Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 195

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 195

by Thenaruvi Tamil Novels
118 views

அத்தியாயம் 195

சித்தார்த்தையும், ஆருத்ராவையும் காப்பாற்றுவதற்காக இருந்த பதட்டத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தங்களை காப்பாற்றிக் கொள்ள கிளாராவின் பிஸ்டலை எடுத்து தேன்மொழி தனக்கு எதிரில் இருந்தவனை சுட்டுக் கொல்ல, தன்னை சூட முயற்சி செய்தவனை எதைப் பற்றியும் யோசிக்காமல் சுட்டு தள்ளினான் சித்தார்த்.‌

தனக்கு முன்னே தன்னால் சுட்டுக் கொல்லப்பட்டு ஒருவன் இறந்து கிடப்பதையும், கிளாரா ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் பார்த்து பயந்து போன தேன்மொழி நடுங்கிய கைகளுடன் தன் முகத்தை மூடிக்‌ கொண்டு சத்தமாக கதறி அழுதாள். தனக்கு முன்னே ஒரு கொலை பின்  தன் கையால் ஒரு கொலை நடந்து விட்டது என்று அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அவளது இதயம் பல மடங்கு வேகமாக துடித்துக் கொண்டு இருக்க, தன் மடியில் படுத்து அழுது கொண்டு இருந்த ஆருத்ராவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு பயத்தில் துடித்து நடுங்கிக் கொண்டு இருந்தாள் தேன்மொழி. அவளது உண்மையான பாசத்தை அந்த நொடியில் புரிந்து கொண்ட சித்தார்த் கண்கள் கலங்க அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்த தேன்மொழிக்கு திடீரென அதிகமாக வேர்த்து கொட்ட தொடங்கியது. அவள் இந்த நேரத்தில் அர்ஜுன் தன் அருகில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். அதனால் அவள் சுற்றி முற்றி “அர்ஜுன்.. அர்ஜுன் நீ எங்க இருக்க அர்ஜுன்? ப்ளீஸ் என் கிட்ட வா எனக்கு ரொம்ப பயமா இருக்கு!” என்று குழந்தை போல அதையே மீண்டும் மீண்டும் சொல்லி அழுதாள்.

ஏற்கனவே அதீத பயத்தில் இருந்த ஆருத்ரா அவள் அழுவதை பார்த்து இன்னும் பயந்து போய் “டாடி எங்க டாடி இருக்கீங்க? ப்ளீஸ் இங்க வாங்க டாடி. எனக்கும் பயமா இருக்கு!” என்று சொல்லி அழ தொடங்கி விட்டாள். அவர்கள் இருவரும் குழந்தைகளாக மாறி ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பயத்தில் நடுங்கி அழுவதால் அவர்களின் யாரை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் கையில் துப்பாக்கியுடன் திருத்திருவென விழித்தபடி நின்று கொண்டு இருந்தான் சித்தார்த்.

தொடர்ந்து தன்னையும் அறியாமல் அழுது தீர்த்த தேன்மொழி திடீரென அப்படியே மயங்கி விழுந்தாள். அதை பார்த்து மேலும் பயந்து போன ஆருத்ரா தேன் மொழியின் தோள்களைப் பிடித்து உலுக்கியவாறு “மம்மி மம்மி என்னாச்சு மாமி உங்களுக்கு ப்ளீஸ் வேகப்.. மம்மி கண்ணை தொறந்து என்ன பாருங்க மம்மி.. நான் பேசுறது உங்களுக்கு கேக்குதா மம்மி?” என்று அழுது கதறினாள். அவள் கத்தி அழும் சத்தம் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.

ஏற்கனவே வந்த இருவரை சமாளித்து அவர்களைக் கொன்று குவிப்பதற்குள் கிளாரா இறந்து விட்டாள். இதில் ஆருத்ரா அழும் சத்தத்தை கேட்டு வேறு யாராவது வந்துவிட்டால் ஆருத்ராவையும் பார்த்துக் கொண்டு அவனையும் சமாளிக்க வேண்டும் என்றால் தன்னால் முடியாது என்று நினைத்த சித்தார்த் ஆருத்ராவின் அருகில் சென்று அவளது வாயை தன் கையால் பொத்தியவாறு “ஐயோ வாய மூடு ஆருத்ரா ப்ளீஸ் சைலன்டா இரு. டாடி சீக்கிரம் வந்துரு பாரு இவங்களுக்கு ஒன்னும் ஆகாது நீ கம்முனு இரு.” என்று மெல்லிய குரலில் சொன்னான். அப்போதும் அவன் பேச்சைக் கேட்காமல் ஆருத்ரா தொடர்ந்து தேன்மொழியை பார்த்து தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தாள்.‌

நடக்கும் அனைத்தையும் சிசிடிவி கேமரா மூலமாக கவனித்து கொண்டு இருந்த சர்வைலன்ஸ் டீமில் இருந்தவர்கள் அர்ஜுனிடம் “சார் கேன் யூ ஹியர் மீ? it is an emergency! சார் கேன் யூ ஹியர் மீ? it is an emergency!” என்று சொல்ல,  அந்த டெரரிஸ்ட் கும்பலின் தலைவனை எப்படியாவது உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவனைக் காப்பாற்ற வந்தவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த அர்ஜுன் ” யா கேக்குது சொல்லுங்க; என்ன எமர்ஜென்சி?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“சார் உங்க ஒய்ஃப் மயங்கி விழுந்துட்டாங்க. கிளாரா மேடம் இறந்துட்டாங்க. அவங்களுக்கு ரெண்டு சைடுளையும் ரெண்டு டெரரிஸ்ட் செத்து கிடக்குறாங்க. சித்தார்த் சார் கையிலையும், தேன்மொழி மேடம் கையிலயும் கன் இருக்கிறத பாத்தா அவங்க தான் இவங்க ரெண்டு பேரையும் கொன்றுப்பாங்கன்னு தோணுது.

தேன்மொழி மேடம் பதட்டத்தில மயங்கி விழுந்து இருக்காங்களா, இல்ல அவங்களுக்கு பானிக் அட்டாக் வந்திருக்கான்னு தெரியல. நாங்க அவங்கள ஹாஸ்பிடல் அனுப்புவதற்கு ரெஸ்க்யூ டீம் சென்ட் பண்ணி இருக்கோம். நீங்க ஆர்டர் கொடுத்தா முதல்ல அவங்களையும் உங்களோட கிட்ஸையும் வெளிய கூட்டிட்டு போறதுக்கு ட்ரை பண்ணுவோம்!

பட் நாங்க சிசிடிவி ஃபுட்டேஜ் செக் பண்ணும்போது, மயங்கறதுக்கு முன்னாடி தேன்மொழி மேடம் உங்க நேம் சொல்லி பயமா இருக்குனு சொல்லி அழுதுருகாங்க. ஐதிங்க்  she needs யூ. உங்க daughter ஆருத்ராவும் அழுதுகிட்டே இருக்காங்க. நீங்க இப்ப அவங்க கூட இருக்குறது தான் நல்லது சார். ஐ இன்ரிப்பீட் தேன்மொழி மேடம் அன்கான்சியஸ்ஸா இருக்காங்க.‌” என்று சர்வைலன்ஸ் டீமில் இருப்பவன் சொன்னவுடன் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு ஹார்ட் அட்டாக்கே வருவதைப் போல இருந்தது.

இவ்வளவு நேரமாக அவன் அனைத்தையும் தான் தனது கண்ட்ரோலில் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் தன் கையை மீறி அனைத்தும் இவ்வளவு தூரம் சென்று இருக்கிறது என அவனால் நம்பவே முடியவில்லை. அவனுக்கும் உடனே சென்று தேன்மொழியை பார்க்க வேண்டும் போலத் தான் இருந்தது.‌ இதற்கு மேல் யார் இருந்தாலும் செத்தாலும் கவலை இல்லை என்று நினைத்த அர்ஜுன் அந்த டெரரிஸ்டை உயிருடன் பிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. எனக்கு இருக்கும் பெரிய ஆபத்து இவன் தான் இவனை முடித்துக்கட்டுவோம் என்ற எண்ணத்தில் ‌ தனக்கு முன்னே இருந்தவர்கள் அனைவரையும் கண்ணுமுன்னு தெரியாமல் சுட்டுக் கொன்று குவித்தான்.‌

பின் ஒரு இடத்தில் சென்று மறைந்து நின்று கொண்டு “கிளாரா இறந்தது பிரிட்டோவுக்கு தெரியுமா?” என்று அர்ஜுன் கேட்க, “நோ சார், இன்னும் நாங்க பிரிட்டோ சாருக்கு இன்பார்ம் பண்ணல.” என்று எதிரில் இருந்தவன் சொன்னான்.‌

உடனே பெருமூச்சு விட்ட அர்ஜூன் “britto is on duty now. சோ அவன் டூயூட்டி முடிஞ்சு நாங்க எல்லாரும் இங்க இருந்து கிளம்பற வரைக்கும் கிளாரா இறந்தது பிரிட்டோவுக்கு தெரியக் கூடாது.‌ இதுக்கு முன்னாடி பதட்டப்படும்போது ரெண்டு தடவை தேன்மொழி மயக்கம் போட்டு விழுந்திருக்கா.

இப்பயும் அவளுக்கு அந்த மாதிரி தான் நடந்திருக்கும்ன்னு தோணுது.  எக்ஸிட்டை ஓப்பன் பண்ணி புதுசா 20, 30 ஆளுங்கள உள்ள அனுப்புங்க. அந்த டெரரிஸ்ட் கும்பல்ல இன்னும் எத்தனை பேர் மீதி இருக்காங்க?” என்று கேட்க,

ஒரு நொடி அனைத்து கேமராக்களையும் செக் செய்தவன் “சார் அப்ராக்சிமேட்லி ஒரு ஏழு பேர் இருப்பாங்க. உள்ளுக்குள்ள நம்ம ஆளுங்க ஆல்ரெடி 20 பேர் இருக்காங்க. நீங்க சொல்ற மாதிரி 20, 30 பேர் உள்ள வந்தா ஈஸியா தேன்மொழி மேடைமை வெளிய கூட்டிட்டு போயிடலாம். அவங்களுக்கு உடனே மெடிக்கல் சப்போர்ட் தேவை.” என்றான்.

“ஓகே, அப்போ அந்த ஏழு டெரரிஸ்டையும் ஒரே இடத்துக்கு வரவைங்க. நான் அவங்க கிட்ட ஏதாவது டீடைல்ஸ் கிடைக்குதான்னு விசாரிச்சு பார்க்கணும். அந்த டைம்ல என் ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரும் எங்க எங்க இருக்காங்கன்னு செக் பண்ணி ரெண்டு மூணு பேர அப்படியே ஃபுல்லா கவர் பண்ணி  நம்ம ஆளுங்கள வெளி கூட்டிட்டு போக சொல்லுங்க.

இப்போ தேன்மொழி மெடிக்கல் எமர்ஜென்சில இருக்கறதுனால முதல்ல அவளையும் குழந்தைகளையும் கூட்டிட்டு போங்க.‌ அதுக்கப்புறம் ஆகாஷ், லிண்டா மகிலன் மூணு பேரும் எங்க இருக்காங்கன்னு பாருங்க. அடுத்த பத்து நிமிஷத்துல எனக்கு இந்த ஏரியா கிளியர் ஆகணும். என் ஸ்டைல்ல நான் அவங்க கிட்ட விசாரிக்கணும். அதுக்கு என் ஃபேமில இருக்கிறவங்க எல்லாரும் சேஃபா வெளிய போகணும். Got it?” என்று கேட்டான் அர்ஜூன்.‌

“ஓகே சார் நான் என் டீம்ல இருக்கறவங்க எல்லாரையும் அலர்ட் பண்றேன். இப்ப அந்த டெரரிஸ்ட் கும்பல்ல இருக்கிறவங்க நிறைய பேர் செத்துட்டதுனால டென் மினிட்ஸ்ல எல்லாரையும் வெளிய கூட்டிட்டு போறது பாசிபில் தான்.‌ பட் ஜெனனி மேடமும் அவங்களோட குழந்தைகளும் சந்தோஷர் கூட இருக்காங்க.‌ பிரிட்டோ சார் அவங்க கூட தான் இருக்காரு. இப்ப வரைக்கும் யாருக்கும் எந்த பிராப்ளமும் இல்ல. எல்லாருமே சேஃபா தான் இருக்காங்க.” என்று லைனில் இருந்தவன் சொல்ல, “ம்ம்.. நான் சொன்னதை மட்டும் செய் மற்றதை நான் பாத்துக்குறேன்.” என்ற அர்ஜுன் அந்த மீதம் உள்ள ஏழு பேர் எங்கே இருக்கிறார்கள் என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டு அந்த இடத்தை நோக்கி செல்லத் தொடங்கினான்.‌

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் எக்ஸாக்டில் இருந்து குபு குவென்று கும்பலாக அர்ஜூனின் ஆட்கள் உள்ளே வந்தார்கள். நேராக அவர்கள் தேன்மொழி இருந்த இடத்திற்கு சென்று தங்களிடம் இருந்த ஸ்ட்ரக்சனில் அவளை தூக்கி படுக்க வைத்து அதனுடன் ஆருத்ரா சித்தார்த்தையும் சுற்றி வளைத்து ஒரு கவசம் போல நின்று மெல்ல அவர்களை வெளியில் அழைத்து சென்றார்கள்.

ரெஸ்க்யூ டீமிடம் அவர்களை ஒப்படைத்துவிட்டு அந்த கும்பல் மீண்டும் உள்ளே வந்து அர்ஜுன் சொன்னதைப்போல அடுத்து ஆகாஷின் குடும்பத்தினரை காப்பாற்ற சென்றார்கள். அதைத் தொடர்ந்து அர்ஜுன் சொன்ன பத்து நிமிட காலக்கெடு முடிவதற்குள் அங்கே இருந்த ஒவ்வொருவரும் காப்பாற்றப்பட்டார்கள்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured