Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 167

மூர்கனின் காதலி CH 167

by Thenaruvi Tamil Novels
20 views

அத்தியாயம் 167

காளீஸ்வரனின் பெரிய வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. சொந்த பந்தங்கள் அனைவரும் அங்கே கூடி இருக்க, காளீஸ்வரன், மணிகண்டன் என அனைவரும் பம்பரமாக அங்கும் இங்கும் சுழண்டு ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

நிலா அந்த வீட்டின் முற்றத்தில் உள்ள ஒரு தூணில் சாய்ந்து சோகமாக அமர்ந்திருந்தாள். அவளை அப்படி பார்க்க பிடிக்காமல் அவள் அருகில் சென்று அமர்ந்த முத்து, “ஏண்டா நிலா இப்படி இருக்க…??” என்று கேட்க, “ஏன் உங்களுக்கு தெரியாதா சித்தப்பா..?? வேணும்னே ஏன் அப்படி இருக்க இப்படி இருக்கன்னு நக்கலா கேக்கறீங்களா..?? நான் செம கோவத்துல இருக்கேன். என்கிட்ட யாரும் எதுவும் பேசாதீங்க.” என்று கோபமாக சொன்ன வெண்ணிலா தன் முகத்தை திருப்பி கொண்டாள்.

அதனால் சோகமான முத்து “உன் வேதனை என்னன்னு எனக்கு நல்லா புரியுது வெண்ணிலா. ஆனா காளி அண்ணன மீறி என்னால எதுவும் பண்ண முடியல. என் கல்யாணத்தையே நான் எவ்ளோ கஷ்டப்பட்டு நிறுத்தினேன்னு உனக்கே தெரியும்ல்ல.. இப்படி ஆறுதலா உன்கிட்ட நாலு வார்த்தை பேசுறத தவிர என்னால வேற எதுவும் செய்ய முடியலைமா. I am sorry.” என்று உடைந்த குரலில் சொல்ல,

“நீங்க இப்ப நாலு வார்த்தை என்கிட்ட ஆறுதலா பேசிட்டா மட்டும் என்ன ஆகிட போகுது சித்தப்பா..?? அத ஈஸி wordsஐ வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது..?? நீங்க எல்லாம் வக்கீல்ன்னு வெளிய போய் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. உங்க சொந்த வீட்டுக்குள்ளயே உங்க அண்ணன் அவர் பொண்ணுக்கு பிடிக்காத கல்யாணத்தை force பண்ணி நடத்தி வைக்க பாக்குறாரே.. இத நீங்க நியாயமா தட்டி கேட்டு இந்நேரம் நிறுத்திருக்கணும்ல..?? அத விட்டுட்டு இங்க வந்து சும்மா  பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க..!! ப்ளீஸ் சித்தப்பா.. என்கிட்ட எதுவும் பேசாதீங்க.. அப்புறம் நான் இருக்கிற கோவத்துல ஏதாவது சொல்லிட போறேன். எனக்கு வரவர யாரை பார்த்தாலும் அப்படியே irritate ஆகுது.” என்று கோபமாக சொன்னாள் வெண்ணிலா.

அவளுக்கு ஆறுதல் சொல்ல போய் வாயை கொடுத்து அசிங்கப்பட்டது தான் மிச்சம் என்று நினைத்த முத்து இறுதியாக ஒரு முறை அவளுக்காக தன் அண்ணனிடம் பேசிப் பார்க்கலாம் என்று நினைத்து காளீஸ்வரனை தேடிக் கொண்டு வெளியே சென்றான்.

தயாராகி தன் கணவன் வெற்றிச்செல்வன் உடன் வந்த கலைச்செல்வி இன்னும் கிளம்பாமல் வெண்ணிலா கண்ணீருடன் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு “எனக்கு தினம் தினம் இவள இப்படி பாக்கவே கஷ்டமா இருக்கு வெற்றி. நானும் மேகாவும், விஷ்வா அண்ணாவும் ஏதாவது பண்ணுவாங்கன்னு பார்க்கிறேன். ஆனா அவங்களும் எனக்கு என்னன்னு இருக்காங்க. இதோ இன்னைக்கு கோவில்ல இவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போகுது.‌ அதுக்கு கூட காளீஸ்வரன் மாமா ‌ மேகா வீட்ல யாரையும் கூப்பிடல. இப்படியே போனா இந்த நிலா புள்ளையோட வாழ்க்கை என்னாகுமோ தெரியல!” என்றாள்.

“இத பத்தி நான் நேத்து கூட மேகாகிட்ட பேசினேன். விஷ்வா சார் அமெரிக்கா போய் இருக்காராம். அவர் வரட்டும். ஏதாவது பண்ணலாம்னு சொல்றா அவ. விடு, மாப்பிள்ளையோட சொந்தக்காரங்க யாரோ செத்துட்டதனால ‌ அவங்களுக்கு 30 குமட்டதுக்கு அப்புறம் தான் எப்படியும் விசேஷம் வைப்பாங்க. அதுக்குள்ள விஷ்வா வந்துருவாரு.

அவர்கிட்ட பேசிட்டு ஏதாவது பண்ணலாம். நீ போய் அவளை கிளம்ப சொல்லு. இவ இப்படியே இருந்தானா, நாளை பின்ன காலேஜுக்கு கூட இவள மாமா அனுப்ப மாட்டாரு.” என்றான் வெற்றி. அதனால் வழக்கம்போல் நிலாவை பேசி சமாதானப்படுத்திய கலைச்செல்வி அவளை நிச்சயதார்த்தத்திற்கு தயாராகச் சொன்னாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு, அனைவரும் ஒரு முருகன் கோவிலில் கூடி இருந்தார்கள். அங்கே பட்டு வேட்டி சட்டையில் அஸ்வின் அழகாக தயாராகி தனது குடும்பத்தினர்கள் மற்றும் சொந்த பந்தங்களுடன் வந்திருக்க, அவர்களைப் பார்த்து கோபத்தில் முறைத்து கொண்டிருந்தாள் நிலா.

அதை கவனித்த காளீஸ்வரன் மெல்ல அவள் அருகில் சென்று “இங்க பாருடி.. ஏதாவது பண்ணி இந்த நிச்சயதார்த்தத்தை கெடுத்து விட்டுவிடலாம்ன்னு மட்டும் நினைக்காத. உன் கல்யாணத்துல தான் உங்கப்பன் காளீஸ்வரனோட கௌரவமே அடங்கி இருக்கு. ஒழுங்கா இருந்துக்க. இல்லனா அப்புறம், என்ன உயிரோடவே உன்னால பாக்க முடியாது. மனசுல வச்சுக்கோ.” என்று சொல்ல,

“அப்படியா… சரி செத்துருங்க. எப்போ நீங்க என் மனச கொன்னீங்களோ அப்பவே நான் செத்துட்டேன். மறுபடியும் மறுபடியும் என்னை கொடுமைப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா கொல்லத்தானே இப்படி எல்லாம் பேசி என்ன blackmail பண்றீங்க..?? பரவால்ல, எனக்கு நல்ல அப்பாவா இல்லாததுனால நீங்களும் செத்துருங்க. உங்களுக்கு புடிச்ச பொண்ணா இருக்க முடியாததுனால நானும் செத்துடுறன். கணக்கு சரியா போயிடும்.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு தன் அப்பாவை பார்த்து விரக்தி புன்னகை சிந்தினாள் வெண்ணிலா.

அதனால் கோபத்தில் காளீஸ்வரனின் முகம் சிவந்து விட, “ச்சீ.. உன்னை எல்லாம் எதுக்கு பெத்து வளர்த்தேன்னே தெரியல.. ஒரே பொண்ணுன்னு உன்ன இத்தனை வருஷமா பாசமா வளத்ததுக்கு.. பெத்த அப்பனயே செத்துப்போன்னு சொல்றியா..?? யார் என்ன சொன்னாலும் சரி. இந்த கல்யாணம் நடக்க தாண்டி போகுது. இத நடத்திக் காட்டல, என் பேரு காலேஸ்வரன் இல்லடி.” என்று சொல்லிவிட்டு சென்றுவிட, “அப்ப வேற நல்ல பேரா யோசிச்சுக்கோங்க அப்பா. இங்க எல்லாரும் சேர்ந்து என்னையும், என் feelingsஐயும் உயிரோட கொன்னுட்டீங்களே..!! அத பத்தி எல்லாம் யாருக்கும் கவலை இல்லல்ல..!! நான் மட்டும் எதுக்கு மத்த எல்லார பத்தியும் கவலைப்படணும்..??” என்று நினைத்து கண் கலங்கினாள் நிலா.

விஷ்வாவுடன் பாதுகாப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்த அரவிந்தும் அஸ்வின், வெண்ணிலா நிச்சயதார்த்தத்தை பற்றி கேள்விப்பட்டு மனம் உடைந்தான். அவனை கவனித்துக் கொண்டிருந்த விஷ்வா ‌ ஆறுதலாக அவன் முதுகில் தட்டி, “நான் இப்ப தன்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மேகாகிட்ட பேசினேன்.‌ இன்னும் ஒரு மாசம் கழிச்சுத்தான் அவளுக்கு கல்யாணம் பண்ணுவாங்களாம். அதுக்குள்ள நம்ம இந்தியா போயிடலாம். மறுபடியும் மேகாவோட அண்ணன்கிட்ட முறைப்படி பேசி பார்க்கலாம். மீசை ஓவரா பேசினா, போயா உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு அவள வீடு பூந்து தூக்கிட்டு வந்துரலாம்.

அந்த ஆளா நம்பளாலான்னு ஒரு கை பார்த்துடலாம். உனக்கு நான் இருக்கேன்.” என்று சொல்ல, “தேங்க்ஸ் பாஸ்.” என்று கலங்கிய கண்களுடன் சொன்ன அரவிந்த் விஷ்வாவை அணைத்துக் கொண்டான்.
இதற்கிடையில் அங்கே கோவிலில் அஸ்வினுக்கும், வெண்ணிலாவிற்கும் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. அனைவரும் எதிர்பார்த்து இருந்ததைப் போலவே திருமண தேதியை கிட்டத்தட்ட 42 நாட்களுக்கு பிறகு தான் குறித்திருந்தார்கள்.

அதனால் அதைச் சொல்லி  வெற்றிச்செல்வனும், கலைச்செல்வியும் வெண்ணிலாவை ஆறுதல் படுத்தினார்கள்.

அவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு கலைச்செல்விக்கு கால் செய்த மேகா வெண்ணிலாவிடம் phoneஐ கொடுக்க சொல்லி, “எப்போ எங்க அண்ணே உன் functionக்கு எங்கள கூப்பிடாம அவர் இஷ்டத்துக்கு தனியா எல்லாத்தையும் நடத்துற அளவுக்கு போயிட்டாரோ.. அப்பவே அவர் எங்க உறவு அந்துருச்சுன்னு முடிவு பண்ணிட்டாருனு அர்த்தம்.‌ இதுக்கு மேல அவரோட மரியாதை, குடும்ப கௌரவம் அப்படி இப்படின்னு எல்லாம் யோசிச்சு நாம பொறுமையா இருக்க வேண்டிய அவசியமே இல்ல நிலா.

அவர் மட்டும் மத்தவங்கள பத்தி யோசிக்கிறாரா..?? எங்க அண்ணன் எப்போ இப்படி selfishஆ மாறினாருன்னே எனக்கு தெரியல. எனக்கு அவர் பண்றது எல்லாம் சுத்தமா பிடிக்கல. விஷ்வா மட்டும் இந்தியாவுக்கு வரட்டும். அப்புறம் இருக்கு அவருக்கு. நான் வீட்டுக்கு வந்து அவர்கிட்ட சண்டை போட்டு உன்ன இங்க சென்னைக்கு கூட்டிட்டு வந்து உனக்கும், அரவிந்த் அண்ணாவுக்கும் மேரேஜ் பண்ணி வைக்கிறேன். யார் என்ன பண்ணாலும் நம்ம பாத்துக்கலாம். நீ எதுக்கும் பயப்படாத சரியா..??” என்று கேட்டாள்.

தன் கண்ணீரை துடைத்துவிட்டு “சரிங்க அக்கா. உங்களையும் மாமாவையும் நம்பித்தான் நான் உயிரோடவே இருக்கேன். இல்லனா இங்க உங்க அண்ணன் என்ன shift போட்டு பண்ற tortureக்கு எல்லாம் எப்பவோ நான் செத்து போயிருப்பேன்.” என்று நிலா சொல்ல, “ஏய்.. அடிச்சன்னா பாரு.. என்ன பேச்சு பேசிட்டு இருக்க நீ..?? உனக்காக தானே நாங்க எல்லாரும் இவ்ளோ பண்ணிட்டு இருக்கோம்..!! நீ என்னன்னா லூசுத்தனமா சாகிறத பத்தி பேசிட்டு இருக்க! என்ன நடந்தாலும் முதல்ல அதை தைரியமா face பண்ண கத்துக்கோ நிலா. நீ என்னடி தப்பு பண்ண.. suicide பண்ணி சாகறதுக்கு..?? நீயும் அரவிந்த் அண்ணாவும் சேர்ந்து சந்தோஷமா வாழனும். அதான் எங்க ஆசை. அதுக்கு என்ன பண்றதுன்னு மட்டும் யோசி. ஓகேவா..??” என்று கேட்டாள் மேகா. சரி என்றாள் நிலா.

சில நிமிடங்களுக்கு பிறகு..

அப்போது இரவு சரியாக நேரம் 10 மணியாகி இருக்க, “இந்நேரம் விஷ்வா கிளம்பி ஆபீஸ்க்கு போயிருப்பானான்னு தெரியலையே.. ச்சே.. கொஞ்சம் முன்னாடியே கால் பண்ணி அவன் கிட்ட பேசி இருக்கலாம்.” என்று நினைத்த மேகா அவனை தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் அவனுக்கு “ஹாய்..!!” என்று மெசேஜ் அனுப்பிவிட்டு காத்திருந்தாள்.‌ பத்து நிமிடங்கள் கடந்திருந்தும், அவன் அந்த மெசேஜை பார்க்கவில்லை. அதனால் தூங்கலாம் என்று நினைத்து அவள் படுக்க போக, அவளது அறையின் காலிங் பெல் அடிக்கப்பட்டது.

“இந்த நேரத்துல யார் வந்திருக்காங்க..??” என்று யோசித்தபடி அவள் சென்று கதவை திறக்க, வெளியில் பதட்டமாக நின்று கொண்டிருந்த servant ஒருவன் “மேடம் திடீர்னு மீனாள் மேடமோட health condition ரொம்ப serious ஆயிடுச்சு. அவங்க மூச்சு விட முடியாம சிரமப்பட்டுட்டு இருக்காங்க. அவங்கள பாத்துக்கிறதுக்கு வந்திருந்த நர்ஸ் ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி ambulance வர சொல்லிட்டாங்க. நீங்க கொஞ்சம் சீக்கிரம் கீழ வந்து என்னன்னு பாருங்க.” என்றான். அதனால் கலங்கிய கண்களுடன் அந்த servant உடன் கீழே சென்றாள் மேகா

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured