அத்தியாயம் 108
பிருந்தாவை இன்று இரவு சென்று சந்திக்கப் போவதால் ஒரே குதூகலத்தில் இருந்த தீரஜ் “இந்த டே எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ஸ்பெஷலா இருக்கணும். இதை லைஃப் லாங் அவ மறக்கவே கூடாது. எப்படி ஆவது இன்னிக்கி அவளை கரெக்ட் பண்ணி ம்ம்.. ம்ம்.. ம்ம்..!!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு ஒரே குதூகலத்தில் வாய் எல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு இருந்தான்.
அப்போது அவனது ஆபிஸ் ரூமின் கதவை படார் என்ற பலத்த சத்தத்துடன் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் தனு. பிருந்தாவுடன் சான்ஸ் கிடைத்தால் இன்று இரவு என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று டிஃபரண்ட் டிஃபரண்டாக யோசித்துக் கொண்டு இருந்த தீரஜ் அங்கே திடீரென தனு வந்ததால் ஏதோ பேயை பார்த்ததை போல மிரண்டு போனான்.
தன்னையும் அறியாமல் அவளை பார்த்தவுடன் அவனது கால்கள் எழுந்து நிற்க, “என்ன ஷாக் ஆய்டியா
பேபி?” என்று அவனைப் பார்த்து கிண்டலாக கேட்ட தனு தனது இதழ்களை கோணலாக வளைத்து அவனைப் பார்த்து புன்னகைத்தபடி உள்ளே சென்றாள். சிவ பூஜையில் நடுவில் கரடி போல அவள் வந்ததால் எரிச்சல் அடைந்த தீரஜ், “நீ எப்படி உள்ள வந்த? ரிசப்ஷன்ல நீ வெயிட் பண்றதா எனக்கு யாருமே கால் பண்ணி சொல்லலையே..!!” என்று கேட்டான்.
அவனது முகம் அஷ்ட கோணலாக சென்றதை வைத்தே தான் இங்கே வந்தது அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்ட தனு அவனை ஏளனமாக பார்த்தபடி சத்தமாக தன் கைகளை தட்டியவாறு அவன் அருகில் சென்று “வாவ் தீரஜ்.. இப்படித் தான் இருக்கணும்.. உன்னோட வேலை முடிஞ்சதுக்கு அப்புறமா இப்படித் தான் மத்தவங்கள கழட்டி விடணும். உன்னோட பிளான் வொர்க் அவுட் ஆயிடுச்சு. நீ நெனச்ச மாதிரி ரிஷி எமோஷனலி பிரேக் டவுன் ஆயிட்டான். அவன் அவனோட லவ் பெயிலியர்ல இருந்து ரெக்கவர் ஆகுறதுக்கு அவனுக்கு ரொம்ப டைம் ஆகும் அந்த கேப்ல இந்த கம்பெனியை டேக் ஓவர் பண்றது தானே உன்னோட பிளான்.. இதுக்காக நீ என்னை நல்லா யூஸ் பண்ணிக்கிட்ட..
நீ நெனச்சது எல்லாம் நடந்ததனால இப்ப நான் உனக்கு தேவையில்லாம போயிட்டேன். அதனால நீ என்ன இக்னோர் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்ட! நைஸ்.. என்னைக்காவது ஒரு நாள் நீ இப்படி பண்ணுவேன்னு எனக்கு தெரியும் பட் அந்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும்னு நான் நினைக்கவே இல்ல.
இத்தனை நாளா யார் கிட்டயும் எந்த பர்மிஷனும் கேட்காம டைரக்டா உன் கேபினுக்கு எத்தனை தடவை நான் வந்துட்டு போயிருப்பேன்.. அப்ப எல்லாம் உன் செகரட்டரையோ, ரிசப்ஷனிஸ்டோ என்னை எப்பயுமே ஸ்டாப் பண்ணதே இல்ல. பிகாஸ் நீயும் நானும் க்ளோசா இருக்கோம்னு எல்லாருக்கும் தெரியுமே.. இப்ப உன் பர்மிஷன் இல்லாம நான் எப்படி உள்ள வந்தேன்னு உனக்கு டவுட்டா இருக்கா?” என்று மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்து முறைத்தபடி கேட்டாள்.
“என்ன இவ நம்ம மைண்ட்ல இருக்கிறது எல்லாத்தையும் அப்படியே கரெக்டா சொல்றா! இவ என்னை விட பெரிய வில்லியா இருப்பா போல இருக்கே!” என்று நினைத்து வாயடைத்து போன தீரஜ் எதுவும் பேச முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அதற்கும் அவனைப் பார்த்து நக்கலாக சிரித்த தனு “என்ன தீரஜ் உன் மைண்ட்ல இருக்கிறது எல்லாத்தையும் அப்படியே கரெக்டா சொல்லிட்டனேன்னு பாக்குறியா? இத்தனை நாளா நான் உன் கூட பழகிட்டு இருக்கேன்.. எனக்கு உன்ன பத்தி தெரியாதா?” என்று கேட்டாள். அவள் அப்படி பேசிய பின்பு தான் அவள் வந்து தன்னிடம் மாட்டிக் கொள்ளவில்லை. நாமதான் அவளிடம் வசமாக மாட்டிக் கொண்டு இருக்கிறோம். இவளிடம் இருந்து தப்பித்து சென்று இவளுக்கு தெரியாமல் பிருந்தாவை திருமணம் செய்வது அவ்வளவு சாதாரணமான விஷயமாக இருக்காது என அவனுக்கு புரிந்தது.
இம்முறை கீர்த்தனா தன் மடியில் உட்கார்ந்து இருந்ததை மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என நினைத்து அவளை முந்திக் கொண்டு ரிஷி ஒரு பெரிய விளக்க உரையை கொடுக்க, இதற்கு முன் நடந்ததை மனதில் வைத்து தான் அவன் இப்படி பேசுகிறான் என்று புரிந்து கொண்ட கீர்த்தனாவின் அண்ணன் “நீங்க எங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ண தேவையில்லை சார். உங்களோட நல்ல மனச நாங்க ஏற்கனவே புரிஞ்சுகிட்டோம். உங்கள தப்பா நினைச்சா அந்த கடவுளே எங்கள மன்னிக்க மாட்டாரு. லாஸ்ட் டைம் நான் உங்க கிட்ட மோசமா நடந்துக்கிட்டதுக்கு மன்னிப்பு கேட்கனும்ன்னு நானும் நினைச்சுக்கிட்டே தான் இருந்தேன். தயவு செஞ்சு எங்கள மன்னிச்சிருங்க.
முக்கியமா நான் உங்க கூட சண்டை போட்டதுக்கு என்னை மன்னிச்சிருங்க. என் தங்கச்சி மேல இருந்த பாசத்துல தான் நான் அப்ப உங்க மேல கோபப்பட்டேன். ஆனா நீங்க மட்டும் இல்லைன்னா, என் தங்கச்சி எனக்கு நல்லபடியா கெடச்சிருக்கவே மாட்டான்னு அப்ப எனக்கு புரியவே இல்ல. நான் பண்ண வேலையால என் தங்கச்சி செத்துப் பொழச்சி வந்து இருக்கா. அவளை கண்டுபிடிச்சு காப்பாத்தி மறுபடியும் எங்க கையில கொண்டு வந்து சேர்த்ததும் நீங்க தான். நீங்க எங்களுக்கு கடவுள் மாதிரி சார். தயவு செஞ்சு எல்லாத்துக்கும் என்ன மன்னிச்சிடுங்க.” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு தரையில் மண்டியிட்டு ரிஷியிடம் மன்னிப்பு கேட்டான்.
தொடரும்..