Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 186

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 186

by Thenaruvi Tamil Novels
78 views

அத்தியாயம் 186

அர்ஜுனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பிரான்சில் உள்ள பாரிஸுற்க்கு ட்ரிப் சென்று இருந்தார்கள். வந்து சேர்ந்த முதல் இரண்டு நாட்கள் தனித் தனியாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ப்ளான் செய்து ஜோடி ஜோடியாக அனைவரும் வெளியில் சென்று மகிழ்ந்த நிலையில், தேன்மொழி “நம்ம எல்லாரும் ஒன்னா சேர்ந்து எங்கையாவது வெளிய போகலாம். நம்ம ஒன்னா ஃபேமிலியா வந்துட்டு எல்லாருமா சேர்ந்து எங்காவது போனா தானே நல்லா இருக்கும்! எங்கயாச்சும் போய் ஒரு குரூப் ஃபோட்டோ எடுக்கலாம். எல்லாருக்குமே ஒரு மெமரபுல் மொமெண்டா இருக்கும்.” என்று சொன்னதால் அனைவரையும் அங்கே உள்ள ஒரு பிரம்மாண்ட ஷாப்பிங் மாலுக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தான் அர்ஜுன்.

அதை நாம் ஷாப்பிங் மால் என்று குறிப்பிட்டாலும், அங்கே இல்லாதது என்று எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கிட்டதட்ட 40 அடுக்குமாடிகளை கொண்ட அந்த ஷாப்பிங் மாலின் ஒவ்வொரு தளத்திலும் தியேட்டர், ஷாப்பிங் ஏரியா, பிளே எரியா, ஃபுட் கோர்ட், தீம் பார்க் என்று ஏராளமாக இருந்தது.

மொத்தமாக அந்த ஷாப்பிங் மாலையும் சுற்றி முடித்துவிட்டு ஒருவர் வெளியில் வர வேண்டும் என்றால் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகிவிடும். அதனால் அங்கேயே தங்கி தங்களது ஷாப்பிங்கை தொடர விரும்புபவர்களுக்காக தனியாக விஐபி மற்றும் ரெகுலர் ரூம்ஸ் கூட அங்கே அவைலபிலாக இருந்தது.

தேன்மொழி அனைத்து இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டாள். அதனால் அங்கேயே தங்கி அந்த நாளை செலவிடலாம் என்று அவள் அர்ஜுனிடம் கெஞ்ச, “ஏய் நீ இப்ப ப்ரெக்னென்ட்டா இருக்க டி. உனக்கு அது ஞாபகம் இருக்கா இல்லையா? நீ முன்னாடி மாதிரி பெட் ரெஸ்ட்ல இல்லாம நடக்கலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை என்று டாக்டர் சொல்லி இருக்காங்க தான். அதுக்காக இப்படி நடந்துக்கிட்டே இருப்பியா? கொஞ்சமாக ரெஸ்ட் எடுக்கிற ஐடியா இருக்கா இல்லையா உனக்கு?” என்று கேட்டான்.

உடனே தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்ட தேன்மொழி “இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் நீ என்கூட வெளியவே வர்ற.. இங்க எக்ஸ்ப்ளோர் பண்ண நிறைய இருக்கு. சோ எனக்கு இந்த பிளேஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. மறுபடியும் நம்ம இங்க எப்ப வருவமோ தெரியாது. இவ்வளவு தூரம் வந்துட்டு எதையும் பாக்காம ரூம்குள்ளயே அடஞ்சு கிடந்துட்டு திரும்பிப் போகணும்னா எப்படி அர்ஜூன்?

அத்தையும் மாமாவும் கூட ஜாலியா சுத்திட்டு இருக்காங்க. நீ என்ன என்னை மட்டும் எங்கேயும் போக விட மாட்டேங்குற! நீ சொல்ற மாதிரி எனக்கும் நடந்து நடந்து கால் வலிக்கத் தான் செய்யுது. இங்க நிறைய பேர் நடக்க முடியலேன்னா எலக்ட்ரிக் வாக்கர்ஸ் யூஸ் பண்ணிக்கிறாங்களே.. பேசாம எனக்கு அந்த மாதிரி ஏதாவது வாங்கி கொடு. எனக்கு அதுல ஒரு ரைட் போடணும்னு ஆசையா இருக்கு.” என்று சின்ன குழந்தை போல அவனிடம் அடம் பிடித்தாள்.

விளையாட்டாக அவளை அடிப்பதைப்போல கை ஓங்கிய அர்ஜூன் “எது.. இந்த கண்டிஷன்ல உனக்கு வாக்கர்ஸ்ல ரைடு போணுமா?   அப்படியே ஒன்னு வெச்சா தான் நீ சரிப்பட்டு வருவேன்னு நினைக்கிறேன்.‌” என்று சொல்ல, “எங்க வை பாப்போம்… நான் மட்டும் கடுப்பானேன்னு வையேன்.. அப்படியே கண்ட இடத்துல கடிச்சு வச்சுருவேன். அப்புறம் வலிச்சதுனா கூட டாக்டரை கூப்பிட்டு காமிச்சு ட்ரீட்மென்ட் எடுத்துக்க முடியாது பாத்துக்கோ!” என்ற தேன்மொழி அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள்.

“ஆஆஆ.. வலிக்குது டி பைத்தியக்காரி! என் விரல் கூட உன் மேல படவே இல்லை. அப்புறம் எதுக்கு டி கில்ற எருமை எருமை!” என்று அர்ஜுன் சிவந்த தன் கையை தேய்த்தபடி சொல்ல, “நீதான் எனக்கு வாக்கர்ஸ் வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட்ட இல்ல.. அதான் போடா பேசாத!” என்று சொல்லிவிட்டு தனது உதடுகளை சுளித்த தேன்மொழி அவள் முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டாள்.

“அய்யய்ய.. யாரு டி நீ உன்னோட பெரிய இம்சையா இருக்கு வரவர.. என் குழந்தைங்க கூட இப்படி எல்லாம் என்னை பாடா படுத்தினது இல்ல டி. உன்ன வச்சு என்னால சமாளிக்கவே முடியல. இப்ப என்ன உன்னால நடக்க முடியல அதானே..

அதுக்காக உனக்கு வாக்கர்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்து என்னால ரிஸ்க் எடுக்க முடியாது. நமக்கு குழந்தை பொறந்ததுக்கு அப்புறமா கண்டிப்பா உன்னை பாரிஸ் கூட்டிட்டு வரேன். அப்ப வேணும்னா நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ. இப்ப வீல் சேர் வேணும்னா அரேஞ்ச் பண்ணி குடுக்கிறேன். அதுல ஆட்டோமேட்டிக்கா நீ டைரக்ஷன் கண்ட்ரோல் பண்ணிக்கலாம். இந்த சுச்சுவேஷன்ல உனக்கு அது தான் கரெக்டா இருக்கும்.” என்று ஸ்ட்ரிக்ட் ஆக அர்ஜுன் சொல்லி விட, “அகைன் நீ என்ன பேஷண்ட்டாக்க பாக்குறியா அர்ஜூன்? நீ போ அந்த பக்கம். நானே மெதுவா நடந்து போகிறேன்.” என்ற தேன்மொழி அவனை கண்டு கொள்ளாமல் வேகமாக முன்னோக்கி நடக்க தொடங்கினாள். “ஏய் வேகமா போகாத நில்லு டி நானும் வரேன்.” என்றபடி அர்ஜுன் அவளை பின் தொடர்ந்து சென்றான்.

தன் அம்மாவுடன் ஷாப்பிங் செய்வதற்காக தனியாக சென்று இருந்த ஆதவன் “நான் பாரிஸ் வர்றது தெரிஞ்சு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ஆளாளுக்கு அதை வாங்கிட்டு வா இதை வாங்கிட்டு வான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க மா. அவங்களுக்காக எதுவும் வாங்காம போனா நல்லா இருக்காது. எனக்கு வேற என்ன வாங்குறதுன்னே தெரியல.

நம்ம ஊர்ல வெளிநாட்டுக்கு போறவங்க எல்லாம் திரும்பி வரும்போது சாக்லேட்ஸ் தானே வாங்கிட்டு வருவாங்க.. பேசாம சாக்லேட் எங்க கிடைக்கும்னு பார்த்து வாங்கிடவா? ஆனா அதை கொண்டு போய் நான் கொடுத்தா.. நாங்க எல்லாரும் சின்ன குழந்தையா சாக்லேட் சாப்பிடுவதற்கு என்ன கேட்ட கிண்டல் பண்ணுவாங்களே!” என்று புலம்பினான்.

“அவங்க ஆயிரம் கேப்பாங்கடா.. அவங்களுக்கு என்ன? அவங்க இஷ்டத்துக்கு ஏரோபிளேன் ஹெலிகாப்டர் வாங்கி குடுன்னு கூட கேப்பாங்க.. காசுக்கு நம்ம எங்க போறது?” என்று விஜயா சலிப்புடன் கேட்க, “அட என்னமா காசுக்கா பஞ்சோம்? நம்ம சென்னைல இருக்கும்போதே பிரிட்டோ அண்ணா கிட்ட சொல்லி என்ன கூட்டிட்டு போய் என் பேர்ல தனியா பேங்க் அக்கவுண்ட், இன்டர்நேஷனல் கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் எல்லாமே அவரை எனக்கு அரேஞ்ச் பண்ணி கொடுக்க சொல்லிட்டாரு.

நம்ம எவ்வளவு செலவு பண்ணாலும் என் அக்கவுண்ட்ல இருக்கிற பாதி காச கூட செலவு பண்ணி தீக்க முடியாது. எனக்கு என்ன வேணும்னாலும் வீட்ல இருக்குறவங்க எல்லாருக்கும் சேர்த்து பட்ஜெட் போடும்போது கிளாரா அக்கா எனக்கும் வாங்கி கொடுத்துடறாங்க. அதனால இப்ப வரைக்கும் அந்த கார்டை யூஸ் பண்ணி நான் எதுவுமே வாங்கல.

நம்ம இந்த ஷாப்பிங் மால்ல வந்து இறங்கும்போது கூட மாமா நான் அத யூஸ் பண்ணவே இல்லை என்று கேட்டு கோச்சிக்கிட்டாரு. அக்கா கூட மாமா அவ பேர்ல நிறைய சேர்ஸ் எழுதி வச்சிருக்கிறதுனால அவளோட அக்கவுண்ட்லயும் நிறைய காசு இருக்கு. எவ்வளவு வேணுமோ ஷாப்பிங் பண்ணு. நான் அமௌன்ட் செட்டில் பண்றேன்னு சொன்னா.

இப்படி அவங்க மாறி மாறி நமக்காக ஏதாவது செய்யணும்னு ஆசைப்படும்போது, சும்மா ஒரு சாக்லேட் கூட நான் அதை யூஸ் பண்ணி வாங்காம இருந்தா அங்க கோச்சுக்க மாட்டாங்களா? கண்டிப்பா நம்ம என்ன வாங்கினோம்ன்னு அக்காவும் மாமாவும் கேப்பாங்க.” என்றான் ஆதவன்.

அவன் என்ன சொன்னாலும் விஜயாவிற்கு இப்படி சம்பந்தி வீட்டுக்காரர்களின் பணத்தை தங்கள் இஷ்டம் போல தண்ணியைப் போல செலவு செய்ய மனம் வரவில்லை. இப்படியே அவர்கள் இருவரும் பேசியபடி நடந்து சென்று கொண்டு இருக்கும் போது ஒரு போட்டிக்கில் டிஸ்ப்ளேவிற்காக வைத்து இருந்த ஒரு லாவண்டர் நிற கவுனை பார்த்த ஆதவன் அப்படியே நின்றான்.

அதனால் விஜயாவும் நின்று அவனைப் பார்த்து “என்ன டா என்னமோ வாங்குறேன் வாங்குறேன்னு சொல்லிட்டு இங்க என்ன நின்னுட்டு இருக்க?” என்று கேட்க, அந்த ட்ரெஸ்ஸை கை காட்டிய ஆதவன் “அத டிரஸ்.. ஆருத்ராவுக்கு நல்லா இருக்கும்ல!” என்றான். விஜயாவும் அதை சென்று பார்த்துவிட்டு ஆமாம் என்று சொல்ல, அந்த கடைக்கு அவளுடன் சென்ற ஆதவன் ஆருத்ராவிற்காக முதல் முதலில் அர்ஜுன் கொடுத்த பணத்தை செலவு செய்து அந்த டிரஸை வாங்கினான்.

சித்தார்த், ஆருத்ரா இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்தபடி ஜானகி மற்றும் பிரதாப்பிற்கு முன்னே சென்று கொண்டு இருந்தார்கள். எதுவும் பேசாமல் ஆருத்ரா அமைதியாக அனைத்தையும் சுற்றி பார்த்தபடி வர, “உனக்கு ஏதாவது புடிச்சிருந்தா வாங்க வேண்டியது தானே!” என்று கேட்டான் சித்தார்த்.

“டாடி கூட போய் இருந்தா, நான் என்ன கேட்டாலும் டாடி வாங்கி தருவாரு. இப்ப எனக்கு என்னவோ எதுவும் வாங்கனும்னே தோன மாட்டேங்குது சித்து.” என்று ஆருத்ரா சோகமாக சொல்ல, “ஏன் என்னால உனக்கு வாங்கி தர முடியாதா? எனக்கும் டாடிக்கும் பேங்க்ல ஜாயிண்ட் அக்கவுண்ட் இருக்கு. என்னாலையும் உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கி தர முடியும். நீ உனக்கு என்ன வேணும்னாலும் என் கிட்ட கேளு. நான் உனக்கு வாங்கி தரேன். என்னோட டெய்லி லிமிட் முடிஞ்சாலும் கூட, தாத்தாவோட கார்ட் என் கிட்ட ஒன்னு இருக்கு. அதை நம்ம ஸ்வைப் பண்ணிக்கலாம்.” என்று  பெருமையாக சொன்னான் சித்தார்த்.

அதற்கு ஆருத்ராவும் சரி என்று தலையாட்ட, அவர்கள் இருவரும் ஜானகி மற்றும் பிரதாப்புடன் அருகில் உள்ள ஃபுட் கோர்ட்டுக்கு சாப்பிட சென்றார்கள்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured