Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 168

மூர்கனின் காதலி CH 168

by Thenaruvi Tamil Novels
32 views

அத்தியாயம் 168

பாட்டியின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று சொல்லி servant ஒருவன் மேகாவை அழைக்க, தன் ரூமில் இருந்த மேகா பதட்டத்தில் night dress உடன் கண்கள் குளமாக அப்படியே ‌கீழே ஓடினாள்.

அவள் சென்று பார்க்கும் போது, சைரன் சத்தம் ஒலிக்க ambulance ஒன்று அவர்கள் மாளிகையின் முன்னே நின்றிருந்தது. அதிலிருந்து இறங்கியவர்கள் structureல் மயங்கி கிடந்த பாட்டியை படுக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்க, “பாட்டி உங்களுக்கு எதுவும் ஆகாது பாட்டி. நீங்க சீக்கிரம் சரியாயிடுவீங்க. இதோ நம்ம ஹாஸ்பிடலுக்கு கிளம்பிட்டோம்.” என்று உடைந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்த ரிஷி பாட்டியை ambulanceல் ஏற்ற அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.

சௌபர்ணிகா “பாட்டி.. ஐயோ பாட்டி.. உங்களுக்கு என்ன ஆச்சு பாட்டி.. இத்தனை நாளா நல்லா தானே இருந்தீங்க..!! திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியலையே.. ப்ளீஸ் எங்களை விட்டுட்டு போயிடாதீங்க பாட்டி.” என்று தரையில் மண்டியிட்டு அமர்ந்து அழுது கொண்டிருக்க; மகதியும், பிரியாவும், சேரனும் அவள் அருகில் அமர்ந்து கொண்டு “பாட்டிக்கு எதுவும் ஆகாது. நீங்க இப்படி அழுதுகிட்டே இருந்து உங்களுக்கு ஏதாவது ஆயிட போகுது. நீங்க pregnantஆ இருக்கீங்க. So be careful.” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை எல்லாம் பார்த்துவிட்டு கண்கள் கலங்க வெளியே ஓடி வந்த மேகா “அக்கா ப்ளீஸ்.. நீங்க அழுகாதீங்க. நம்ம பாட்டிக்கு எதுவும் ஆகாது. நான் ரிஷி கூட பாட்டியை கூட்டிட்டு ஹாஸ்பிடல் போறேன்.” என்றவள் சேரனை பார்த்து, “நீங்க இங்கயே இருந்து அக்காவை பார்த்துக்கோங்க.” என்றாள்.

மேடிட்டு இருந்த தனது வயிற்றை பிடித்துக் கொண்டு சிரமப்பட்டு எழுந்து நின்ற சௌபர்ணிகா “நான் சாப்பிட்டுட்டு இருக்கிறப்ப ‌பாட்டியை பார்க்கும்போது கூட அவங்க நல்லாதான் இருந்தாங்க மேகா. இப்பதான் அவங்க நார்மலாகி எந்திரிச்சு நடக்குறாங்கன்னு நான் சந்தோஷப்பட்டேன்.

அதுக்குள்ள அவங்களுக்கு இப்படி ஆயிடுச்சு! நீ வரும்போது அவங்கள நடக்க வச்சு கூட்டிட்டு தான் வீட்டுக்கு வரணும். ஓகேவா..??” என்று அழுது கொண்டே கேட்க, “கண்டிப்பா அக்கா.. நான் வரும்போது பாட்டி சரியாகி என் கூட அவங்களாவே நடந்து வீட்டுக்குள்ள வருவாங்க. லேட் ஆகுது நான் கிளம்புறேன்.” என்ற மேகா ரிசியுடன் ambulanceல்‌ ஏறி அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு சென்றாள். சாராவும் அனுவும் அவளை follow செய்து மற்ற male bodyguards உடன் காரில் சென்றார்கள்.

சில நிமிடங்களுக்கு பிறகு பாட்டியை VIP wardல் admit செய்துவிட்டு வெளியே தவிப்புடன் மேகாவும், ரிஷியும் treatment முடிந்து டாக்டர் வருவதற்காக காத்திருந்தார்கள். மேகாவின் மெசேஜை பார்த்துவிட்டு அவளுக்கு வீடியோ கால் செய்தான் விஷ்வா.

பாட்டியை காண சென்ற அவசரத்தில் அவள் தனது phoneஐ வீட்டிலேயே வைத்து விட்டு வந்திருந்ததால், அவன் பல முறை கால் செய்தும் மேகா எடுக்கவில்லை. அதனால் பதட்டமடைந்த விஷ்வா “என்னாச்சு இவளுக்கு நம்ம இத்தனை தடவை கால் பண்ணியும் எடுக்க மாட்டேங்கறா..?? ஒருவேளை குளிச்சிட்டு இருக்காளா..?? மணி 10:30க்கு மேல ஆகுதே.. ஆபீஸ்ல இருந்து வந்த உடனே அவ குளிச்சிடுவாளே.. அப்புறம் ஏன் என் Callஐ எடுக்க மாட்டேங்கறா..?? ஏதோ தப்பா இருக்கு.” என்று நினைத்தவன், உடனே Hallல் உள்ள Land Line நம்பருக்கு கால் செய்தான்.

அதை attend செய்த servant ஒருவன் விஷ்வா தான் லைனில் இருக்கிறான் என்று உறுதி செய்துவிட்டு “சார் பாட்டிக்கு உடம்பு சரியில்ல. Ambulanceல அவங்கள கூட்டிக்கிட்டு மேகா மேடமும், ரிஷி சாரும் பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு போய் இருக்காங்க. இந்நேரம் அவங்க உங்களுக்கு கால் பண்ணி இத பத்தி சொல்லி இருப்பாங்கன்னு நாங்க நினைச்சோம். உங்களுக்கு இன்னும் விஷயமே தெரியாதா..??” என்று கேட்க, அதிர்ச்சியில் தனது mobile phoneஐ கீழே தவற விட்டான் அவன். கீழே விழுந்ததில் அது உடைந்து விட்டது.

அவனது உள்ளுணர்வு மீண்டும் மீண்டும் அவனிடம் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று சொல்லிக் கொண்டே இருக்க, அப்போதுதான் தனது client officeக்கு சென்றிருந்த விஷ்வா அவனுக்கென கொடுக்கப்பட்டிருந்த ரூமில் அப்படியே தரையில் அமர்ந்து தன் கால்களை மடக்கி அவனது முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

‌மீனாள் பாட்டி மட்டும் இல்லையென்றால், இன்று அவன் உயிரோடு இருந்திருக்க மாட்டான். அதை நினைத்துப் பார்த்த விஷ்வாவின் கண்களில் இருந்து ‌ நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது கண்ணீர். அவனைத் தேடிக் கொண்டு அரவிந்த் மற்றும் தயாளனுடன் அங்கே வந்த மகேஷ் விஷ்வா இருந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்து வேகமாக “என்னாச்சு பாஸ் உங்களுக்கு..??” என்று கேட்டபடி அவனை நோக்கி ஓடினான்.


அவர்களை விஷ்வா நிமிர்ந்து பார்க்க, அவன் கண்களில் இருந்து வடிந்த கண்ணீரை கண்டு அவர்கள் மூவரும் மேலும் பதறிப்போனார்கள். மாறி மாறி அவர்கள் அனைவரும் அவனிடம் என்ன ஆனது என்று கேட்டுக் கொண்டே இருக்க, விஷ்வா யாருக்கும் பதில் சொல்லவில்லை. மகேஷின் phoneற்கு call செய்த ரிஷி அவனிடம் விஷயத்தைச் சொன்னான்.

“oh my God.. பாட்டிக்கு மறுபடியும் உடம்பு சரியில்லையா..?? அந்த விஷயத்தை கேள்விப்பட்டு தான் பாஸ் இப்படி பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்காரா..?? கடவுளே எங்க விஷ்வா சாருக்காகவாவது பாட்டிக்கு எதுவும் ஆகக்கூடாது. அவரால அவங்க இழப்பை தாங்கவே முடியாது.” என்று நினைத்த மகேஷ் “ஓகேடா.. நாங்க உடனே அங்க‌ கிளம்பி வர்றோம். நாங்க வர்ற வரைக்கும் அங்க மேகா கூடவே இருந்து நீ எல்லாத்தையும் பாத்துக்கோ.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான். பின் மகேஷ் உடனே அவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு செல்வதற்காக விஷ்வாவிற்கு சொந்தமான private jetஐ தயார்படுத்த, அடுத்த ஒரு மணி நேரத்தில் விஷ்வாவுடன் அவர்கள் அனைவரும் அதில் ஏறி இந்தியாவை நோக்கி பறக்க தொடங்கினார்கள்.

இங்கே ஹாஸ்பிடலில் வெகு நேரமாக பாட்டிக்கு treatment போய்க் கொண்டிருந்தது.‌ “கடவுளே பாட்டிக்கு எதுவும் ஆகிட கூடாது. அவங்க ஆசைப்பட்ட மாதிரி, எங்க எல்லாரோட குழந்தையையும் அவங்க தூக்கி கொஞ்சி விளையாடனும். இப்பதான் அவங்க நல்லா இருக்காங்கன்னு நாங்க எல்லாரும் சந்தோஷப்பட்டோம். அதுக்குள்ள அவங்களுக்கு இப்படி ஆனா, அதை தாங்குற சக்தி எங்க யாருக்குமே இல்ல.” என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் மேகா.

சில நிமிடங்களுக்கு பிறகு பாட்டி அட்மிட் செய்யப்பட்டு இருந்த ரூமில் இருந்து வெளியே வந்த டாக்டர், “I am sorry Mrs Vishwa. எங்களால மீனாள் மேடம காப்பாத்த முடியல. She is no more.” என்று சொல்ல, “பாட்டி..!!” என்று தனது அடி தொண்டையில் இருந்து சத்தமாக கத்திய மேகா கதறி அழத் தொடங்கி விட்டாள். ஏற்கனவே அங்கே கண்ணீருடன் நின்று கொண்டிருந்த ரிஷி, அழுது கொண்டிருந்த மேகாவை சமாதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான்.

“பாட்டி நம்மள விட்டு போயிட்டாங்கன்னு நான் போய் எப்படி அக்காகிட்ட சொல்லுவேன்..?? அவங்க pregnantஆ இருக்க இந்த டைம்ல இதை எப்படி அவங்க தாங்குவாங்க..?? என்னாலயே இதை ஏத்துக்க முடியல ரிஷி. அப்புறம் என் விஷ்வா.. அவனால எப்படி பாட்டி இல்லாம இருக்க முடியும்..?? அவனும் உடைஞ்சு போயிடுவான்.” என்ற மேகா தொடர்ந்து அழ,

“கஷ்டமா இருந்தாலும் இந்த உண்மையை நம்ம ஏத்துக்கிட்டு தான் அண்ணி ஆகணும். பாட்டி சாமியா இருந்து எப்பவும் நம்மள பாத்துட்டு தான் இருப்பாங்க. நீங்களே இப்படி உடைஞ்சு போய்ட்டீங்கண்ணா, அக்காவையும், அண்ணாவையும் யார் சமாதானப்படுத்துறது சொல்லுங்க..?? இந்த டைம்ல எல்லாரையும் விட நீங்கதான் ரொம்ப strongஆ இருக்கணும்.” என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டு சமாதானப்படுத்தினான் ரிஷி.
விஷ்வா வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் பாட்டியின் இறந்த உடலை ஒரு ice boxல் வைத்து அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார்கள்.

ஏற்கனவே பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதற்கே சித்தப்பிரமை பிடித்தவனை போல யாரிடமும் பேசாமல் சிலை போல ஒரே இடத்தில் அமர்ந்து இருந்த விஷ்வா, சில மணி நேர பயணத்திற்கு பிறகு இந்தியாவிற்கு வந்து பாட்டி இறந்துவிட்டது தெரிந்து இன்னும் உடைந்து போனான்‌. அவன் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வர, அவன் தன் வாயை திறந்து யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதேசமயம் அவனுக்கு oppositeஆக சௌபர்ணிகா பாட்டி.. பாட்டி.. என்று தொடர்ந்து கதறி கதறி அழுது கொண்டே இருந்தாள்.

அப்படியே அவள் ஒரு கட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்து விட, வந்து அவளை செக் செய்த டாக்டர் “நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. இவங்கள பத்திரமா பாத்துக்கோங்க.” என்று சொல்லிவிட்டு சென்றாள். இத்தனையும் தன் முன்னே நடந்தாலும் கூட, விஷ்வா அதற்கெல்லாம் துளியும் react செய்யவில்லை. அதனால் பாட்டி இறந்து போன வேதனையை தாண்டி மேகாவிற்கு விஷ்வாவை நினைத்தும், சௌபர்ணிகாவை நினைத்தும் தான் அதிக கவலையாக இருந்தது.

விஷ்வா அப்படியே யாரிடமும் பேசாமல் ஒரே இடத்தில் சிலை போல அமர்ந்திருந்ததால், வேறு வழி இல்லாமல் மகேஷ், சேரன் மற்றும் ரிஷி உடன் சேர்ந்து பாட்டியின் உடலை விஷ்வாவிற்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து எரித்துவிட்டாள் மேகா. எங்கே தான் dead bodyஐ புதைத்தால், மீண்டும் மீண்டும் இந்த இடத்திற்கு வந்து சமாதியை பார்த்து விஷ்வாவும் சௌபர்ணிகாவும் இன்னும் மனதளவில் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்ற பயம் அவளுக்கு.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured