக்கு ஒரு வேளை தன்னுடைய அம்மா சொன்னதைப் போல தான் எப்போது நடந்து கொள்கிறோம் போல என்று தோன்ற குற்ற உணர்ச்சியிலும், கோபத்திலும், தன்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டி அங்கேயும் இங்கேயும் வீசி எரிந்துவிட்டு சவரை திறந்து விட்டு அதன் கீழே வெற்றுடலுடன் நின்றான் வருண். குளிர்ந்த நீர் வேகமாக அவனுடைய தலையில் அருவியாய் கொட்டி கொண்டு இருந்தது. 

அப்போது தன்னுடைய கண்களையும் கைகளையும் இறுக்கமாக மூடி கொண்டு இருந்த வருணின் நினைவுகள் முழுவதும் அவனும், ஜான்வியும் வாழ்ந்த வாழ்க்கையின் சான்றுகளான நினைவுகள் ஒரு நிழல் படமாக ஓடி கொண்டே இருந்தது. அதைப் பற்றி எல்லாம் நினைத்து பார்க்க.. பார்க்க.. ரித்திகாவை திருமணம் செய்து கொண்டு தான் ஜான்விக்கு துரோகம் செய்து விட்டோமோ..?? என்ற குற்ற உணர்ச்சி அவனுடைய நெஞ்சை போட்டு அழுத்த தொடங்கியது.

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured