Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 188

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 188

by Thenaruvi Tamil Novels
109 views

அத்தியாயம் 188

விசாலமான அந்த பிளே ஏரியாவில் தனித்தனியாக ஆளுக்கு ஒவ்வொரு பக்கமாக அனைவரும் சென்று விட, ”என்ன அதுக்குள்ள எல்லாரும் போய்ட்டாங்க! நானும் நம்ம ரஷ்யா வந்ததில இருந்து எல்லார் கூடையும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுக்கலாம்னு பார்க்கிறேன். முடிய மாட்டேங்குது.” என்றாள் தேன்மொழி. “இப்ப என்ன உனக்கு எல்லார் கூடையும் சேர்ந்து போட்டோ எடுக்கணும் அவ்வளவு தானே! இப்பவே நான் எல்லாரையும் வர சொல்றேன். நீ ஆசைப்பட்ட மாதிரி எத்தனை ஃபோட்டோ வேணும்னாலும் எடுத்துக்கோ.” என்ற அர்ஜூன் அங்கே இருந்த இன்டர்காம் மூலமாக அனைவரையும் காண்டாக்ட் செய்தான்.

“அட பரவால்ல விடு அர்ஜுன். அவங்க எல்லாரும் என்ஜாய் பண்ணும்போது நம்ம எதுக்கு போய் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு!” என்று தேன்மொழி சொல்ல, “ஃபோட்டோ எடுக்குறதுல என்னடி டிஸ்டர்பன்ஸ்! நீயும் உன் தம்பியும் நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல இருந்து கிளம்புனதுல இருந்தே ஃபோட்டோ எடுக்கணும்னு கேட்டுகிட்டே இருந்தீங்க.. உன்னோட இந்த குட்டி ஆசையை கூட நிறைவேத்த முடியலன்னா நான் இவ்வளவு தூரம் எல்லாரையும் ‌கூட்டிட்டு வந்ததே வேஸ்ட்டா போயிடும்.” என்ற அர்ஜுன் தொடர்ந்து அனைவருக்கும்  கால் செய்து ஜென்ரல் வெயிட்டிங் ஏரியாவிற்கு வரச் சொன்னான்.

உடனே அனைவரும் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி வரத் தொடங்கி விட, தொடர்ந்து அனைவருக்கும் கால் செய்வதில் அர்ஜுன் ஒரு பக்கம் பிஸியாக இருந்தான். சில நிமிடங்களில் அனைவரும் அங்கே ஆஜர் ஆனார்கள். அவர்கள் அனைவரும் ஆங்காங்கே கிடந்த சாரில் கூட்டமாக அமர, அவர்கள் அனைவரையும் அங்கே வேலை பார்க்கும் ஊழியர்கள் அர்ஜுன் கொடுத்த கேமராவில் ஃபோட்டோ எடுத்து கொடுத்தார்கள்.

கேமராவில் இருந்த அந்த ஃபோட்டோக்களை ஆசையுடன் பார்த்த தேன்மொழி அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது சோகமாக ஜேசன் மற்றும் யாதவ் இருவரும் ஒருவரை ஒருவர் ஏக்கம் நிறைந்த கண்களோடு பார்த்துக் கொள்வதை அவள் கவனித்தாள். அதைத் தானும் கவனித்த அர்ஜுன் “எதுக்கு இப்ப அவங்களையே குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்க?” என்று கேட்க, “இவங்களுக்குள்ள ஏதாவது பிராப்ளமா? ரெண்டு பேரும் சரியா பேசிக்க மாட்டாங்களா என்ன? நானும் இவங்க ரெண்டு பேரையும் வந்ததுல இருந்து நோட் பண்ணிக்கிட்டே தான் இருக்கேன். இவங்க கிட்ட மட்டும் ஏதோ ஒன்னு டிஃபரண்டா தெரியுது.

பாக்குறதுக்கு ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் பாசமாய் இருக்கிற மாதிரி தான் இருக்காங்க. ஆனாலும் சரியா பேசிக்க மாட்டேங்கிறாங்க. அவ்ளோ பாசம் வச்சு இருக்கிறவங்க எந்த பிரச்சனையா இருந்தாலும், அதை அவங்களே பேசி சால்வ் பண்ணிக்கலாம்ல!” என்று கேட்டாள் தேன்மொழி. 

அவள் கையில் இருந்து கேமராவை வாங்கிய அர்ஜூன் “அவங்க மேட்டர் கொஞ்சம் காம்ப்ளிகேட்டட். அவ்ளோ சீக்கிரம் அதை சால்வ் பண்ண முடியாது. முதல்ல அவங்களுக்குள்ள இருக்குற எல்லாத்தையும் அவங்க அக்சப்ட் பண்ணனும். அதுக்கே அவங்க ரெடியா இல்ல. சோ நம்ம நடுவுல போய் சொல்றதுக்கு எதுவும் இல்ல. அவங்க ப்ராப்ளமை அவங்களே தான் சரி பண்ணிக்கணும். நீ வா அங்க விர்ச்சுவல் கேம்ஸ் உட்கார்ந்துக்கிட்டே விளையாடுற மாதிரி நிறைய இருக்கு. நம்ம அதை போய் விளையாடலாம்.” என்ற அர்ஜுன் தேன்மொழியை அழைத்து சென்றான்.

ஜேசன், யாதவ் இருவரையும் திரும்பிப் பார்த்தபடி சென்ற தேன்மொழி “அப்படி யாராலயும் சால்வு பண்ண முடியாத அளவுக்கு இவங்களுக்குள்ள என்ன பிராப்ளம்? என் கிட்ட சொல்ல மாட்டியா? நான் வேணும்னா அவங்க கிட்டயே போய் கேட்கவா? எனக்கு என்னமோ அவங்களை இப்படி பார்க்க கஸ்டம இருக்கு.

நான் ஜூன் கிட்ட கூட இவங்கள பத்தி பேசிப் பார்த்தேன். அவங்க சொன்னத வச்சு பார்த்தா எனக்கு என்னமோ இவங்களுக்குள்ள வேற டிராக் ஓடும்னு தோணுது. அதனால தானே நீ என் கிட்ட என்ன பிரச்சனைன்னு சொல்ல மாட்டேங்குற? ஜூனும் என் கிட்ட டைரக்டா சொல்லல.‌ பட் அவங்க சொன்னத வச்சு எனக்கு ஒரு அளவுக்கு புரிஞ்சுது‌.” என்றாள்.

அவளை ஆச்சரியமாக பார்த்த அர்ஜுன் “யாரு டி நீ எல்லாத்தையும் கண்டுபிடிக்கிற! உன் கிட்ட இருந்து யாரும் எதையும் மறைக்க முடியாது போலவே!” என்று நம்ப முடியாமல் கேட்க, “ஓஹோ அப்ப நிஜமாகவே அதுதான் ரீசனா! நான் ஆக்சுவலி ஜூன் கிட்ட இவங்களை பத்தி பேசவே இல்ல. எனக்கே இவங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது அப்படித் தான் இருக்குமோன்னு டவுட்டா இருந்துச்சு.

நம்ம ஊர்லையே கே கப்பில்ஸ் நிறைய பேர் இருக்காங்க.. ஃபாரின் கண்ட்ரில இது எல்லாம் சாதாரணம் தானே.. சோ அப்படித் தான் இருக்கும்னு நினைச்சு சும்மா உன் கிட்ட போட்டு வாங்கினேன்.  நீ ஈசியா உண்மைய உளறிட்ட! என்ன அர்ஜுன் இப்படி இருக்க நீ!” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தாள் தேன்மொழி.

“அடிப்பாவி சரியான வில்லி டி நீ! ஏதோ என்னை கல்யாணம் பண்ணதுனால ஹீரோயின் ஆகிட்ட. இல்லனா வேற எங்கேயாவது போய் வில்லத்தனம் பண்ணிட்டு இருந்திருப்ப!” என்று அர்ஜுன் சீரியஸாக சொல்ல, “ஆமா ஆமா நான் வில்லத்தனம் தான் பண்ண போறேன். என்னோட கிரிமினல் மூளையை வச்சு அவங்க ரெண்டு பேரையும் நான் சேர்த்து வைக்க போறேன். இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் டாஸ்க். போதுமா மிஸ்டர் அர்ஜுன்?” என்று கேட்ட தேன்மொழி தன் உதட்டை சுழித்துவிட்டு அவனை விட்டுவிட்டு தூரமாக நடக்க தொடங்கினாள்.

“ஏய் நில்லு டி. எது பண்றதா இருந்தாலும் என் கூடவே இருந்து பண்ணு. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். இந்த வர்க்ல நம்ம ரெண்டு பேரும் பார்ட்னஸ் ஆயிடலாம்..!!” என்ற அர்ஜூன் அவளைப் பின் தொடர்ந்து ஓடினான்.

அவன் ஒரு வழியாக அவள் அருகில் சென்ற போது, திடீரென அந்த இடத்தில் பவர் ஆஃப் ஆனது. அதில் ஷாக் ஆன அர்ஜுன் “இந்த மால்ல கரண்ட் போகுதா? அதுக்கு சான்சே இல்லையே!” என்று யோசித்தான். அவனுக்கு ஏதோ தவறாக நடப்பதாக தோன்ற அவசரமாக தனது மொபைல் ஃபோனை கையில் எடுத்து ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்து தேன்மொழியின் அருகில் சென்று அவளுக்கான பாதுகாப்பு அரண் போல நின்று கொண்டு லைட்டை சுற்றி முற்றி அடித்து சந்தேகமாக பார்த்தான்.

கையில் பெரிய துப்பாக்கியுடன் கிலாரா, பிரிட்டோ இருவரும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக அவர்களை தேடி சென்றார்கள். அந்த இடத்தில் இன்னும் ஒரு சில பாடிகார்டுகள் இருந்ததால் மைக்கேல் அவனிடம் இருந்த பர்சனல் ப்ளூடூத் மூலமாக “சீக்கிரமா ரெண்டு பேரும் போய் பவர் சப்ளளேல என்ன பிராப்ளம்னு பாருங்க. மத்தவங்க அங்கங்க இருக்கிற எல்லாரையும் இங்க அர்ஜுன் இருக்கிற விஷுவல் கேம்ஸ் சென்டருக்கு கூட்டிட்டு வாங்க. எல்லாரும் ஒரே இடத்துல இருந்தா தான் ப்ராப்பரா ப்ரோடுக்ஷன் கொடுக்க முடியும்.” என்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க தொடங்கினான்.

அவனுக்கு அருகில் நின்று கொண்டு இருந்த மீரா அவன் கையைப் பிடித்துக் கொண்டு “என்ன ஆச்சு ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்க, “எனக்கும் அப்படித் தான் தோணுது. பட் அப்படி எதுவும் இருக்க கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கோ. அர்ஜுன் கோமாவுக்கு போறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சோ அது அகைன் நடக்கிற மாதிரி எனக்கு தோணுது.” என்று கனத்த குரலில் சொன்ன மைக்கேல் மீராவின் கையை பிடித்துக் கொண்டு அர்ஜுன் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக சென்றான். ஒரே நொடியில் அந்த இடம் பரபரப்பானது.

அங்கே அந்த மாலில் வேலை பார்க்கும் ஊழியர்களும் திடீரென்று கரண்ட் போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டம் அடைந்து மெயின்டனன்ஸ் டீமிற்கு கால் செய்து விஷயத்தை சொல்ல முயற்சி செய்தார்கள். அர்ஜுனின் அருகில் விசுவல் கேமிங் செக்ஷனில் இருந்தவர்கள் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்டு இப்படி நடந்ததற்காக கண்டிப்பாக காம்பன்ஷேசன் கொடுப்பதாக சொன்னார்கள்.

மைக்கேல் சொன்னதைப் போல பல வருடங்களுக்கு முன்பு நடந்த அதே சம்பவம் மீண்டும் நடந்து விடுமோ! என்று நினைத்து பதட்டத்தில் இருந்த அர்ஜுன் முதலில் இங்கே இருந்து நல்லபடியாக தாங்கள் தங்கி இருக்கும் ரிசார்ட்டிற்க்கு சென்று சேர்ந்தால் போதும் என நினைத்து “உங்க அப்பாலஜி காம்பன்சேஷன் எதுவுமே எனக்கு தேவையில்லை. எனக்கு பவர் சப்ளை உடனே வந்தாகணும். எமர்ஜென்சி அலாரமை ஆன் பண்ணுங்க. உங்க செக்யூரிட்டி மெயின்டனன்ஸ் டீம் எல்லாரும் இப்பவே இங்க வரணும். என்னால ஒரு செகண்ட் கூட என் ஃபேமிலி கூட இங்க இருக்க முடியாது.

உடனே போய் எமர்ஜென்சி எக்ஸிஸ்ட் டோரா ஓப்பன் பண்ணுங்க. நாங்க வெளிய போகணும். இங்க யாருக்காவது ஏதாவது நடக்கட்டும், உங்கள்ல ஒருத்தர கூட உயிரோட வெளிய போக விட மாட்டேன்.” என்று மிரட்டும் தோரணையில் சொன்னான்.

அவனது குரலில் இருந்த பதட்டம் தேன் மொழியையும் தொற்றிக்கொள்ள, ஒரு தாயாக அவளது இதயம் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றியும், அவள் பெறாத அவளது இரண்டு குழந்தைகளைப் பற்றியும் தான் யோசித்தது. “அர்ஜுன்.. குழந்தைங்க அர்ஜுன்.. ஆருத்ரா, சித்தார்த், மகிழன் எல்லாரும் சேஃப்ஃபா இருக்காங்களான்னு பாரு. அத்தை மாமா எங்க?” என்று தேன்மொழி பதட்டத்துடன் கேட்க, “நான் எல்லாரையும் இங்க வர சொல்லி குரூப்ல மெசேஜ் பண்ணிட்டேன். இங்க தான் வந்துட்டு இருப்பாங்க. நீ பாத்துட்டுபடாத. ஒன்னும் ஆகாது. நீ தைரியமா இரு. நான் உன் கூடவே தான் இருக்கேன். நான் தப்பா எதுவும் நடக்கவே மாட்டேன் என்ன நம்பு.” என்று சொல்லி தேன்மொழியை ஆறுதல் படுத்தினான் அர்ஜூன்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured