Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 182

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 182

by Thenaruvi Tamil Novels
7 views

அத்தியாயம் 182: கொலை முயற்சி

ரித்திகா வீட்டில்…

ரித்திகா குற்றமற்றவள் என்று தன்னுடைய மகன் வருண் நிரூபித்து விட்டதாக அதை பெருமையாக ஷாலினியிடமும், ரித்திகாவிடம், அவளுடைய பெற்றோர்களிடமும், சொல்லிக் கொண்டு இருந்தாள் செண்பகம். அவர்கள் அனைவரும் ரித்திகா மீள முடியாத பெரிய பிரச்சனையில் மாட்டி கொண்டு விட்டதால், அதில் இருந்து அவளால் வெளியே வந்து விட முடியாது என்று அவர்கள் நினைத்து பயந்து கொண்டு இருக்க, இப்போது திடீரென்று வந்து செண்பகமும் விஷ்ணுவும் அனைத்து பிரச்சினையும் முடிந்துவிட்டது என்று சொல்வதை அவர்களால் நம்ப முடியவில்லை. 

இவர்களுக்கு நாம் சும்மா சொல்லிக் கொண்டு இருந்தாள் அது அவர்களுக்கு புரியப்போவது இல்லை என்று நினைத்த விஷ்ணு, தன்னுடைய மொபைல் போனை எடுத்தவன் அதில் வருணைபற்றியும் ரித்திகாவை பற்றியும் வந்த ரீசண்டான செய்திகளை எடுத்து அவர்களின் முன்னே காட்டினான். அதுவரை ரித்திகாவை தவறானவள் என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் இப்போது ரித்திகாவுக்கு சாதகமாக பேசிக் கொண்டு இருப்பதை பார்த்த ரித்திகா உள்ளம் மகிழ்ந்தாள். 

என்ன தான் அவள் கேட்டு  கொண்டதைப் போல் வருண் இந்த பிரச்சினையை சரி செய்து விட்டாலும், ரித்திகாவிற்கு  வருண் தன்னிடம் நடந்து கொண்ட முறை சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் அவனுக்கு நன்றி சொல்லவோ அவனிடம் பேசவும் கூட அவள் விரும்பவில்லை. இருப்பினும் இந்த பிரச்சனை சரியாகி விட்டதால் நிம்மதியாக உணர்ந்தவள், “இந்த பிராப்ளம்னால நான் ரொம்ப ரெஸ்ட்லசா ஃபீல் பண்றேன். சோ நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன். நீங்க கோச்சுக்காதீங்க அம்மா.” என்று செண்பகத்திடம் சொல்லிவிட்டு தனது அறைக்கு செல்கிறேன் என்றால் ரித்திகா .

இந்த பிரச்சனையால் ரித்திகா எத்தனை பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்க கூடும் என்று புரிந்து கொண்ட செண்பகமும் அவளை எந்த கேள்வியும்கேட்காமல், “சரி மா. நீ போய் ரெஸ்ட் எடு.” என்று அமைதியான குரலில் சொன்னாள். ரித்திகா அங்கு இருந்து சென்றவுடன் ரித்திகாவின் பெற்றோர்களை பார்த்த செண்பகம், “நீங்க இந்த பிரச்சனையை நினைச்சு வருத்தப்படாதீங்க. வருண் இந்த உண்மை எல்லாத்தையும் கண்டு பிடிக்கறதுக்கு முன்னாடியே எனக்கு நம்ம ரித்திகா மேல நம்பிக்கை இருந்துச்சு. நான் நினைச்ச மாதிரியே இப்போ அவ மேல எந்த தப்பும் இல்லை என்று எல்லாருக்கும் தெரிஞ்சு… இப்போ அந்தப் பிரச்சனை சால்வ் ஆகிடுச்சு. நான் எப்பயும் உங்க கிட்ட சொல்ற மாதிரி ரித்திகா எங்க வீட்டு பொண்ணு. நாங்க அவளை நல்லா பாத்துக்குவோம். 

நாளைக்கு வருணனுக்கும், ரித்திகாவிக்கும் பங்க்ஷன் இருக்குல்ல
  பங்க்ஷன்ல ரித்திகா ஸ்ட்ரெஸ்ட்டாவே இருக்க போறா. நீங்க தான் அவளை சரி பண்ணனும். அப்புறம் இன்னும் மூணு நாள்ல கல்யாணம் வேற இருக்கு. இப்படி அடுத்தடுத்து சந்தோஷமான விஷயங்கள் நடக்க இருக்கிற இந்த நேரத்துல, உங்கள கஷ்டப்படுத்துற தேவை இல்லாத எந்த விஷயத்தை பத்தியும் நீங்க யோசிச்சு பாக்காதீங்க. இனிமே எல்லாமே நல்லபடியா நடக்கும்.” என்று ரேவதியின் கையை பிடித்துக் கொண்டு சொன்னாள். 

தன்னுடைய மகளின் வாழ்க்கை எது ஆகுமோ என்று நினைத்து பயந்து கொண்டு இருந்த ரித்திகாவின் பெற்றோர்களுக்கு செண்பகத்தின் வருகை பெரும் ஆறுதலாக இருந்தது. அதனால் செண்பகத்தையும், விஷ்ணுவையும், நன்றி உணர்வுடன் உபசரித்து வழி அனுப்பி வைத்தனர். 

வருணின் அலுவலக அறை… 

கௌத்தமை அங்கு இருந்து துரத்திவிட்ட பின்பும் வருண் ரித்திகாவை  பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தான். அவனுடைய ஒரு மனம், “பெரிய இவன் ஆட்டம் வேகமா  பாஞ்சுகிட்டு போய் அவளை அடிச்சில்ல…!!! அவ சொன்ன மாதிரி இப்ப அவ மேல எந்த தப்பும் இல்லை என்று ப்ருவ் ஆகிடுச்சு. அப்போ நீ நல்லவனா இருந்தா, அவ கிட்ட சாரி கேக்கணும் இல்ல..??” என்று கேட்க அவனுடைய இன்னொரு மனம் சாட்சி, “அவ ஒரு ஆளுன்னு நீ எல்லாம் அவகிட்ட போய் சாரி கேட்கணுமா வருண்…??? அவளா வந்து நம்ம கிட்ட பேசினா நம்ம எல்லாத்தையும் மறந்துட்டு அவகிட்ட நார்மலா பேச ட்ரை பண்ணலாம் அவ்ளோ தான் பண்ண முடியும். சாரி கேட்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்.” என்று சொல்ல, இறுதியில் அவனுடைய ஈகோ தான் வெற்றி பெற்றது. அதனால் ரித்திகாவிடம் தான் என்ன ஆனாலும் மன்னிப்பு கேட்டு விட கூடாது என்று முடிவெடுத்தான் வருண். 

திவ்யாவின் வீட்டில்…

பேய் அடைந்தவளை போல் யாரிடமும் பேசாமல் சாப்பிடாமல் தன்னுடைய அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் திவ்யா. அவள் இப்போதெல்லாம் தன்னை சாதாரணமாக அலங்கரித்துக் கொள்வதை கூட தவிர்த்து விடுகிறாள்.  எதையோ யோசித்தவளாய் சீறிங்கை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருக்கும் திவ்யா, தன்னை சுற்றி இருக்கும் யாரையும் எதையும் கவனிக்கவோ, அல்லது மதிக்கவோ, இல்லை.

திவ்யாவின் அப்பாவை தவிர மற்ற அனைவரும் இது திடீர் கல்யாணம் என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் திவ்யா இப்படி இருக்கிறாள் போல என்று நினைத்துக்் கொண்டனர். ஆனால் அனைத்து உண்மைகளையும் அறிந்து இருந்த திவ்யாவின் அப்பா, “இவளை இப்படி பாக்குறதுக்கும் கஷ்டமா இருக்கு. அதுக்காக இவள அந்த பையன் கூட என்னால சேர்த்து வைக்கவும் முடியாதே…!!! ஆனா இவள இப்படியே விட்டா இவ சாப்பிடாம கொள்ளாம இருந்து செத்தே போயிருவா.” என்று அவருக்கு ஒரு புறம் தோன்றினாலும் இன்னொரு புறம், “செத்தா சாகட்டும். இவ இப்படி சாப்பிடாம கொள்ளாம இருந்து செத்துப் போனா கூட நமக்கு அது பெருசா கௌரவம் குறைச்சல் ஆயிடாது. ஆனா இவ அவன் கூட  ஓடி போயிட்டானா, அந்தப் பழியை நம்மளால எத்தனை தலைமுறை ஆனாலும் சரி பண்ண முடியாது. ஒருவேளை இவர் செத்து போயிட்டா, நமக்கு இப்படி ஒரு புள்ளையே பொறக்கலேன்னு நினைச்சுட்டு போயிடுவோம்.” என்று அவருக்கு தோன்ற இறுதியில் தன்னுடைய மனதை கல்லாக்கி கொண்டு திவ்யாவை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டார். 

பிரவீன் வீட்டில்….

நாளை அவனுக்கு திருமணம் என்பதாலும், தான் வருண் மற்றும் ரித்திகா திருமணத்தை கெடுத்து விட்டோம் என்ற நம்பிக்கையினும் நிம்மதியாக இருந்த பிரவீன், இப்போது அவனுடைய கனவுகள் அனைத்தும் வெறும் கானல் நீராய் போய்விட்டதால் விரக்தியில் தன்னுடைய வீட்டில் குடித்துவிட்டு சங்கரிடம் புலம்பி கொண்டு இருந்தான். 

அப்போது அவனுக்கு தான்   மலை போல் நம்பிக்கொண்டு இருந்த கௌத்தம் தனக்கு துரோகம் செய்துவிட்டுதாக தோன்ற, அதனால் அவன் மீது அதீத கோபத்தில் இருந்த பிரவீன் சங்கரை அழைத்து கௌதம் எங்கு இருந்தாலும் அவனை உடனே தேடி கண்டுபிடித்துக் கொள்ளும் படி ஆணையிட்டான். 

சில மணி நேரத்திற்கு பின்…

தான் சென்னைக்கு சென்றுவிடலாம் என்று நினைத்த கௌத்தம், தன்னுடைய முக்கியமான பொருட்களை மட்டும் பேக் செய்து கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான். அப்போது பிரவினால் அனுப்பப்பட்ட ஆட்கள் கௌதமை திடீரென்று சூழ்ந்து கொண்டு அவனை கத்தியால் தாக்க முயல, அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கௌதம் சாலைகளில் அங்கும் இங்கும் புகுந்து ஓடிக் கொண்டு இருந்தான். அவன் எங்கே சென்று மறைந்தாலும் விடாப்படியாக அவனை பிரவீனி ஆட்கள்  துரத்திக் கொண்டே இருந்தனர். 

அப்போது சரியாக ஒரு முட்டுச் சந்தில் கௌத்தம் அவர்களிடம் மாட்டிக் கொள்ள, பிரவீன்ச் ஆட்கள் அவனை சூழ்ந்து நின்று கொண்டனர். அந்த ரவுடிகள் கும்பலில் இருந்து ஒருவன் கையில் ஒரு பட்டாக்கத்தியுடன் கௌதமை நோக்கிி வந்தவன், அவனுடைய வயிற்றில் அந்த பெரிய கத்தியை இறக்கி கௌத்தமை கொன்று விடலாம் என்று எண்ணத்தில் இருந்தான்.

அப்போது சரியாக அங்கே வந்த சிவா, கௌத்தமை நோக்கி பாய்ந்து வந்த கத்தியை லாபகமாக பிடித்து தடுத்தான். சிவாவின் வருகையை எதிர்பார்த்து இருக்காது கௌதம் அவனை ஆச்சரியமான கண்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தான். சிவாவுடன் சில பாடிப்கார்டுகளும் கௌதமை காப்பாற்றுவதற்காக அங்கே வந்திருந்தனர்.  சிவாவின் படையை பார்த்தவுடன் மிரண்டு போன பிரவீனின் ஆட்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொண்டால் போதும் என்று நினைத்து அங்கு இருந்து தப்பித்து ஓடி சென்று விட்டனர். தன்னை கொலை செய்ய முயற்சித்தவர்கள் அனைவரும் அங்கு இருந்து சென்று விட்டதால் சற்று நிம்மதி அணிந்த கௌத்தம் சிவாவை பார்த்து, “தேங்க்ஸ் டா சிவா நீயும் என் மேல கோவமா தான் இருப்பேன்னு நினைச்சேன். ஆனா எனக்கு இப்படி ஒரு ஹெல்ப் நீ பண்ணுவேன்னு நான் யோசிச்சு கூட பாக்கல.” என்று உருக்கமான குரலில் சொன்ன கௌதம் சிவாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழ தொடங்கினான். 😭 😭 😭

கௌதமை தன் மீது இருந்து பிரித்த சிவா, “உனக்கு யார்கிட்டயாவது சாரி கேட்கணும்னு தோணுச்சுன்னா, அதை போய் நம்ம வருண் சார் கிட்ட கேளு. அவருக்கு இன்னமும் உன் மேல பாசம் இருக்கு டா. அதான் நீ இவ்ளோ பண்ணியும் நீ உண்மைய சொன்னதுனால அவர் உன்னை மன்னித்து விட்டுட்டாரு. அவர் மட்டும் ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானே உன்னை கொன்னு இருப்பேன். இப்பயும் அவர்தான் பிரவினால உனக்கு ஏதாவது பிரச்சனை வரத்துக்கு சான்ஸ் இருக்குன்னு யோசிச்சு எங்கள, உனக்காக இங்க அனுப்பிவச்சு இருக்காரு. அந்த மனுஷனுக்கு போய் உனக்கு எப்படிடா துரோகம் பண்ண மனசு வந்துச்சு…???” என்று கடுமையான குரலில் கேட்டான் சிவா.

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured