Home FREE NOVELSமூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 57

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 57

by Thenaruvi Tamil Novels
11 views

அத்தியாயம் 57

ரிசப்ஷன் முடிந்து அனைவரும் மண்டபத்திலிருந்து தனித்தனி கார்களில்  புறப்பட்டு சென்றார்கள். இந்து மற்றும் மானிக் இருந்த காரை அஸ்வின் ஓட்டிச் செல்ல, அவனுக்கு அருகில் அமர்ந்து இருந்த ஐஸ்வர்யா ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த காட்சிகளை ஆழ்ந்த சிந்தனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“இப்ப நாம எங்க போக போறோம் அஸ்வின்? ஆல்ரெடி நாங்க ஸ்டே பண்ணி இருந்த ஹோட்டல் ரூம்லயே இங்க இருந்து நாம கிளம்புற வரைக்கும் எல்லாரும்  தங்கிக்கலாமா? நீ எப்படியும் உங்க சித்தப்பா கூட தானே இருப்ப!” என்று இந்து கேட்க, “இல்ல இல்ல.. இவ்வளவு தூரம் உங்களுக்காக எல்லாமே அரேஞ்ச் பண்ணி கிராண்டா மேரேஜ் பண்ணி வச்சுட்டு மேரேஜ் முடிஞ்ச உடனே புதுசா கல்யாணம் ஆனவங்கள எப்படி ஹோட்டல் ரூம்ல தங்க வைக்க முடியும்?‌ நம்ம வீடு இங்க பக்கத்துல ஒன்னு இருக்கு. காலியா தான் இருக்கு. நாம இங்க இருக்கிற வரைக்கும் சித்தப்பா உங்க ரெண்டு பேரையும் அங்க ஸ்டே பண்ணிக்க சொன்னாரு. ஆல்ரெடி அங்க எல்லாமே ரெடியா தான் இருக்கு. உங்களை நான் அங்க டிராப் பண்ணிட்டு நான் அப்படியே தோட்டத்து வீட்டுக்கு போயிடுவேன்.” என்று கார் ஓட்டிக் கொண்டு இருந்த அஸ்வின் சொன்னான்.
 
உடனே இந்து அவசரமாக “அப்ப ஐஷு? அவ எங்க போவா? வித்யா விவேக் ரெண்டு பேரும் எப்ப பாத்தாலும் ஒன்னாவே சுத்திகிட்டு இருக்காங்க. நாங்க ரெண்டு பேரும் தனி வீட்டுக்கு கிளம்பி போயிட்டா ஐசு மட்டும் தனிய இருப்பாளே!” என்று கேட்க, அதுவரை சைலன்டாக இருந்த ஐஸ்வர்யா அவளை திரும்பி பார்த்தாள்.

அஸ்வின் ஓரக் கண்ணால் ஐஸ்வர்யாவை பார்க்க, அவனை கண்டு கொள்ளாத ஐஸ்வர்யா “இது என் ஹஸ்பண்ட்டோட சொந்த ஊரு. அஸ்வினுக்கு சொந்தமா இங்க பெருசா எந்த பிராப்பர்ட்டையும் இல்லனாலும், எங்களோட ரிலேட்டிவ்ஸ் எல்லாரும் இன்னும் இங்க தான் இருக்காங்க! சோ அஸ்வின் எங்க இருக்கானோ நானும் அங்க தான் இருப்பேன். இனிமே யாருக்காகவும் எதுக்காகவும் என் ஹஸ்பண்டை விட்டு பிரிஞ்சு இருக்கவே கூடாதுன்னு நான் டிசைட் பண்ணிட்டேன்.” என்று உறுதியாக சொன்னாள்.

தங்களுக்கு திருமணம் ஆனதில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பு வரையிலும் கூட ஐஸ்வர்யா தங்களது திருமணத்தை நினைத்து இவ்வளவு கான்ஃபிடண்டாக இருக்கவில்லை என்பதால் அஸ்வின் உட்பட அங்கே இருந்த அனைவரும் அவளை ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்தார்கள்.  ஐஸ்வர்யா அவனுடன் வீட்டிற்கு சென்றால் கண்டிப்பாக தேவையில்லாத பிரச்சினைகள் வரும் என்று அஸ்வின் அவளிடம் சொல்ல நினைத்தான்.

அதே சமயம் என்ன இருந்தாலும் ஐஸ்வர்யா சொல்வதைப் போல அவள் அவனுடைய மனைவி. எப்போதும் அவளை மற்றவர்களுக்காக அவனால் ஒதுக்கி வைத்துக் கொண்டே இருக்க முடியாது. அதே சமயம் எந்த பிரச்சனை வந்தாலும் அது அனைத்தையும் என்றேனும் ஒரு நாள் தனியாக சமாளித்து ஆக வேண்டும்! அதனால் அந்த நாள் இந்த நாளாக இருந்து விட்டு போகட்டும் என நினைத்த அஸ்வின் சைலண்டாக இருந்தான். 

குறுகுறுவென்று அஸ்வினையே பார்த்துக் கொண்டு இருந்த ஐஸ்வர்யா “என்ன இவன் நான் இவ்ளோ தூரம் பேசி இருக்கேன்.. எதுவுமே பேசாம சைலன்ட்டா இருக்கான்? இவன் கிட்ட இன்னைக்கு நிறைய சேஞ்சஸ் தெரியுது. நான் என்னோட ஆட்டிடியூடை சேஞ்ச் பண்ணிட்டா இவனும் இப்படி சேஞ்ச் ஆகிடுவான்னு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா, நான் எப்பவோ இந்த மாதிரி காண்பிடென்ட்டா பேசி இருப்பேனே! எது எப்படியோ அஸ்வின் நமக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான்.

போக போக நம்ம மேல எந்த தப்பும் இல்லைன்னு அவனே புரிஞ்சுக்குவான். ஆல்ரெடி நாங்க ரெண்டு பேரும் முழுசா ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா மாறிட்டோம். அஸ்வினுக்கு மட்டும் முன்னாடி என் மேல இருந்த நம்பிக்கை வந்துருச்சுன்னா போதும். எங்க ரிலேஷன்ஷிப் ரொம்ப ஸ்ட்ராங் ஆயிடும். அப்புறம் யார் நினைச்சாலும் எங்களை பிரிக்க முடியாது.” என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்.

நேராக இந்து மானிக் இருவரையும் அவர்களுக்காக என்று ஒதுக்கப்பட்ட வீட்டில் கொண்டு சென்று இறக்கி விட்ட அஸ்வின் ஐஸ்வர்யாவுடன் நேராக தங்களது குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்றான். அவளை அஸ்வினுடன் பார்த்ததால் வழக்கம்போல அங்கே இருந்த அனைவரும் எரிச்சலடைய தொடங்கினார்கள்.

அனைவரையும் முந்திக் கொண்டு வீல் சேரில் முன்னே சென்ற அக்ஷயா “நீ பண்றது எதுவும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல அஸ்வின். இவளை இப்ப எதுக்காக இங்க கூட்டிட்டு வந்த? எனக்கு இவளை பாத்தாலே நம்ம மம்மியும் டாடியும் இறந்து போனது தான் ஞாபகம் வருது. அவங்களை கொலை பண்ணவா இவ! எப்படி உன்னால இவ கூட க்ளோசா இருக்க முடியுது?   இவளுக்காக நம்ம பேரன்ட்ஸே இம்பார்டன்ட் இல்லைன்னு நீ டிசைட் பண்ணிட்டியா?” என்று கோபமாக கேட்டாள்.

அஸ்வின் பதில் பேச முடியாமல் அமைதியாக இருக்க, அக்ஷயாவின் அருகில் சென்ற திலகா “இருக்கட்டும் பரவாயில்லை விடுமா! பாவம் உனக்கு உடம்பு சரியில்ல. எதுக்காக இதையெல்லாம் இவ ஒரு ஆளுன்னு இவளை பத்தி யோசிச்சு டென்ஷன் ஆகி உன் உடம்பை கெடுத்துக்குற? அவ இங்க வந்ததும் நல்லதுக்கு தான். இப்பவே இன்னைக்கு இவள வச்சு செஞ்சு முடிக்க வேண்டிய முக்கியமான வேலை ஒன்னு இருக்கு. அதை முதல்ல பண்ணனும். அப்ப தான் இவ அடங்குவா.” என்றாள். திலகாவின் திட்டம் என்ன?

முத்தங்கள் தொடரும் 💋

You may also like

Leave a Comment

About Me

Featured