அத்தியாயம் 185
கிளாரா தனக்கு பீரியட்ஸ் என்று பிரிட்டோவின் முகத்தில் அடிப்பதை போல சொன்னவுடன், அவளை எதுவும் பேசாமல் கீழே இறக்கி விட்டான் அவன். அவனது வாடிய முகத்தை பார்க்கும்போது உள்ளுக்குள் அவளுக்கு வருத்தமாக இருந்தாலும் கூட, தனது வாழ்க்கையின் இறுதி கட்டம் வந்துவிட்டது என தெரிந்து பிறகு இதற்குப் பிறகும் அவன் தன்னைப் பற்றி யோசிப்பதில் எந்த பயனும் இல்லை என்று நினைத்த கிளாரா எப்படியாவது அவனுக்கு தன் மீது வெறுப்பு வர வேண்டும் என்ற எண்ணத்தில் “எனக்கு நிறைய ஒர்க் இருக்கு. நான் வெளிய கிளம்ப போறேன். சும்மா இப்படி வந்து என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்காத. நான் பாரிஸ் வந்திருக்கிறது தெரிஞ்சு என் ஃப்ரெண்ட் எனக்கு கால் பண்ணி ஒரு லிஸ்ட் கொடுத்து அதெல்லாம் வாங்கி அனுப்ப சொல்லி இருக்கா. சோ நான் ஷாப்பிங் போறேன்.” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை திருப்பி கொண்டாள்.
அப்போதும் அமைதியாகவே இருந்த பிரிட்டோ அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னே சென்று நின்று கிளம்ப தொடங்கியவுடன் மெல்ல அவள் அருகில் சென்று “இப்ப எதுக்கு பொய் சொல்ற?” என்று பாவமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, அவனைப் பார்த்து முறைத்த கிளாரா தன் கையில் இருந்த ஹேர் ஸ்டைட்ணரை கீழே தூக்கி எறிந்துவிட்டு “இப்ப நான் உன் கிட்ட என்ன பொய் சொன்னேன்? ஏன் என் ஃபிரண்டுகாக நான் ஷாப்பிங் பண்ண போக கூடாதா? எப்ப பாத்தாலும் உன் பின்னாடியே நான் சுத்திட்டு இருக்கணும்னு எதிர்பார்க்கிறியா நீ?
நான் இன்னும் உன்னோட பெட் அனிமல் இல்ல. நான் அப்படியெல்லாம் இருக்கணும்னு நீ எக்ஸ்பெக்ட் பண்ணாலும் என்னால அப்படி இருக்க முடியாது. உனக்கு எங்கயாவது வெளியே போகணும்னா நீ வேற எவளையாவது கூட்டிட்டு போ. என்ன விடீறு.” என்று கோபத்தில் கத்தினாள்.
இவள் ஏன் திடீரென்று இப்படி எல்லாம் சம்பந்தமே இல்லாமல் பேசிக் கொண்டு இருக்கிறாள் என புரியாமல் அவளை குழப்பத்துடன் பார்த்த பிரிட்டோ கீழே கிடந்த ஹேர் ஸ்ட்ரைட்னரை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு “நான் அத பத்தி எல்லாம் பேசவே இல்ல. இத்தனை வருஷமா உன் கூட இருக்கேன். உனக்கு பீரியட்ஸ் எப்ப வரும்னு கூட எனக்கு தெரியாதா? லாஸ்ட் டைம் நீ எப்ப பீரியட்ஸ் ஆனேன்னு கூட எனக்கு ஞாபகம் இருக்கு.
உன்ன பார்த்தாலே நீ ஏதோ disturbedஆ இருக்கனு நல்லா தெரியுது. அதான் என்னை அவாய்ட் பண்ணிட்டு தனியா வெளிய போகணும்னு நினைக்கிற.. பட், நீ ஏன் திடீர்னு இப்படி இருக்கேனு தான் எனக்கு புரிய மாட்டேங்குது. அதை தான் நான் கேட்கிறேன். என்ன ஆச்சு பேபி உனக்கு? மறுபடியும் பெயினா இருக்கா? நான் வேணும்னா டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவா?” என்று கலங்கிய கண்களுடன் கேட்டுவிட்டு வாஞ்சையுடன் அவளது தோள்களைப் பிடித்தான்.
அவனது கைகளை தட்டிவிட்ட கிளாரா ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது கிடந்த அனைத்து பொருட்களையும் ஆக்ரோஷமாக கீழே தள்ளிவிட்டுவிட்டு “enough பிரிட்டோ! எல்லாமே உனக்கு தெரியும்னா.. அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றியா! சொல்றியா என்ன அதான் ஆல்ரெடி என்னை அக்கியூஸ் பண்ற மாதிரி பேசுறியே.. இப்ப என்ன நான் உனக்கு எனக்கு இப்ப பீரியட்ஸ் இருக்கா இல்லையான்னு காமிச்சு ப்ரூவ் பண்ணா தான் நீ நம்புவியா?
சொல்லு… நான் அதை பண்ணி காமிக்கணுமா இப்போ? ஒரு பொண்ணோட பாடிய பத்தி உனக்கு என்ன தெரியும்? முதல்ல என்னோட எமோஷன்ஸ் பத்தி உனக்கு என்ன தெரியும்? ஏதோ நமக்கு மேரேஜ் ஆயிடுச்சுன்றதுக்காக எல்லா விஷயத்தையும் நீ என்ன கண்ட்ரோல் பண்ணலாமே நினைக்காத. எனக்கு என்ன தோணுதோ நான் அதை மட்டும் தான் செய்வேன்.
உன்ன பார்த்தாலே எனக்கு இரிடேட் ஆகுது. முதல்ல இங்க இருந்து வெளியே போ. இல்லனா நான் தனியா வேற ரூம் புக் பண்ணி இங்க இருந்து போறேன். அப்ப தான் கொஞ்ச நேரம் ஆவது உன் தொல்லை இல்லாம என்னால நிம்மதியா இருக்க முடியும்.” என்று தன் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டே போனாள்.
அவள் பேசியதில் அவளது மனநிலை இப்போது சரியில்லை என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. அதனால் அவள் கேட்கும் ஸ்பேஸை தான் அவளுக்கு இப்போது கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைத்த பிரிட்டோ “இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை நீயும் நானும் சண்டை போட்டு இருக்கோம். ஏன் ஒருத்தர ஒருத்தர் ரியலா ஃபைட் பண்ணி டைரக்ட்டா physical attack கூட பண்ணி இருக்கோம். பட் இது புதுசா இருக்கு கிளாரா.
ரீசன் என்னவா இருந்தாலும் பரவால்ல. ப்ளீஸ் என்ன விட்டு தூரமா போகணும்னு மட்டும் நினைக்காத. உன் கிட்ட இப்படி கெஞ்சியே எனக்கு இத்தனை வருஷம் போயிடுச்சு. இதுக்கு அப்புறமாவது நான் உன் கூட ஹேப்பியா வாழனும்னு நினைக்கிறேன். Please try to understand.” என்று கலங்கிய கண்களுடன் குரல் தழுதழுக்க சொல்லிவிட்டு பிரிட்டோ அந்த ரூமை விட்டு வேகமாக வெளியேறி விட்டான்.
தானும் அவனை பின் தொடர்ந்து சென்ற கிளாரா வேண்டும் என்று டோரை அடித்து லாக் செய்தாள். பின் வேகமாக உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்து தனது இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு நடந்ததை நினைத்து அழ தொடங்கினாள். “sorry britto! I am so sorry. நான் உன்னை விட்டு நிரந்தரமா போகும்போது இதுக்காக நீ என்னை மன்னிப்பேன்னு நான் நம்புறேன்.” என்று அவளது இதழ்கள் முணுமுணுத்தது.
சோகமே உருவாக வெளியில் வந்த பிரிட்டோ எங்கு செல்வது என்று தெரியாமல் பால்கனி பக்கம் சென்று நின்று வெளியில் தெரிந்த காட்சிகளை கண்டான். தூரத்தில் தெரிந்த பசுமையான கார்டன் ஏரியா அவன் கவனத்தை இழுக்க, அங்கே சென்று வாக்கிங் செல்லலாம் அப்போதாவது கொஞ்சம் ஆறுதல் கிடைக்கிறதா என பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மெல்ல நடந்து அவன் அங்கே சென்றான்.
அங்கே இருந்த பென்சில் யாரோ ஒருவர் ஸ்வட்டர் போட்டு கொண்டு தனியாக அமர்ந்து இருப்பதைப் போல இருந்ததால் அவன் யார் என்று அருகில் சென்று பார்க்க, யாரோ ஒருவர் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து அவன் பக்கம் திரும்பி பார்த்த ஜனனி “ஹைய் பிரிட்டோ! நீங்க இங்க என்ன பண்றீங்க? இன்னைக்கு நீங்க லீவு.. கிளாரா கூட எங்கையோ வெளிய போறீங்கன்னு விஜய் சொல்லிட்டு இருந்தாரு! இன்னும் கிளம்பலையா நீங்க?” என்று கேட்டாள்.
எரிமலை போல கொதித்துக் கொண்டு இருக்கும் தன் மனதை எப்படி சமன்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த பிரிட்டோவிற்கு இப்போது யாருடனாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது. அதனால் பெருமூச்சு விட்டபடி அவள் அருகில் கொஞ்சம் கேப் விட்டு அமர்ந்த பிரிட்டோ “அவ வரலன்னு சொல்லிட்டா.” என்று உடைந்த குரலில் சொன்னான்.
அதுவரை சாதாரணமாக இருந்த ஜனனி உடனே அவளும் சோகமாக, “ஏன் இவங்க எல்லாரும் இப்படி இருக்காங்களோ தெரியல! நானும் பாரிஸ் வரமேன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். எங்க அண்ணா ரெண்டு பேரையும் பாருங்க.. எங்க அண்ணிகளுக்காக அவங்க எவ்ளோ யோசிச்சு பிளான் பண்றாங்க..
ஆகாஷ் அண்ணாவும் லிண்டா அண்ணியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. மேரேஜ் ஆகி இத்தனை வருஷம் கழிச்சு கூட அவங்க அதே மாதிரி தான் ஹாப்பி கப்பில்ஸா இருக்காங்க. தேன்மொழி அண்ணி யாருன்னு கூட தெரியாம அர்ஜுன் அண்ணா அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
பட் இப்போ அவங்களுக்காக அவர் என்ன வேணாலும் செய்ய ரெடியா இருக்காரு.. அர்ஜுன் அண்ணா வொர்க் தவிர வேற யாருக்காவது பிரியாரிட்டி குடுத்து நீங்க பாத்திருக்கீங்களா? கிட்டதட்ட 2 1/2 மாசம் வீட்டை விட்டு வெளிய போகாம அண்ணி கூடையே அர்ஜுன் அண்ணா இருந்துருக்காரு. இப்ப நினைச்சாலும் என்னால இதை நம்பவே முடியல.
இவங்கள மாதிரி தானே நானும் சந்தோஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. பட் இப்ப எதுவுமே முன்னாடி மாதிரி இல்லாத மாதிரி இருக்கு. நான் ஆசையா சந்தோஷ் கூட வெளிய போறதுக்கு நிறைய பிளான் பண்ணி வச்சிருந்தேன். பட் அவன் இங்க வந்து கூட ஏதோ ஒர்க் இருக்குன்னு சொல்லி கிளம்பி போயிட்டான்.
எனக்கு அவன் ஏன் இப்படி இருக்கான்னே புரிய மாட்டேங்குது. மேரேஜ் ஆனதுக்கு அப்புறமா இவங்களுக்கு எல்லாம் லவ் கொறஞ்சிடுமா என்ன?” என்று தன் பாட்டிற்கு புலம்ப தொடங்கி விட்டாள் ஜனனி.
தன் மனதில் இருக்கும் அனைத்தையும் ஜனனி அப்படியே பேசுவதாக நினைத்த பிரிட்டோ சோகமாக அந்த சேரில் சாய்ந்து அமர்ந்து “லவ் ரொம்ப காம்ப்ளிகேட்டட் சப்ஜெக்ட்ல ஜனனி.. லவ் பண்ணும் போது நமக்கு அவங்கள ரொம்ப நல்லா தெரியும்னு நினைக்கிறோம். ஆனா மேரேஜ் ஆனதுக்கப்புறமா, நம்ம எவ்ளோ பர்ஃபெக்ட்டா இருக்க ட்ரை பண்ணாலும், கேர்ஃபுல்லா எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணாலும் கூட என்னமோ தெரியல ஒரு பிளாங் ஸ்பேஸ் இருக்க தான் செய்து. அதை எப்படி full பண்றதுன்னு தான் தெரியல.” என்று சொல்ல, “கரெக்டா சொன்னீங்க! எனக்கும் அதுதான் தெரியல.” என்றாள் ஜனனி. அப்படியே அவர்கள் இருவரும் அவர்களது மனதில் இருப்பதை எல்லாம் கொட்ட தொடங்கினார்கள்.
மீண்டும் வருவாள் 💕