அத்தியாயம் 187
தேன்மொழி பசிக்கிறது என்று சொன்னதால் அருகில் உள்ள உயர்தர ரெஸ்டாரன்ட் ஒன்றில் அவளுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் அர்ஜுன். தன் அம்மாவிற்கும் தம்பிக்கும் அந்த அளவிற்கு இங்கிலீஷ் தெரியாது என்பதால் பாரிஸ் வந்து தனியாக சென்று அவர்கள் என்ன செய்கிறார்களோ என்று நினைத்து பயந்த தேன்மொழி ஆதவனுக்கு வீடியோ கால் செய்து பேசினாள்.
“என்னடா பண்றீங்க நீயும் அம்மாவும்? நான் உங்களையும் எங்க கூட தானே வர சொன்னேன்.. நீ அம்மாவ பாத்துக்குறேன்னு சொல்லி கூட்டிட்டு போன.. ஒரு கால் கூட பண்ண மாட்டேங்குற!” என்று தேன்மொழி கேட்க, “நாங்க இவ்வளவு நேரம் ஷாப்பிங் தான் பண்ணிட்டு இருந்தோம் அக்கா. வரும்போது ஒரு போட்டிக்ல டிஸ்ப்ளேல ஒரு கவுன் வச்சிருந்தாங்க. அது செமையா இருந்துச்சு தெரியுமா.. சோ உடனே ஆருத்ராவுக்கு அதை வாங்கிட்டேன்.
அப்புறம் என் ஃபிரண்ட்ஸ்க்கு கிப்ட் கொடுக்க கொஞ்சம் பர்சேஸ் பண்ணேன். அம்மா ரொம்ப நேரம் நடந்து கால் வலிக்குதுன்னு சொன்னதுனால நாங்க இங்க பக்கத்துல ஒரு ஐஸ்கிரீம் பார்லர் இருந்துச்சு அங்க வந்து ஒக்காந்து இருக்கோம். இங்க புதுசு புதுசா நிறைய ஐஸ்கிரீம் பிளேவர் இருக்கு.
நம்ம ஊர்ல ஐஸ்கிரீம் சாப்பிடுறேன்னு சொல்லும்போது எல்லாம், இந்த அம்மா நம்மள விடவே மாட்டாங்கல்ல.. இப்ப பாக்கவே நல்லா இருக்குன்னு சொல்லி ஒரு பாப்பா வாங்கி சாப்பிட்டு போன ஐஸ்கிரீமை காமிச்சு எனக்கும் அது வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு இருக்காங்க!” என்று சொல்லிவிட்டு சிரித்தான் ஆதவன்.
“பார்றா.. பரவால்ல பரவால்ல எப்படியோ நீங்களும் இந்த ட்ரிப்பை என்ஜாய் பண்ணா எனக்கு அதுவே போதும். உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதே… எப்படி மேனேஜ் பண்ணிங்க?” என்று தேன்மொழி ஆர்வமுடன் கேட்க, “அட திங்க்ஸ் வாங்குவதற்கு பெருசா என்ன இங்கிலீஷ் தெரிய வேண்டியது இருக்கு? ஹொவ் மச்ன்னு கேட்டா ரேட் சொல்றாங்க.. நமக்கு பிடிச்சிருந்தா pack itன்னு சொன்னா பேக் பண்றாங்க.
சும்மாவே பில் கவுண்டர் அப்படின்னு சொன்னா எங்க போய் காசு கட்டணும்னு அவங்களே ரூட் காட்டுறாங்க.. கைல கார்ட் இருக்கு. ஸ்வைப் பண்ணி பே பண்ணா பர்சேஸ் முடிஞ்சுது. ஷாப்பிங் பேக்கை கூட நம்ம கைல புடிச்சுட்டு நடக்க தேவையில்லை. நிறைய ஷாப்பிங் பண்ணா பெருசா ஒரு ட்ராலி கொடுக்குறாங்க பேக் வைக்க.
நம்ம ஊர்ல இருக்கிறத விட எனக்கு இங்க தான் ஷாப்பிங் பண்றது ஈஸியா இருக்க மாதிரி இருக்கு அக்கா. இன்னும் கொஞ்ச நாள் மட்டும் இங்கயே இருந்தா உன்ன விட சூப்பரா நான் இங்கிலீஷ் பேசுவேன்னு நினைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு சிரித்தான் ஆதவன்.
அவனுடன் தேன்மொழியும் சேர்ந்து சிரித்துக் கொண்டு இருக்க, அவர்கள் பேசுவதை கவனித்தபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்த அர்ஜுன் “எல்லாரும் தனித்தனியா வெளிய போறாங்க. ஒன்னா ஃபேமிலியா ஷாப்பிங் போகலாம்னு நீ சொன்னதுனால தான் எல்லாரும் இந்த மாலுக்கு வந்தாங்க. இப்ப பாரு.. இங்க ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்துல இருக்காங்க. யார் எங்க இருக்காங்கன்னு நமக்கே தெரியல.
நம்ம பாடிகார்ட்ஸ் கூட பப்ளிக் பிளேஸ்ல கும்பலா தனித்தனியா எல்லாரையும் ஃபாலோ பண்ணி போக முடியாம அங்கங்க இந்த மால் ஃபுல்லா சுத்திட்டு இருக்காங்க. இதுக்கு தனி தனியாவே எல்லாரும் ஷாப்பிங் வந்திருக்கலாம்.” என்றான்.
அவன் சொன்னதை லைனில் இருந்த ஆதனும் கேட்டுவிட்டு “ஆமாக்கா எனக்கும் மாமா சொல்ற மாதிரி தான் தோணுச்சு. இப்படி தனியா ஷாப்பிங் போறது நல்லா தான் இருக்கு. இருந்தாலும் நம்ம எல்லாரும் ஒன்னா சேர்ந்து டைம் ஸ்பென்ட் பண்றதுக்கு தானே இங்க வந்தோம்! அப்புறம் தனித்தனியா பிரிஞ்சு போயிட்டா எப்படி? நம்ம எல்லாருமா சேர்ந்து ஒரு குரூப் ஃபேமிலி போட்டோ கூட எடுக்க முடியாது.” என்றான்.
உடனே அமைதியாக அவர்கள் சொன்னதைப் பற்றி சில நொடிகள் யோசித்த தேன்மொழி “இப்போ ஈவினிங் சிக்ஸ் ஆகியிருக்கு. மார்னிங்ல இருந்து எல்லாரும் தனித்தனியா தானே சுத்திக்கிட்டு இருந்தாங்க.. ஏழு மணிக்குள்ள எல்லாரும் டாப் ப்ளோர்க்கு வந்துருங்க.
அங்க ஃபேமிலியா எல்லாரும் சேர்ந்து விளையாடுற மாதிரி நிறைய கேம்ஸ் இருக்குமாம். ஒவ்வொரு ஃபேமிலிக்கும் தனித்தனியா பிளே ஏரியா குடுப்பாங்களாம். அங்க மத்தவங்க டிஸ்டர்பன்ஸ் இல்லாம நமக்குன்னு ஒரு ரூம் புக் பண்ணிட்டா, அந்த டோட்டல் ஏரியாளையும் நம்ம ஜாலியா எவ்ளோ நேரம் வேணாலும் விளையாடலாம். அந்த ஒரு ரூமே 4000 ஸ்கொயர் ஃபீட் மேல இருக்கும்னு நேத்து லிண்டா சொல்லிட்டு இருந்தாங்க.
நான் உங்க மாமா கிட்ட கேட்டு மார்னிங் அங்க எல்லாரும் போகலாம்னு நெனச்சேன். பட் அங்கவே நைட் ஸ்டே பண்றதுக்கு ரூம்ஸ் எல்லாம் இருக்குன்னு இப்ப தான் நான் நெட்ல பார்த்தேன். நான் எல்லார் கிட்டயும் கால் பண்ணி கேட்கிறேன். எல்லாருக்கும் ஓகேன்னா டுடே நைட் நம்ம எல்லாருக்கும் கேமிங் நைட். செம funஆ இருக்கும்.” என்றாள்.
“வாவ் சூப்பர் அக்கா.. நீ சொல்றதை கேட்கும் போதே எனக்கு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. மத்தவங்களும் வருவாங்கன்னு தான் நினைக்கிறேன். பட் மாமா என்ன சொல்றாருன்னு தெரியலையே! அவர் கிட்ட பர்மிஷன் கேட்கணும்ல..!!” என்று ஆதவன் சொல்ல, அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த அர்ஜுன் தேன்மொழியின் கையில் இருந்த மொபைல் ஃபோனை வாங்கி “என்ன மச்சான்.. எனக்கும் உங்க அக்காவுக்கும் மேரேஜ் ஆகி எவ்வளவு நாள் ஆகுது.. இன்னுமா நம்ம வீட்ல உங்க அக்கா நினைக்கிறது தான் நடக்கும்னு தெரியல உனக்கு? எல்லாரும் சேர்ந்து ட்ரிப் போகலாம்னு சொன்னதும் உங்க அக்கா தான்..
இந்த மாலுக்கு ஷாப்பிங் போகலாம்னு சொன்னது உங்க அக்கா தான். இப்ப அவ கேமிங் ஏரியாவுக்கு போகலாம்னு சொன்னா மட்டும் யார் வேணாம்னு சொல்ல போறாங்க? முக்கியமா எனக்கு நோ சொல்ற தைரியம் இல்ல. அந்த அளவுக்கு என்ன மிரட்டி வச்சிருக்கா உங்க அக்கா! நான் எப்படி வந்து சிக்கி இருக்கேன் பாரு..
இப்பவே இது எல்லாத்தையும் பார்த்து நீயும் நல்லா காத்து வச்சுக்கோடா.. உனக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறமா இதைவிட டபுளா நடக்கும். ஏன்னா உனக்கு வரப்போறது எல்லாம் டூ கே கிட்ஸ் கேர்ள்ஸ். நம்ம ஒன்னு சொன்னா அவங்க ஒன்னு செய்வாங்க. இந்த பொண்ணுங்கள சமாளிக்கிறதுக்கு ஆயிரம் கோர்ஸ் படிச்சிட்டு வந்தாலும் அதை வச்சு ஒன்னும் பண்ண முடியாது.
ஹஸ்பண்டா லைஃப்ல ப்ரொமோட் ஆகிட்டாலே, நம்மளோட மூளைய கழட்டி வெச்சிடனும். ஏன்னா நமக்குன்னு தனியா யோசிக்க இன்னொருக்காது. வைஃப் ஆடர் போட்டா, அதை செய்தது மட்டும் தான் ஹஸ்பண்டோட டியூட்டி.” என்றான்.
“ஆமா ஆமா சொல்லிட்டாரு பூமர் அங்கிள் நல்லா கேட்டுக்கோ..!!” என்றபடி அர்ஜுனின் கையில் இருந்து தனது மொபைல் ஃபோனை வாங்கிய தேன்மொழி “உங்க மாமா இதுக்கு முன்னாடி எல்லாம் அப்படியே ஆர்மி ஆபிசர் மாதிரி உர்ருன்னு இருப்பாரு. என்னை மாதிரி ஒரு ஸ்வீட்டான பொண்ண கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் எப்படி லொட லொடனு பாத்தியா..
லைஃப்ல இந்த தேன்மொழி எவ்வளவு மேஜிக் பண்ணி இருக்கேன்.. அதைப் பத்தி சொல்லி பாராட்டி ஒன்னு ரெண்டு வார்த்தை பேசணும்னா இவருக்கெல்லாம் வாய் வலிக்கும். பொண்டாட்டிங்க எல்லாரும் இப்படித் தான்னு பேசறதுன்னா மட்டும் இந்த ஆம்பளைங்களுக்கு எல்லாம் அப்படியே ஜாலியா இருக்கும் போல இருக்கு..
இவர் பேச்சைக் கேட்டு நீயும் லூசுத் தனமா ஏதாவது பண்ணிட்டு இருந்த.. உனக்கு பொண்ணு பார்க்கும்போது என் தம்பி பேச்சை எல்லாம் கேட்காதம்மா.. உனக்கு புடிச்ச மாதிரி நீ ஜாலியா இரு நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்னு அந்த பொண்ணு கிட்ட நான் சொல்லி வச்சுடுவேன்.” என்றாள்.
“சொல்லுவ டி சொல்லுவ... அவன் பாவம் சின்ன பையன் அவனுக்கு எதுவும் தெரியாதுன்னு நீ உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணாம பாக்குறியா? இதுவரைக்கும் நம்ம வீட்ல எல்லாருமே லவ் மேரேஜ் தான் பண்ணி இருக்காங்க.
ஆதி மட்டும் யாரையும் லவ் பண்ணலனா, அவனுக்கு ஒரு சூப்பர் பொண்ணா பாத்து நான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். அவனுக்கு உன் செலக்சன் பிடிக்குதா, இல்ல என் செலக்சன் புடிக்குதானு நீயே வெயிட் பண்ணிப்பாரு.” என்றான் அர்ஜுன்.
“ஐயோ அக்கா மாமா ரெண்டு பேரும் சும்மா இருங்க. நான் இன்னும் சின்ன பையன்.. எனக்கு மேரேஜ் பண்றத பத்தி எல்லாம் இப்பவே பேசிட்டு இருக்கீங்க! நான் எப்படியும் இன்னொரு 5, 10 வருஷம் கழிச்சு தான் அத பத்தி எல்லாம் யோசிக்கவே ஸ்டார்ட் பண்ணுவேன். இப்போதைக்கு எனக்கு ஸ்டடிஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் மட்டும் தான்.” என்று அவசரமான குரலில் சொன்னான் ஆதவன். அப்போதும் விடாமல் அர்ஜுன் தேன்மொழி இருவரும் மாறி மாறி தங்கள் இஷ்டத்திற்கு எதையாவது ஒன்று சொல்லி கொண்டே வாதிட்டார்கள். அவர்கள் இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு திருதிருவென்று விழித்தபடி அமைதியாக லைனில் இருந்தான் ஆதவன்.
கிட்டத்தட்ட ஏழு முப்பது மணி அளவில் தேன்மொழி கால் செய்து சொன்னதை வைத்து அவர்களுடன் அந்த மாலுக்கு வந்திருந்த அனைவரும் அந்த ரெஸ்டாரன்ட்டின் மேல் தளத்திற்கு சென்றார்கள். பெரும்பாலும் மிகவும் காஸ்ட்லியான அந்த அறைகளை பணக்காரர்கள் மட்டுமே புக் செய்வார்கள் என்பதால், அந்த மாலின் அறுபதாவது மாடியில் தனித்துவிடப்பட்ட தீவு போல அனைத்து சௌகரியங்களுடன் இருந்த அந்த 100000 ஸ்கொயர் ஃபீட் கொண்ட கேமிங் ஏரியாவில் இப்போது அர்ஜுனும், அவனுடன் வந்தவர்களும் மட்டுமே இருந்தார்கள்.
தன் அப்பாவை கண்டவுடன் சந்தோஷப்பட்ட ஆருத்ரா ஓடிச் சென்று அர்ஜுனை அணைத்துக் கொண்டு “நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் டாடி.” என்ற எமோஷனல் ஆகி சொல்ல, உடனே அவளை தூக்கிக் கொண்ட அர்ஜுன் “நான் இங்க தானடா இருக்கேன்.. நீதான் உன் டாடிய அவாய்ட் பண்ற.. அப்புறம் இப்படி என்னை மிஸ் பண்றேன்னு ஃபீல் பண்ணி சொல்ற!” என்றான்.
அவனை கட்டிப்பிடித்துக் கொண்ட ஆருத்ரா “நான் உங்களை அவாய்ட் பண்ணல டாடி.” என்று சொல்ல, அவர்களைப் பார்த்தபடி ஓரமாக நின்று கொண்டு இருந்தான் சித்தார்த். அவன் அருகில் சென்ற தேன்மொழி அவன் கையைப் பிடித்துக் கொண்டு “நீ என்ன எப்படி வேணாலும் பாரு. எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை சித். நான் உன்ன பெத்த அம்மாவா இல்லாம இருக்கலாம். ஆனா காலம் முழுக்க என் மனசார அம்மா ஸ்தானத்தில இருந்து உன் மேலையும் ஆருத்ரா மேலையும் நான் எப்பயுமே பாசமா இருப்பேன்.
நீ எனக்காக உங்க டாடிய அவாய்ட் பண்ணாத. அவர் வெளிய காமிச்சுக்கலன்னாலும் உன்னையும் ஆருத்ராவையும் மிஸ் பண்றாரு. எங்களுக்கு எத்தனை குழந்தைங்க பிறந்தாலும், நீதான் எங்க பர்ஸ்ட் பையன். உனக்கு அப்புறம் ஆருத்ரா. அதுக்கு அப்புறம் தான் பொறக்க போற இந்த குழந்தை.” என்று சொல்லிவிட்டு தன் வயிற்றின் மீது கையை வைத்தாள்.
அவள் பேச பேச அவளது கண்கள் கலங்கியது. அவள் சித்தார்த்தின் கையைப் பிடித்து அர்ஜுனனின் அருகில் அழைத்துச் செல்ல, தன் அம்மாவின் முகத்தை ஜெராக்ஸ் எடுத்ததைப் போல அப்படியே இருக்கும் தேன்மொழியிடம் இன்று ஏனோ சித்தார்த்திற்கு வாதிட மனம் வரவில்லை. அதனால் அவனும் அமைதியாக அவளுடன் சென்றான்.
மீண்டும் வருவாள் 💕