Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 145

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 145

by Thenaruvi Tamil Novels
119 views

   அத்தியாயம் 145

ரஷ்யாவிற்கு சென்றிருந்த அர்ஜுனிடம் உடனே பேச வேண்டும் என்று நினைத்த தேன்மொழி அவனுக்கு கால் செய்கிறாள். தன்னை சுற்றி ஏராளமான பிரச்சனைகள் நடந்து கொண்டு இருப்பதால் முக்கியமான மீட்டிங் ஒன்றில் இருந்த அர்ஜுன் அவனது மொபைல் phone தொடர்ந்து வைப்ரேட் ஆகிக் கொண்டே இருந்ததால் “ச்ச்.. கால் பண்ணி எடுக்கலைன்னா ஆப்போசிட்ல இருக்கிறவங்க பிஸியா இருப்பாங்கன்னு தெரியாதா? சும்மா யாரு விடாம கால் பண்ணிட்டு இருக்கிறது? முதல்ல இந்த phone-ஐ சுவிட்ச் ஆப் பண்ணி போடணும்.” என்று நினைத்து எரிச்சலுடன் கோட் பாக்கெட்டில் இருந்த தனது மொபைல் phon-னை கையில் எடுத்துப் பார்த்தான் அர்ஜுன்.

மொபைல் ஸ்கிரீனில் “wife” என்ற பெயரை பார்த்தவுடன் அதுவரை இறுக்கமாக இருந்த அர்ஜுனின் முகம் சட்டென்று சாந்தமானது. அவன் சியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவளை சந்தித்த காலத்தில் அவள் மீது கொண்ட காதல் மயக்கத்தில் அவள் பெயரை “My Love” என்று அவள் பெயரை சேவ் செய்து வைத்திருந்தான்.

தேன்மொழியின் விஷயத்தில் முதல் முறை  அவளை அவன் சந்திக்கும்போதே,  அவள் அவனுக்கு மனைவியாக தான் இருந்தாள்.  அதனால் அந்த உரிமையில் அப்போதிலிருந்து அவன் அவளை தன் மனைவியாக பார்த்து பழகி இருந்தான்.  அவளுக்கு இயற்கையாகவே கடவுள் கொடுத்த சியாவின் உருவம் ஒருபோதும் அவளை விட்டு  அவனை சிறிய விடாமல் செய்துவிட்டது.

அனைவரும் மாறி மாறி அர்ஜுனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அவன் என்னவோ தனது மொபைல் ஃபோனையே ஏதோ ஒரு அபூர்வமான பொருளை பார்ப்பதை போல பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்ததால் பேசுவதை நிறுத்திவிட்டு இப்போது அனைவரும் அர்ஜுனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அதை கவனித்த பிரிட்டோ, “Chief..  எல்லாரும் உங்களை தான்  பாக்றாங்க.  மிஸ்டர் நரேஷ் குப்தா லாஸ்ட்டா உங்க கிட்ட கேட்ட கொஸ்டினுக்கு நீங்க இன்னும் ஆன்சர் பண்ணல.”  என்று அவன் காதுகளில் கிசுகிசுத்தான்.

அவனது நினைவூட்டலால் நிதானம் பெற்ற அர்ஜூன் தனது மொபைல் phone-னை இறுக்கிப் பிடித்தபடி “நீங்க எல்லாரும் பேசி முடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். சோ இப்ப நான் பேசினா கரெக்ட்டா இருக்கும்.  இதுவரைக்கும் நீங்க என் கிட்ட கேட்ட கொஸ்டின் எல்லாமே நியாயமானது தான். And, I am answerable to you. நான் உங்களுக்கு எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்ணி சொல்லி இங்க இருந்து டைம் வேஸ்ட் பண்றதுக்கு பதிலா, இந்த  சுச்சுவேஷனை டைரக்டா இந்தியாவுக்கு போய் ஹேண்டில் பண்ணனும்னு டிசைட் பண்ணி இருக்கேன்.

எனக்கு என்னமோ யாரோ வேணுமேன்னே என்னை இந்தியா  வர வைக்கனும்னு இப்படி எல்லாம் பண்ற மாதிரி இருக்கு. சோ நானே நேர்ல போய் யார் இப்படி எல்லாம் எனக்கு against-ah வேலை பாக்குறாங்கன்னு பாக்கறது தான் கரெக்டா இருக்கும். உங்க கிட்ட நான் சொல்ல நினைக்கிறது ஒன்னே ஒன்னு தான். Just trust me. Now I have to go. I hope you guys understand.” என சரளமான ஆங்கிலத்தில்  எழுந்து நின்று சொன்னபடி அனைவரையும் பார்த்து வணக்கம் சொல்வதைப் போல  தன் கண்களாலேயே  சைகை செய்தான்.

அவன் எழுந்து விட்டதால் மரியாதை நிமித்தமாக அங்கிருந்த அனைவரும் உடனே எழுந்து நிற்க,  அவன் தன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று சொன்ன பிறகு யாராலும் அவனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. தனது கருப்பு நிற கோட்டை சரி செய்தபடி அந்த மீட்டிங் hall-லை விட்டு அவன் வெளியேற, அவனை பின் தொடர்ந்து ஓட்டமும் நடையுமாக தானும் வெளியில் வந்த பிரிட்டோ “ உடனே நம்ம இந்தியா கிளம்ப போறோமா chief?” என்று கேட்க, தேன்மொழியிடம் இருந்து தனக்கு ஏதோ மெசேஜ் வந்திருந்ததால் phone-ல் அதை பார்த்தபடி நடந்து சென்று கொண்டிருந்த அர்ஜுன் “இப்ப அத தானே சொன்னேன்..  உன் கிட்ட வேற தனியா சொல்லணுமா? நீ வீட்டுக்கு போய் சித்தார்த்தையும்,  ஆருத்ராவையும் கூட்டிட்டு வந்துரு.

எனக்கு இங்க முடிக்க வேண்டிய இம்பார்ட்டன்ட் ஒர்க் இருக்கு. நான் வந்ததும் நம்ம எல்லாரும் உடனே இந்தியா கிளம்பறோம். நான் ஆகாஷ் கிட்ட பேசணும். நீங்க கிளம்பும்போது ஆகாஷ் கிட்ட கால் பண்ணி அவனை என் கிட்ட பேச சொல்லு. நான் கேட்டு இருந்த டீடெயில்ஸ் எல்லாத்தையும் அவன ரெடி பண்ணி வைக்க சொல்லு.” என்று பிரிட்டோவிற்கு அடுத்தடுத்து இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்த அர்ஜுன் தனது காரில் ஏறி தனியாக எங்கேயோ சென்றான்.  
கார் ஓட்டிக் கொண்டிருந்த அர்ஜுன் ப்ளூடூத் மூலம் தேன்மொழிக்கு காரில் கால் கனெக்ட் செய்து அவள்  தனது அழைப்பை ஏற்பதற்காக காத்திருந்தான். மீண்டும் மீண்டும் அவனுக்கு கால் செய்து பார்த்து அவன் தன் அழைப்பை ஏற்காததால் “எப்ப பார்த்தாலும் இவனுக்கு என்னை இக்னோர் பண்றது வேலையா போச்சு. இனிமே அவனா எனக்கு கால் பண்ணா கூட நான்  அவன் கிட்ட பேச மாட்டேன்.“ என  நினைத்து தனது மொபைல் போனை சோபாவின் மீது தூக்கி எறிந்து விட்டு தேன்மொழி டிவியை ஆன் செய்து  தன்  முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அதை பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.

அப்போது டிவி ஓடும் சத்தத்தையும் தாண்டி அர்ஜுனின் கால் வரும்போது மட்டும் ஒலிக்கும்படி அவள் செட் செய்து வைத்திருந்த பிரத்தியோகமான காதல் பாடல் இப்போது அவள் செல்லில்  ஒலிக்க,  இவ்வளவு நேரம் அவன் மீது தான் கோபத்தில் இருந்ததை எல்லாம் மறந்துவிட்டு “அர்ஜுன்..  இது அர்ஜூனுக்காக நான் செட் பண்ண ரிங்டோன் தானே.. அவன் நமக்கு கால் பண்றானா?” என நினைத்து சந்தோஷப்பட்ட தேன்மொழி அவசரமாக மொபைல் போனை தேடி கண்டுபிடித்து இதயம் படபடக்க அவன் காலை அட்டென்ட் செய்து காதில் போனை வைத்தாள்.

அவள் குரலை கேட்பதற்காக துடித்துக் கொண்டிருந்த அர்ஜுன் “ ஹலோ!”  என்று ஏக்கம் நிறைந்த குரலில் சொல்ல, “ அர்ஜுன்!”  என்று அவனை அழைத்த தேன்மொழியின் கண்கள் எல்லாம் பிரிவு தந்த காதல் இயக்கங்களில் குலமாக மாறியது கண்கள்.

  தன் பெயரை அவள் உடைந்த குரலில் உச்சரித்ததை கேட்டவுடன் அர்ஜுனனின் இதயம் ஒரே நொடியில் உடைந்து விட, எதற்காக அதை  சொன்னானோ தெரியவில்லை சட்டென்று “சாரி”  என்றான் அர்ஜுன்.  தன் கண்கள் ஓரமாக துளித்து கன்னங்களை தொட்டு சென்று கொண்டிருந்த கண்ணீர் துளிகளை அவசரமாக துடைத்த தேன்மொழி “ இப்ப எதுக்கு நீ சாரி சொல்ற?” என எதுவும் தெரியாதவளை போல கேட்டாள்.

“ சும்மா தான், உன்  கிட்ட சாரி சொல்லணும்னு தோணுச்சு அதான் சொன்னேன். நீ கால் பண்ணும் போது நான் மீட்டிங்கில் இருந்தேன்.  இப்ப தான் வெளிய வந்தேன்.  இன்னும் கொஞ்சம் நேரத்துல கிளம்பி இந்தியா வரலாம்னு இருக்கேன்.”  என்று அர்ஜுன் ஒரே மூச்சாக சொல்ல, தேன்மொழிக்கு அவன் மனதில் என்ன இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தன் மனதில் இருக்கும் அத்தனை கேள்விகளையும் அவனிடம் கேட்க வேண்டும் என்று தோன்றினாலும்,  அந்த நேரத்தில் அவனிடம் பேச சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தாள்.

குழந்தைகளை பற்றி ஞாபகம் வந்ததால் “ஆருத்ராவும், சித்தார்த்தும் உன் கூட வராங்களா?” என ஆர்வமாக கேட்டாள் தேன்மொழி. “இவ அவங்க ரெண்டு பேர் மேலையும்இந்த அளவுக்கு பாசம்  வச்சிருக்கிறா. ஆனா அவங்க அதை புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்களே! எனக்கு வெளிய இருந்து வர்ற பிரச்சனைய கூட நான் எப்படியோ சமாளிச்சுடுவேன்.  மறுபடியும் தேன்மொழியையும்  என் குழந்தைகளையும் எப்படி சேர்த்து வக்கிறதுன்னு தான் தெரியல. இந்த பிரச்சனையில  நானே இவங்க மூணு பேரையும் விட்டு தூரமா போய்கிட்டு இருக்க மாதிரி இருக்கு. என் பிசினஸ் லைஃப்ல நான் ஏதாவது ஒரு தப்பு பண்ணி அதனால எவ்வளவு லாஸ் வந்தா கூட அதெல்லாம் எனக்கு பெருசில்ல.  முதல்ல நான் என் ஃபேமிலியை சரி பண்ணனும்.” என நினைத்து பெருமூச்சு விட்ட அர்ஜுன் “அவங்க வராம எப்படி?”  என்று அவளிடம் கேட்டான்.

“அவங்க ரெண்டு பேரும் இன்னும் என் மேல கோவமா தான் இருக்காங்களா?”  என்று சோகமாக தேன்மொழி கேட்க,  தான் அவளிடம் இப்போது பொய் சொல்லிவிட்டு குழந்தைகள் அவளை நேரில் பார்க்கும்போது  அவளிடம் வேறு மாதிரி ரியாக்ட் செய்தால் அவள் மனம் காயப்படும். அதற்கு பதிலாக  இப்போது இருந்தே அவள்  அவள் அனைத்திற்கும் தயாராக இருக்கட்டும் என நினைத்த அர்ஜுன், “இன்னும் அப்படியே தான் இருக்காங்க ஹனி.  நான் உனக்கு சப்போர்ட் பண்ணி உன்னை பத்தி ஏதாவது பேசினா,  நான் அவங்களை விட்டுட்டு உனக்கு சப்போர்ட் பண்றேன்னு என்னையும் தப்பா நினைச்சு என் மேலயும் கோவப்படுறாங்க.

எனக்கே அவங்கள எப்படி ஹாண்டில் பண்றதுன்னு சுத்தமா தெரியல.  அதான் நானே இன்னும் ஒரு கன்பியுஷன்லயே சுத்திட்டு இருக்கேன். Incase, அவங்க உன் மேல கோபப்பட்டு ஏதாவது பேசினா கூட நீ எதுவும் ரியாக்ட் பண்ணாத. Be ready for everything. அவங்க நார்மல் ஆகுற வரைக்கும் உன்னால முடிஞ்சா நீ அவங்களை விட்டு தள்ளியே இரு, அதான் எல்லாருக்கும் நல்லது.” என்று சோர்வான  சொன்னான்.

“அவங்க எப்ப என்ன மம்மினு கூப்பிட்டாங்களோ அப்பவே நான் அவங்கள என் குழந்தைங்களா பாக்க ஆரம்பிச்சிட்டேன் அர்ஜுன்.  நான் என்ன நினைச்சாலும், அது அப்படி இல்லைன்னு prove பண்ற மாதிரி இப்ப நடந்துருச்சு. சரி அதை விடு, அத பத்தி பேசினாலே எனக்கு stress ஆகுது.

ஆருத்ரா கூட என் கிட்ட பேச  மாட்டேங்குரா.  அவங்களுக்கு ஒரு நாள் நான் அவங்க மேல வச்சிருக்கற பாசம் புரியும். அப்ப தானா அவங்க என் கிட்ட வருவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.  அவங்க சின்ன குழந்தைங்க அர்ஜூன்.

அவங்க மனசு லேசானது. அதான் எதையும் அவங்களால தாங்கிக்க முடியல.  அதை என்னால புரிஞ்சுக்க முடியுது.  பட் உன் மைண்ட்ல என்ன இருக்கு?  அதான் எனக்கு தெரியல. அவங்களோட சேர்ந்து நீயும் எதுக்காக இத்தனை நாள் என்ன அவாய்ட் பண்ண? நான் உனக்கு வேண்டாம்னு நீயும் நினைச்சுட்டியா?  நான் பிரக்னண்டா இருக்கேன், நமக்கு குழந்தை பிறக்கப் போகுது. அத  மறந்துட்டியா அர்ஜுன்?” என  துக்கம் தொண்டையை அடைக்க உணர்ச்சிகள் பொங்க கேட்டாள் தேன்மொழி.

மீண்டும் வருவாள்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured