அத்தியாயம் 156
விஷ்வாவின் கேபினுக்கு சென்ற மேகா அங்கே அவனை தேடினாள். அவன் அங்கே இல்லை. அதனால் “இந்த டைம்ல இங்க இல்லாம எங்க போனான் இவன்…??” என்று யோசித்த மேகா அந்த விசாலமான அறை முழுவதும் தன் பார்வையை சுழல விட, balcony பக்கமாக ஏதோ நிழல் அசைவதைப் போல தெரிந்ததால் அங்கே சென்றாள். விஷ்வா கையில் ஒரு கிளாஸ் சூடான டீயுடன் வெளியில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
வேகமாக சென்று பின்னே இருந்து அவனை அணைத்துக் கொண்ட மேகா “Sorry.” என்று மெல்லிய குரலில் சொல்ல, “எதுக்கு..??” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டான் அவன்.
அதனால் “இன்னும் இவனுக்கு நம்ம மேல இருக்கிற கோபம் போகல போல.” என்று நினைத்த மேகா அவன் முன்னே சென்று நின்று தனது இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு அவனை பாவமாக பார்த்து “sorry Vishwa. அத்தனை பேர் முன்னாடி நான் எவனோ ஒருத்தன் கூட dance ஆடி இருக்கக்கூடாது. ஏதோ குடிச்சிருந்ததுனால தெரியாம பண்ணிட்டேன். I swear, இனிமே இப்படி நடக்காது. நான் இனிமே எதுவுமே குடிக்கவே மாட்டேன். Juice கூட குடிக்க மாட்டேன். Sorry..!!” என்றாள்.
பேசும்போது அவளது facial expressionsகள் cuteஆக இருக்க, உள்ளுக்குள் அதை ரசித்த விஷ்வா “நல்லவேளை.. இவளுக்கு நானும் காவியாவும் dance ஆடுனது ஞாபகம் வரல.” என்று நினைத்து சந்தோஷப்பட்டான்.
இப்படி அவன் நேற்று நடந்ததை பற்றி யோசித்ததில், அவனுக்கு கௌத்தமின் மீது இருந்த கோபம் எல்லாம் காணாமல் போய்விட்டதால் அவன் நார்மலானான். “என்ன நான் sorry சொல்லிட்டு இருக்கேன்.. நீ எதுவுமே சொல்லாம அமைதியா நிக்கிற..?? என் Sorryஐ accept பண்ண மாட்டியா..??” என்று சோகமாக கேட்டாள் மேகா
அவளை மேலும் கீழும் பார்த்த விஷ்வா தன் கையில் இருந்த டீயை முழுவதாக குடித்து முடித்துவிட்டு glassஐ ஓரமாக வைத்தவன், பின் அவளை அணைத்துக் கொள்ள, “அடப்பாவி.. உனக்கு என் மேல கோபம் இல்லனா, அதை முன்னாடியே சொல்ல வேண்டியது தானே.. டீய குடிச்சு முடிச்சுட்டு தான் சார் எதா இருந்தாலும் செய்வீங்களோ..??” என்று கேட்ட மேகா தானும் அவனை அனைத்து கொண்டாள். “ஆமா உன்கிட்ட பேசிட்டு இருந்தா.. அப்புறம் டீ ஆறிடும்ல்ல..” என்று சொல்லிவிட்டு அவன் சிரிக்க, “ஐயையோ ரொம்பத்தான்.. ஏன் அது ஆறிப்போனா இங்கே வேற டீ கிடைக்காதோ..??” என்றாள் அவள்.
அப்போது திடீரென்று அவனுக்கு ஏதோ ஞாபகம் வர, “ஓய்.. சொல்ல மறந்துட்டேன். உனக்கு ஒரு parcel வந்திருக்கு.” என்று அவன் சொல்ல, “எனக்கா.. எனக்கெல்லாம் யாரும் parcel எதுவும் அனுப்ப மாட்டாங்களே.. நான் onlineல கூட எதுவும் order பண்ணல. ஊர்ல இருந்து யாராவது ஏதாவது அனுப்பி இருக்காங்களா..??” என்று குழப்பமாக கேட்டாள் அவள். “அது உனக்கு ரொம்ப பிடிச்சவங்க உனக்கு ஏதயோ parcel பண்ணி அனுப்பி இருக்காங்க. மகேஷ் தான் போய் வாங்கிட்டு வந்தான்.” என்ற விஷ்வா அவளை தனது ரூமிற்க்குள் அழைத்துச் சென்று அங்கே இருந்த ஒரு சிறிய gift boxஐ எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அதை மேலும் கீழும் திருப்பி பார்த்த மேகா “என்ன sender addressஐயே காணோம்..!!” என்று குழப்பமாக கேட்க, “உள்ள இருக்கும். அத open பண்ணி நல்லா பாரு.” என்றான் அவன். அதனால் அவளும் அதை திறந்து பார்க்க, உள்ளுக்குள் ஒரு சிறிய பழனி பஞ்சாமிர்த டப்பா இருந்தது. அதை தன் கையில் எடுத்து அப்படியும் இப்படியும் சுற்றுச்சுற்றி பார்த்த மேகா “பஞ்சாமிர்தமா… யாரு பழனி போனது..?? அதுவும் எனக்கு இது பிடிக்கும்னு தெரிஞ்சு கரெக்டா வாங்கி அனுப்பி இருக்காங்க..!! ஆனா அனுப்புனவங்க.. இத நான் தான் அனுப்பினேன்னு சொல்லணும்ல.. உள்ளேயும் sender name இல்ல. அப்புறம் இத அனுப்புனவங்க யாருன்னு எப்படி தெரியும்..??” என்று குழப்பமாக கேட்டாள்.
“எனக்கு தெரியுமே அதை அனுப்புனது யாருன்னு..!!” என்று சொல்லிவிட்டு அவன் சிரிக்க, “அப்படியா.. யாரு அனுப்புனது..??” என்று கேட்டாள் அவள். “நீதான் நேத்து வானத்தை பார்த்து முருகன்கிட்ட எனக்கு பஞ்சாமிர்தம் வேணும் பஞ்சாமிர்தம் வேணும்னு கேட்டு அடம் புடிச்சியே அதான் உன் இம்சை தாங்காம அந்த முருகனே உனக்கு பிடிக்கும்னு இத courier போட்டுவிட்டு இருக்காரு. எடுத்து சாப்பிடு.” என்று அவன் சொல்ல, “என்னடா லூசு மாதிரி உளறிட்டு இருக்க..?? நான் எப்ப அப்படி எல்லாம் கேட்டேன்…??” என்று கேட்ட அவள்.
“ஓஹோ நான் லூசு தனமா பேசுறனா..?? என்கிட்ட எல்லாத்துக்கும் proof இருக்குடி. நீ இப்படி எல்லாம் பேசுவன்னு தான் அப்ப நீ சொன்னதை எல்லாம் நான் record பண்ணி வச்சேன்.” என்ற விஷ்வா தனது mobile phoneல் இருந்த videoஐ play செய்து அவள் கையில் கொடுத்தான். அதில் நேற்று அவள் பாட்டு பாடியதில் இருந்து வீட்டுக்கு செல்லும்வரை செய்த அத்தனை அலப்பறைகளும் recordஆகி இருக்க, “oh my God.. நம்மளா இப்படி எல்லாம் பண்ணோம்..??” என்று யோசித்து ஷாக்கான மேகா “கரெக்டா எல்லாத்தையும் என்ன இத போட்டு காட்டி கலாய்க்கிறதுக்காகவே video எடுத்து வைத்திருக்கிறான் பாரு இவன்.. படுபாவி பையன்..!! உன்னை எலலாம் பெரிய சைஸ் கொரில்லா குரங்குகிட்ட பிடிச்சு கொடுக்கணும்.” என்று நினைத்து உடனே அதை delete செய்து ஒன்றும் தெரியாத நல்ல பிள்ளை போல அவன் ஃபோனை அவன் கையிலேயே கொடுத்து விட்டாள்.
அவளைப் பார்த்து கிண்டலாக புன்னகைத்த விஷ்வா, “என்ன இதுல இருந்தத delete பண்ணிட்டியா..?? Don’t worry நான் backup பண்ணி வச்சிருக்கேன். இந்த வீடியோவை உனக்கு எப்ப எல்லாம் பாக்கணும்னு தோணுதோ அப்பெல்லாம் சொல்லு நான் போட்டு காட்டுறேன்.” என்று சொல்ல, “இதுல பாக்க என்ன இருக்கு…?? ஏதோ தெரியாம நான் சின்ன புள்ள தெரியாம பண்ணிட்டேன். இதெல்லாம் ஒரு விஷயமா..??” என்று கேட்டாள் மேகா. “நீ சின்ன புள்ள..!!” என்று அவன் இழுக்க, “ஆமா உன்ன விட நான் சின்ன புள்ள தான்.” என்ற மேகா “சாமி பிரசாதம் நம்மள தேடி கண்டு பிடிச்சு அதுவா வந்திருக்கு. வா.. வா.. முருகனை கும்பிட்டு சாப்பிடலாம்.” என்று சொல்லி அவன் கையை பிடித்து அழைத்துச் சென்று அவனுடன் sofaவில் அமர்ந்தாள்.
முதல் முறையாக பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டு பார்த்த விஷ்வா “ம்ம்ம்.. நல்லா தான் இருக்கு.” என்று சொல்ல, “அதென்ன simpleஆ நல்லா தான் இருக்குன்னு சொல்ற… நல்ல சந்தோஷமா சூப்பரா இருக்குனு சொல்லு. அப்பதான் முருகனோட அருள் கிடைச்சு நமக்கு சீக்கிரம் குட்டி முருகன் பிறப்பான்.” என்றாள் மேகா.
”சப்பா… மறுபடியும் ஆரம்பிச்சுட்டாடா..!!” என்று நினைத்து அவன் அவளை பார்க்க, “ஆமா இத யார் வாங்கிட்டு வந்தது..??” என்று கேட்டாள் அவள். “வேற யாரு.. மகேஷ் தான். நீ நைட்டு பஞ்சாமிர்தம் வேணும்னு கேட்ட உடனே.. அவனுக்கு விடியறதுக்குள்ள பழனி போய் கோவில் திறந்த உடனே வாங்கிட்டு கிளம்பி வான்னு மெசேஜ் பண்ணிட்டேன்.” என்றான் விஷ்வா.
“அப்போ நான் அப்படியெல்லாம் பண்ணதுக்கு உனக்கு நெஜமாவே என் மேல கோவமே வரலையா..?? நான் சும்மா ஏதோ குடிச்சிட்டு பஞ்சாமிர்தம் வேணும்னு உலர்னதுக்கு உடனே மகேஷ் அண்ணாவ அனுப்பி வாங்கிட்டு வர சொல்லிருக்க..!!” என்று அவள் உற்சாகமான குரலில் கேட்க, “அது எப்படி வராம இருக்கும்..??கோபம் எல்லாம் வந்துச்சு. But அதைவிட உன் மேல பாசம் கொஞ்சம் அதிகம்னு நினைக்கிறேன். அதான் ரொம்ப நேரத்துக்கு என்னால உன் மேல கோவமா இருக்க முடியல.” என்றான் விஷ்வா. “அச்சோடா.. நீங்க ரொம்ப sweetttuu போங்க!” என்ற மேகா அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
அப்போதே இரவு 8 மணிக்கு மேல் ஆகியிருந்ததால் “வீட்டுக்கு போலாமா..??” என்று விஷ்வா கேட்க, “அதுக்குள்ளயா.. பத்தாகட்டும் போய்க்கலாம். இன்னைக்கு தான் நம்ம new project sign பண்ணி இருக்கோம். நம்மளோட நியூ working partnerக்கு சின்னதாவாவது welcome party கொடுக்க வேண்டாமா..??” என்று கேட்டாள் மேகா. “அடியேய்.. சும்மாவே இருக்க மாட்டியா நீ..?? இப்பதான் உன் மேல இருக்கிற கோபம் போயிடுச்சுன்னு சொன்னேன். அதுக்குள்ள அவனை பத்தி பேசி மறுபடியும் என்ன tension பண்ற… நேத்து தானே party நடந்துச்சு.. அதுக்குள்ள இன்னைக்கு ஒரு party வைக்கணுமா..?? அதுவும் அவனுக்காக.. ஒன்னும் தேவையில்லை. நீ வா நம்ம கிளம்பலாம்.” என்ற விஷ்வா அவளை அழைத்துக்கொண்டு lift வழியாக கீழே சென்றான்.
தொடரும்..