Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 164

மூர்கனின் காதலி CH 164

by Thenaruvi Tamil Novels
40 views

அத்தியாயம் 164

“நீ pregnantடா இருக்க சௌபர்ணிகா. இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு ஒரு baby வரப்போகுது.” என்று சேரன் சொல்ல, “இவன் சொல்றது உண்மையா? நெஜமா நான் pregnantஆ இருக்கனா..??” என்று நினைத்து கண் கலங்கிய சௌபர்ணிகா தன் வயிற்றை தொட்டுப் பார்த்தாள்.

முதன்முதலாக தன்னை ஒரு தாயாக அவளால் உணர முடிந்தது.‌ அதனால் அவள் “இனிமே நீ என் husband மட்டும் இல்ல. என் குழந்தையோட அப்பா. என்னால எப்படி உன்னை வெறுக்க முடியும் சேரன்?” என்று நினைத்து அவள் அவனை ஏக்கம் நிறைந்த கண்களுடன் பார்க்க, சட்டென சென்று அவளை அணைத்துக் கொண்ட சேரன் “I am sorry டி. இனிமே உன்னை எதுக்காகவும் எப்பவும் நான் கஷ்டப்படுத்த மாட்டேன். உன்னையும் பொறுக்கப்போற நம்ம குழந்தையும் என் மேல promiseஆ சொல்றேன் நான் நல்லா பாத்துக்குவேன். Trust me. ஐ லவ் யூ சௌபர்ணிகா.” என்று தன் மனதில் இருந்து சொன்னான்.

“இவன்தான் நம்மகிட்ட இப்படி எல்லாம் பேசுறானா? குழந்தை பிறக்கப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே இவனால உடனே இந்த அளவுக்கு இப்படி மாற முடியுமா? இல்லை இதுவும் நடிப்பா..??” என்று நினைத்து குழம்பிய சௌபர்ணிகா அப்படியே சிலை போல நிற்க, அவளைவிட்டு விலகி அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்த சேரன் “என்ன.. உன்னால என் changesஐ நம்ப முடியலையா?” என்று கேட்டுவிட்டு வெறுமையாக புன்னகைத்தவன்,

“எப்படி முடியும்? நான்தான் உன்னை அவ்ளோ கொடுமைப்படுத்தி இருக்கனே..!! அதனையையும் தாண்டி நீ என்னை மறுபடியும் நம்பறது கொஞ்சம் கஷ்டம் தான். But one last time, நம்ம குழந்தைக்காகவாவது நீ என்னை நம்பி தான் ஆகணும் சௌபர்ணிகா. Please.. I want you. நம்ம குழந்தைக்கு அம்மா அப்பா இரண்டு பேருமே வேணும். நீ, நான், நம்ம குழந்தை மூணு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். நான் இந்த தடவை நிஜமாவே என் heartல இருந்து இத சொல்றேன். I love you.” என்றான்.

அதை அவன் சொல்லும்போது அவன் கண்கள் கூட லேசாக கலங்கி இருக்க, அவனது வார்த்தைகளில் மெழுகாக உருகிய சௌபர்ணிகா அவன் அவளுக்கு செய்த அனைத்தையும் ஒரே நொடியில் மறந்துவிட்டு சென்று அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு தன் மனதில் இருக்கும் வேதனை தீரும் வரை கதறி அழுதாள். கொஞ்ச நேரம் அவளை அழவிட்ட சேரன் “போதும்டி என்னால நீ ரொம்ப அழுதுட்ட. இதுக்கு மேல வேண்டாம். From now, your happiness is my responsibility.” என்று சொல்லிவிட்டு அவள் கண்களை பார்த்தவன், அவளது பின் கழுத்தில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்து அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தான்.

உண்மையாகவே இப்போது அவன் தன்னை முத்தமிடும் போது தான் அது அவனது அன்பின் அடையாளமாக அவர்களது காதலின் வெளிப்பாடாக மொத்தத்தில் அவளுக்கு இனிமையானதாக இருந்தது. தன்னை அறியாமல் தன் பற்கள் கூட முத்தமிடுகையில் அவளைக் காயப்படுத்தி விடக்கூடாது என்று வெண்மையான பூவை கையாள்வது போல அவள் இதழ் தேனை அவன் மென்மையாக ருசிக்க, நிஜமாகவே இன்று தான் அவன் காதலை முழுமையாக உணர்ந்தாள் சௌபர்ணிகா. அதனால் “நிஜமாவே எங்க குழந்தை வந்த நேரம் அது சீக்கிரமாகவே எங்க lifeஐ மாத்திடுச்சு. இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் நினைச்சு கூட பாக்கல.” என்று நினைத்தவளின் இதயத்தில் மீண்டும் அவன் மீது நம்பிக்கை துளிர்விட்டது.
அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்திய சேரன் “நம்ம ரூமுக்கு போலாம்.” என்று சொல்ல, சரி என்று தன் மண்டையை ஆட்டிய சௌபர்ணிகா முன்னே நடக்க, சட்டென அவளை தன் கைகளில் ஏந்தினான் சேரன். அதனால் அதிர்ந்த சௌபர்ணிகா “ஹேய் என்ன பண்ற? கீழ இறக்கி விடு என்னை. நான் pregnantஆ இருக்கேன்னு இப்ப நீதானே சொன்ன! இந்த மாதிரி டைம்ல இப்படி எல்லாம் பண்ணக்கூடாது.” என்று அவசரமான குரலில் சொல்ல,

“relax baby, அப்படியெல்லாம் நான் உன்ன கீழே போட்டுற மாட்டேன். உன்ன தூக்குற அளவுக்கு கூட எனக்கு Strength இல்லைன்னு நினைச்சியா..?? Trust me. உனக்கும் நம்ம குட்டி Babyக்கும் எதுவும் ஆகாம நான் உங்க ரெண்டு பேரையும் பத்திரமா பாத்துப்பேன்.” என்ற சேரன் அவள் சொல்ல செல்ல கேட்காமல் அவளை தூக்கிக் கொண்டு liftஐ நோக்கி நடந்தான்.

அவர்கள் இருவருக்கும் திருமணமே ஆகி இத்தனை மாதங்கள் ஆன பிறகு, இப்போதுதான் அவன் தன் மீது அன்பு மழையை பொழிவதால், தன்னை மறந்து அதில் உற்சாகமாக நனைந்து மகிழ்ந்த சௌபர்ணிகா அவன் கண்களை காதலுடன் பார்த்து “எனக்கு இந்த வாழ்க்கையில பெருசா எந்த ஆசையும் இருந்ததில்லை சேரன். இப்போ இந்த second, நீயும் நானும் இப்படியே எப்பவும் இருந்தா மட்டும் போதும்னு தோணுது. எனக்கு வேற எதுவும் வேண்டாம். நான் உன்னை ஆச ஆசையா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அந்த லவ் இப்பவும் எனக்குள்ள இருக்கு. என்ன ஆனாலும் அது மாறாது. Because truly madly I am in love with you. And I will always love you. நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன் கூட தான் இருப்பேன்.” என்று தன் மனதிற்குள் அவனிடம் சொல்ல, அவளுடன் lift-ற்க்குள் நுழைந்த சேரன் அவர்களது அறை இருக்கும் தளத்திற்கு செல்லும் பட்டனை அழுத்திவிட்டு “ஏதாச்சும் சொன்னியா என் கிட்ட?” என்று கேட்டான்.

“பார்றா… நான் மனசுக்குள்ள சொன்னது எல்லாம் இவனுக்கு கேக்குதா என்ன? அதுக்குள்ள அந்த அளவுக்கு எங்க relationship strong ஆயிடுச்சா..??” என்று யோசித்து சந்தோஷப்பட்ட சௌபர்ணிகா, “ஒன்னும் இல்ல சும்மா I love youன்னு சொன்னேன்.” என்று சொல்லிவிட்டு சிரிக்க, “ஓஹோ.. nice nice. I love you too.” என்று தானும் சொன்ன சேரன் விளையாட்டாக அவள் நெற்றியில் முட்டினான்.
தனது அறையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.

அவன் வெண்ணிலாவை விட்டு பிரிந்ததில் இருந்து அவனுடைய சந்தோஷம், தூக்கம் என அனைத்தும் தூரமாக போய்விட்டதால், துக்கம் close upல் வந்து அவன் வாழ்க்கையில் கும்மி அடித்துக் கொண்டிருந்தது. அதனால் அவன் “என் வாழ்க்கை நாடகமா..?? என் பொறப்பே பொய் கனக்கா..??” என்ற ரீதியில்,

“என் வாழ்க்கை எங்கயோ போயிட்டு இருக்கு. நான் எங்கயோ போயிட்டு இருக்கேன். இதுல நடுவுல என் நிலவை தொலைச்சுட்டேன். அங்க அவளை தொலைச்சிட்டு, இனி எப்பவும் கிடைக்க மாட்டான்னு தெரிந்தும் ஒவ்வொரு secondம் அவள இங்க தேடிட்டு இருக்கேன்.” என்று நினைத்து அரவிந்த் சோகமாக இருந்தான். கடந்த சில நாட்களில் இரவு நேரத்தில் ஆல்கஹால் அவனுக்கு உற்ற நண்பனாக மாறி அவனை தூங்க வைக்க உதவியது.

அவன் தினமும் இரவில் குடிப்பதை கவனித்த விஷ்வா அவனை அழைத்து “உன்ன கொஞ்ச நாள் இந்த நிலா பிரச்சனையை freeஆ விட்டுட்டு நார்மலா இருன்னு சொன்னா கேக்க மாட்டியா டா..‌?? இப்படி டெய்லியும் நீ குடிச்சிட்டு திரிஞ்சா, எப்படிடா அவ அப்பா உனக்கு அவளை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நினைப்பாரு..?? நீ பண்றது எல்லாம் தினமும் மேகா பார்த்துட்டு தான் இருக்கா.‌ அவ வேண்டாம்னு சொல்லிட்டா, நிலாவே உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டா. Mind it.” என்று சொல்லி அவனை எச்சரித்திருக்க,

அவர்கள் பேசிக் கொள்வதை கவனித்துவிட்டு அவர்கள் அருகில் சென்ற மேகா “நானே இதை பத்தி உங்ககிட்ட பேசலாம்னு இருந்தேன் அரவிந்த் அண்ணா. எப்படி இருந்த நீங்க ஏன் இப்படி ஆயிட்டீங்க? சத்தியமா எனக்கு உங்களை இப்படி பார்க்க பிடிக்கல. கண்டிப்பா நிலாவுக்கும் நீங்க இப்படி இருந்தா பிடிக்காது. இந்த situationஐ handle பண்ண உங்க ரெண்டு பேருக்குமே toughஆ தான் இருக்கும். என்னால அத புரிஞ்சுக்க முடியுது. பட் கண்டிப்பா நீங்க பண்ணிட்டு இருக்கிறது அதுக்கான solution இல்ல.
இன்னும் நிலாவுக்கு கல்யாணம் ஆகல. So still நமக்கு டைம் இருக்கு. அவ உங்களுக்கு வேணும்னு நினைச்சீங்கன்னா; நான் சொல்றதுக்காக, அவளுக்காக, இப்படி எல்லாம் பண்ணாம கொஞ்சம் பொறுமையா wait பண்ணுங்க. கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க நான் ஏதாவது பண்ணுவேன். என்னை நம்புங்க” என்று தன் பங்கிற்கு சொன்னாள்.
அவர்கள் இருவரின் வார்த்தையையும் மதித்து தனது குடிப்பழக்கத்தையே விட்டிருந்தான் அரவிந்த். ஆனால் அதன் உதவியை நாடாமல், இப்போது அவனால் உறங்க முடியவில்லை.

அதனால் தனது mobile phoneல் இருந்த அவன் நிலாவுடன் எடுத்துக்கொண்ட selfie photosஐ எடுத்து ஒவ்வொன்றாக பார்த்தவன் “இப்போ நீயும் இதே மாதிரி தூங்காம என்ன பத்தி நினைச்சுட்டு இருப்பியாடி..?? இந்நேரம் எனக்கு எவ்ளோ calls, texts எல்லாம் பண்ணி கடுப்பாகி இனிமே என் கூட பேச கூடாதுன்னு கோபமா இருப்பல்ல.. but எனக்கு உன்ன பத்தி நல்லா தெரியும்டி. அப்பவும், எப்பவும், நான் வேண்டாம்னு மட்டும் உன்னால யோசிக்க முடியாது. I’m sorry நிலா. நீ சொல்ற மாதிரி நான் ரொம்ப கோழையா இருக்கேன். உன்ன அங்கயே விட்டுட்டு வந்து தப்பு பண்ணிட்டேன் டி. என்ன ஆனாலும் பரவால்லன்னு நான் உனக்காக அங்க நின்னு உங்க அப்பாகிட்ட பேசி சண்டை போட்டு இருக்கணும்.” என்று நினைத்தவன் WhatsAppக்கு சென்றான்.

அதன் display pictureல் சிரித்த முகமாக இருந்த நிலாவை பார்த்துவிட்டு அவளது numberஐ unblock செய்தான். “அவளுக்கு மெசேஜ் பண்ணலாமா..?? அவளை எப்பவும் disturb பண்ண மாட்டேன்னு மேகாகிட்ட சொல்லி இருக்கனே.. இப்போ அத மீறி நான் நிலாகிட்ட பேசினா நல்லா இருக்குமா?” என்று வெகு நேரமாக யோசித்து தவித்த ‌ அரவிந்த் பின் ஒரு வழியாக “ஹாய்..!!” என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பானான். மெசேஜ் அப்படியே single tickல் வெகு நேரமாக இருந்தது. நிலா காளீஸ்வரனின் தொந்தரவை தாங்க முடியாமல் தனது mobile phoneஐ தூக்கிப்போட்டு உடைத்தது தெரியாமல் “நைட் இப்போ ரொம்ப late ஆயிடுச்சுல்ல! அதான் அவ தூங்கிருப்பா. நாளைக்கு நம்ம messageஐ பாத்துட்டு அவளே reply பண்ணுவா. மார்னிங் நிறைய work இருக்கு. சோ நம்மளும் சீக்கிரம் தூங்கலாம்.” என்று நினைத்து தன் கண்களை மூடி படுத்தான்.

ஆனால் அங்கே அவனது வெண்ணிலா அந்த நடுநிசை நேரத்தில் அவனது நினைவுகள் செய்த இம்சையால் தூங்க முடியாமல் தனது தலையணையை தனது இதயத்திற்கு நெருக்கமாக பிடித்துக் கொண்டு அவளது தலைவனை நினைத்து அதை தன் கண்ணீரால் நினைத்து கொண்டு இருந்தாள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured