அத்தியாயம் 165
மறுநாள் காலை வழக்கம்போல் கிளம்பி விஷ்வாவும், மேகாவும் ஆபீஸுற்க்கு சென்றார்கள். ஒரு Government Collegeல் professorஆக வேலை செய்து கொண்டிருந்த சேரன் தன் வேலையை சௌபர்ணிகாவிற்காக resign செய்துவிட்டு அவளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவளுடன் அவளது V2 fashion houseக்கு சென்றான்.
என்னதான் தன்னிடம் இருந்த அனைத்தையும் சௌபர்ணிக்கா அவனுக்கு எழுதி கொடுத்து இருந்தாலும், இப்போதும் அவள் தான் அந்த fashion houseன் C.E.Oஆக இருக்கிறாள். அதனால் தனது ஆபிஸ் தொடர்பான அனைத்து முக்கியமான வேலைகளையும் வழக்கம்போல் அவளே கவனித்துக்கொள்ள, அவளுக்கு துணையாக 24 மணி நேரமும் அவளுடனே இருந்தான் சேரன்.
அவன் அப்படி அன்பை அவள் மீது அருவியை போல கொட்டி தீர்த்ததால், “பரவால்ல.. நான் நினைச்ச அளவுக்கு என் சேரன் ஒன்னும் மோசம் இல்ல. அவனால மறுபடியும் என் life முன்னாடி மாதிரி happy ஆயிடுச்சு.” என்று நினைத்து சந்தோஷப்பட்ட சௌபர்ணிகா முழு மனதாக அவனை நம்ப தொடங்கி இருந்தாள்.
MV Techன் main branchல் உள்ள தனது roomல் இருந்த விஷ்வா “எப்பயும் break time ஆனவுடனே அவ கிளம்பி இங்க வந்துருவாளே.. இன்னைக்கு என்ன இவ்வளவு நேரம் ஆகியும் அவளை ஆளையே காணோம்..??” என்று மேகாவை பற்றி யோசித்து கொண்டு இருந்தவன், intercom மூலமாக அவளுக்கு கால் செய்தான்.
அவன் இரண்டு மூன்று முறை கால் செய்தும் அவள் எடுக்கவில்லை. கடுப்பான விஷ்வா “இந்த break timeல என் callஐ கூட எடுக்காம அப்படி என்ன இவ busyஆ இருக்கா..??” என்று நினைத்து அவளது mobile phoneற்க்கு கால் செய்தான். அதையும் அவள் எடுக்கவில்லை. அதனால் அவன் பொறுமை அதன் எல்லையை கடந்து கொண்டிருக்க, தனது ரூமில் இருந்த மற்றொரு சிறிய ரூமை அவனது fingerprintஐ பயன்படுத்தி திறந்து உள்ளே சென்ற விஷ்வா அங்கே இருந்த கம்ப்யூட்டர் மூலமாக மேகாவின் அறையில் உள்ள CCTV cameraவினா live footageஐ play செய்து பார்த்தான்.
மேகா அவள் ரூமில் இல்லை. அவளது mobile phone கூட கேட்பாரற்று அவள் tableலில் கிடந்தது. இப்போது அவள் ஏன் தனது அழைப்பை ஏற்கவில்லை என்று அவனுக்கு புரிந்தது. ஆனால் “நம்மளையும் பார்க்க வரல. அவ ரூம்லயும் இல்ல. அப்போ, இந்த டைம்ல வேற எங்க போயிருப்பா..??” என்று யோசித்த விஷ்வா canteen, cafeteria என்று எங்கேயாவது அவள் இருக்கிறாளா என்று தொடர்ந்து CCTV camera live footageல் அவளை தேடினான். அவன் தேடிய எந்த இடத்திலும் அவள் இல்லை.
“இவ Regularஆ போற எல்லா placeலயும் check பண்ணி பாத்துட்டேன். எங்கயுமே ஆள காணோமே! என்கிட்ட கூட சொல்லாம எங்க போய் தொலைஞ்சா இவ..??” என்று யோசித்துக் கொண்டிருந்த விஷ்வாவிற்கு சட்டென அவனைப் பார்த்து எப்போதும் நக்கலாக சிரிக்கும் கௌத்தமின் முகம் ஞாபகம் வந்தது.
அதனால் உடனே அவனது முகம் கொடூரமாக மாறிவிட, உடனே கௌத்தமின் ரூமில் என்ன நடக்கிறது என்று CCTV camera வழியாக பார்த்தான் விஷ்வா.
அவன் நினைத்ததை போலவே மேகா கௌத்தமுடன் அங்கே தான் இருந்தாள். அவள் தனது laptopல் seriousஆக எதையோ பார்த்துக் கொண்டு இருக்க, தனது ரூமில் உள்ள mini coffee makerல் தனக்கும் அவளுக்கும் coffee போட்டு எடுத்துக்கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான் கௌத்தம். அவள் முன்னே அவன் ஆவி பறக்க தன் கையில் இருந்த coffee cupஐ நீட்ட, சிரித்த முகமாக அதை வாங்கிய மேகா “தேங்க்ஸ் கௌத்தம். Morningல இருந்து computer screenஐ உத்து உத்து பார்த்து தலை வலிக்குதே ஒரு coffee குடிச்சா நல்லா இருக்கும்னு இப்பதான் நினைச்சேன். கரெக்டா நீங்க coffee கொண்டு வந்துட்டீங்க. இது நீங்களே போட்டதா..??” என்று கேட்டுவிட்டு அந்த coffeeஐ ரசித்து ருசித்து குடிக்க தொடங்கினாள்.
“ஆமா, நான் அடிக்கடி coffee குடிப்பேன். சோ எப்பவும் என் ஆஃபீஸ் ரூம்ல ஒரு coffee maker இருக்கும். எனக்கு தோணும்போது எல்லாம் நானே போட்டு குடிச்சுக்குவேன்.” என்று கௌத்தம் சொல்ல, “ஒஒ.. ஓகே ஓகே. நீங்க போட்ட காபி சூப்பர். நான் உங்க அளவுக்கு எல்லாம் coffee குடிக்க மாட்டேன். பட் விஷ்வாவும் உங்கள மாதிரி தான். என்ன நீங்க coffee lover. அவரு tea lover. பசிக்கிற டைம்ல கூட ஒரு டீ குடிச்சா நல்லா இருக்கும்னு உடனே டீ வாங்கி குடிப்பாரு.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் மேகா.
“நான் இங்க உன் கூட இருக்கும் போது, நீ எதுக்குடி தேவையில்லாம அவன பத்தி யோசிக்கிற..?? நீ வேணா பாரு மேகா. இன்னும் கொஞ்ச நாள்ல விஷ்வா உனக்கு வேணுமா வேண்டாமான்னு நீயே யோசிக்கிற மாதிரி நான் உன்னை மாத்துவேன். என் லவ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. You will be mine. சீக்கிரமே..!!” என்று நினைத்து அவளைப் பார்த்து காதலுடன் புன்னகைத்த கௌத்தம் தான் போட்ட coffeeஐ அவள் நன்றாக இருக்கிறது என்று சொன்ன சந்தோஷத்தில் இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
Coffeeஐ குடித்து முடித்துவிட்டு மேகா மீண்டும் laptopஐ பார்த்து வேலை செய்ய தொடங்கிவிட, வேண்டுமென்றே அவள் அருகில் சென்று நெருங்கி அமர்ந்த கௌத்தம் அவள் செய்து கொண்டு இருந்த வேலையில் தனக்கு ஏதோ சந்தேகம் இருக்கிறது என்று சொல்லி அதைப்பற்றி கேட்கும் சாக்கில் அவள் தோள்களில் உரசி கொண்டு இருந்தான். வேலையில் மும்மரமாக இருந்த மேகா அவன் செயலை பெரிதாக கவனிக்கவில்லை.
ஆனால் கேமராவில் அந்த காட்சியை பார்க்க பார்க்க விஷ்வாவிற்கு கோபம் பற்றி கொண்டு வந்தது. விட்டால் அப்படியே அவன் முன்னே இருந்த computer screen வழியாக உள்ளே குதித்து அவனது ரூமிற்கு சென்று அவன் கை கால்களை அடித்து உடைக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் மேகாவின் முன்னே அவனால் அப்படி செய்துவிட முடியாதே! அவள் என்ன… ஏது? என்று கேள்வி கேட்பாள்.
அதனால் சிரமப்பட்டு தன் பற்களைக் கடித்துக் கொண்டு தன்னை தானே சமாதானப்படுத்திய விஷ்வா, “நான் நினைச்ச மாதிரியே நடந்துருச்சு. இவன் intentionஏ சரியில்ல. சும்மா ஒரு coffeeஐ போட்டு கொடுத்து இவன் ஈஸியா என் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண பார்க்கிறான்! அது தெரியாம அந்த பைத்தியக்காரி அவ பாட்டுக்கு laptopஐ பாத்துட்டு இருக்கா. ஆஆஆ.. எனக்கு வர்ற கோபத்துக்கு.. அப்படியே அவன் முடிய கொத்தா புடிச்சு அவன இழுத்துட்டு போய் என் office building மேல இருந்து அவனை கீழே தள்ளிவிட்டு கொன்னுடனும்.” என்று நினைத்தவன் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்று தனது intercom மூலம் கௌத்தமிற்க்கு கால் செய்தான்.
“யாருடா அவன்.. கரெக்டா சிவ பூஜையில கரடி மாதிரி!” என்று நினைத்து சலித்துக் கொண்ட கௌத்தம் எழுந்து சென்று ரிஷிவரை காதில் வைத்து “ஹலோ..!!” என்று சொல்ல, கடுமையான குரலில் “come to my cabin.” என்ற விஷ்வா உடனே அந்த அழைப்பை துண்டித்து விட்டான். “இப்போ இவன் எதுக்கு கால் பண்ணி என்ன அவன் cabinக்கு கோபமா வர சொல்றான்..??” என்று நினைத்து குழம்பிய கௌத்தம், “ம்ம்ம்.. மேகா நீங்க இங்கயே work பண்ணிட்டீங்க. விஷ்வா சார் என்ன அவர் கேபினுக்கு வர சொல்றாரு. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.” என்றான்.
“ம்ம்ம்.. நானும் ஆபீஸ் வந்ததில இருந்து அவரை போய் பார்க்கவே இல்ல இருங்க.. நானும் வரேன்.” என்ற மேகா அவள் type செய்து வைத்திருந்த அனைத்தையும் save செய்துவிட்டு உடனே தன் laptopஐ shutdown செய்தாள்.
“ச்சே.. ஆபீஸ்ல இருக்கும்போதாவது உங்க ரெண்டு பேரையும் நான் பிரிச்சு வைக்கலாம்னு என்னென்னமோ பண்ணி try பண்ணா, அது கூட முடிய மாட்டேங்குது. ஒரு நிமிஷம் gap கிடைச்சாலும், உடனே புருஷனும் பொண்டாட்டியும் மீட் பண்ணி பேசுகிறது… முதல்ல ஏதாவது பண்ணி இத stop பண்ணனும்.” என்று யோசித்த கௌத்தம்,
“என்னது புருஷன் பொண்டாட்டியா..!! கருமம்..ச்சீ.. தெரியாம நம்மளே நம்ம வாயால மேகாவ அவன் பொண்டாட்டின்னு சொல்லிட்டோமே! இனிமே இப்படி எல்லாம் சொல்லக்கூடாது. மேகா நமக்கு மட்டும்தான். அவ விஷ்வா பொண்டாட்டி இல்ல.” என்று நினைத்தவன், வேறு வழியில்லாமல் மேகாவை அழைத்துக் கொண்டு விஷ்வாவின் ரூமிற்கு சென்றான்.
அவர்கள் இருவரும் அவனது ரூமிற்கு செல்ல, கண்டிப்பாக மேகா அவனுடன் வருவாள் என்று நினைத்து எதிர்பார்த்து இருந்த விஷ்வா அவர்களைப் பார்த்தவுடன் வில்லத்தனமாக புன்னகைத்தான்.
அதை உணராத மேகா “Hii..!!” என்று அவனைப் பார்த்து சிரித்த முகமாக சொல்ல, பதிலுக்கு உடனே தனது facial expressionsகளை மாத்தி தானும் புன்னகைத்த விஷ்வா “break time முடிய இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு…??” என்று கேட்டான். தன் watchஐ பார்த்த மேகா “இன்னும் ஒரு 5 minutes இருக்கு.” என்று சொல்ல, அதனால் உடனே திரும்பி கௌத்தமை பார்த்த விஷ்வா “sorry.. நான் உங்கள break timeல கூப்பிட்டு disturb பண்ணிட்டேன். நான் கொஞ்சம் என் wife கிட்ட personalஆ பேசணும். If you don’t mind, நீங்க போயிட்டு அப்புறமா வரீங்களா..??” என்று கேட்டான்.
“என்னடா நக்கலா.. வேணும்னே பண்றியா..?? பண்ணு.. பண்ணு.. என்ன இருந்தாலும் இது உன் office. நீதான் எனக்கு இங்க பாஸ். அப்புறம் நீ இவ்ளோ கூட பண்ணலைன்னா எப்படி…?? Opponent strongஆ இருந்து tough குடுத்தா தான் game நல்லா இருக்கும்.” என்று நினைத்து கௌத்தம், “ஓகே சார். நீங்க free ஆகிட்டு again கால் பண்ணுங்க. நான் அப்புறமா வரேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.
தனது ரூமின் doorஐ விஷ்வா லாக் செய்ய, தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாக போட்ட மேகா, “சாருக்கு அப்படி என்கிட்ட என்ன personalஆ பேசணும்..??” என்று கிண்டலாகக் கேட்க, “வா சொல்றேன்.” என்ற விஷ்வா அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் தனது tableல் அமர வைத்து அவள் மூக்கோடு தன் மூக்கை உரசிபடி “இப்ப சொல்லவா..??” என்று கேட்டான்.
அவள் இதயம் படபடவென துடிக்க, “என்ன சொல்ல போற நீ..??” என்று அவள் கேட்க, “என்ன வேணாலும் சொல்லுவேன்.” என்று தன் குரலை தாழ்த்தி ஹஸ்கி வாய்ஸில் சொன்ன விஷ்வா கௌத்தமின் மீது கொண்ட பொறாமையால் உள்ளுக்குள் இருந்து பொங்கி வந்த அவனது காதலை தனது இதழ்களை அவளது செவ்விதழ்களின் மீது பொருத்தி ஆழமாக சொல்லத் தொடங்கினான்.
“அவன் உன்கிட்ட ஒட்டிக்கிட்டு உரசிக்கிட்டு வந்து உட்கார்ந்து பேசிட்டு இருந்தா, நீ அவனை கண்டுக்காம இருப்பியா..??” என்று நினைக்கும் போது அவள் மீதும் அவனுக்கு கோபம் வந்ததால், வேண்டுமென்றே நன்றாக அவள் உதடுகளை கடித்து வைத்து விட்டான். அதனால் வலியில் கோபமாக அவனை பிடித்து தள்ளிவிட்டாள் மேகா.
தொடரும்..