Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 181

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 181

by Thenaruvi Tamil Novels
10 views

அத்தியாயம் 181: ரித்திகா குற்றமற்றவள் (பார்ட் 2)

கௌத்தம் என்ன தான் இதை தான் செய்யவில்லை என்று சொன்னாலும், அவனுடன் இத்தனை நாள் பழகி இருந்த சிவாவால் அவனிடம் இருந்த திருட்டு தனத்தை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. அதனால் இப்போது கௌத்தம் அதை ஒப்பு கொள்ளும் மன நிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்ட சிவா, “கடவுளே இவன நானே என் கையால கொல்ற நிலைமை மட்டும் வர கூடாது.” என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டான். 

இப்போது வருணின் முன்னே சிவாவும், கௌத்தமும் நின்று கொண்டு இருந்தார்கள். வருண் இதுவரை ஏதேனும் உண்மையை கண்டு பிடித்து இருக்கிறானா என்று கௌத்தம் அறிந்து இருக்கவில்லை என்பதால், எதுவாக இருந்தாலும் நாம் எதுவும் நமக்கு தெரியாது என்பது போலவே காட்டிக் கொள்ளலாம் என்று நினைத்து உறுதியாக இருந்தான். கௌத்தமை முறைத்து பார்த்த வருண், “நீங்க வெளிய போ சிவா.” என்று அதிகார தோரணையில் சொன்னான். “நானும் இருக்கனே.. சார் ப்ளீஸ்…!!” என்று சிவா கேட்க, “டூ வாட் ஐ சே.” என்று உச்ச ஸ்தூதியில் அவனைப் பார்த்து கத்தினான் வருண். 

இப்போது வருண் பேசிய விதம் கௌத்தமிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அதனால் வருண் எதுவும் கேட்பதற்கு முன்பே பதட்டப்பட்டவன், “நான் எதுவும் பண்ணல சார். நீங்க என் மேல சந்தேக படாதீங்க.” என்று அவசரமான குரலில் சொன்னான். அவன் பேசிய விதத்திலேயே அவன் மீது தவறி இருப்பதை உணர்ந்து கொண்ட வருண், “ஏன் இப்படி பண்ண..??”  என்று நேரடியாக கேட்டான். தன் மீது தவறில்லை என்று சாதித்து விடலாம் என்ற மிதப்பில் இருந்த கௌத்தம், “நான் என்ன சார் பண்ணுனேன்..??? யாரோ பண்ண தப்ப நீங்க ஏன் என் மேல பலி போட பாக்குறீங்க..??? நான் ரித்திகாவை லவ் பண்றேன்.  நானே அவளை லவ் பண்ணும்போது , அவளுக்கு இப்படி ஒரு விஷயத்தை எப்படி நான் நடக்க விடுவேன்..???” என்று உறுதியான குரலில் கேட்டான். 

வருண்: அவனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்தவன், “கரெக்ட் தான் டா. நீ அவளை லவ் பண்ற. அதனால தான் நீ அவளுக்காக இப்படி பண்ணி் இருக்க. நீ இப்படி பண்ணா ஈஸியா எங்க கல்யாணத்தை நிறுத்திரலாம்னு பிளான்   போட்டு இருக்க.” என்றவன் அவனுடைய சட்டையை இறுக்கமாக பிடித்து மீண்டும் அவனுடைய கன்னத்தில் பலமாக அறைந்தவன், “அவ பேர கெடுத்து இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு நினைச்சு இருக்க… அவ்ளோ கேவலமானவனா டா நீ..??? சொல்லு நீ மட்டும் தான் இதை பண்ணியா இல்ல உனக்கு அந்த பிரவீனும் ஹெல்ப் பண்ணனா..??? கண்டிப்பா அவன் ஹெல்ப் பண்ணி இருப்பான். அவனுடைய ஹெல்ப் இல்லைனா உன்னால இவ்ளோ எல்லாம் பண்ணி இருக்க முடியாது.” என்று சொன்னவன், மீண்டும் மீண்டும் கௌத்தமை பலமாக தாக்கினான்.

ஏற்கனவே லேசான குற்ற உணர்ச்சியில் இருந்த கௌத்தம்க்கு  வருண் பேசியதும், அவனுடைய அடியும் , இன்னும் அவனுடைய குற்ற உணர்ச்சியை அதிகப்படுத்தியது. அதனால் கண்ணீர் நிறைந்த கண்களுடன் வருணின் கையெடுத்து கும்பிட்ட கௌத்தம், “ஐ அம் சாரி சீனியர். நான் முதல்ல இதெல்லாம் வேணாம். நான் பண்ண மாட்டேன்னு தான் பிரவீன் கிட்ட சொன்னேன். ஆனா நான் இதை செய்யலேன்னாலும் அவன் வேற எதையாச்சும் செஞ்சு உங்களையும் ரித்திகாவையும் ‌  எதையாச்சும் பண்ணியே தீருவேன்னு என்கிட்ட ஸ்ட்ராங்கா சொன்னான். 

ஒரு பக்கம் ரித்திகா உங்களை கல்யாணம் பண்ணாலும் அவ சந்தோசமா இருக்க மாட்டான்னு எனக்கு தோணுச்சு. இன்னொரு பக்கம் நீங்களே சந்தோஷமா இருந்தாலும் அந்த பிரவீன் உங்களை வாழ விட மாட்டான்னு தோணுச்சு. அதான் அவ மேல இருந்த பாசத்துல அவளுக்கு இப்படி ஒரு கெட்ட பேரு வந்தா கூட நான் அவ கூட இருப்பேன் என்ற  நம்பிக்கையில் இப்படி பண்ணிட்டேன். ஐ அம் சாரி ப்ரோ. நான் என்ன பண்றதுன்னு தெரியாம தான் இப்படி பண்ணிட்டேன். இத நான் தான் பண்ணேன்னு ரித்திகா கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க.  அப்புறம் அவ என்ன கேவலமா நினைப்பா. அத என்னால தாங்கவே முடியாது.” என்றவன் வருணின் காலை பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

தன்னுடைய காலை பிடித்துக் கொண்டு இருந்தவனை தன்னிடம் இருந்து காலால் தள்ளிவிட்ட்ட வருண், “போதும் வாய மூடு டா. நீ அவ்ளோ நல்லவனா இருந்தா பிரவீன் உன்கிட்ட வந்து பேசின உடனே, அதை பத்தி நீ என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணி இருக்கணும். அத விட்டுட்டு நீ கேவலமா இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு அதையும் அவளுக்காக பண்ணேன்னு சொல்ற பாத்தியா உன்னை எப்படி நான்   மன்னிச்சு விடுறது.??? இதுல ரித்திகாவுக்கு உன்ன பத்தின உண்மை எல்லாம் வேற தெரிய கூடாதா..??? நான் சொல்லுவேன் டா உன்னோட லட்சணம் என்னன்னு அவளும் தெரிஞ்சுக்கட்டும்.” என்றவன், தன்னுடைய ஷூ காலால் கௌத்தமை ஏறி பலமுறை மிதித்தான். 

இந்த வலியை கூட கௌத்தமால் பொறுத்துக் கொள்ள முடிந்தது ஆனால் ரித்திகாவும் தன்னை தவறாக நினைத்து விடுவாளே என்று நினைக்கும் போதே அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்த வலியை தான் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லைை. அதனால் அமைதியா இருந்தான் அவன்  கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வடிய வருனிடமிருந்து ஒவ்வொரு அடிகளையும் வாங்கிக் கொண்டான் கௌத்தம்.
சிவாவுடன் பழகிய பாவத்திற்காக அவனை கொள்ள வருணிக்கு
மனம் வரவில்லை. அதனால் தன்னுடைய காலுக்கு கீழே விழுந்து கிடந்த கௌத்தமை கூர்மையான விழிகள் உடன் பார்த்த வருண், “இதான் நான் உனக்கு குடுக்கிற லாஸ்ட் வார்னிங். இதுக்கு மேல நீ என் கண்ணுல படுற மாதிரி மட்டும் இல்ல… இந்த ஊரிலயே கூட நீ இருக்கக் கூடாது. எங்கேயாவது ஓடிப் போயிரு. மறுபடியும் என்னோட கண்ணுல நீ மாட்டினா, நான் உன்னை உயிரோடவே விட மாட்டேன்.” என்று அவனை பார்த்து அச்சுறுத்தும் குரலில் சொன்ன வருண் தன்னுடைய ஆபீஸ் ரூமில் இருக்கும் பிரைவேட் மினி பெட்ரூமிற்க்கு சென்று விட்டான்.

சில நிமிடங்களுக்கு பின்… 

இந்த பிரச்சனையை சாமர்த்தியமாக கையாள வேண்டும் என்று நினைத்த க்ரிஷா பி  ஆர். டீம் இன் ஹெட்டை அழைத்து அவனுடைய உதவியுடன் வருணின் அபிஷியல் ட்விட்டர் கணக்கின் வாயிலாக, நடந்த உண்மைகளை சுருக்கமாக பதிவிட்டிருந்தவள்… ரித்திகாவின் மீது இருந்த ஒரு தலை காதலால் அவளுடன் பணியாற்றிய ஒரு ஆசிரியர் செய்த தவறு தான் இது என்றும், அந்த பதிவுகளில் வந்த எதுவும் உண்மை இல்லை என்றும், நான் ரித்திகாவை காதலிப்பதாகவும் எங்களுக்குள்ளே இருக்கும் இந்த காதல் மிகவும் தெய்வீகமானது என்றும் வருண் சொல்வதைப்போல் க்ரிஷாவே ஒரு பதிவை தயார் செய்து போஸ்ட் செய்து விட்டாள். 

அதில் ரித்திகா குற்றமற்றவள் என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் இணைக்கப்பட்டு இருந்தது. வழக்கம்போல் இந்த செய்தியும் வெளியான சில நிமிடங்களிலேயே பேசும் பொருளாகி விட்டது. இப்போது அதில் இருந்த உண்மைகளை புரிந்து கொண்ட மக்கள், “அவ்ளோ பெரிய பணக்காரர் ஒரு ஏமாற்றுக்காரியை எதுக்கு போய் கல்யாணம் பண்ணனும்..??? அவரே இந்த பொண்ண காதலிக்கிறதா சொல்றாருன்னா, அப்ப இவங்க சொல்றது எல்லாம் உண்மையா தான் இருக்கும்.” என்று மாறி மாறி தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டு இருந்தனர். 

ரித்திகாவின் வீட்டில்….

கோபமாகவே அமர்ந்து இருந்த ரித்திகாவின் அருகே வந்த ஷாலினி, “அக்கா நம்ப வந்ததில இருந்து நீங்க இப்படி அமைதியாகவே இருக்கீங்க. மாமா உங்ககிட்ட என்ன தான் சொன்னாரு ஏன் நீங்க இவ்வளவு கோவமா இருக்கீங்க..??? ஒரு வேளை அவர் உங்களை நம்பலயா..???” என்று மனசு கேட்காமல்  அவளிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில் ரித்திகாவின் கோபம்  வருத்தம் அவளுடைய  மனகுமுறலால் , ஷாலினியை கட்டி பிடித்து கொண்டு அழுத ரித்திகா, வருணின் அறையில் நடந்த அனைத்தையும் ஷாலினியிடம் தெளிவாக சொன்னாள். 

அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பான ஷாலினி, “அவர் உங்கள பத்தி என்ன அக்கா நினைச்சுட்டு இருக்காரு..??? என் மேல தான் தப்பு. நான் உங்கள அங்க கூட்டிட்டு போயிருக்க கூடாது. விடுங்க அக்கா. நமக்கு யாருடைய ஹெல்ப்பும் வேண்டாம். நம்மளே உங்க மேல தப்பும் இல்லன்னு ப்ருவ் பண்ணுவோம்.” என்றவள், ரித்திகாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னாள் ஷாலினி . அனைவரும் ரித்திகாவை பற்றி வெளிவரும் தவறான செய்திகளை யார் சொல்லியும் கேட்கவோ படிக்கவோ விரும்பவில்லை என்பதால் தங்களுடைய வீட்டில் இருந்த தொலைபேசி முதல் தொலைக்காட்சி பெட்டி வரை அனைத்தையும் அனைத்து வைத்து இருந்தனர். அதனால் இப்போது வருண் போட்ட  புதிய செய்தியை அவர்கள்  பார்த்து தெரிந்து கொள்ளவில்லை. 

வருண் அவனுடைய அலுவலகத்தில் இருந்து தன்னை வெளியே அனுப்பி விட்டதால் சோகமாக அங்கு இருந்து கிளம்பிய விஷ்ணு, நம்மால் வருணின் மனதை மாற்ற முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் தன்னுடைய அம்மாவின் மனது ரித்திகாவும் எதிராக திரும்புவதை தடுக்கவாவது செய்யலாம் என்று நினைத்து நாராயணன் பேலஸிற்கு சென்றான்.

சரியாக விஷ்ணு அங்கே வரும்போது நாராயணன் குரூப்ஸ் இன் சார்பாக வருண் அறிவித்து இருந்த செய்தி அங்கே தொலைக்காட்சி பெட்டியில் நேரலையாக ஓடிக் கொண்டு இருந்தது. அதைக் கண்டு மகிழ்ந்த விஷ்ணு செண்பகத்தை அழைத்து அவளிடம் அதை காட்டி ரித்திகா குற்றமற்றவள் என்று நிரூபித்தவன், செண்பகத்தையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு ரித்திகா வீட்டிற்கு சென்றான். 

ரித்திகாவின் வீட்டில்…

விஷ்ணுவும் செண்பகமும் தங்களுடைய வீட்டிற்கு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரித்திகாவின் பெற்றோர்கள், “சம்மந்தி எங்க பொண்ணு தப்பா நினைக்காதீங்க. அவ சொக்க தங்கம். யாரையும் ஏமாத்துற புத்தி அவளுக்கு இல்ல. ப்ளீஸ் நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்திடாதீங்க.” என்று செண்பகத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார்கள். 

வேகமாக அவர்களின் அருகே சென்று ரேவதியின் கையைப் பிடித்த செண்பகம், “ஐயோ சம்பந்தி ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க..??? நான் தான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்ல ரித்திகா எங்க வீட்டு பொண்ணு. எங்க வீட்டு பொண்ண பத்தி எங்களுக்கு தெரியாதா அவாள நாங்க எப்படி சந்தேக படுவோம்..??? அந்தப் பிரச்சினை எல்லாத்தையும் என் பையன் வருண் சரி பண்ணிட்டான். இதுக்கு மேல நம்ப ரித்திகாவ யாரும் எதுவும் தப்பா பேச மாட்டாங்க. முதல்ல டி. வி. ஐ ஆன் பண்ணி அதுல வர்ற நியூஸை எல்லாம் போட்டு பாருங்க. எல்லாரும் இப்ப ரித்திகாக்கு
சப்போர்ட்டா தான் பேசிட்டு இருக்காங்க.” என்று உற்சாகமான குரலில் சொல்ல, அதற்குள் இப்படி நடக்க எப்படி சாத்தியம் என்று யோசித்து குழம்பிய ரித்திகா , ஷாலினி, மற்றும் ரித்திகாவின்  பெற்றோர்கள் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்.

இவர்களுக்கு நாம் சும்மா சொல்லிக் கொண்டு இருந்தாள் அது அவர்களுக்கு புரியப்போவது இல்லை என்று நினைத்த விஷ்ணு, தன்னுடைய மொபைல் போனை எடுத்தவன் அதில் வருணை பற்றியும் ரித்திகாவை பற்றியும் வந்த ரீசண்டான செய்திகளை எடுத்து அவர்களின் முன்னே காட்டினான். அதுவரை ரித்திகாவை தவறானவள் என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் இப்போது ரித்திகாவுக்கு சாதகமாக பேசிக் கொண்டு இருப்பதை பார்த்த ரித்திகாவின் உள்ளம் மகிழ்ந்தாள். 

-நேசம் தொடரும்.. ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured