Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 144

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 144

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 144

லிண்டா மயங்கி விழுந்ததைக் கண்டு அனைவரும் பதட்டத்துடன் இருந்தார்கள். விஷயத்தை கேள்விப்பட்டு ஆகாஷ் வீட்டிற்கு வரும்போது ஏற்கனவே லிண்டாவை ஒரு மருத்துவர் சோதித்து கொண்டு இருந்தார். இது மாதிரியான ஃபுட் அலர்ஜி அவளுக்கு இதற்கு முன் ஒரு சில முறை வந்திருக்கிறது என்பதால் அதை எப்படி கையாள வேண்டும் என அவர்களுக்கும் ஒரு ஐடியா இருந்தது.

சில நிமிடங்களிலேயே டாக்டரின் treatment-க்கு பிறகு லின்டாவிற்கு சுயநினைவு வந்தது. ஆனால் அவளது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது.  அவளது அழகிய முகம் ஆங்காங்கே பச்சை நிறத்தில் மாறி சிவந்து காணப்பட,  அவளது கை, கால்களிலும் கூட ஒரு சில allergic reactions இருந்தது. தன்னை இந்த மாதிரியான சூழ்நிலையில் ஆகாஷ் பார்ப்பதை விரும்பாமல் லிண்டா தன் அருகில் நின்று கொண்டிருந்த  தேன்மொழியிடம் “நான் எவ்வளவு சொன்னாலும் ஆகாஷ் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான்.  எனக்கு அவன் என்னை இப்படி பார்க்கிறது  எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு தேன்மொழி. எனக்கு சரியாகுற வரைக்கும் ஆகாஷை என் பக்கத்திலயே வர வேண்டாம்னு சொல்லுங்க ப்ளீஸ்!” என அழுது கெஞ்சினாள்.

ஒரு குழந்தைக்கு தாயாகி இத்தனை வயதான பிறகும் கூட இப்படி குழந்தை போல லிண்டா நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் அழுவதை பார்க்கும் போது தேன்மொழிக்கு பாவமாக இருக்க, “நீங்க வருத்தப்படாதீங்க, உங்களுக்கு சீக்கிரம் சரியாயிடும்.  ஆகாஷ் உங்களுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோனு பயந்து இங்க பாதியிலயே ஆபீஸ்ல இருந்து கிளம்பி வந்திருக்காரு.  அவருக்கும் உங்கள பார்க்கணும்னு இருக்கும்ல்ல..  சோ நம்ம அவர தப்பு சொல்ல முடியாது.  இருந்தாலும் நான் அவர் கிட்ட பேசுறேன். அவரும் பாவம் ரொம்ப நேரமா  உங்கள இப்படியே விட்டுட்டு போக மனசு இல்லாம வெளிய தான் சோகமா நின்னுட்டு இருக்காரு. இருந்தாலும் நீங்க அவரை பார்த்து எனக்கு உன்னை பார்க்க பிடிக்கலை வெளிய போன்னு எல்லாம் சொல்லாம இருந்திருக்கலாம்.” என்றாள்.

“நான் வேணும்னு இப்படி பண்ணல தேன்மொழி. ஆகாஷ் இப்படி என்ன பாக்குறது எனக்கு எந்த அளவுக்கு கஷ்டமா இருக்கோ அதைவிட அதிகமா அவனுக்கும் கஷ்டமா இருக்கும்.  இந்த மாதிரி நாங்க லவ் பண்ணிட்டு இருக்கும்போது எனக்கு ஒரு தடவை ஆச்சு.  அப்போ ஆகாஷ் என்னை பார்த்து எவ்வளவு feel பண்ணான்னு எனக்கு இப்ப வரைக்கும் ஞாபகம் இருக்கு. அந்த கஷ்டத்தை நான் மறுபடியும் அவனுக்கு கொடுக்க விரும்பல.  இத்தனை நாளா சாப்பாட்டு விஷயத்துல நான் ரொம்பவும் கேர்ஃபுல்லா தான் இருந்தேன்.  அப்படி இருந்தும் எதுனால எனக்கு இப்படி ஆச்சுன்னு தான் எனக்கு புரியல. Peanuts இருக்கிற மாதிரி நான் எந்த ஃபுட்டும் சாப்பிடவே இல்லையே!”  என்று லிண்டா பாவமாக தன் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, “ இவங்க சொல்றதும் கரெக்ட் தான்.  காலையில கூட நான் லிண்டா கூட சேர்ந்து தானே சாப்பிட்டேன்! அவங்க வேர்கடலை எதுலையும் சேர்த்துக்கல. இப்பயும் வேர்க்கடலை சேர்த்து சமைக்கிற மாதிரி எந்த சாப்பாடும் மெனுல இல்ல.  அப்புறம் எப்படி லிண்டா வேர்க்கடலையை சாப்பிட்டு இருப்பாங்க?  அப்புறம் எங்கிருந்து வந்திருக்கும் அது?” என யோசித்து குழம்பிய தேன்மொழியால் ஏனோ இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

திடீரென்று தங்கள் வீட்டிற்கு வந்து ஜூலி இப்போது தான் ஒரு பிரச்சனையை செய்துவிட்டு சென்றிருக்கிறாள்.  அதையே இன்னும் அவர்கள் முழுவதாக சமாளித்து முடிக்கவில்லை.  அதற்குள் இப்படி ஒரு பிரச்சனை.  உணவு விஷயத்தில் கவனமாக இருக்கும் லிண்டா அவள் பக்கத்தில் இருந்து எந்த தவறும் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று அவளுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க, “ஒருவேளை யாராவது வேணும்னே  லிண்டாவுக்கு இப்படி ஆகணும்னு அவங்களுக்கே தெரியாம  அவங்க சாப்பிடுற சாப்பாட்டுல வேர்க்கடலைய கலந்து கொடுத்திருப்பார்களா?  இப்ப எல்லாம் யாரையும் நம்ப முடிய மாட்டேங்குது.  முதல்ல ஆகாஷ் கிட்ட லிண்டா சாப்பிட்ட சாப்பாட்டை செக் பண்ண சொல்லணும்.” என நினைத்த தேன்மொழி வெளியில் சென்று அங்கே சோகமே உருவாக சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ஆகாஷின் அருகில் சென்று “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என் கூட வாங்க.”  என்றாள்.

அங்கே ரஷ்யாவில் இருக்கும் அர்ஜுனுக்கும் நடக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. “ அது எப்படி நான் இங்கே கிளம்பி வந்ததுக்கு அப்புறமா அடுத்தடுத்து தப்பு தப்பா நடக்குது? Something is strange.” என நினைத்த அர்ஜுன் கிளாராவிற்கு கால் செய்து  பாதுகாப்பு விஷயங்களில் இன்னும் கவனமாக இருக்கும்படி ஒரு சில இன்ஸ்ட்ரக்சன்களை கொடுத்தான்.

லிண்டாவை பற்றியே யோசித்துக் கொண்டு இருந்த ஆகாஷ்  தனது ஆபிஸ் சம்பந்தமான பொறுப்புகளில் கொஞ்சம் கவனத்தை இழந்திருக்கும் தருணத்தில்,  சைட்டில் வேலை பார்க்கும் ஒரு சிலரை விலைக்கு வாங்கி தானாகவே அந்த கட்டிடம் இடிந்து விழுவதை போல ஒரு திட்டத்தை போட்டான்.

அவர்களும் சந்தோஷ் சொன்னதை கேட்டு சரியாக கிட்டத்தட்ட நான்கு மாடி வரையிலும் கட்டப்பட்டு இருந்த கட்டிடத்தை யாருக்கும் தெரியாமல் வெடிவைத்து இரவோடு இரவாக தகர்த்தினார்கள்.  அதில் வேலை செய்வதற்காக வந்திருந்த வெளிமாநிலத்தவர்கள் அந்த கட்டிடத்தில் தங்கி இருந்ததால் பெருமளவில் அவர்கள் அந்த விபத்தில் சிக்கி காயப்பட்டு அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள்.

இம்முறை அது முக்கியமான நியூஸ் என்பதால் சமூக ஊடகங்கள்,  நியூஸ் சேனல்கள் என எல்லா இடங்களிலும் அந்த சம்பவம்  காட்டுத் தீயாகபரவியது.  விஷயம் மிகவும் சீரியஸாக இருப்பதால் என்ன தான் அர்ஜுன் நிறுவனத்திற்கு சொந்தமான பப்ளிக் ரிலேஷன்ஷிப் டீம் அந்த செய்தியை காணாமல் செய்ய முயற்சி செய்தாலும்,  அனைத்தும் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங் ஆக இருந்ததால் மீண்டும் மீண்டும் அது தொடர்பான செய்திகள்  வளம் வந்த வண்ணம் இருந்தது.  அவர்கள் விடிய விடிய போராடியும் எதையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

முக்கியமாக அர்ஜுனை ரஷ்யாவில் இருந்து மீண்டும் இங்கே இந்தியா வரவழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சந்தோஷ் இந்த திட்டத்தை போட்டு இருந்ததால் வேண்டுமென்றே ஒரு சிலரை விலைக்கு வாங்கி அர்ஜூன் மக்களிடம் நன்மதிப்பை பெறுவதற்காக குறைந்த விலையில் அரசாங்க கட்டிடங்களை கட்டிக் கொடுக்கும் காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு இப்போது தனது சொந்த நிறுவனங்களை கவனிப்பதும் தனக்கு சொத்து சேர்ப்பதும் தான் முக்கியம் என நினைத்து கிளம்பு ரஷ்யா சென்று விட்டான் என சமூக வலைதளங்களில் அவனைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பதிவிட சொன்னான்.

தேன்மொழியின் பெயரில் இரண்டே நாட்களில் அர்ஜுன் ஒரு டிரஸ்டை உருவாக்கி கிட்டத்தட்ட 2000 மக்களுக்கு தங்கும் இடத்தையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான் என்பதால்,  தமிழ்நாட்டை பொறுத்தவரை அவனுக்கு மக்களிடையில் ஒரு  நன்மதிப்பு இருந்தது.  இப்போது தொடர்ந்து அவனைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் ஊடகங்களில் சுற்றிக்கொண்டு இருப்பதால்,

“ இவர மாதிரி பணக்காரங்க எல்லாம் சும்மா பப்ளிசிட்டிக்கு தான் மக்களுக்கு நல்லது பண்றேன்னு சொல்லுவாங்க.  பணக்காரங்களுக்கும் சரி,  பதவியில இருக்குறவங்களுக்கும் சரி,  என்னைக்குமே பொதுமக்கள் மேல நல்ல எண்ணமும் கிடையாது.  எங்களுக்கு நல்லது செய்யணும்னு ஆசையும் கிடையாது.

இவங்க எல்லாத்தையும் அவங்களோட சொந்த லாபத்துக்காக தான் பண்ணிக்கிறாங்க.  இதுக்கு முன்னாடி மத்த கம்பெனிகளோட tieup பண்ணி மட்டுமே பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்த அர்ஜுன் சார் family இப்ப நேரடியா எதுக்கு இந்தியால பிசினஸ் பண்ணனும்னு இறங்கி இருக்காங்க?  மக்கள் கிட்ட ஒரு நல்ல பெயர் எடுத்துட்டா அத வச்சு அடுத்தடுத்து பிசினஸ் பண்ணி காசுக்கு மேல காசு சம்பாதிக்கணும்னு மத்த எல்லா பணக்காரங்களுக்கும் இருக்கிற அதே சராசரி எண்ணம் தான் இவங்களுக்கும். 

இங்க யாருமே நல்லவங்க இல்லை.  அவங்க மக்களுக்காக    செய்கிறேன்னு சொல்றது எல்லாம் வெறும் கண் துடைப்பு தான். இனிமேலாவது நம்மள மாதிரி பொதுமக்கள் எல்லாரையும் அப்படியே அவங்கள  நம்பரை நிறுத்தணும்.”  என ஆளாளுக்கு  பொதுமக்கள் கருத்து தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஏற்கனவே தனது கணவனும் குழந்தைகளும் தன்னை விட்டு பிரிந்து இருக்கிறார்கள்.  அவர்கள் தன்னிடம் பேச கூட விரும்பவில்லை? என்றெல்லாம் நினைத்து சோகமே உருவாக சுற்றிக் கொண்டிருந்த தேன்மொழிக்கு இன்னும் இதையெல்லாம் பார்க்க “நான் ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் சந்தோஷமா இருந்துட்டேன்.  அது அந்த கடவுளுக்கே புடிக்கலைன்னு நினைக்கிறேன்.  அடுத்த ரெண்டு மாசத்துக்கு யோசிச்சு feel பண்ற அளவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வச்சிக்கிட்டே இருக்காரு.” என்று இருந்தது.

அதே சமயம் “  நான் அர்ஜுன் கிட்ட பேசி எவ்வளவு நாள் ஆகுது..  இப்பவே அவர் கிட்ட பேசணும் போல இருக்கு.  பேசலாமா?  நான் கால் பண்ணா அவர் எடுப்பாரா?” என்ற கேள்வியும் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.  இதற்கு மேலும் அர்ஜுனிடம் பேசாமல் அவளால் தனது எமோஷன்களை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடியவில்லை.

“அவன் என்ன நெனச்சாலும் பரவால்ல.  ஏன் என் புருஷன் கிட்ட நான் பேச கூடாதா?  அவன் என்ன வேணாலும் சொல்லட்டும்.  நான் இப்ப கால் பண்ணி அவன் கிட்ட பேச தான் போறேன்.  இதுவரைக்கும் நான் அமைதியா இருந்தது தான்  தப்புன்னு இப்ப தோணுது. இதுக்கு மேல அப்படி இருக்க கூடாது.

இப்படியே நான் பேசாம நாளை கடத்திக்கிட்டே இருந்தா எனக்கும் அவனுக்கும்  நடுவுல இருக்கிற கேப் தான் அதிகமாக்கிட்டே இருக்கும்.  இல்ல,  என்னால அதை alllow பண்ண முடியாது.” என நினைத்து ஒரே முடிவாக  அர்ஜுனிற்கு கால் செய்தாள் தேன்மொழி. 

இந்தியாவில் பூதாகரமாக வெடித்த பிரச்சனை ரஷ்யாவில் உள்ள அர்ஜுனின் ஒரு சில பிசினஸ்க்களையும் பாதித்தது.  அதனால் ஷேர் holders  அனைவரும் ஒன்று சேர்ந்து மீட்டிங்கு ஒன்றை போட்டு அதில் அர்ஜுனை நடுவில் அமர வைத்து “இத நீங்க எப்படி சரி பண்ண போறீங்க மிஸ்டர் அர்ஜுன்? நாங்களும்  முதல்ல இதை ஒரு சாதாரண சின்ன இன்சிடென்ட்ன்னு தான் நினைச்சோம். பட் டைம் ஆக ஆக இதோட இன்பாக்ட் அதிகமாக்கிட்டே போகுது. உங்க சைடுல இருந்து இத சரி பண்றதுக்கு என்னதான் பண்ணிட்டு இருக்கீங்க?  பீப்பிளுக்கு நம்ம பிராண்ட் மேல இருந்த நம்பிக்கையும்,  நம்மளோட ஷேர் வேல்யூவும் கொஞ்சம் கொஞ்சமாக  குறைஞ்சிக்கிட்டே இருக்கு.  இதுக்கு நம்ம இம்மீடியேட்டா ஆக்சன் எடுத்தே ஆகணும்.”  என ஆளாளுக்கு அவனிடம் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே தனது சொந்த பிரச்சினைகளாலும்,  இப்போது புதிதாக வந்திருக்கும் பிசினஸ் தொடர்பான பிரச்சனைகளாலும் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்ந்து போயிருந்த அர்ஜுனுக்கு அவனது பொறுமை எல்லாம்  எப்போதோ காற்றில் பறந்து போயிருந்தது.  இருப்பினும் அவன் தனது பதவியை மனதில் வைத்து இதை எல்லாம் சமாளிக்கும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்ற எண்ணத்தில் அமைதியாக அமர்ந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்க,  அப்போது தான் அவனுக்கு தேன்மொழியிடம் இருந்து கால் வந்தது.

தேன் மொழியின் அழைப்பை ஏற்பானா அர்ஜுன்?

மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured