அத்தியாயம் 169
மேகாவிடம் இருந்து கடந்த இரண்டு நாட்களாக தனக்கு எந்த callம் வராததால் அவளுக்கு தானே call செய்த கலைச்செல்வி, “ஏய்.. என்னடி free டைம்ல ஒரு call கூட பண்ண மாட்டியா…?? உன் வீட்டுக்காரர் வெளிநாட்டுக்கு போயிருந்தாரே.. அவர் வந்துட்டாரா இல்லையா..??” என்று கேட்க, மற்றவர்கள் தன்னைக் கண்டு மேலும் உடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தனது சோகம் அனைத்தையும் தனக்குள் அடக்கி வைத்திருந்த மேகா, அவள் குரலைக் கேட்டவுடன் உடனே தனியாக சென்று ஒரு ஓரமாக நின்று சத்தமாக கதறி அழுதாள்.
அதனால் பதறிய கலைச்செல்வி “இப்ப எதுக்குடி இப்படி அழுகற என்னாச்சு உனக்கு? உனக்கும் விஷ்வா அண்ணாவுக்கும் ஏதாவது சண்டையா..?? என்ன ஆனாலும் அவர் உன்னை விட்டுட்டு இருக்க மாட்டாரே.. இப்ப என்ன ஆயிடுச்சுன்னு நீ இப்படி தேம்பித் தேம்பி அழுதுட்டு இருக்க..?? என்னன்னு சொல்லி தொலடி. எனக்கு பயமா இருக்கு.” என்று சொல்ல, நடந்த அனைத்தையும் அவளிடம் சொன்ன மேகா “என்னால பாட்டி செத்ததையே இன்னும் ஏத்துக்க முடியலடி. இதுல விஷ்வா ஒரு பக்கம் முன்னாடி இருந்ததைவிட மோசமான நிலைமையில ஏதோ பைத்தியம் புடிச்ச மாதிரி சாப்பிடாம தூங்காம அப்படியே ஒரே இடத்தில உக்காந்திருக்கான். என்கிட்ட கூட வாயை திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டேங்கிறான்.
சௌபர்ணிகா அக்கா pregnantஆ இருக்காங்க. அவங்க ஒரு பக்கம், பாட்டிய நினைச்சு அழுதுட்டே இருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிகிட்டு எனக்கு அப்படியே பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குடி. எனக்கு என்ன பண்றதுனே தெரியல.” என்று சொல்லிவிட்டு அழுதாள்.
“என்னடி சொல்ற.. பாட்டி இறந்துட்டாங்களா..?? இத பத்தி ஏன் நீ எங்ககிட்ட சொல்லவே இல்ல..?? பாட்டி இறந்து ரெண்டு நாள் ஆகியிருக்கு. இப்பயும் நானா ஃபோன் பண்ணி பேசுறதுனால நீ நடந்ததை சொல்ற. காளி மாமா உங்கள வெண்ணிலா நிச்சயதார்த்தத்துக்கு கூப்பிடலைன்னு மொத்தமா எங்க உறவே வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டியா..??” என்று கலைச்செல்வி கோபமாக கேட்க, “அட நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்ல. Infact நான் யாரைப் பற்றியும் எதைப்பத்தியும் யோசிக்கிற நிலைமையிலேயே இல்ல கலை. எப்போ என் புருஷனும், சௌபர்ணிகா அக்காவும் நார்மல் ஆகுறாங்களோ அப்பதான் என்னால நார்மலாகவே முடியும். நான் வேணும்னே எல்லாம் உங்ககிட்ட இத பத்தி சொல்லாம இருக்கல. ப்ளீஸ் நீயாவது என் situationஐ புரிஞ்சுக்கோ டி.” என்று அழுதபடி சொன்னாள் மேகா.
அதனால் தன் கோபத்தை விடுத்து அவள் மீது பரிதாபப்பட்ட கலைச்செல்வி, “சரி விடு. நீ பாட்டி இறந்தத சொல்லியிருந்தா மட்டும், இருக்கிற கோபத்துக்கு மாமா அங்க வந்திருப்பாரா இல்லையான்னு தெரியல. இப்பவே நைட்டு ரொம்ப நேரமாயிடுச்சு. நாளைக்கு காலைல நேரமா நானும் வெற்றியும் கிளம்பி சென்னைக்கு வர்றோம். நீ கண்டத போட்டு யோசிச்சு குழப்பிக்காத. முதல்ல நீ நல்லா இருந்தா தான், உன் வீட்டு ஆளுங்கள உன்னால நல்லா பார்த்துக்க முடியும். விஷ்வா அண்ணா கூடவே இரு. இதுக்கு முன்னாடியே அவருக்கு இந்த மாதிரி பிரச்சனை இருந்திச்சுல்ல..!! உன்னால தானே அவர் சரி ஆனாரு! அதே மாதிரி இந்த தடவையும் உன்னால மட்டும் தான் அவரை சரி பண்ண முடியும் மேகா. நீ அவரையும், சௌபர்ணிகா அக்காவையும் பத்தி மட்டும் யோசி. நீ போய் அவங்கள பாரு நான் வைக்கிறேன். சும்மா அழுதுட்டே இருக்காத. நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு. காலைல பாக்கலாம் Bye.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்து விட, தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு தனது ரூமிற்கு சென்றாள் மேகா.
அங்கே light கூட போடாமல் வழக்கம்போல் சாப்பிடாமல் ceilingஐ வெறித்து பார்த்தபடி bedல் படுத்திருந்தான் விஷ்வா. வெளியில் இருந்து வந்த மெல்லிய வெளிச்சத்தில் அவனைப் பார்த்த மேகா, “இவனுக்கு இருட்டுனா பயமாச்சே.. தூங்கும்போது கூட light போட்டுட்டு தானே தூங்குவான்… இப்போ என்ன இப்படி இருட்டுல படுத்திருக்கான்..?? இவனுக்கு அந்த பயம் போகிற அளவுக்கு இவன் மனசு இறுகி போயிடுச்சா? ஐயோ கடவுளே.. என்னால என் விஷ்வாவ இப்படி பார்க்க முடியல. நீங்கதான் சீக்கிரமா இவனை நார்மல் ஆக்கணும்.” என்று கடவுளிடம் அவனுக்காக பிரார்த்தித்துவிட்டு சென்று அனைத்து lightகளையும் போட்டு விட்டாள்.
இவ்வளவு நேரம் இருட்டில் இருந்ததால் அவன் கண்கள் கூச, உடனே திரும்பி படுத்துக் கொண்டான் விஷ்வா.
உண்மையில் அவனை அப்படி பார்க்க மேகாவிற்கு பாவமாக இருந்தது. பாட்டி இறந்து முழுவதாக 50 மணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் விஷ்வா உடல் எடை குறைத்து பாதி ஆள் ஆகிவிட்டதை போல, மெலிந்து காணப்பட்டான். எப்போதும் அவன் கடுமையாக தன் முகத்தை வைத்திருந்தால் கூட, அவன் முகத்தில் இருக்கும் பொலிவு இப்போது காணாமல் போயிருந்தது. கலங்கிய கண்களுடன் சென்று அவன் அருகில் படுத்துக் கொண்ட மேகா அவனை அணைத்துக் கொண்டு, “ப்ளீஸ் விஷ்வா… வந்து சாப்பிடு.” என்று கெஞ்சினாள்.
அவன் தன் வாயையே திறக்கவில்லை. அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். “ஏன்டா இப்படி பண்ணி டெய்லியும் என்னை கொல்லாம கொல்லுற..?? அன்னைக்கு நான் suicide attempt பண்ணதுக்கு, என்னை அடிச்சில்ல.. இப்போ இப்படி சாப்பிடாம தூங்காம பைத்தியக்காரன் மாதிரி behave பண்ணி உன்னையும் hurt பண்ணிக்கிட்டு என்னையும் hurt பண்ணி கொஞ்சம் கொஞ்சமா என்னை நீ கொன்னுட்டு இருக்கியே.. இது மட்டும் பரவால்லையா உனக்கு..??
நீ இப்படி இருக்கிறது, என்ன எவ்ளோ affect பண்ணனும்னு நீ கொஞ்சம் கூட யோசிச்சு பாக்கலையா விஷ்வா..?? பாட்டி நம்மள விட்டு போனது நமக்கு தாங்க முடியாத வேதனை தான். எனக்கும் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுக்காக நம்ம எத்தனை நாள் இப்படியே இருக்க முடியும்..?? கண்டிப்பா பாட்டியும் சாமியா இருந்து இப்படி நம்ம எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கிறத பார்த்து, அவங்களும் கஷ்டப்படுவாங்க. அதான் வேணுமா உனக்கு..?? பாட்டி எப்பவும் நம்ம எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு தான் ஆசைப்பட்டாங்க. But நீ சுத்தமா சாப்பிடுறது இல்ல. சோ நானும் சாப்பிடல. நம்ம சாப்பிடாதனால, ஏற்கனவே அழுதுட்டே இருக்குற சௌபர்ணிகா அக்கா.. அவங்களும் சரியா சாப்பிட மாட்டேங்கிறாங்க. நீதான் எங்களோட strength விஷ்வா. நீ நல்லா இருந்தா தான் நாங்க நல்லா இருப்போம். எனக்கு என் விஷ்வா வேணும். முன்னாடி மாதிரியே.. என்ன கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிட்ட என் புருஷன் விஷ்வா எனக்கு மறுபடியும் வேணும். நீ இப்படி இருக்கிறத என்னால பாக்க முடியல டா.” என்று உடைந்த குரலில் சொன்ன மேகா அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்து கதறி அழுதாள்.
அதுவரை எதற்கும் அசையாமல் சிலை போல அப்படியே இருந்த விஷ்வா, அப்போது தானும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். பாட்டி இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இப்போது தான் அவன் கண்கள் ஓரமாக கண்ணீர் துளி எட்டிப் பார்த்தது. அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை.
அவள் தன் அழுகையை நிறுத்தவில்லை. அவன் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவி போல கொட்டியது. ஒரு கட்டத்திற்கு மேல், அழுது அழுது ஓய்ந்த மேகா அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டு “எனக்கு ரொம்ப பசிக்குது விஷ்வா. நீ சாப்பிடுற வரைக்கும் நானும் சாப்பிட மாட்டேன். உனக்கு இப்படி இருக்க தான் பிடிச்சிருக்குன்னா பரவால்ல. உன் கூட நானும் சேர்ந்து இப்படியே இருந்து சாகுறேன். நம்ம சேர்ந்து சாகலாம்.” என்றாள்.
சில நிமிடங்கள் அமைதியாக அழுது அழுது வீங்கி போயிருந்த அவள் முகத்தை உற்று பார்த்த விஷ்வா, அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்து குளிக்க சென்று விட்டான். அதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட மேகா kitchenக்கு call செய்து அவர்களுக்கான உணவை கொண்டு வந்து கொடுக்கச் சொன்னாள். ஷவரை திறந்து கொட்டும் தண்ணீரில் தன் கண்களை மூடி வெகு நேரமாக அப்படியே நின்று கொண்டிருந்த விஷ்வாவின் விழித்திரையில் திடீரென மேகாவின் சோகமான முகம் தோன்றி மறைந்தது. அதனால் சட்டென தன் கண்களை திறந்தான். அவன் வாழ்வில் மேகா வரவில்லை என்றால் “எனக்கு யார் இருக்கா?? யாருக்காக நான் வாழனும்..??” என்று நினைத்து பாட்டி இறந்த உடனே தானும் இந்த உலகை விட்டு எப்போதோ சென்றிருப்பான்.
ஆனால் இப்போது அவனை நம்பி அவனுக்காக ஒருத்தி இருக்கிறாள் என்று நினைக்கும் போது, அவளுக்காக தன் உயிரை இழுத்து பிடித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த விஷ்வா அரைகுறையாக குளித்துவிட்டு ஒற்றைத் துண்டுடன் வெளியே சென்றான்.
அவனை பார்த்தவுடன் எழுந்து நின்ற மேகா “வா வந்து உட்காரு சாப்பிடலாம்.” என்று சொல்ல, ஏதோ உணர்ச்சிகரற்ற உண்மையான robot போல அவளது கட்டளைக்கு கீழ்ப்படிந்து சென்று அவள் சொன்ன இடத்தில் அமர்ந்தான் விஷ்வா. Hair dryerல் அவன் தலை முடியை காயவைத்த மேகா, ஒரு தட்டில் இட்லியை எடுத்து வைத்துவிட்டு அவனைப் பார்த்து “வாய திற.” என்றாள்.
உடனே அவன் தன் வாயை திறந்து அவளுக்கு ஆ காட்ட, அவனுக்கு இட்லியை சாம்பாரில் நனைத்து ஊட்டிவிட்ட மேகா “நல்லா சாப்பிடு விஷ்வா. நீ சாப்பிட்டாதான் நானும் சாப்பிடுவேன் பாத்துக்கோ..!!” என்றாள். அதனால் அவளுக்காக சாப்பிட்டான் அவன்.
அங்கே தனது அறையில் இருந்த சௌபர்ணிகா “ப்ளீஸ் சேரன்.. என்னால சாப்பிட முடியலன்னு சொல்றேன்ல எனக்கு போதும் விடு.
எனக்கு சாப்பாட வாயில வச்சாலே வாந்தி வர்ற மாதிரி இருக்கு.” என்று சொல்லி சாப்பிட மறுக்க, “ப்ளீஸ் டி.. ரெண்டு நாளா நீ ஒழுங்காவே சாப்பிடல. ஒழுங்கா சாப்பிடு. உனக்காக இல்லைனாளும் நம்ம babyகாக சாப்பிடு.” என்று சொல்லி கெஞ்சி கொஞ்சி வற்புறுத்தி அவளுக்கு உணவை ஊட்டி விட்டான் சேரன்.
தொடரும்..