Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 155

மூர்கனின் காதலி CH 155

by Thenaruvi Tamil Novels
39 views

அத்தியாயம் 155

கௌத்தமிற்கு முன்னே கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் அவர்களது project ideasகளை வந்து present செய்துவிட்டு சென்றுவிட்டார்கள். அவர்களோடு compare செய்து பார்க்கும்போது, அவனது ஐடியா தரமாக இருந்ததால் அனைவரும் கைத்தட்டி அவனை பாராட்டினார்கள்.

ஏன் விஷ்வாவின் business partnersகள் கூட “கௌத்தம் சுவாமிநாதனும் நம்ம விஷ்வா சார் மாதிரிதான். Self made. அவங்க family Businessஐ எடுத்து நடத்தாம அவர் cloud technologiesஐ அவரோட சொந்த effortsல உருவாக்கி இருக்காரு. இவரோட ஐடியாஸ் ரொம்ப impressiveஆ இருக்கு. இவர் MV Techஓட young teamகூட சேர்ந்து work பண்ணா, கண்டிப்பா இந்த project successful தான்.” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நான் நெனச்சதை விட இவனோட ஐடியா நல்லாத்தான் இருக்கு.” என்று நினைத்த விஷ்வா கௌத்தமை முறைத்து பார்த்துக் கொண்டிருக்க, “அவரோட ஐடியா நல்லா இருக்குல்ல..?? அவர் சொல்ற மாதிரி இந்த application கண்டிப்பா young couples, loversன்னு எல்லாரையும் impress பண்ணும். இப்ப எல்லாம் நிறைய relationshipக்குள்ள problems வர்றதுக்கு main reasonஏ அவங்களுக்குள்ள understanding இல்லாததுதான். இந்த applicationல இருக்கிற sensors human emotionsஐ detect பண்ணி அவங்க எப்போ எந்த mindsetல இருக்காங்கன்னு அவங்களோட partnerக்கு share பண்ணா அவங்களுக்குள்ள இருக்குற love, care, affection, எல்லாமே improveஆகி அவங்க relationship strongஆகும். But practically இது எந்த அளவுக்கு possibleன்னு எனக்கு தெரியல.” என்று அவனிடம் சொன்னாள் மேகா.

“அதெல்லாம் கண்டிப்பா உருப்படாது. இவன் சொல்ற மாதிரி அத்தனை features இருக்கிற மாதிரி நம்ம smart watch manufacture பண்ணனும்ன்னா அதோட cost highஆ இருக்கும். இதுக்காக new technologysஐ நம்ம use பண்ற மாதிரி இருக்கும். இது எல்லாத்தையுமே பண்ணி அப்படியே இவன் சொல்ற மாதிரி நம்ம watch ready ரெடி பண்ணிட்டாலும், ordinary people இத purchase பண்ண readyயா இருக்கணும்ல்ல.. இதெல்லாம் அவங்க வாங்குற மாதிரி affordable priceல இருக்காது.” என்று விஷ்வா உறுதியாக சொல்ல, “நீ சொல்றதெல்லாம் valid point தான் விஷ்வா. But அப்படி பார்த்தா branded products எவ்ளோ costlyயா இருந்தாலும், EMI போட்டாவது அதை வாங்குறவங்க இந்தியாவுல இருக்காங்க தானே..?? அதே மாதிரி நம்ம product qualityஆ இருந்தா, மக்கள் கண்டிப்பா வாங்குவாங்க. எனக்கு கௌத்தமோட ஐடியா புடிச்சிருக்கு.” என்று தானும் உறுதியாக சொன்னாள் மேகா.

அதனால் கோபத்தில் தன் முகத்தை திருப்பிக் கொண்டான் விஷ்வா. அவர்கள் தங்களுக்குள் அப்படி பேசி‌ கொண்டாலும் கூட அவர்களையே கவனித்துக் கொண்டிருந்த கௌத்தமிற்க்கு அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்று ஓரளவிற்கு விளங்கியது. அதனால் “நான் வந்துட்டேன் விஷ்வா. உனக்கும் மேகாவுக்கும் நடுவுல நான் வந்துட்டேன்.‌ இனிமே நீ என்ன பண்ணாலும், உன்னால என்ன உங்க lifeஐ விட்டு வெளிய அனுப்ப முடியாது.” என்று நினைத்த கௌத்தம் ஒரு புன்முறுவலுடன் சென்று தனது இருக்கையில் அமர்ந்தான்.

அந்த மீட்டிங் தொடர்ந்து நடந்தது. அவனுக்கு பிறகு ஏராளமானவர்கள் வந்து தனது ஐடியாவை பற்றி பேசிவிட்டு சென்றார்கள். அதில் ஒரு சில ஐடியாக்கள் நன்றாகவே இருந்தாலும், அது கெளத்தமின் ஐடியா அளவிற்கு இல்லை.

அதனால் lunch break முடிந்து அனைவரும் வந்து meetingல் assemble ஆனவுடன் விஷ்வாவின் business partners அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டு “எங்களுக்கு மிஸ்டர் கௌத்தம் சுவாமிநாதனோட idea ரொம்ப பிடிச்சிருக்கு மிஸ்டர் விஷ்வா. அது கண்டிப்பா workout ஆகும்னு நாங்க நம்புறோம். உங்களுக்கும் இது ஓகேன்னா இன்னைக்கே அவர working partnerஆ announce பண்ணிடலாம்.” என்றார்கள்.

“இல்ல இந்த project ரொம்ப expensiveஆ இருக்கும்னு எனக்கு தோணுது. So women safety relatedஆ ஏதோ idea இருக்குன்னு ஒருத்தர் சொன்னாரே.. நம்ம அவரோட project பத்தி இன்னும் கொஞ்சம் detailஆ விசாரிச்சு பாத்துட்டு கொஞ்சம் developments பண்ணி அதவே select பண்ணிக்கலாம். எனக்கு அதுதான் practically workout ஆகும்னு தோணுது.” என்று விஷ்வாவும் தன் பங்கிற்கு எவ்வளவோ பிடிவாதமாக சொல்லிப் பார்த்தான். ஆனால் யாரும் அவனுக்கு செவி சாய்க்காமல் “நீங்க கௌத்தமோட projectஐ consider பண்றத பத்தி யோசிச்சு பாருங்க விஷ்வா.” என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி அவனை கடுப்பேற்றிக் கொண்டு இருந்தார்கள்.

விஷ்வாவின் முகம் போன போக்கை கவனித்த மேகா, “நான்தான் முன்னாடியே சொன்னேன்ல.. அவரோட project தான் impressiveஆ இருக்கு. நம்ம அத பண்ணா ரொம்ப ஈஸியா Trend ஆகிடும். நம்ம Target usersஏ young ageல இருக்கிற peoples தான். So இந்த project கண்டிப்பா click ஆகும். trust me. இத Select பண்ணிரு. இல்லனா மத்த investors எல்லாரையும் நம்ம disappoint பண்ற மாதிரி ஆயிடும்.” என்று தன் பங்கிற்கு அவன் காதுகளில் கிசுகிசுக்க, வந்த கடுப்பில் “enough, சும்மா இரு. இதை நான் பாத்துக்குறேன்.” என்ற விஷ்வா மற்றவர்களிடம் “let me think about it.” என்று சொல்லிவிட்டு சென்று தனது இருக்கையில் அமர்ந்தான்.

அவன் எதைச்சையாக கௌத்தமை பார்க்க, அவன் இவனைத்தான் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தான். அதனால் விஷ்வாவிற்கு இன்னும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இப்படியே சில நிமிடங்கள் கடக்க, அனைவரும் கொடுத்த pressureஆல் பின் வேறு வழியில்லாமல் கௌத்தமை தேர்ந்தெடுத்து அப்போதே அவனுக்கான working partner agreementஐ மகேசை வைத்து தயார் செய்தான் விஷ்வா. பின் அதில் அவனும் கௌத்தமும் கையெழுத்து போட்டார்கள்.

அனைத்தும் முடிந்து அனைவரும் meeting hallஐ விட்டு வெளியேற, “ச்சே.. நான் அந்த கௌத்தம என்ன ஆனாலும் என் ஆபீஸுகுள்ளவே வரவிட கூடாதுனு நினைச்சேன். கடைசியில என் கையாலயே agreement sign பண்ண வச்சு அவன் projectஐ approve பண்ண வச்சுட்டான். இனிமே டெய்லியும் அவன் மூஞ்சிய நான் இங்க பாத்து தொலையனும். அத நெனச்சாலே எனக்கு கடுப்பாகுது. இருக்கட்டும்.. எனக்கு பிடிக்காத மாதிரி அவன் ஏதாவது ஒன்னு பண்ணட்டும். அப்ப அவனுக்கு இந்த விஷ்வா யாருன்னு தெரியும்..!!” என்று நினைத்த விஷ்வா அனைவரையும் முந்திக் கொண்டு meeting hallஐ விட்டு கோபமாக வெளியேறினான்.

“இப்போ என்ன பிரச்சனை இவனுக்கு? கௌத்தமோட project successஆனா நம்ம companyக்கு தானே profit வரப்போகுது.. அப்புறம் என்ன..?? எதுக்கு இவன் இப்படி weirdஆ behave பண்ணிட்டு இருக்கான்..??” என்று நினைத்து குழம்பிய மேகா அந்த அறையைவிட்டு வெளியே செல்ல, “மேகா mam..!!” என்று அவளை அழைத்தான் கௌத்தம். அவள் அவனை திரும்பி பார்க்க, “ஹாய்..!!” என்ற கௌத்தம் அவள் அருகில் சென்று “உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா..??” என்று கேட்டான்.

“ஆமா, நான் உங்க கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்..‌ நம்ம இதுக்கு முன்னாடி எங்கேயாவது meet பண்ணிருக்கோமா..?? எனக்கு உங்களை recentஆ எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா எங்கன்னுதான் ஞாபகம் வர மாட்டேங்குது.” என்று அவள் சொல்ல, “நேத்து நானும் இங்க partyக்கு வந்திருந்தேன். நீங்களும் நானும் சேர்ந்து dance கூட ஆடினோமே..‌ உங்களுக்கு ஞாபகம் இல்லையா..??” என்று கேட்டான் அவன். அவன் நேற்று நடந்த partyஐ பற்றி பேசியவுடன் தான் அவளுக்கு அனைத்து அரைகுறையாக ஞாபகம் வர தொடங்கியது.

அதனால் “Shit.. நேத்து நான் குடிச்சிட்டு போதைல அவ்ளோ அலப்பறை பண்ணனா.. நல்லவேளை அதுக்கெல்லாம் விஷ்வா எதுவும் சொல்லல.” என்று நினைத்து பதறிய மேகா, “Yeah.. எனக்கு இப்பதான் ஞாபகம் வருது. Sorry நான் அப்ப கொஞ்சம் குடிச்சிருந்தேன். So எனக்கே தெரியாம நான் உங்களை என் கூட dance ஆடச் சொல்லி ‌Torture பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.” என்றாள்.

“No.. no.. I thoroughly enjoyed that moment. It’s my pleasure to dance with you. And you are a very good dancer.” என்று அவன் சொல்ல, “thank you so much for your kind words. But still எனக்கு கொஞ்சம் awkwardஆ தான் இருக்கு. So I’ll talk to you later, bye.” என்ற மேகா “முதல்ல நேத்து நடந்ததுக்கு விஷ்வாகிட்ட sorry சொல்லணும். நான் இவர் கூட dance ஆடினதுக்கு அவன் என்ன நினைத்தானோ தெரியல.‌‌ ஒருவேளை அந்த கடுப்புல தான் கௌத்தமுக்கு ‌ project கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சாலும் என்னமோ..!!” என்று நினைத்தவள், நேராக விஷ்வாவின் கேபினுக்கு சென்றாள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured