அத்தியாயம் 146
“நீ என்னை பத்தி என்ன நினைக்கிற அர்ஜுன்? அத முதல்ல சொல்லு.” என்று உடைந்த குரலில் தேன்மொழி கேட்க, அந்த கேள்விக்கு அர்ஜுனிடம் இப்போது தகுந்த பதில் இல்லாததால் சில நொடிகள் அவன் அமைதியாகவே இருந்தான்.
ஏற்கனவே அவன் தனக்கும், தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் இம்பார்ட்டன்ஸ் கொடுக்கவில்லை என நினைத்து கொஞ்சம் கோபமாக இருந்த தேன்மொழி தனது நேரடி கேள்விக்கு அவன் பதில் சொல்லாமல் அமைதி காத்ததால் “உனக்கும் எனக்கும் மேரேஜ் ஆயிடுச்சு அர்ஜுன். இந்த ஒரு இன்சிடென்ட் நமக்குள்ள இவ்ளோ பெரிய கேப்பை கொண்டு வரும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல.
இப்ப கூட இதை இப்படியே கண்டினியூ ஆக விடக் கூடாதுன்னு தான் நானே உனக்கு கால் பண்ணேன். இப்ப தான் எனக்கு எல்லாம் புரியுது. நான் மட்டும் உனக்கு இப்போ கால் பண்ணாம இருந்திருந்தா, நீ என் கிட்ட பேச ட்ரை பண்ணி இருக்க கூட மாட்ட. இங்க இந்தியா கிளம்பி வந்தா கூட, நீ பாட்டுக்கு ஆபிஸ் வரல பிஸியா இருக்கேன்னு கெளம்பி வெளிய போயிருப்ப.
உன் பொண்டாட்டின்னு சொல்லிக்கிட்டு எதுக்கு தான் நான் இந்த வீட்ல என் குடும்பத்தோட இருக்கனோ தெரியல. எனக்கு அதை நினைச்சாலே கோபம் கோபமா வருது அர்ஜுன். நீ சைலன்டா இருந்ததுலயே என் கொஸ்டினுக்கு உன் கிட்ட ஆன்சர் இல்லைன்னு எனக்கு நல்லா தெரிஞ்சிருச்சு. இதுக்கு மேல நான் உன் கிட்ட பேசுறதுக்கு என்ன இருக்கு?
உனக்கு நான் முக்கியமில்லாதவளா போயிட்டன்னா பரவால்ல. என்னையும் என் குழந்தையையும் நானே பாத்துக்கிறேன். இனிமே யாருக்கும் disturbance-ஆ நான் இருக்க மாட்டேன். Goodbye Mr Arjun! Take care.” என்று உணர்ச்சிகள் பொங்க கொஞ்சம் மூச்சு வாங்க அழுது கொண்டே சொன்ன தேன்மொழி அவனது அழைப்பை துண்டித்து விட்டாள்.
சியாவின் மீது இருக்கும் காதலையும், தேன்மொழியின் மீது புதிதாக வந்திருக்கும் காதலையும் போட்டு குழப்பிக் கொண்டிருந்த அர்ஜுன் எப்பவோ தன்னை விட்டு சென்ற சியாவிற்காக அவன் கண் முன்னே இருக்கும் தேன்மொழியை கொஞ்சம் கொஞ்சமாக இருந்து கொண்டிருக்கிறான் என்பதை அவன் இப்போது தான் உணர்ந்தான்.
“ச்சே.. நான் பேச ஸ்டார்ட் பண்றதுக்குள்ள இவளே இப்படி இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பேசிட்டு காலை கட் பண்ணிட்டா நான் என்ன பண்றது? எப்படி என்னால அவ எனக்கு இம்பார்டன்ட் இல்லைன்னு யோசிக்க முடியும்? அதுவும் அவ வைத்துல என் குழந்தை வளர இந்த டைம்ல..!! ஆஆஆஆ.. disgusting!” என்று முனுமுனுத்த அர்ஜுன் வந்த ஆத்திரத்தில் தனது காரின் ஸ்டியரிங் வீலில் வேகமாக குத்தினான்.
அவன் மனசாட்சி அவனிடம் “மனசுக்குள்ள அவ மேல இவ்வளவு பாசத்தை வச்சுக்கிட்டு எதையும் அவ கிட்ட ஸ்ட்ரெய்ட்டா சொல்லாம உனக்குள்ள இருக்கிற கன்ஃபியூஷன்ஸ்னால நீ அவளை அவாய்ட் பண்ண அவ இப்படித் தான் நினைப்பா. பண்றது எல்லாத்தையும் நீ பண்ணிட்டுஅவ அவசரப்பட்டு காலை கட் பண்ணிட்டான்னு அவளை குறை சொல்றியா நீ?” என்று நியாயமாக கேள்வி கேட்க, “ஆமா தப்புதான், எல்லாமே என் தப்புதான். பட் அதை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியாம தான் இப்ப தலையை பிச்சுட்டு உட்கார்ந்து இருக்கேன்.” என தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான் அர்ஜுன்.
லிவிங் ஏரியாவில் அமர்ந்திருந்த தேன்மொழி சினம் கொண்ட சிங்கமாய் வேகமாக எழுந்து நேராக தனது அம்மாவின் ரூமிற்கு சென்று வேலை ஆட்களால் துவைக்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட தனது உடைகளை எல்லாம் எடுத்து மடித்து வைத்துக் கொண்டு விஜயாவிடம் “அம்மா இன்னைக்கு நீங்களும், நானும், ஆதியும் வீட்டுக்கு கிளம்ப போறோம். அப்படியே எல்லாத்தையும் பேக் பண்ணுங்க.” என்றாள்.
திடீரென்று இவள் இப்படி வந்து சொல்வதைக் கேட்டு பதட்டமடைந்த விஜயா செய்யும் வேலையை பாதியில் விட்டுவிட்டு வேகமாக எழுந்து நின்று “ஏய் என்ன டி ஆச்சு உனக்கு? இப்ப எதுக்கு நம்ம வீட்டுக்கு போகணும்ங்கிற? இங்க உனக்கு என்ன குறை? பிள்ளைகளை கூட்டிகிட்டு ரஷ்யா போன சம்மந்தி அம்மா உன்னை பார்த்துக்கணும்னு தானே அங்க இருந்து கிளம்பி வந்தாங்க… திடீர்னு இப்ப நம்ம போறோம்னு சொன்னா அவங்க மனசு கஷ்டப்படாதா? முதல்ல உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு.” என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டாள்.
“ஏற்கனவே வீட்ல நடக்கிற பிரச்சனை எல்லாம் அம்மாவுக்கு தெரியும். இப்போ எனக்கும் அர்ஜுனுக்கும் சண்டைனு தெரிஞ்சா தேவையில்லாம இன்னும் அவங்க என்ன நினைச்சு கஷ்டப்படுவாங்க. என் பிரச்சனை எதுவா இருந்தாலும் அது என்னோட போகட்டும்.” என்று நினைத்த தேன்மொழி “பெருசா ஒன்னும் இல்ல மா. எனக்கு இங்க இருக்க பிடிக்கல அவ்ளோ தான்.” என்றாள்.
“அதான் டி இங்க உனக்கு ஏன் இருக்க பிடிக்கலைன்னு கேட்கிறேன்? உன் மாமியார் வீட்டில உனக்கு என்ன குறை வச்சாங்க? இங்க நீ மகாராணி கனக்கா நல்லா தானே இருக்க.. அப்புறம் ஏன் உடனே நம்ம வீட்டுக்கு போகணும்னு கிடந்து குதிக்கிற?” என்று விஜயா கேட்க, “ஆமாமா நான் மகாராணி தான். ஆனா பேருக்கு மட்டும் தான். என் ராஜாவுக்கே புடிக்காத ராணியாகிட்டேன் இப்ப.” என்று நினைத்து பெருமூச்சு விட்டாள் தேன்மொழி.
“நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன் நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? இங்க சூழ்நிலை சரியில்லைன்னு நம்ம கிளம்பி நம்ம வீட்டுக்கே போயிடலாம்னு யோசிக்கிறியா நீ? அந்த தப்பை மட்டும் பண்ணவே பண்ணாத தேன்மொழி. புகுந்த வீட்ல எந்த பிரச்சனை வந்தாலும் அதை அங்க இருந்து தான் சமாளிக்கணும்.
இந்த பிரச்சினை வேண்டாம்னு நினைத்து நீ தூரமா போனா, அப்புறம் குடும்பத்தில இருக்கிறவங்களுக்கும் உனக்கும் நடுவுல அதுவே ஒரு விரிசலை உண்டாக்கிடும். அம்மா சொல்றத கேளு. எப்படியோ மாப்ள இந்தியா வந்து தானே ஆகணும்! அவர் இங்க வரட்டும் பேசிக்கலாம்.” என்று விஜயா தாய்மார்களுக்கே உரிய கண்டிப்புடன் சொல்ல,
“நான் இப்ப யார் கிட்டயும் எதுவும் பேசுறதா இல்ல. என்னை சுத்தி என்னென்னமோ நடக்குது. தெரிவா யோசித்து பார்த்தா நானா போய் எந்த தப்பும் பண்ணல. ஆனா எல்லாரையும் விட அதிகமா நான் தான் கஷ்டப்படுற மாதிரி இருக்கு.
நான் இனியும் இங்கயே இருந்து இதையே யோசிக்கட்டு இருந்தா, எனக்கும் என் வயித்துல வளர்ற குழந்தைக்கும் ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு மா. இந்த வீடு, இங்க இருக்கிற ஒவ்வொரு இடமும் எனக்கு அர்ஜுனையும், குழந்தைகளையும் தான் ஞாபகப்படுத்து. அவங்க இல்லாம என்னால இங்க இருக்க முடியல.
எல்லாருக்கும் அவங்க அவங்களோட குழந்தைங்க இம்பார்டன்ட் தானே.. எவ்வளவு வளர்ந்தாலும் நான் உங்களுக்கு குழந்தை தானே மா.. அட்லீஸ்ட் நீங்களாவது நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க. என்னால இங்க இருக்க முடியல. மனசை பாரமா இருக்கு. கொஞ்ச நாள் இந்த பிரச்சனையில இருந்து எங்கயாவது ஓடிப் போயிட்டா நல்லா இருக்கும்னு தோணுது.” என்று ஒரே மூச்சாக சொன்ன தேன்மொழி தன் முகத்தை மூடிக் கொண்டு கதறி கதறி அழுதாள்.
அவள் கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சென்று அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு சமாதானப்படுத்திய விஜயா “சரி சரி விடு அழுகாத. புள்ளத்தாச்சியா இருக்கிறப்ப தான் என் புள்ளை இவ்ளோ கஷ்டப்படணுமா? நான் தினமும் உனக்காக எவ்ளோ சாமிய கும்பிடுறேன்.. எந்த கடவுளும் நம்மள ஏர் எடுத்து பாக்க மாட்டேங்குது. ஒன்னு போனா இன்னொன்னு பிரச்சனை வந்துகிட்டே இருக்கு.
உனக்கு அம்மா நான் இருக்கேன் கண்ணு. நீ வா, நான் உன்னை பாத்துக்கிறேன். நம்ம வீட்டுக்கு நம்ம போகலாம். சம்மந்தி அம்மா கிட்ட நான் பேசிக்கிறேன்.” என்றாள். தேன் மொழியும், விஜயாவும் தங்களது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு கிளம்ப தயாராகிக் கொண்டு இருக்கும்போது காலேஜில் இருந்த ஆதவனுக்கும் கால் செய்து கிளம்பி வீட்டிற்கு வரச் சொன்னார்கள்.
தனியாக காரில் சென்று கொண்டிருந்த அர்ஜூன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த தனியாருக்கு சொந்தமான farm house ஒன்றிற்கு சென்றான். அங்கே ஒரு வெளிநாட்டு இளைஞன் தனியாக தங்கி இருக்க, அவனுடன் சில முக்கியமான விஷயங்களை டிஸ்கஸ் செய்த அர்ஜுன் “நீ என் கூட இந்தியா வரணும். இதை என்னோட ரெகுவஸ்ட்டா எடுத்துக்கிட்டாலும் சரி. ஆர்டரா எடுத்துக்கிட்டாலும் சரி.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.
“என்ன மச்சான் ஃபிரண்டு கிட்ட இப்படி தான் பேசுவியா? இத்தனை வருஷம் ஆனாலும் உனக்கு எப்படி friendship-ஐ maintain பண்றதுன்னு மட்டும் சுத்தமா தெரியல டா.” என்று அந்த வெளிநாட்டவன் என்னவோ இந்தியாவிலேயே பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்தவனை போல தமிழில் பேசினான்.
“ச்ச்.. டேய்.. என்ன வேணும்னே என்னை வெறுப்பேத்துறியா? நான் இருக்கிற டென்ஷனுக்கு கையில யார் கிடைச்சாலும் போட்டு தள்ளுற மைண்ட் செட்டில் இருக்கேன். வாலன்டியரா நீயே வந்து உயிரை விட்டுறாத. உன் காமெடி சென்சை எல்லாம் நீ என் கிட்ட show up பண்ண தேவையில்லை மைக்.
நம்ம கேங்கில இருந்த எல்லாரையுமே மறுபடியும் ஒரு டீமா ஃபார்ம் பண்ற ஐடியாவுல தான் நான் இருந்தேன். நடுவுல என் பொண்டாட்டி நான் எந்த பிரச்சனைக்கும் போக கூடாதுன்னு என் கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டா.
சரி கொஞ்ச நாள் போகட்டும் அப்புறமா இதையெல்லாம் பார்த்துக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள எவனோ கும்பலா சேர்ந்து எனக்கு கட்டம் கட்டுறான். என் கண்ணுக்கு தெரியாத அந்த கும்பலை ஒளிச்சு கட்ற வரைக்கும் என்னால வேற எதுலயும் focus பண்ண முடியாது.” என்று அர்ஜுன் சீரியஸாக தன் முகத்தை வைத்துக் கொண்டு பேச,
“Okay Chief, I am waiting for your order. நீங்க என்ன ஆர்டர் பண்ணாலும், அத உடனே செஞ்சு முடிக்கிறேன். இப்ப நம்ம இந்தியா போகணும் அவ்வளவு தானே.. just give me 30 mins to pack.” என்று Michael சொல்ல, “ம்ம்.. நீ ரெடியாகி வா. நான் கார்ல வெயிட் பண்றேன். நம்ம டீம்ல இருக்கிற மத்த மெம்பர்சை நீதான் காண்டாக்ட் பண்ணி எல்லாரையும் மறுபடியும் ஒன்னு சேர்த்து அவங்கள இந்தியா வரவச்சு எல்லாத்தையும் முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணனும்.
கண்ணுக்கு தெரிகிற எதிரியை விட, தெரியாத எதிரி கிட்ட தான் இன்னும் நம்ம கேர்ஃபுல்லா இருக்கணும். எனக்கு என்னமோ இது புதுசா முளைச்ச பகை மாதிரி தெரியல. பொறுமையா பிளான் பண்ணி என்ன நிம்மதியா கெடுக்கனும்னே எவனோ என்னமோ பண்ணிக்கிட்டே இருக்கான். அவங்கள கண்டுபிடிச்சு மொத்தமா destroy பண்றது தான் உங்க வேலை.” என்றான் அர்ஜூன்.
அர்ஜுன் உருவாக்கும் இந்த புதிய குழுவினர் அவனை சுற்றியுள்ள மர்மங்களை கண்டுபிடிப்பார்களா? முக்கியமாக சந்தோஷ் சிக்குவானா?
– மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)