அத்தியாயம் 192
அர்ஜுன் எமர்ஜென்சி எக்ஸிட்டை நோக்கி ஓடிச் சென்றும், எவனோ ஒருவன் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷனை கேட்டு அங்கே இருந்த டெடரிஸ்ட்டுகள் அவனை பின் தொடர்ந்து செல்லாமல் மீண்டும் அவனது மற்ற குடும்ப உறுப்பினர்களை டார்கெட் செய்ய தொடங்கினார்கள். அதனால் தன் கையில் இருந்த இன்டர்காம் மூலமாக அனைவருக்கும் கேட்கும்படி அர்ஜுன் “டேக் பொசிஷன்.. start monitoring! Don’t wait for my comment just attack. உங்க கண்ணுல எவன் எங்க தென்பட்டாலும் எல்லாரையும் போட்டு தள்ளுங்க. ஆனா இவ்வளவு நேரம் ஒருத்தன் என் கிட்ட பேசிட்டு இருந்தான்ல, எனக்கு அவன் மட்டும் உயிரோட வேணும். அவனை வெச்சுத் தான் அவனுக்கு பின்னாடி வேற யாராவது இருக்காங்களான்னு நான் கண்டுபிடிக்கணும். முதல்ல அவன் யாரென்று நான் தெரிஞ்சுக்கணும்.” என்று இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தான்.
அதை ஃபாலோ செய்து அதே எக்ஸிட் கேட் வழியாக ஏராளமான கருப்பு நிற யூனிபார்ம் அணிந்து இருந்த பாடி கார்டுகள் குபு குபுவென்று உள்ளே வரத் தொடங்கினார்கள். அது மட்டும் இன்றி அந்த இடம் விசாலமானது என்பதால் அந்த இடத்தை விட்டு வெளியில் செல்வதற்கு ஆங்காங்கே எக்ஸிட் பாயிண்ட்களும் இருந்தது. சற்று நேரத்திற்கு முன் சென்றிருந்த கரண்ட் இப்போது வந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்ததால் அந்த ஜென்டரி பாயிண்ட் மூலமாகவும் ஏராளமான ஆட்கள் ஆர்மி ஃபோர்சில் இருப்பவர்களைப் போல கையில் துப்பாக்கிகளுடன் உள்ளே வந்து சேர்ந்தார்கள்.
அந்த டெரரிஸ்ட் கும்பலின் ஆட்களின் சார்பாகவும் நடப்பதை கவனித்துக் கொண்டு இருந்த ஒருவன் அவர்களுக்கு இன்டர்காம் மூலமாக அர்ஜுனின் ஆட்கள் அந்த இடத்தை இப்போது சுற்றிவழித்து விட்ட தகவலை தெரிவித்தான். அதனால் அவர்களுக்கு தலைவன் போல இருந்தவன் கொஞ்சம் பயந்து “என்னடா சொல்ற? அப்ப எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணி தான் அவன் இங்க குடும்பத்தோட வந்திருக்கானா? உன் பேச்சைக் கேட்டு இந்த டைம்ல வந்து நாங்க எல்லாரும் இப்ப நல்லா மாட்டிக்கிட்டோம்.. இப்ப என்ன பண்றது? சீக்கிரம் ஏதாவது சொல்லு. உன்னால இன்னைக்கு நாங்க எல்லாரும் சாகப்போறோம்.” என்று ஆத்திரத்தில் கத்தினான்.
“அட இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு மட்டும் என்ன தெரியும்? எனக்கே யாரும் இதை பத்தி எதுவும் சொல்லல. மேபி அர்ஜுன் அவனாவே தனியா அவன் ஃபிரண்ட்ஸ வச்சு பிளான் பண்ணி இருப்பான் போல இருக்கு.. சரி அத விடுங்க.
நீங்க இன்னைக்கு அவன் கிட்ட மாட்டக் கூடாது அதுதான் இப்ப முக்கியம். உங்கள்ல ஒருத்தர் அவன் கிட்ட சிக்கனா கூட, அவன வச்சு நூல் புடிச்ச மாதிரி அப்படியே அவன் ஒவ்வொருத்தரையா தூக்கிருவான். உங்க கிட்ட யார் சிக்கினாலும் சரி. அவன் குடும்பத்தில இருக்கிறவங்க யாரையாவது முதல்ல தூக்குங்க. அவங்கள வெச்சு பிளாக்மெயில் பண்ணா மட்டும் தான் உங்களால இங்க இருந்து சேஃபா தப்பிச்சு வெளியே போக முடியும்.” என்றான்.
அதுவும் சரி தான் என்று நினைத்து அவர்களும் ஆளுக்கு ஒரு குழுவாக தனித்தனியாக பிரிந்து சென்று அர்ஜூனின் குடும்பத்தினரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அது அதிக சதுரடி கொண்ட விசாலமான இடம் என்பதால் உடனே அவர்களால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அர்ஜுனின் ஆட்கள் அந்த இடம் முழுவதையும் சுற்றி வளைத்து இருந்ததால் இவர்கள் பதுங்கி பதுங்கி ஒரு பக்கம் செல்ல வேண்டியதாக இருக்க, சிசிடிவி கேமரா மூலமாக அந்த மாலின் செக்யூரிட்டி டீமில் இருப்பவர்கள் அனைத்தையும் பார்த்து யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்று அர்ஜுனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தார்கள். அதை வைத்து தனது குடும்பத்தினரின் அருகே யாரும் செல்லாமல் அவன் பார்த்துக் கொண்டான்.
ஜேசன் மற்றும் யாதவ் இருவரும் தங்கள் கைகளில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு செக்யூரிட்டி டீமில் உள்ளவர்கள் கொடுக்கும் இன்ஸ்ட்ரக்ஷனை கேட்டபடி தங்களுக்கு அருகில் இருக்கும் டெரரிஸ்ட்டுகளை வேட்டையாட களத்தில் இறங்கினார்கள். அப்போது திடீரென்று ஒருவன் ஜேசனின் பின்னே நிற்பதை கவனித்த யாதவ் “ஜே!” என்று கத்தினான்.
அவனது பார்வை செல்லும் இடத்தை வைத்து தனக்கு பின்னே யாரு வந்திருக்கிறார்கள் என்று உணர்ந்த ஜேசன் திரும்பி அவன் யார் என்று பார்ப்பதற்கு பதிலாக சட்டென தரையில் மண்டியிட்டான். அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்ட யாதவ் அவனுக்கு பின்னே இருந்தவனை சுட்டான். இதற்கிடையில் இருவர் அவர்களை நோக்கி ஓடிச் செல்ல துப்பாக்கியின் மூலம் அவர்கள் அவனை தாக்குவதற்குள், அவர்கள் கையில் இருந்த துப்பாக்கியை ஒருவன் கீழே உதைத்து தள்ளினான். அதனால் துப்பாக்கியுடன் இருக்கும் மற்ற இருவரும் தங்களை சுட்டு விடக்கூடாது என்பதற்காக ஜேசன், யாதவ் இருவரும் அவர்களை துப்பாக்கியை பிடித்துக் கொண்டு அவர்களுடன் சண்டை போட தொடங்கினார்கள்.
“மம்மி எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நம்ம எப்ப ரெசார்ட்டுக்கு போவோம்! பிக் டாடி எங்க இருக்காரு? அவர வந்து நம்ம எல்லாரையும் கூட்டிட்டு போக சொல்லுங்க.” என்று அழுதபடி நடுங்கிய உடலுடன் லிண்டாவை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு உடைந்த குரலில் சொன்னான் மகிழன். “ஷூ ஷூ.. சைலன்டா இரு மகிழ். நம்ம இங்க இருக்கிறது யாருக்கும் தெரியக் கூடாது டோன்ட் க்ரை. அர்ஜுன் அண்ணா கண்டிப்பா ஏதாவது பண்ணுவாரு.” என்ற லிண்டா அழுது கொண்டே இருந்த மகிழனின் வாயை அவன் சத்தம் போட்டு விடக் கூடாது என்பதற்காக தன் கையை வைத்து மூடி விட்டாள்.
தானும் ஒரு இன்டர்காமை கையில் வைத்துக் கொண்டு தன்னைச் சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டு இருந்த ஆகாஷ் “டேய் அர்ஜுன் எங்கடா இருக்க? என்ன ஆனாலும் நீ தனியா போகாதன்னு நான் தான் உன் கிட்ட சொன்னேன் இல்ல.. எங்கடா போன? நான் gun-னோட ரெடியா தான் இருக்கேன். நீ எங்க இருக்கன்னு சொல்லு நான் வரேன். பெரிய இவன் மாதிரி நீ எல்லாத்துக்கும் தனியா போகாத சரியா?” என்றான்.
“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல. மூடிட்டு நான் சொல்றத மட்டும் செய். உனக்கு இருக்கிற ஒரே வேலை லிண்டாவையும் மகிழனையும் பார்த்துக்கிறது தான். மத்தவங்க எல்லாரையும் எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும். செக்யூரிட்டி டீம்ல இருந்து குடுக்கிற அப்டேட்ஸை மட்டும் ஃபாலோ பண்ணு.” என்று அர்ஜுன் ஆகாஷிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் நேரத்தில் ஒருவன் தங்கள் மறைந்து இருப்பது தெரியாமல் தங்களை கடந்து செல்வதை கவனித்த ஆகாஷ் இருந்த கடுப்பில் சரியாக அவனது நடுமண்டையை குறி பார்த்து சுட்டான்.
அந்த இடம் விசாலமானதாக இருந்தாலும் கூட, அந்த இடத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இப்போது துப்பாக்கியின் தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் டமால் டுமில் என்று கேட்டுக் கொண்டே இருந்தது. இடைவிடாமல் கேட்ட அந்த சத்தத்தில் யார் செத்தார்கள் சுட்டது யார் என்று என்ன இன்ஃபர்மேஷனும் தெரியாததால் பயத்துடன் மறைந்து ஆங்காங்கே அமர்ந்து இருந்தவர்கள் எல்லாம் தங்கள் குடும்பத்தினருக்கு எதுவும் ஆக கூடாது என மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.
இன்னும் கண்களில் கண்ணீருடன் ஜனனி அவள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்தே சந்தோஷை தேடிக் கொண்டு இருந்தாள். அவள் பதட்டத்தை உணர்ந்து அவள் கையில் இருந்த குழந்தையும் திடீரென சத்தமிட்டு அழ தொடங்கி விட, திடுக்கிட்ட ஜனனி குழந்தையை தோள்களில் போட்டு தட்டிக் கொடுத்தவாறு நடுங்கிய குரலில் பயத்துடன் “அழாத மா.. அழாத.. அம்மா இங்க தாண்டா இருக்கேன். ஒன்னு இல்ல ஒன்னு இல்ல தூங்கு தூங்கு.” என்றாள்.
அவள் கையில் இருக்கும் குழந்தை அழும் சத்தத்தை கேட்டு தனது தோள்களில் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருக்கும் மற்றொரு குழந்தையும் அழ தொடங்கி விட்டால் பெரிய பிரச்சனையாகி விடும் என நினைத்து பயந்த பிரிட்டோ அவசரமாக ஜனனியின் ஹேண்ட் பேக்கை பிடுங்கி அதில் இருந்த பால்பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்து “இந்தாங்க பாலை கொடுத்து எப்படியாவது குழந்தையை சீக்கிரம் தூங்குவிங்க.” என்று அவளை அவசரப்படுத்தினான்.
சரி என்ற ஜனனி அதை வாங்கி தன் குழந்தையின் அழுகையை நிறுத்த போராடிக் கொண்டு இருக்க, அந்த நேரத்தில் அவர்களை நெருங்கி யாரோ ஒருவர் வருவதைப் போல சத்தம் கேட்டது. அதனால் தன்னிடம் இருந்த குழந்தையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட பிரிட்டோ அவனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு எதிரி வருபவர் யாராக இருந்தாலும் அவனை சுட்டுக் கொள்ள தயார் ஆனான்.
இப்போது காலடி சத்தம் அவர்களுக்கு மிக அருகில் கேட்க, துப்பாக்கியை லோட் செய்தான் பிரிட்டோ. தன் கையில் வைத்திருந்த குழந்தையை தன் மார்போடு சேர்த்து இறுக்கி பிடித்தவாறு “கடவுளே கடவுளே கடவுளே! ப்ளீஸ் என் குழந்தைகள காப்பாத்திடுங்க!” என்று முணுமுணுத்துக் கொண்டு இருந்தால் ஜனனி.
பிரிட்டோ சரியாக பிஸ்டலை இயக்க விருந்த நேரத்தில் அங்கே வந்தான் சந்தோஷ். பிரிட்டோ இன்னும் அவனை நோக்கி தன் துப்பாக்கியை உயர்த்தியபடி அப்படியே நிற்க, ஏதோ இவ்வளவு நேரமாக தான் வேண்டிக் கொண்டு இருந்த கடவுள் தன்னை காப்பாற்றுவதற்காக நேரிலேயே வந்துவிட்டதை போல சந்தோஷை பார்த்தவுடன் நிம்மதி அடைந்த ஜனனி தன் குழந்தையுடன் அவன் அருகில் ஓடி சென்று அவனை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல பயப்படாத. அதான் நான் வந்துட்டேன்ல.. நான் இருக்கிற வரைக்கும் உனக்கும் நம்ம குழந்தைகளுக்கும் எதுவும் ஆக விட மாட்டேன்.” என்ற சந்தோஷ் ஜனனியின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டான். இன்னும் ஜனனி அவன் மீது சாய்ந்தபடி கண்களில் கண்ணீருடன் நிற்க, பிரிட்டோ அவர்களேயே பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த சந்தோஷ் தானும் அவனை முறைத்துப் பார்த்தான்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)