Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 170

மூர்கனின் காதலி CH 170

by Thenaruvi Tamil Novels
34 views

அத்தியாயம் 170

விஷ்வாவை சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டு முடித்த மேகா, “ரெண்டு நாளா இவன் தூங்கவே இல்ல. இன்னைக்காவது நல்லா தூங்கட்டும்.” என்று நினைத்து அவனது தூக்க மாத்திரையை எடுத்துக் கொடுத்து “இந்தா.. இத போட்டுட்டு படு.” என்று அவன் முன்னே ஒரு கிளாஸ் தண்ணீருடன் நீட்டினாள்.

அவள் சொன்னதைப் போலவே மாத்திரையை வாங்கி போட்டு கொண்டு படுத்தான் விஷ்வா. அவன் அப்போதும் தூங்காமல் ceilingஐ வெறித்து பார்த்தபடி மல்லாக்க படுத்திருக்க, அவன் கண்களை தன் விரல்களால் மூடிய மேகா அவனை தன் பக்கம் திருப்பி இறுக்கமாக அணைத்துக் கொண்டு “எதை பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு விஷ்வா. உனக்கு நான் இருக்கேன். எப்பவும் நான் இருப்பேன்.” என்றாள். உண்மையில் அவள் வார்த்தைகளும், அவளது அருகாமையும் அவனை ஓரளவிற்கு ஆறுதல் படுத்தியது. அதனால் தன் கண்களை மூடி உறங்கினான் விஷ்வா.

விடியற்காலையில் எழுந்து சென்னைக்கு செல்வதற்காக கலைச்செல்வியும் வெற்றிச்செல்வனும் கிளம்பி வெளியே சென்று கொண்டு இருந்தார்கள். அதை கவனித்த காளீஸ்வரன் “புருஷனும், பொண்டாட்டியும் ஜோடியா காலங்காத்தால யார்கிட்டயும் எதுவும் சொல்லாம இப்படி ஊருக்கு போற மாதிரி கிளம்பி பையோட எங்க போறீங்க..??” என்று கேட்க, “நம்ம சென்னைக்கு போறோம்னு சொல்லி, இவர் வேண்டாம் போக கூடாதுன்னு சொல்லிட்டா என்ன பண்றது..??” என்று யோசித்து தயங்கிய வெற்றி “அது வந்து மாமா..” என்று இழுத்தான்.

“என்னடா எங்க போறீங்கன்னு தானே கேட்டேன்.. அதுக்கு ஏன் இப்படி களவாணி பையன் மாதிரி இப்படி திருத்திருன்னு முழிக்கிற..??” என்று காளீஸ்வரன் கேட்க, “விஷ்வா அண்ணாவோட பாட்டி ரெண்டு நாளைக்கு முன்னாடி இறந்துட்டாங்களாம் மாமா. இத பத்தி மேகா எங்ககிட்ட சொல்லவே இல்ல. நேத்து நான் சும்மா பேசலாம்னு அவளுக்கு ஃபோன் பண்ணேன். அப்பதான் இத பத்தி அவ என் கிட்ட சொன்னா. பாட்டி இறந்ததினால, விஷ்வா அண்ணா ஒரு மாதிரி உடைஞ்சு போய் பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்காராம். மேகா ரொம்ப வருத்தப்பட்டு பேசினா. சௌபர்ணிகா அக்காவும் கர்ப்பமா இருக்காங்க. அதனால அக்காவையும், தம்பியையும் எப்படி பாத்துக்குறதுன்னு தெரியாம அங்க தனியா கடந்து அவ முழிச்சிட்டு இருக்கா. அதான் நாங்க அவங்கள பார்க்க சென்னைக்கு போறோம்.” என்றாள் கலைச்செல்வி.

“அதான் உங்களுக்கு நேத்தே இந்த விஷயம் தெரிஞ்சிருக்குள்ள.. அப்புறம் ஏன் இதை பத்தி நீங்க என்கிட்ட சொல்லல..??” என்று காளீஸ்வரன் கொஞ்சம் கோபமாக கேட்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மீண்டும் திருதிருவன முழித்தான் வெற்றி. ஆனால் தைரியமாக “நீங்கதான் நம்ம வீட்டு விசேஷத்துக்கு உங்க தங்கச்சியையும் அவ வீட்டுக்காரரையும் மதிச்சு கூப்பிடவே இல்லையே… அப்புறம் துக்க காரியத்துக்கு மட்டும் நீங்க வருவீங்களா மாட்டிங்களோ..!! அதான் எதுக்கு சொல்லிக்கிட்டு தேவையில்லாத சங்கடம்ன்னு நாங்க உங்ககிட்ட இத பத்தி சொல்லல. நீங்க அவளையும் ‌ அவ குடும்பத்தையும் வேண்டாம்னு ஒதுக்கி வச்சிருக்கலாம் மாமா. அதுக்காக எங்களாலயும் அப்படி இருக்க முடியாது. எங்களுக்கு எல்லாரும் வேணும்.” என்றாள் கலைச்செல்வி.

“ஓஹோ… நீ அப்படி வரியா.. ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோ.. நான் ஒன்னும் அவங்கள ஒதுக்கி வைக்கல. அவங்க தான் என் பேச்சை மீறி, அவங்க இஷ்டத்துக்கு என்னென்னமோ பண்ணிட்டு எங்களுக்கு மரியாதை இல்லாத இடத்துல நாங்க இருக்க மாட்டோம்னு கோவிச்சுக்கிட்டு போனாங்க. எனக்கு அவங்க மேல ஆயிரம் கோபம் இருக்கலாம். அவங்களால என் பொண்ணு கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வந்துற கூடாதுன்னு, நான் அவங்கள அவ நிச்சயதார்த்தத்துக்கு கூப்பிடல. அதுக்காக அவங்க வீட்ல என்ன ஆனாலும் எப்படியோ போகட்டும்ன்னு எல்லாம் விட்டுட்டு என்னால இருக்க முடியாது. என்ன பண்றது… குழந்தையில இருந்து அவளை பெத்த புள்ளையாட்டம் என் நெஞ்சிலயும், தோள்ளையும் போட்டு பாசமா வளர்த்துட்டேன்.

இன்னைக்கு பெருசா வளந்துட்ட திமிரல, அவ இஷ்டத்துக்கு என்னென்னமோ பண்ணிட்டு திரியுறா.. அதுக்காக உள்ளுக்குள்ள எனக்கு அவ மேல இருக்கிற பாசம் இல்லாம போயிடுமா..?? செத்த பொறுங்க. வயல்ல தண்ணி பாய்ச்சிட்டு வந்துடறேன். நம்ம ஒன்னாவே சென்னைக்கு போலாம்.” என்ற காளீஸ்வரன் தனது வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு அவரது Excel super bikeஜ Start செய்து தோட்டத்திற்கு சென்று விட்டார்.

அவர் தன் கண்களில் இருந்து மறையும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்த கலை “நம்ம மாமா நல்லவரு தான் வெற்றி. ஆனா என்ன.. நல்ல குணம் 4 இருந்தா.. நாய் குணம் 2 இருக்கும்ன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி இவர் இன்னும் வெட்டி கௌரவம், ஊர் பேசும், உறவு பேசும்ன்னு கண்டத பத்தி யோசிச்சிட்டு வீராப்பா மீசைய முறுக்கீட்டு திரியுறாரு. அதையெல்லாம் விட்டுட்டு இவர் மத்தவங்கள பத்தியும் கொஞ்சம் யோசிச்சா நல்லா இருக்கும்.” என்று சொல்ல,

“அவரெல்லாம் அந்த காலத்து மனுஷன் டி. அப்படித்தான் இருப்பாரு. இத்தனை வயசுக்கு மேல நம்மளால அவர மாத்த முடியாது. அவரா பார்த்து மாறினா தான் உண்டு. என்ன பண்றது..?? இங்க பனி பெய்யுது. நீ வா.. நம்ப ரூம்ல wait பண்ணலாம். அவர் வரட்டும். அப்புறமா எல்லாரும் சேர்ந்து நம்ம ஜீப்ளையே சென்னைக்கு போய்க்கலாம்.” என்ற வெற்றி கலைச் செல்வியை அழைத்துக் கொண்டு மீண்டும் தனது ரூமிற்கே சென்று விட்டான்.
காலை 8 மணி அளவில் கண் விழித்தாள் மேகா.

அவள் தன் அருகில் படுத்திருந்த விஷ்வாவை பார்க்க, தூக்க மாத்திரையின் விளைவால் அவன் இன்னும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் தூக்கம் கலையாவண்ணம் அவன் தலை முடியை லேசாக வருடிய மேகா “ப்ளீஸ் விஷ்வா.. சீக்கிரம் எனக்காகவாவது நீ நார்மல் ஆகணும். I love you.” என்று தன் மனதிற்குள் அவன் முகத்தை பார்த்து சொல்லிவிட்டு, மென்மையாக அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

உடனே அவள் கண்கள் கலங்கிவிட, “இல்ல.. நான் அழ மாட்டேன். கலை சொன்ன மாதிரி, நான் நல்லா இருந்தா தான் என் வீட்ல இருக்குறவங்கள என்னால நல்லா பாத்துக்க முடியும். எங்கயோ இருந்து நீங்க எங்க எல்லாரையும் பார்த்துட்டு இருப்பீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் பாட்டி. உங்க பேரன் விஷ்வாவ நான் நல்லா பாத்துக்குவேன். நீங்க நிம்மதியா இருங்க. உங்க ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று நினைத்து தன்னைத்தானே தேற்றிக் கொண்டு refreshஆகி கீழே சென்றாள்.

ஹாலில் அவளுக்காக காத்திருந்த மகேஷ், “பாஸ் இப்ப எப்படி மா இருக்காரு..??” என்று கேட்க, “அப்படியே தான் அண்ணா இருக்கிறாரு. இப்ப வரைக்கும் அவர் என்கிட்ட ஒரு வார்த்தை பேசல. நேத்து நைட் ரொம்ப கஷ்டப்பட்டு எப்படியோ அவர சாப்பிட வச்சுட்டேன். Sleeping pills போட்டதுனால இன்னும் தூங்கிட்டு இருக்காரு. So அவரை disturb பண்ண வேண்டாம்னு நான் கீழ வந்துட்டேன்.” என்றாள் மேகா.

“ஓகே மா. நீ அவர் கூடவே இருந்து அவர பத்திரமா பாத்துக்கோ. அவர தனியா மட்டும் விட்றாத. இந்த மாதிரி டைம்ல அவர் mostly mentally stableஆ இருக்க மாட்டாரு.
நான் இப்பதான் அவரோட டாக்டர் கிட்ட பேசினேன். அவர் bossஐ ஹாஸ்பிடலுக்கு counsellingகாக கூட்டிட்டு வர சொல்றாரு. ஆனா அதெல்லாம் சரிப்பட்டு வரும்னு எனக்கு தோணல. என்ன பொறுத்த வரைக்கும் அவரோட best doctor நீதான். உன்னால தான் அவர் சரியானாரு. சோ நீ அவர் கூட இருந்தாலே போதும்னு, நான் அதெல்லாம் வேண்டாம் டாக்டர் கிட்ட சொல்லிட்டேன்.” என்றான் மகேஷ்.

“புரியுது அண்ணா. நான் இருக்கிற வரைக்கும் அவருக்கு எதுவும் ஆகாது. நான் ஆகவும் விடமாட்டேன்.” என்று மேகா உறுதியாக சொல்ல, “ஓகே மா. எனக்கு அடிக்கடி கால் பண்ணி இங்க என்ன நடக்குதுன்னு update பண்ணிட்டே இரு. நான் office போகணும். பாதியில நாங்க அமெரிக்காவில் இருந்து வந்ததுனால நிறைய pending work இருக்கு. உன்ன பாத்து பேசிட்டு போலாம்னு தான் நான் wait பண்ணேன். எனக்கு Late ஆகுது. நான் கிளம்புறேன் bye.” என்ற மகேஷ் தன் காரில் ஆபீஸுற்க்கு சென்று விட்டான். விஷ்வா வீட்டில் இருப்பதால் அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று தயாளனும், அரவிந்தும் வீட்டிலேயே இருந்தார்கள்.

தூங்கி எழுந்து கீழே வந்த ரிஷி “அண்ணி சாப்டீங்களா..??” என்று கேட்க, “இல்லடா. எனக்கு வரவர சாப்பிடவே பிடிக்க மாட்டேங்குது.” என்றாள் மேகா. “அப்படியெல்லாம் சொல்ல கூடாது. நீங்க போய் dining tableல உட்காருங்க. நான் போய் அக்காவையும், மாமாவையும் கூட்டிட்டு வரேன்.” என்ற ரிஷி சௌபர்ணிகாவின் அறைக்கு சென்று அவளையும் சேரணையும் சாப்பிட கீழே அழைத்து வந்தான்.

அவர்கள் அனைவரின் முகத்திலும் சோகம் அபிக்கொண்டிருக்க, தன் சோகம் மற்றவர்களை பாதிக்க கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அனைவரும் மற்றவர்களுக்காக பேருக்கு கொஞ்சமாக சாப்பிட்டார்கள்.
பாட்டியின் இறுதி அஞ்சலிக்கு மேகாவிற்காக சென்றிருந்த கௌத்தம் அதன் பிறகு கடந்த இரண்டு நாட்களாக அவள் ஆபிஸுற்க்கு வராததால் அவளைக் காண முடியாத சோகத்தில் இருந்தான்.

“இன்னைக்கு இங்க important client meeting இருக்கு. so அதுக்காகவாது அவ கண்டிப்பா ஆஃபீஸ் வந்தே ஆகணும். எப்படியும் இது சம்பந்தமா நான் அனுப்பின mailஐ அவ பார்த்திருப்பா.” என்று நினைத்து அவன் சீக்கிரமாகவே ஆபீசுக்கு சென்று அவளுக்காக காத்திருந்தான். 11 மணிக்கு மேலாகியும் மேகா அங்கே வராததால்,

“என்னால உன்ன பாக்காம இருக்க முடியல டி. நீ இங்க வரலைன்னா என்ன.. நீ எங்க இருந்தாலும் உனக்காக நான் அங்க வருவேன். அந்த விஷ்வா என்ன.. நேரா அந்த கடவுளே பூமிக்கு வந்தா கூட நான் உன்கிட்ட வர்றத யாராலையும் தடுக்க முடியாது.” என்று நினைத்து அவளைக் காண நேராக விஷ்வாவின் பங்களாவிற்க்கே சென்று விட்டான் கௌத்தம்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured