அத்தியாயம் 184
தேன்மொழி அர்ஜுனுடன் அவர்கள் தங்க இருக்கும் லக்சூரி ரெசார்டுக்கு சென்று சேர்ந்தாள். அவர்களுக்காக என்று கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் ரூமிற்கு அர்ஜுன் அவளை அழைத்து சென்றான். அவர்களுடன் வந்த மற்றவர்களும் தங்களது ரூமிற்கு சென்று செட்டில் ஆனார்கள். அர்ஜுன் இதற்கு முன் பல முறை பாரீஸ் வந்து இருக்கிறான் என்றாலும், இம்முறை தனது குடும்பத்தினருடனும் முக்கியமாக தேன்மொழியுடன் வந்திருப்பது அவனுக்குள் ஒரு புதுவித சந்தோஷத்தை உருவாக்கியது.
அவர்கள் இருக்கும் லக்சுரி ரூம் கிட்டத்தட்ட டைம் ரஷ்யாவில் இருக்கும் அவர்களது அறையைப் போல தான் இருந்தது. அதனால் பெரிதாக அதில் கவனம் செலுத்தாமல் நேராக சென்று ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த காட்சிகளை ஆர்வம் நிறைந்த கண்களுடன் பார்க்க தொடங்கினாள் தேன்மொழி.
தூரத்தில் தெரியும் ஈஃபில் டவரையும், அருகிலுள்ள கண்ணை பறிக்கும் அழகிய வாட்டர் ஃபால்ஸும் பாரிஸுன் அழகை அழகாக பறைசாற்ற, வெளியில் இருந்து வந்த ஜில்லென்று காற்றில் தேன்மொழியின் முகம் சிவந்து போனது. அதனால் அவள் தன் கைகளால் தனது முகத்தை ஏந்திக் கொண்டு வெளியில் தெரிந்த காட்சிகளை அமைதியாக பார்க்கத் தொடங்கினாள்.
தங்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அது அதற்கான இடத்தில் எடுத்து வைத்த அர்ஜூன் தேன்மொழியின் அருகில் சென்று அவளை பின்னே இருந்து அனைத்து கொண்டு “பசிக்கலையா உனக்கு? நம்ம சாப்பிட்டு எவ்ளோ நேரம் ஆகுது தெரியுமா?” என்று கேட்க, “டைமுக்கு ஃபுட் எடுத்துகிறது மட்டுமில்லாம நடுவுல ஸ்நாக்ஸ்னு சொல்லி அப்பப்ப ஏதாவது கொண்டு வந்து கொடுக்கிற.. நானும் டேஸ்டியா இருக்குன்னு வாங்கி சாப்பிடறேன்.
அப்புறம் மறுபடியும் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பாட்டு டைம் ஆயிடுச்சு வந்து சாப்பிடுன்னா எப்படி சாப்பிடுறது? நான் என்ன மனுஷியா இல்ல வேற ஏதாவதா? எனக்கு டெலிவரி ஆகறதுக்குள்ள கண்டிப்பா நான் XLல இருந்து XXXL சைஸ்க்கு போகப்போறேன் அது மட்டும் எனக்கு நல்லா தெரிஞ்சிருச்சு. நான் அப்படி மட்டும் ஆனா, அதுக்கு நீதான் ரீசன் பாத்துக்கோ!” என்றாள்.
அதற்கு சிரித்த அர்ஜுன் “பரவால்ல பரவால்ல அப்பயும் நீ கியூட்டா தான் இருப்ப.. அண்ட் நைட் கட்டிப்புடிச்சு தூங்கும் போது இன்னும் வசதியா இருக்கும்.. நீ நல்லா புசு புசுன்னு இருந்தா நான் உன்னை டெடி பியர்னு நெனச்சு டைட்டா ஹக் பண்ணிப்பேன்.” என்று சொல்லிவிட்டு குளிரில் சிவந்து இருந்த தேன் மொழியின் காது மடல்களை லேசாக தன் பற்களால் கடித்தான்.
உடனே விளையாட்டாக அவன் வாயில் அடித்த தேன்மொழி “உனக்கு பசிச்சதுனா ஃபுட் ஆர்டர் பண்ணி வாங்கி சாப்பிடு மேன். என்ன எதுக்கு கடிக்கிற ?” என்று கேட்க, “நீதான் ரொம்ப டேஸ்ட்டா இருக்க அதான்!” என்றான் அவன்.
“ஆஹான் சொல்லு சொல்லு எல்லாம் சொல்லு.. இந்த கவனிப்பு எல்லாம் எனக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் தானே.. இப்ப மட்டும் எனக்கு சின்னதா ஏதாச்சு ஆனா கூட நான் உன்ன தான் குறை சொல்லுவேன்னு உனக்கு நல்லா தெரியும்.
அதான் 24/7 நீ என் கூடவே இருந்து இப்படியே என்னை தாங்கு தாங்குனு தாங்கிட்டு இருக்க.. குழந்தை மட்டும் பிறந்துருச்சுன்னா அவ்வளவு தான்.. வீட்ல இருக்குறவங்க எல்லாரும் குழந்தை கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தூக்கிட்டு போயிடுவாங்க.. நீ இத்தனை நாளா ஆபீஸ் வொர்க் எல்லாம் நிறைய பெண்டிங் இருக்குன்னு அதை பாக்குறேன்னு போயிடுவ.. சித்தார்த் ஆருத்ரா கூட என் கிட்ட சரியா பேச மாட்டாங்க. அப்புறம் மறுபடியும் நான் தான் தனியா இருக்கணும்.
எனக்கு உன் கூட இப்படி டைம் ஸ்பென்ட் பண்ணும் போது எல்லாம் இதுக்கு நான் பழகிட்டா, அப்புறம் நீ இல்லாம எனக்கு கஷ்டமாயிடும்னு பயமா இருக்கு. அப்ப நான் உன்ன மிஸ் பண்ணுவேன்ல.. எனக்கு கஷ்டமா இருக்கும் தானே! என்ன பாத்தா உனக்கு பாவமா இருக்காதா?” என்று கேட்ட தேன்மொழி அவன் பக்கம் திரும்பினாள்.
ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்த காற்று அவளுக்கு ஒத்துக் கொள்ளாது என்று நினைத்த அர்ஜுன் அதன் கதவை சாத்திவிட்டு அவளுடன் சென்று கட்டிலில் அமர்ந்தான். அவனது இரும்பு கைகளை பிடித்துக் கொண்டு அவனது தோள்களில் குளிருக்கு இதமாக சாய்ந்து கொண்டு “என்ன நான் பாட்டுக்கு லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்கேன்.. பக்கத்திலேயே இருந்துட்டு எதுவும் சொல்ல மாட்டியா நீ? நான் உன்னை மிஸ் பண்ற மாதிரி நீ எல்லாம் என்னை மிஸ் பண்ண மாட்டல்ல!” என்று பாவமாகத் தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்த அர்ஜுன் “என்ன விட்டா லைஃப் லாங் இதே மாதிரி நான் உன் கூடவே இருப்பேன். எப்பயும் வெளியே வேலை ஓடிக்கிட்டே இருக்குறவங்களுக்கு தான் வீட்ல கொஞ்ச நேரமாவது பேமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்றதுக்கு சான்ஸ் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு தெரியும்.
பட் அதுக்காக எப்பயும் வீட்டிலேயே இருக்க முடியாதே.. அப்படி இருந்தாலும் நல்லா இருக்காது. எனக்கு என் ஒர்க் எவ்ளோ இம்பார்டன்ட்னு உனக்கே நல்லா தெரியும். அப்புறம் நான் போய் அத பாக்காம இருக்க முடியுமா? வேணும்னா ஒன்னு பண்ணலாம்.. நம்ம பேபி பொறந்து கொஞ்சம் பெரிசான உடனே அவளை வீட்ல விட்டுறு.
உங்க அம்மாவும் எங்க அம்மாவும் சேர்ந்து அவளை பாத்துக்கட்டும். அவங்களுக்கும் டைம் பாஸ் ஆன மாதிரி இருக்கும். நீ டெய்லி கிளம்பி என் கூட ஆபீஸ் வந்துரு.. அங்கயே நான் உனக்கு என் கேபின் பக்கத்துல ரூம் ரெடி பண்ணி கொடுக்கிறேன். உனக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ அங்க இருந்து பண்ணு. டென் மினிட்ஸ் எனக்கு ஃப்ரீ டைம் கிடைச்சா கூட, நான் வந்து உன்னை பார்க்கிறேன். ஓகே வா, இந்த ஐடியா நல்லா இருக்கா?” என்று கேட்டான்.
உடனே நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்த தேன்மொழி “உன் ஐடியா எல்லாம் நல்லா தான் இருக்கு. பட் என் பாப்பா குட்டி பாப்பா இல்ல.. நான் எப்படி அவளை தனியா விட முடியும்? எப்பயும் என் பாப்பா என் கூட தான் இருக்கணும். அவ வளர்ந்து ஸ்கூலுக்கு போற வரைக்கும் நான் அவளை என் பக்கத்திலயே வச்சு பத்திரமா பாத்துக்குவேன். என்னால அவ இல்லாம இருக்க முடியாது.” என்று சொல்ல,
“என்ன டி நீ இதுக்கும் இப்படி சொன்னா நான் என்ன பண்றது? உனக்கு பிள்ளையும் வேணும் புருஷனும் வேணும். எல்லாரும் எப்பயும் உன் கூடவே இருக்கணும்னா எப்படி முடியும்?” என்று கேட்டான் அர்ஜுன்.
உடனே அவன் மடியில் படுத்துக் கொண்ட தேன்மொழி “அதானே எப்படி முடியும்? நான் என்ன டோரிமானா? என் கிட்ட எனிவேர் டோர் இருந்துச்சுன்னா நான் அதை யூஸ் பண்ணி எப்ப வேணா எங்க வேணா போலாம். என்ன தான் இப்ப டெக்னாலஜி டெவலப் ஆகி யார் கூட எப்ப வேணும்னாலும் வீடியோ கால் பேசலாம்ன்ற ஃபெசிலிட்டி எல்லாம் வந்தாலும் நேர்ல பார்த்து பேசுற மாதிரி இருக்குமா?” என்று அவள் பாட்டிற்கு புலம்பு தொடங்கி விட்டாள்.
“என்னது டோரிமான் அது என்னது?” என்று வழக்கம்போல அர்ஜுன் புரியாமல் கேட்க, “அட போடா.. நான் ஒரு லூசு. நீ ஒரு பூமர் அங்கிள்ன்றத மறந்துட்டு நான் உன் கிட்ட போய் டோரிமான் பத்தி எல்லாம் பேசி புலம்பிட்டு இருக்கேன் பாரு! உனக்கு தெரிஞ்ச மாதிரி தான் நான் உன் கிட்ட பேசணும்னா, இன்வெஸ்ட்மென்ட், ஷேர் மார்க்கெட், நியூ பிசினஸ் ஐடியாஸ்னு மொக்க டாப்பிக்கா தான் பேசணும் போல.” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
எப்போதும் வேலை வேலை என்று இருப்பதால் இங்கு வந்தாவது கிளாராவுடன் தன் நேரத்தை செலவிட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த பிரிட்டோ செக்யூரிட்டி டீம் சீஃப் விஜயிடம் ஏற்கனவே இது பற்றி பேசி இரண்டு நாட்களுக்கு பாதுகாப்பு தொடர்பான அனைத்து வேலைகளையும் அவனையும் கவனித்துக் கொள்ள சொல்லி இருந்தான்.. அதனால் தங்களது ரூமிற்கு சென்றவுடன் அவன் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்த கிளாராவை தூக்கி சுற்றியவன் ”சீக்கிரம் ரெடியாகி வா நம்ம வெளிய போறோம். நான் உனக்காக நிறைய சர்ப்ரைஸ் பிளான் வச்சிருக்கேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்னான்.
“நான் உன்னை மேரேஜ் பண்ணி பெரிய தப்பு பண்ணிட்டேன் பிரிட்டோ. எப்ப வேணும்னாலும் நான் உன்னை தனியா விட்டுட்டு போக வேண்டிய சுச்சுவேஷன் வரலாம். இப்படி என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணி நீ நிறைய மெமரிஸ் கிரியேட் பண்ணி வச்சுட்டா, திடீர்னு நான் உன் கூட இல்லாம போகும்போது எப்படி உன்னால அதை தாங்க முடியும்? இதுக்கு மேலையும் என்னால முடியாது. நான் இல்லாம போனாலும் அது உன்னை பெருசா பாதிக்காத மாதிரி நான் நடந்துக்கணும்னு நினைக்கிறேன்.” என்று நினைத்த கிளாரா வலுக்கட்டாயமாக அவனை விட்டு விலகி தன் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு “சும்மா எப்ப பார்த்தாலும் அதை பத்தியே யோசிச்சிட்டு இருக்காத. இன்னைக்கு எதுவும் நடக்காது எனக்கு பீரியட்ஸ்.” என்றாள்.
மீண்டும் வருவாள் 💕