Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 239

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 239

by Thenaruvi Tamil Novels
35 views

அத்தியாயம் 239: நாளைக்கு ஷாலினி சாகணும்


நாளைக்கு ஷாலினி சாகணும்

ரித்திகாவின் ஸ்கூட்டியை ஷாலினி டிரைவ் செய்ய, அவள் பின்னே கையில் இரண்டு மூன்று கட்டைப்பைகளுடன் அமர்ந்து கொண்டு இருந்தான் விஷ்ணு. அப்போது விளையாட்டாக ஷாலினியின் தோளில் சாய்ந்தவன், “எப்பயும் நம்ப டூவீலர்ல போனா நான் தான் ட்ரைவ் பண்ணிட்டு வருவேன். நீ ஜாலியா பின்னாடி உக்காந்துட்டு வருவ. ஆனா இப்ப நீ டிரைவ் பண்ணும் போது நான் பின்னாடி உட்காந்துட்டு வரதும் இதுவும் ஒரு மாதிரி நல்லா இருக்குல்ல..!!!” என்று ஒரு ஃபீலிங்கில் ஷாலினியிடம் கேட்டான் விஷ்ணு. 

 “ஏன் டா எவ்ளோ பெரிய ஆளு நீ..!!! பொறந்ததுல இருந்து ஏசியிலேயே வளர்ந்திருப்ப. வெளியில போனும்னாலும் ஏசி கார் தான். இப்ப அடிக்கிற வெயிலுக்கு ரோட்ல போற எல்லாருக்கும் மண்டை காயுது. உனக்கு மட்டும் ஜாலியா இருக்கா..?? எப்படி உன்னால மட்டும் இதையெல்லாம் என்ஜாய் பண்ண முடியுது..??” என்று ஒரு குறுகலான சந்தில் சென்று கொண்டு இருந்தவள், தன் முன்னே வெகு நேரமாக நின்று கொண்டு இருந்த வண்டியை செல்ல சொல்லும் விதமாக ஹாரனை பலகமாக அடித்துக் கொண்டு இருந்தாள்.

அவள் சொன்னதை கேட்டு ஷாலினியை அவள் இடுப்போடு சேர்த்தி அனைத்த விஷ்ணு, “நான் மட்டும் தனியா வந்து இருந்தா, நீ சொல்ற மாதிரி அடிக்கிற வெயிலுக்கு டூவீலர்ல சுத்துறது கடுப்பா தான் இருக்கும். ஆனா உன் கூட  இருக்கும்போது இந்த வெயில் கூட எனக்கு குளு.. குளுன்னு இருக்கு. “உனக்கு எது வருதோ இல்லையோ நல்லா டயலாக் பேசி என்னை கரெக்ட் பண்றதுக்கு நல்லா வருது.” என்று சிரித்து கொண்டே சொல்லிய ஷாலினி, ரெகுலராக அவர்கள் பொருட்கள் வாங்கும் ஒரு மளிகை கடைக்கு விஷ்ணுவுடன் சென்றாள். 

அவர்கள் கை நிறைய காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டு தங்களுடைய ஸ்கூட்டியின் அருகே பேசி கொண்டே வந்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கே எதைசையாக வந்த மாலதியும், சசியும், அவர்களை பார்த்துவிட்டு பேரானந்தத்தில் அவர்களிடம் பேசுவதற்காக அவர்கள் அருகே வந்தனர். விஷ்ணுவிற்கு முன்பே அவர்களின் கவனித்துவிட்ட ஷாலினி, “கொஞ்ச நாளா தான் இவங்க இம்சை இல்லாம நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன். அது இவங்களுக்கு பொருக்கல போல. வந்துட்டாங்க என் நிம்மதி கெடுக்க. சீக்கிரம் வா நம்ப கிளம்பலாம்.” என்று விஷ்ணுவிடம் முணுமுணுத்த ஷாலினி, அவனை கூட்டிக்கொண்டு தாம் வந்து ஸ்கூட்டியில் மீண்டும் ஏறி கிளம்ப முயன்றாள்.

அப்போது வேகமாக வந்து அவர்களை வழிமறித்த மாலதி, “ஷாலினி் மா நில்லு. அவசரப்பட்டு கிளம்பிடாத. நான் உங்ககிட்ட முக்கியமான விஷயத்தை பற்றி பேசணும்.” என்று கனிவான குரலில் சொன்னாள். அவளுடைய குரலிலும் செய்கைகளும் இருக்கும் மாற்றத்தை ஷாலினி உணர்ந்து கொண்டாலும் அவளுக்கு இவர்களிடம் பேசுவதற்கு விருப்பமில்லைலை என்பதால், “எங்களுக்கு உங்க கிட்ட பேசறதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. வழி விடுங்க. நாங்க போகணும். தேவை இல்லாம குறுக்க நின்னு பிரச்சினை பண்ணிட்டு இருக்காதீங்க.” என்று கடுமையான குரலில் சொன்னாள் ஷாலினி. 😒

ஷாலினி என்ன தான் தன்னிடம் கோபமாக பேசினாலும்; இப்போது அவள் தங்க முட்டை இடும் வாத்தாக  மாறிவிட்டதால், அவளை பொறுத்துப்போவது என்று முடிவெடுத்தத மாலதி, “இங்க பாரு மா உங்களுக்கு என் மேல கோவம் இருக்கிறது நியாயம் தான். ஆனா நாங்க என்ன சொல்ல வரோம்னு மட்டும் ஒரு அஞ்சு நிமிஷம் பொறுமையா கேட்டுட்டு போ. 

விஷ்ணு தம்பி நீங்களாவது சொல்லுங்க நாங்க முன்ன மாதிரி இல்ல இப்ப மாறிட்டோம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா வாழனும்ன்னு தான் நாங்கள் ஆசைப்படறோம். எங்களை புரிஞ்சுகோங்க. உங்களை பாக்குறதுக்கு நாங்க எத்தனையோ நாள் ட்ரை பண்ணோம். ஆனா உங்க வீட்ல முன்னாடி இருக்கிற செக்யூரிட்டி யாரும் எங்களை உள்ள விடல. தெய்வா தீனமா கடவுளே உங்கள எங்க கண்லுல காமிச்சி இருக்காரு. நாங்க சொல்ல வர்றதை மட்டும் கேட்டுட்டு போங்க.” என்று கெஞ்சும் தோணியில் சொன்னவள் தன்னுடைய வெட்கத்தை எல்லாம் விட்டு பொதுவெளி என்று கூட பார்க்காமல் அவர்கள் இருவரிடமும் கெஞ்சினாள். 

 விஷ்ணுவாழும் அவர்களிடம் புதிதாக தெரியும் ஏதோ ஒரு மாற்றத்தை உணர முடிந்தது. அதனால் மெதுவாக ஷாலினியின் காதுகளில், “இவங்க முன்ன மாதிரி இல்லைன்னு தான் எனக்கு தோணுது. வெயிட் பண்ணி இவங்க என்ன தான் சொல்றாங்கன்னு கேட்டுட்டே போகலாம் இரு டி.” என்று சொன்ன விஷ்ணு.  செல்ல இருந்த  ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திய ஷாலினி, “சரி சொல்லி தொலைங்க. உங்களுக்கு எங்க கிட்ட என்ன சொல்லணும்..???” என்று எரிச்சலான குரலில் கேட்டாள். 

ஷாலினி தன்னை மரியாதை இன்றி நடத்துவது மாலதிக்கு அவள் மீது கோபத்தை வரவழைத்தாலும், இப்போது தன் கோபப்பட்டால் தன்னுடைய கனவுகள் அனைத்தும் கெட்டுவிடும் என்று நினைத்துக்் கொண்டவள், “விஷ்ணு தம்பி உன்னை சொல்லாமல் கொல்லாம வீட்டுல இருந்து கூட்டிட்டு போனதுனால உன்னோட அப்பா அம்மாவா எங்களுக்கு உங்க ரெண்டு பேரு மேலையுமே எங்களுக்கு கோபம் வந்தது உண்மை தான். ஆனா நீங்க நல்லா இருக்கக் கூடாதுன்னு நாங்க நினைக்கவே இல்ல ஷாலினி. 

நீ போனதுக்கு அப்புறம் தான் உனக்கு பிடிக்காத கல்யாணத்தை நாங்க செஞ்சு வைக்க நினைத்தது எவ்வளவு பெரிய தப்புன்னு எங்களுக்கு புரிஞ்சுது. அதனால நாங்களே விஷ்ணு தம்பி வீட்டில பேசி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சோம். ஆனா எங்களுக்கு நீங்க எங்க இருக்கீங்கன்னே தெரியாம இருந்துச்சு.

அப்ப தான் நம்ப வீட்டுக்கு விஷ்ணு தம்பியோட அத்தை பொண்ணுன்னு சொல்லிட்டு வைஷாலின்னு ஒருத்தி வந்தா.” என்று அவள் சொல்லி கொண்டு இருக்க, “அவ எதுக்கு அங்க வந்தா..???” என்று கோரசாக விஷ்ணுவும், ஷாலினியும், அவசரமான குரலில் மாலதியிடம் கேட்டனர். அதற்கு, “அவ சரியான ஆளா இருக்கா ஷாலினி மா. அவளுக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறது புடிக்கல விஷ்ணுவ கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிற. விஷ்ணு யாரு என்னன்னு அந்த தம்பியை பத்தின உண்மை எல்லாத்தையும் சொல்லி, உங்க ரெண்டு பேரையும் எங்களைப் பிரிக்க சொன்னா. எங்கள கூட காசு கொடுத்து விலைக்கு வாங்கி உங்களுக்கு எதிரா வேலை பார்க்க சொன்னா. ஆனா என்ன இருந்தாலும் நீ எங்க வீட்டு பொண்ணுல்ல… நாங்க எப்படி உனக்கு அந்த துரோகத்தை செய்வோம்..?? அதனால அவளை கோவமா பேசி திட்டி வீட்டை விட்டு வெளியில அனுப்பிட்டேன். 

என்னதான் நான் அவளை திட்டி வெளியில அனுப்பி இருந்தாலும் அவ அதோட சும்மா இருக்கிற ஆள் மாதிரி கிடையாது. அவ திருப்பியும் உங்களை பிரிக்கிறதுக்கு வேற ஏதாவது திட்டம் போடுவா, நீங்க பார்த்து பத்திரமா இருந்துக்கங்கன்னு உங்க கிட்ட சொல்லனும்னு தான் இத்தனை நாளா உங்ககிட்ட பேச ட்ரை பண்ணேன். ஆனா ஷாலினி அவ போன் நம்பரை மாத்திட்டா. ஸ்கூல்களையும் எங்கள உள்ளே விட மாட்டேன்னாங்க.. நாராயணன் பேலஸ்குள்ளையும் எங்கள விடல. அதான் உங்கள நேர்ல பார்த்தவுடனே, இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லியே ஆகணும்னு வேகமா வந்தேன். சத்தியமா இப்ப நீங்க நல்லா இருக்கணும்னு தான் நாங்க ரெண்டு பேருமே நினைக்கிறோம். எங்களை புரிஞ்சுக்கோங்க. நாங்க மாறிட்டோம். இனி எங்கள தப்பா நினைக்காதீங்க. நீயும் எனக்கு கௌசி மாதிரி தான் ஷாலினி. உன்னோட வாழ்க்கை கெட்டுப் போகணும்னு நான் நினைக்க மாட்டேன்.” இந்து போலியான சென்டிமென்ட் உடன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் பேசியவள், விஷ்ணு தங்களுடைய வீட்டிற்கு வந்து தங்களிடம் லட்சம் லட்சமாக பணம் கொடுத்துவிட்டு சென்றதை மட்டும் வேண்டும் என்று ஷாலினி இடம்  சொல்லாமல்  மறைத்து விட்டாள்.

மாலதி பேசியதை கேட்டவுடன் அவளை கூர்மையான விழிகளுடன் பார்த்து அவள் சொல்வது உண்மைதானா என்று எடை போட்ட ஷாலினி மாலதி இடம் பொய் இருக்கிறது என்று அவளுக்கு தோன்றாததால் விஷ்ணுவிடம், “என்ன டா உன் மொற பொண்ணு நீ எவ்ளோ அட்வைஸ் பண்ணாலும் திருந்த மாட்ட போல..!!!” என்று எரிச்சலான குரலில் கேட்டாள். 😒

விஷ்ணு: “உனக்கு தெரியாது ஷாலினி. இதுவரைக்கும் நான் அவகிட்ட கோவமா கூட பேசினதில்லை. ஆனா அன்னைக்கு அவ உன்னோட வீட்டுக்கு வந்து உன்கிட்ட பிரச்சனை பண்ணிட்டு வந்ததுனால நான் அவளை கோவத்துல அடிச்சுட்டேன் தெரியுமா…!!! அப்பவே அவளை  இந்த மாதிரி வேலை எல்லாம் இனிமே பாக்காத. ஏதாவது உன்னால பிரச்சனை வந்துச்சுன்னா, நான் வருண் அண்ணா கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லி அவளை மிரட்டிட்டு தான் கிளம்பினேன். 

அப்பவும் அவ திருந்தாம இவங்க வீட்ல போய் பேசி பிரச்சனை பண்ணி இருக்கா. இனியும் இவள சும்மா விடக்கூடாது பேசாம நான் வருண் அண்ணா கிட்ட அவள வான் பண்ண சொல்லட்டுமா..???” என்று ஷாலினி இடம் கேட்டான்.

மாலதி: ஷாலினி பேச தொடங்குவதற்குள் முந்தி கொண்டவள், “ஆமா தம்பி நீங்க உங்க அண்ணா கிட்ட சொல்லி அவளை தட்டி வைக்க சொல்லுங்க. அவள நீங்க இப்படியே விட்டுட்டா அவ உங்கள பிரிக்கிறதுக்கு எதையாவது பண்ணிக்கிட்டு தான் இருப்பா. அவளாம் நல்லவளே கிடையாது. அவ அன்னைக்கு என்கிட்ட எப்படி பேசினான்னு நீங்க நேர்ல இருந்து பார்த்திருந்தா தான் உங்களுக்கு அவளை பத்தி முழுசா தெரிஞ்சிருக்கும்.” என்று அவசரமான குரலில் சொன்னாள்..

அவர்களுடைய பேச்சுவார்த்தையை இடை நிறுத்திய ஷாலினி, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் விஷ்ணு நீ சும்மா இரு. நம்ம வருண் மாமா கிட்ட இத பத்தி பேசினா கண்டிப்பா அவர் நமக்காக அவளை கூப்பிட்டு பேசுவாரு. ஆனா இத அவ வேற விதமா செண்பகம் ஆன்டி கிட்ட போய் சொல்லி வச்சுட்டான்னா என்ன பண்றது..?? வருண் மாமா தான் நேத்து சொன்னார் இல்ல நம்மளால இப்போதைக்கு எந்த பிரச்சனையும் வராம நம்ம பார்த்துக்கணும்ன்னு.. 

நீ வேணா மறுபடியும் அவகிட்ட பேசி பாரு இப்போதைக்கு வருண் மாமா கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். வேணா, நம்ம ரித்திகா அக்கா கிட்ட சொல்லி ஏதாவது பண்ண ட்ரை பண்ணலாம். இப்போதைக்கு செண்பகம் ஆண்டியோட ஹெல்த் தான் முக்கியம், நம்மளால அவங்களுக்கு எதுவும் ஆகிடகூடாது.” என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டாள்.‌

விஷ்ணு ஷாலினியின் காதல் விவகாரத்தை பற்றி நாராயணன் பேலஸில் பெரிதாக ஏதேனும் சம்பவம்  வெடித்தால், அதில் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டால், நன்றாக இருக்கும் என்று கணக்குப் போட்டு இருந்த மாலதிக்கு ஷாலினி பேசியது பிடிக்கவில்லை. அதுவரை அமைதியாக இருந்த சசி ஏதோ உலகத்தில் இல்லாத உத்தம தந்தை போல விஷ்ணுவை பார்த்து, “பாருங்க தம்பி என்னோட பொண்ணு எவ்ளோ நல்லவளா இருக்கான்னு.. இப்படிப்பட்ட பொண்ணு நாங்க தான் புரிஞ்சுக்காம இத்தனை நாளா இருந்துட்டோம். அவளுக்கே பிரச்சனை வந்தாலும் கூட அவ மத்தவங்கள பத்தி யோசிக்கிற அளவுக்கு நல்லவளா இருக்கான்னு நாங்க பாக்காம விட்டுட்டோம். 

அவ சொல்றது தான் சரி உங்க அம்மா நல்லா இருக்கணும். அது தான் முக்கியம். அவங்க நல்லா இருந்தா தான் நம்ம எல்லாரும் நல்லா சந்தோஷமா இருக்க முடியும். ஆனா நீங்களே ஒரு நல்ல நேரமா பார்த்து எங்க பொண்ண பத்தி உங்க வீட்ல சொல்லுங்க. அவள கை விட்றாதீங்க தம்பி. நீங்க ஒரு வார்த்தை வா போலாம்னு கூப்பிட்ட உடனே உங்களை நம்பி இத்தனை வருஷம் இருந்த வீட்டை விட்டுவிட்டு உங்க கூட வந்தவ. அவளை நீங்க தான் நல்லாா பாத்துக்கணும். உங்களுக்கே உங்க அம்மா கிட்ட இத பத்தி சொல்றதுக்கு கஷ்டமா இருக்குன்னா கூட சொல்லுங்க. ஷாலினி ஓட அப்பா அம்மான்ற முறையில நாங்களே வந்து பேசுறோம். எங்க பொண்ணுக்காக நாங்க எது வேணாலும் செய்ய தயாரா இருக்கோம்.” என்று அன்போடு சர்க்கரையாக பேசினார். 

பேசுவது தன்னுடைய அப்பா தானா என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தாள் ஷாலினி. காரணம் எதுவாக இருந்தாலும்; அவர்கள் இப்படி மனம் திறந்து தனக்காகவும், ஷாலினிக்காகவும், பேசுவதால் மனம் இறங்கிய விஷ்ணு, அவர்களிடம் நல்லபடியாக பேசி தான் ஷாலினியை நன்றாக பார்த்துக் கொள்வதாக சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

ரவியின் வீட்டில்….

கட்டு கட்டுகளாக நிறைய பணத்தை ரவியிடம் கொடுத்த வைஷாலி, “ஷாலினி நாராயணன் பேலஸில இருந்து கிளம்பி அவளோட வீட்டுக்கு போயிட்டா. நாளைல இருந்து ஸ்கூலுக்கும் போக ஸ்டார்ட் பண்ணிடுவான்னு நினைக்கிறேன். அதனால நீ யாரையாவது ஒரு ஆள் வச்சு அவளை பாலோ பண்ணி யாருக்கும் தெரியாம ஆள் நடமாட்டம் இல்லாத ஏதாவது ஒரு இடத்துல வச்சு அவளை ஆக்சிடென்ட் பண்ணி போட்டு தள்ளிடு.” என்று ஷாலினியைக் கொள்ளும் ஆவேசத்தில் அவனிடம் பேசி கொண்டு இருந்தாள். 

ரவி: நீங்க நான் கேட்க கேட்க லட்சுமி மாதிரி காசை கொண்டு வந்து கொட்டிக்கிட்டே இருக்கீங்களே மேடம்… இந்த காச விட்டு எரிஞ்சா, அவளை கொல்றதுக்கு ஆளா கிடைக்க மாட்டாங்க…?? எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். இனிமே உங்க லைஃப் -ல ஷாலினின்னு ஒருத்தி குறுக்க வரவே மாட்டா. நீங்க ஜாலியா போயிட்டு வாங்க மேடம். இனிமே ஷாலினி டென்ஷன் உங்களுக்கு வேண்டாம். போய் உங்க ஆளு விஷ்ணு சார் ஐ எப்படி கரெக்ட் பண்றதுன்னு மட்டும் யோசிங்க.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 😂 😂 😂

வைஷாலி: “உன்ன நம்பி தான் நான் இங்கே இருந்து போறேன். நாளைக்கு அவ செத்துட்டான்ற நியூஸ் மட்டும் தான் எனக்கு வரணும். ஒருவேளை இந்த மர்டர் அட்டம்ட் ல நீ போலீஸ் கிட்டயோ இல்ல வேற யார்கிட்டயோ நீ மாட்டிக்கிட்டா தப்பி தவறி கூட என்னோட பேரை வெளியில சொல்லிடாத.

நாளைக்கு உன்னால ஒரு பிரச்சனைன்னா, நான் உன்னை கொல்ல கூட யோசிக்க மாட்டேன். அதையும் உன் மனசுல வச்சுக்கோ. எனக்கு இந்த வேலை கச்சிதமா நடக்கணும்.” என்று சொல்லி அவனையும் விரட்டியவள் அங்கு இருந்து நாளை ஷாலினி தன்னுடைய பார்வையில் படமாட்டாள் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாக அங்கு இருந்து சென்றாள். 😁 😁 😁‌

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured