அத்தியாயம் 190
அர்ஜுன் எமர்ஜென்சி எக்ஸிட்டை விரைவாக திறக்கச் சொல்லி கத்திக் கொண்டு இருக்க, “இதோ சார் அவ்வளவு தான் முடிஞ்சிடுச்சு! இன்னும் 2 மினிட்ஸ்ல டோர் ஓப்பன் ஆயிடும்.” என்று அவசரமாக சொன்ன மேனேஜர் தன்னால் முயன்றவரை வேகமாக அந்த கதவை திறந்து வைத்தார்.
அது எமர்ஜென்சி எக்ஸிட் என்பதால் அங்கே பவர் கட் ஆனாலும் சோலார் பேனல் மூலமாக சேகரிக்கப்படும் எலக்ட்ரிசிட்டி மூலம் அந்த கதவிற்கு வெளியே இருந்த இடத்தில் சென்சார் ஆக்டிவேட் ஆகி கதவு திறக்கப்பட்டவுடன் தானாக லைட்டுகள் எரிய தொடங்கின. அந்தக் காட்சியை பார்த்தவுடன் தான் அர்ஜுனின் குடும்பத்தினருக்கு போன உயிர் மீண்டும் வந்ததைப் போல இருந்தது.
தேன்மொழி வேகமாக வெளியில் செல்ல முயற்சி செய்ய, அவளது கையை பிடித்து தடுத்தான் அர்ஜுன். என்ன என்பதைப் போல அவள் அவனைப் பார்க்க, “இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற? அதான் டோர் ஓப்பன் ஆயிடுச்சு இல்ல.. வேகமா போய் கீழ கீது விழுந்துறாத. முதல்ல இது வழியா மேனேஜர் வெளிய போய் அவங்களோட செக்யூரிட்டி டீம் கிட்ட இங்க பவர் சப்ளை இல்லைன்னு இன்பார்ம் பண்ணட்டும்.” என்றான்.
அங்கே உள்ள அனைவரும் வெளியில் சென்றால் போதும் என்ற மனநிலையில் இருக்க, அவன் மட்டும் இப்படி பேசுவதால் தேன்மொழி விசித்திரமாக அவனை பார்த்தாள். இருப்பினும் அவன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்ததால், தேன்மொழி அமைதியாக இருந்து விட்டாள்.
அர்ஜுன் சொன்னதை போல முதலில் தான் வெளியே சென்று என்ன நடக்கிறது என பார்க்கலாம் என நினைத்த மேனேஜர் தன்னுடன் அங்கே வேலை செய்யும் இரண்டு ஊழியர்களை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றார். அவர் சென்று இரண்டு நிமிடங்கள் கூட கடந்து இருக்காது. அதற்குள் திடீரென்று அந்த எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக உள்ளே கருப்பு நிற உடை அணிந்து கருப்பு முகமூடியில் தங்கள் முகத்தையும் மூடி இருந்த பார்ப்பதற்கு தீவிரவாதிகள் போல இருந்த இருவதற்கும் மேற்பட்டவர்கள் கையில் பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்தார்கள்.
அனைவரும் கையில் மொபைல் ஃபோனில் உள்ள பிளாஷ் லைட்டை ஆன் செய்து வைத்திருந்ததால் அந்த காட்சியை கண்டு ஒரு நொடி திகைப்பில் ஆழ்ந்தார்கள் . தேன்மொழி அர்ஜுனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு பதட்டத்துடன் “இங்க என்ன நடக்குது அர்ஜுன்?” என்று கேட்க, “அதான் எனக்கும் தெரியல.” என்று முதலில் இருந்த ஷாக்கில் ஸ்லொவ் மோஷனில் சொன்ன அர்ஜுன் பின் பலத்த சத்தத்துடன் “எல்லாரும் பின்னாடி போங்க. முடிஞ்சவரைக்கும் போய் எங்கயாவது ஒளிச்சுக்க ட்ரை பண்ணுங்க.” என்று கத்திவிட்டு தேன்மொழியின் கையையும், சித்தார்த்தின் கையையும் பிடித்துக் கொண்டு அவர்களை அழைத்துச் செல்ல முயற்சி செய்தான்.
சித்தார்த் ஆருத்ராவின் கையை பிடித்திருந்ததால் அவர்கள் அப்படியே குடும்பமாக ஒரு பக்கம் செல்ல, இம்முறை அவர்களுக்கு அருகில் நின்று கொண்டு இருந்த கிளாரா அவர்களது பாதுகாப்பிற்காக அவர்களுடன் ஓடினாள். தனது ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்ற சந்தோஷ் இப்போது எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் கலங்கிய கண்களுடன் ஜனனி தன் குழந்தையை தோளில் போட்டு இறுக்கிப்பிடித்தபடி சுற்றி முற்றி தேடிக் கொண்டு இருந்தாள்.
ஆளுக்கு ஒரு பக்கமாக அனைவரும் பதட்டத்தில் ஓடிக் கொண்டு இருந்ததால் யாரும் பாவம் அவளை கவனிக்கவில்லை. ஆனால் எப்போதும் ஒரு பாடிகார்டாக மற்றவரின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தும் பிரிட்டோ சுற்றி முற்றி பார்க்கும் போது அவன் கண்களில் தனியாக அழுதபடி நின்று கொண்டிருந்த ஜனனி தெரிந்தாள். உடனே அவனது கால்கள் வேகமாக அவனையும் மீறி அவளை நோக்கி ஓடியது.
இரண்டு நொடிகளில் அவள் அருகில் சென்று விட்ட பிரிட்டோ “இங்க என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? சீஃப் சொன்னது உங்க காதுல கேக்கலையா? அவங்க மொத்தமா இந்த இடத்தை ரவுண்ட் அப் பண்றதுக்குள்ள சீக்கிரம் எதாவது ஒரு சேஃபான இடத்துக்கு போய் ஒளிஞ்சுக்கோங்க வாங்க..!!” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து இழுத்தான்.
தன் குழந்தையை இறுக்கி பிடித்துபடி கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்ட, அவனை பாவமாக பார்த்த ஜனனி “சந்தோஷ்.. சந்தோஷ் பிரிட்டோ.. அவன் அவன் இல்லாம நான் எங்க போறது?” என்று கேட்க, “ஐயோ சந்தோஷ்க்கு அவர பாத்துக்க தெரியும். முதல்ல நீங்க என் கூட வாங்க.” என்று சொல்லி அவள் கையில் இருந்த குழந்தைகள் பிடுங்கி இறுக்கமாக பிடித்துக் கொண்ட பிரிட்டோ அவள் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.
அங்கே ஒரு ஜெயின்ட் வீல் இருந்தது. அதற்கு பின்னே மறைவாக கொஞ்சம் கேப் இருந்ததால் ஜனனியை அழைத்து சென்று அங்கே அமர வைத்தான் பிரிட்டோ. இவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த இடத்தில் மீண்டும் பவர் சப்ளை வந்தது. அதை கண்டவுடன் தான் அங்கே இருந்தவர்கள் அனைவருக்கும் இங்கே கரண்ட் போனதும் மீண்டும் வந்ததற்கும் இப்போது தங்களை அட்டாக் செய்ய வந்திருக்கும் கும்பல் தான் காரணமாக இருக்கும் என்று புரிந்தது.
அந்த கும்பலுக்கு தலைவன் போல இருந்த ஒருவன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் சீலிங்கை நோக்கி மூன்று நான்கு முறை சுட்டு விட்டு “டேய் அர்ஜுன் ஒழுங்கா வெளிய வாடா! எங்களோட டார்கெட் நீ மட்டும் தான். நீயா தானா வெளிய வந்து எங்க கிட்ட சரண்டர் ஆயிட்டா, உன் ஃபேமிலில இருக்கிறவங்க யாரையும் நாங்க எதுவும் பண்ண மாட்டோம்..
அவங்களை கொல்றதுனால எங்களுக்கு எதுவும் கிடைக்க போறது இல்ல. உன் கிட்ட தீக்க வேண்டிய கணக்கு தான் எங்களுக்கு நிறைய பாக்கி இருக்கு. பொட்ட மாதிரி கேவலமா ஓடிப்போய் எங்கயோ ஒளிஞ்சுக்க உனக்கு வெக்கமா இல்லையா? ச்சீ.. வெளிய வாடா!” என்று கையில் மைக்கை ஒன்றை வைத்துக் கொண்டு கத்தினான்.
அதைக் கேட்டவுடன் எரிச்சல் அடைந்த அர்ஜூன் “நீ குழந்தைகளை பாத்துக்கோ. நான் போய் அவங்க கிட்ட பேசுறேன். அவங்களுக்கு நான் தானே வேணும்.. என்னை அவங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கிட்டும். என்ன ஆனாலும் நீ மட்டும் வெளிய வந்துறாத. குழந்தைகளையும் வெளிய வர விட்டிராத!” என்று சொல்லிவிட்டு தாங்கள் மறைந்து இருந்த இடத்தை விட்டு வெளியே செல்ல முயற்சி செய்தான்.
அவன் கைகளைப் பிடித்துக் கொண்டால் தேன்மொழி “அவங்க என்ன வேணும்னாலும் சொல்லட்டும் நீ போகாத அர்ஜுன். என்னால உன்னை விட முடியாது. ப்ளீஸ் அர்ஜுன் ஏதாவது பண்ணு! அவங்கள எப்படியாவது சமாளி. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. பட் ப்ளீஸ் தனியா போய் அவங்க கிட்ட மாட்டிக்காத.” என்று கண்ணீருடன் கெஞ்சினாள்.
உடனே ஆருத்ராவும் சித்தார்த்தும் கூட “ஆமா டாடி நீங்க போக வேண்டாம்! அவங்க வந்தா நம்ம எல்லாரும் சேர்ந்து பைட் பண்ணலாம். ப்ளீஸ் டாடி எங்களை தனியா விட்டுட்டு நீங்க போகாதீங்க.” என்று அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு கோரசாக கெஞ்சினார்கள்.
“ஐயோ சுச்சுவேஷனை புரிஞ்சுக்காம எமோஷனலா பேசிய டைம் வேஸ்ட் பண்ணாதீங்க! நான் போக லேட் பண்ண அவங்க ஒவ்வொருத்தரா எல்லாரையும் டார்கெட் பண்ணுவாங்க. இது என்னால வந்த பிராப்ளம். இத நானே தனியா ஹேண்டில் பண்ணிக்கிறேன்.
ப்ளீஸ் தேன்மொழி கொஞ்சமாவது மெச்சூர்டா பிகேவ் பண்ணு. என் பிள்ளைங்களுக்கு அப்பா இல்லைனாலும் அம்மாவாவது இருக்கணும்னு நினைக்கிறேன். அன்னைக்கு சியா பண்ண அதே மிஸ்டேக் நீயும் பண்ணாத. ஒழுங்கு மரியாதையா நான் சொல்றத கேட்டு அமைதியா இங்கயே இருந்து இவங்க ரெண்டு பேரையும் பாத்துக்கோ.” என்று அவர்கள் மூவரையும் பார்த்து அதட்டலாக சொன்ன அர்ஜுன் கிளாரா வை பார்த்து “நீ இங்கயே இருந்து பாத்துக்கோ.” என்றான்.
அவன் கண்களையே உற்றுப் பார்த்த கிளாரா “சீஃப்.. கோட் ரெட் ஆக்டிவேட் பண்ணிடலாமா?” என்று கேட்க, “எஸ்! ஆக்டிவேட் கோட் ரெட்.” என்று சொன்ன அர்ஜுன் தனது முதுகில் அவன் ஒளித்து வைத்து இருந்த பெரிய துப்பாக்கி ஒன்றை கையில் எடுத்த அதை லோட் செய்த மாதிரி “ஐ ஆம் கம்மிங்!” என்றபடி வேக எட்டுக்கள் வைத்து வெளியே சென்றான்.
அந்த இடம் இப்போது மிகவும் அமைதியாக இருந்ததால் அவனது ஷூ சவுண்ட் டொக் டொக் என்று பலமாக கேட்க, ஆங்காங்கே வேறு வேறு இடங்களில் அவர்கள் ஒளிந்து இருந்தாலும் அந்த சூழ்நிலையின் பதட்டம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே இருந்ததால் அனைவரும் வேகமாக துடிக்கும் தங்கள் இதயத்தை கையில் பிடித்துக் கொண்டு மறைந்து அமர்ந்து இருந்தார்கள்.
ஆருத்ரா “டாடி!! டாடி!! ப்ளீஸ் திரும்ப வந்துருங்க டாடி! உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா நாங்க என்ன பண்றது?” என்றபடி தன் முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதாள். அப்போது அர்ஜுன் செல்லும் முன் “சியா பண்ண தப்ப நீயும் பண்ணிடாத!” என்று சொல்லிவிட்டு சென்றதை நினைத்துப் பார்த்த தேன்மொழி கண்ணீரை துடைத்துக் கொண்டு “இப்ப நீ எமோஷனலா வீக் ஆகி அர்ஜுன் சொன்ன மாதிரி அழுதுட்டு இருக்க கூடாது தேன்மொழி. இந்த ரெண்டு புள்ளைங்களும் உன்னை நம்பி தான் இருக்கு. அப்புறம் இந்த குழந்தை...!!” என்று தனக்கு தானே சொல்லிவிட்டு தன் வயிற்றை தொட்டுப் பார்த்தவள், “இவங்க மூணு பேரையும் நீதான் பத்திரமா பாத்துக்கணும். இதை நீ ஸ்ட்ராங்கா இருக்க வேண்டிய டைம். அர்ஜுன் பொண்டாட்டி இப்படி எல்லாத்துக்கும் அழுதுட்டு இருக்க கூடாது.” என்று தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டு கண்ணீரைத் துடைத்தாள்.
தன்னிடம் இருந்த இன்டர்காம் மூலமாக யார் யார் இடமோ ஏதேதோ பேசிக் கொண்டு இருந்த கிளாரா தேன் மொழியையும் ஒரு பக்கம் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அர்ஜுன் அவனது குடும்பத்தினருடன் ஓடி ஒழிந்த போது, நேரடியாக சென்று தாக்குவதை விட மறைந்து இருந்து தாக்குவது தான் சிறந்த ஆப்ஷன் ஆக இருக்கும் என நினைத்து அவனது பாடிகார்டுகளும் ஆங்காங்கே சென்று ஒளிந்து கொண்டார்கள்.
இப்போது அவர்களிடம் எதையோ பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்த கிளாரா தனது பேண்டின் கீழ் பகுதியில் அவள் மறைத்து வைத்திருந்த இரண்டு ஹாண்ட் gunஐ வெளியில் எடுத்து ஒன்றை தேன் மொழியின் கையிலும், இன்னொன்றை சித்தார்த்தின் கைகளிலும் கொடுத்தாள்.
அதுவரை ஆருத்ராவுடன் சேர்ந்து அழுது கொண்டு இருந்த சித்தார்த் இப்போது தங்களை நெருங்கி வரும் ஆபத்து எதுவாக இருந்தாலும் அதை தாங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும் என நினைத்து தைரியத்துடன் அந்த துப்பாக்கியை இறுக்கி பிடித்தான்.
மீண்டும் வருவாள் 💕