Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 136

மூர்கனின் காதலி CH 136

by Thenaruvi Tamil Novels
46 views

அத்தியாயம் 136

அரவிந்த் கண்ணீருடன் “இனிமே நான் நிலாகிட்ட பேசி அவளை disturb பண்ண மாட்டேன். உங்க அண்ணன்கிட்ட அவளை அடிக்க வேணாம்னு மட்டும் சொல்லுமா.” என்று சொல்ல,

“நான்க்கூட இன்னும் கொஞ்ச நாள் இவர்க்கூட நல்லா பழகி இவர பத்தி தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா விஷ்வாகிட்ட இவங்கள பத்தி பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்படி எல்லாம் நடந்துருச்சு. ஆனா இதுல இருந்து ஒன்னு மட்டும் நல்லா தெரியுது. அரவிந்த் அண்ணா நிலாவ ரொம்ப trueஆ love பண்றாரு. இல்லை இல்லைன்னு சொல்லிட்டு கடைசியில நிலாவும் இவரை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா. நாமதான் ஏதாவது பண்ணி இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்.” என்று நினைத்துக் கொண்டாள் மேகா.‌

“எப்பவுமே லவ் ரொம்ப complicated subjectல..!!” என்று விஷ்வாவின் காரை பின் தொடர்ந்து சென்ற காரில் இருந்த சாரா சொல்ல, “உனக்கு தான் feelingsஏ இல்லையேம்மா..!! அப்புறம் நீ ஏன் இதை பத்தி எல்லாம் பேசுற..??” என்று கிண்டலாக கேட்டான் ரிஷி.

“ஹும்ம்… என் feelings இவனுக்கெல்லாம் எங்க புரிய போகுது..??” என்று நினைத்த சாரா, “Monkey நீ எல்லாம் என் feelingsஐ பத்தி பேசக்கூடாது ரிஷி. So, just shut up. Okay..!!” என்று சொல்ல, “உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானாடி..?? நான் மட்டும் நீ சொல்ற மாதிரி monkeyயா இருந்திருந்தா இந்நேரம் அப்படியே உன் மண்டையில இருந்து ஒவ்வொரு முடியா புடுங்கி எடுத்து உன்ன கதறிட்டு ஓட விட்டுருப்பேன்டி. நல்லவேளை நான் இப்படி handsome young manஆ பொறந்ததுனால தப்பிச்சிட்ட நீ..!! உன் மண்டையில அப்படி முடியே இல்லாம உன்னை பாத்தா செம காமெடியா இருக்கும்ல..!!” என்று கிண்டலாக சொல்லிவிட்டு சிரித்தான் ரிஷி.

“டேய்.. வாய மூடுன்னு சொன்னா.. உனக்கு அமைதியா இருக்க தெரியாதா..??” என்று கேட்ட சாரா, தன் அருகில் அமர்ந்து இருந்த ரிஷியை தொடர்ந்து அடிக்க, அவளது ஒவ்வொரு நகர்வையும் சரியாக முன்கூட்டியே யூகித்த ரிஷி அவளது அடிகளில் இருந்து சுலபமாக தப்பித்ததோடு அவளையும் தன் இரு கைகளால் மடக்கி பிடித்து லாக் செய்தவன், “என்கூட சண்டை போட்டா.. உன்னால எப்பயும் என்ன ஜெயிக்க முடியாது baby.” என்று மூச்சு வாங்க சொன்னான்.

“அதையும் பார்த்திடலாம். நீ after all‌ ஒரு singer. நான் trained professional wrestler and fighter. என்னோட fightsஐ எல்லாம் பாத்திருக்கியா இல்லையா..?? நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லடா.” என்று சாரா ஏளனமாக அவனைப் பார்த்து சொல்ல, “பாவம்.. சின்ன புள்ள நம்மள பத்தி எதுவும் தெரியாம பேசுது.” என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்த ரிஷி “அப்படியா.. let’s see. நீயும் நானும் professionalஆ ஒரு நாள் அதே மாதிரி Ringல fight பண்ணலாம். ஓகேவா..??” என்று கேட்டான்.
தன் மீது இருக்கும் நம்பிக்கையில் “ம்ம்ம்.. Why not..??” என்று வேகமாக சாரா கேட்க, “ஓகே. நீயே எப்போ எங்கன்னு சொல்லு. இந்த competition fairஆ நடக்கணும். இதுல யார் ஜெயிக்கிறாங்களோ, அவங்க தோக்குறவங்க என்ன சொன்னாலும் கேட்கணும்.” என்றான் அவன்.

“என்னடா.. ரொம்ப confidentஆ இருக்க போல..!! Competition rules ஞாபகம் இருக்குல்ல..?? நீ தோத்துட்டா, நான் உன்னை என்ன வேணும்னாலும் செய்ய சொல்லுவேன். Mind it.” என்று சாரா எச்சரிக்கும் தோரணையில் செல்ல, “அதையே தான் நான் உனக்கும் சொல்றேன். நீ தோத்துட்டா.. நான் என்ன சொன்னாலும் செய்யணும். அதுக்கு ரெடியா இரு.” என்று பதிலுக்கு தானும் திமிராக சொன்னான் ரிஷி.
“இவன் கண்ணுல கொஞ்சம்க்கூட பயம் தெரியலயே.. ஒருவேளை இவன் ஜெயிச்சிருவானோ..!!” என்று ஒரு நொடி யோசித்து தயங்கிய சாரா, “சேச்சே.. அதுக்கெல்லாம் chanceஏ இல்ல. நம்மளே இப்படி எல்லாம் யோசிச்சு இவன பெரிய ஆள் ஆக்கிட கூடாது.” என்று நினைத்து பின் தன் மனதை மாற்றிக் கொண்டாள்.

சில மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் சென்னை சென்று சேர்ந்தார்கள். இதற்கிடையில் தனது ரூமில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்த நிலா அரவிந்திற்க்கு பல முறை call செய்தாள். அவன் எடுக்கவில்லை.

“ஏன் அரவிந்த் எங்க வீட்ல இருக்கிறவங்க தான் என்ன புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்கன்னா, நீங்களும் இப்படி பண்றீங்க..?? நீங்க திடீர்னு ஏன் என்னை avoid பண்றீங்க..?? நம்ம love story நேத்துதான் start ஆச்சு. அதுக்குள்ள மத்தவங்களுக்காக இப்படி அத end பண்ணிடலாம்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்களா..?? அப்போ நான் சொன்னது கரெக்ட் தானே..!! நீங்க ஒரு சரியான பயந்தாங்கோலி. எந்த பிரச்சினை வந்தாலும் எனக்காக இருப்பேன்னு சொல்லிட்டு, எங்க அப்பா ஒரு அடி அடிச்ச உடனே நான் வேணாம்ன்னு உங்களால எப்படி நினைக்க முடிஞ்சது..?? எங்க அப்பா சொல்றாருன்னு.. என்னால என் மனசுல மாத்திக்க முடியலையே.. நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க??” என்று நினைத்து கதறி அழுதாள், தொடர்ந்து SMS, WhatsApp Facebook, Instagram என இந்த உலகில் என்னென்ன social media applications இருக்கிறதோ அது அத்தனையிலும் இருந்து அவனுக்கு “please அரவிந்த் என்கிட்ட பேசுங்க. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது. நீங்கதான் என்னோட husbandன்னு நான் முடிவு பண்ணிட்டேன். அது எப்பவும் மாறாது. Please talk to me. I love you அரவிந்த். I can’t live without you.” என்று பலவிதமாக நூற்று கணக்கில் அவனுக்கு messages அனுப்பினாள்.

முதலில் அதை எல்லாம் கனத்த இதயத்துடன் பார்த்து கண்ணீர் சிந்திய அரவிந்த், “I’m sorry நிலா. என்னால நீ கஷ்டப்பட வேண்டாம். உனக்காகதான் நான் உன்னை விட்டுட்டு போறேன். அது உனக்கு புரியலைன்னா கூட பரவால்ல. நீ என்ன கோழையாவே நினைச்சுக்கோ. அதுதான் எல்லாருக்கும் நல்லது. அப்பதான் என்ன உன்னால சீக்கிரமா மறக்க முடியும்.” என்று நினைத்து அவளை அத்தனை applicationகளிலும் block செய்து விட்டான்.‌

அதனால் இன்னும் மனதளவில் உடைந்து போன நிலா மேகாவிற்கு கால் செய்து, “இப்ப உங்க அரவிந்த் அண்ணாவுக்கு என்ன பிரச்சனையாம் அத்தை..?? எதுக்காக என்ன அவர் avoid பண்றாரு…?? அவர்தான் வேணும்னு ஒரு பொண்ணு நானே இவ்ளோ strongஆ இருக்கேன்ல்ல.. அந்த மாதிரி அவரால இருக்க முடியலையாமா..?? ஆக மொத்தம் என்ன பத்தி யாருமே யோசிக்க மாட்டாங்களா..??” என்று கோபம் கலந்த வருத்தத்துடன் கேட்டாள்.

“எல்லார் முன்னாடியும் அண்ணா உன்ன அடிச்சதுனால அவர்  emotionalஆ இருக்காரு நிலா. அவருக்கு கொஞ்சம் டைம் கொடு. வந்தவங்க உன்ன பொண்ணு தானே பார்த்துட்டு போயிருக்காங்க.. இன்னும் உங்களுக்கு marriage நடக்க one month time இருக்கு. அதுக்குள்ள நம்ம ஏதாவது பண்ணலாம். உனக்கு நானும் உங்க மாமாவும் இருக்கோம்.‌ நாங்க ஏதாவது பண்றோம். நீ கொஞ்சம் பொறுமையா இரு. அவசரப்படாத பாத்துக்கலாம்.” என்று சொல்லி மேகா அவளை சமாதானப்படுத்த, “எனக்கு பயமா இருக்கு அத்தை.‌

உங்களையும், மாமாவையும் நம்பித்தான் நான் கொஞ்சம் நார்மலா இருக்கேன். இல்லனா இன்னைக்கு நடந்ததுக்கும், உங்க அண்ணன் என்ன block பண்ணதுக்கும், நான் வேற மாதிரி react பண்ணியிருப்பேன். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நடக்கிறது எதுவும் பிடிக்கல. யாரையும் புடிக்கல. முக்கியமா எனக்கு இந்த வீட்ல இருக்கவே புடிக்கல. ப்ளீஸ் நீங்க சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க. என்னால இதுக்கு மேல பேச முடியல. Bye.” என்று கண்ணீருடன் திக்கி திணறி சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்து விட்டாள் நிலா.

” இந்த காளி அண்ணா மட்டும் விஷ்வா சொல்ல வர்றத பொறுமையா கேட்டு நிலா மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுகிட்டு அவ feelingsக்கு importance குடுத்திருந்தா, இப்போ இவ்ளோ பிரச்சனை தேவையா..?? இந்த வயசானவங்களோட ஒரே இஞ்சியா இருக்கு. இவங்கள என்ன சொல்லி மாத்தறதுன்னே தெரியல. நிலாவும், அரவிந்த் அண்ணவும் பாவம்.” என்று நினைத்து உள்ளுக்குள் புலம்பிய மேகா அவளது ரூமிற்கு சென்றாள்.

வீட்டுக்கு வந்தவுடன் நேராக மொட்டை மாடியில் உள்ள mini barக்கு சென்ற அரவிந்த் “என்னை மன்னிச்சுடுடி நிலா. நான் உன் கூடவே இருப்பேன்னு சொல்லிட்டு உன்ன தனியா அழ விட்டுட்டு வந்துட்டேன். I’m sorry நிலா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்டி. அதான் நான் உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு பாக்குறேன். ஐ லவ் யூ நிலா. நிலா… உன்ன மாதிரியெல்லாம் யாரும் இருக்க மாட்டாங்கடி. எல்லார் முன்னாடியும் தைரியமா நீ எனக்காக உங்க அப்பாகிட்ட பேசின. ஆனா உனக்காக எதுவுமே பண்ண முடியாத நிலைமையில உன்ன அப்படியே அங்க அப்படியே விட்டுட்டு நான் கிளம்பி வந்துட்டேனே நிலா.. I am sorry. நிலா.. என் வெண்ணிலா.. சத்தியமா நான் உன்னை எப்பவும் மறக்க மண்றேன் டி.” என்று குடித்துவிட்டு கையில் alcohol bottle உடன் கண்ணீருடன் உளறிக் கொண்டிருந்தான். அவனுக்கு மகேஷும், தயாளனும் company கொடுத்தார்கள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured