Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 157

மூர்கனின் காதலி CH 157

by Thenaruvi Tamil Novels
31 views

அத்தியாயம் 157 ‌

மறுநாள் காலை மற்றவர்கள் எழுந்து கொள்வதற்கு முன்பே சேரனும், சௌபர்ணிகாவும் யாரிடமும் எதுவும் சொல்லாமல் எழுந்து கிளம்பி வெளியே சென்று விட்டார்கள். வழக்கம்போல training எடுப்பதற்காக காலையில் கீழே garden areaவிற்க்கு சென்ற விஷ்வாவும், மேகாவும் “எங்க அக்காவையும் மாமாவையும் காணோம்..??” என்று மற்றவர்களிடம் கேட்க, “தெரியல bro. நாங்க அவங்க ரூமுக்கு போய் பார்த்தோம். அங்க யாரும் இல்ல. Call பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறாங்க.” என்றான் ரிஷி.

“அச்சச்சோ ஒருவேளை அவங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு ஓடி போய்ட்டாங்களா..??” என்று ஷாக்காகி மேகா கேட்க, “அவங்களுக்கு தான் already marriageஏ ஆயிடுச்சுல்ல.. அப்புறம் எதுக்கு அவங்க யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம வீட்டைவிட்டு ஓடி போகணும்..?? சும்மா லூசு தனமா ஏதாவது சொல்லனும்னு சொல்லாத.” என்றான் விஷ்வா.‌

“இன்னும் கொஞ்சம் நாள்ல அவங்க ரெண்டு பேருக்கும் love proposal anniversary வரப்போகுது. Maybe அதனால அவங்க ரெண்டு பேரும் எங்கயாவது outing போயிருக்கலாம்.” என்று மகேஷ் சொல்ல, “பார்றா.‌.. அவங்க love anniversary date எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் bro..??” என்று ஷாக்காகி கேட்டான் ரிஷி.

“அவங்க எனக்கும் அக்கா தான்டா. அவங்க சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு தெரியும். அவங்க சீக்கிரமா கிளம்பினதனால யார்கிட்டயும் எதுவும் சொல்லாம போயிருப்பாங்க. ரெண்டு பேரும் ஒன்னா தானே வெளிய போயிருக்காங்க.. அவங்களே வந்துடுவாங்க. நீங்க freeஆ விடுங்க.” என்று மகேஷ் செல்ல, “பிரியாவும், மகதியும் எங்க..?? அவங்களும் அக்கா கூட போய் இருக்காங்களா..??” என்று கேட்டான் விஷ்வா.‌ “அவங்க ரெண்டு பேரும் இங்கதான் இருந்தாங்க சார். சௌபர்ணிகா மேடம் சொல்லாம கொள்ளாம வெளிய கிளம்பி போயிட்டதனால CCTV footageஐ வச்சு அவங்க கார follow பண்ணிட்டு போயிருக்காங்க. நாங்க உங்ககிட்ட இத inform பண்ணனும்னு பேசிட்டு இருந்தோம். அதுக்குள்ள நீங்களே கீழே வந்துட்டீங்க.” என்றாள் சாரா.

“விடுங்க. அவங்களுக்கு privacy வேணுன்னு தானே bodyguards இல்லாம யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி போயிருக்காங்க.. அவங்களா வீட்டுக்கு வரும்போது வரட்டும். அந்த பொண்ணுங்கள திரும்ப வர சொல்லு. அக்காவும், அவரும் வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் ‌ எனக்கு inform பண்ணுங்க போதும்.” என்று விஷ்வா சொல்லிவிட, “ஓகே சார்.” என்றாள் சாரா.

காலை 10 மணியளவில் விஷ்வா மேகாவுடன் தனது ஆபிஸுற்க்கு சென்றான். அப்போது அவனுக்கு ஒரு unknown numberல் இருந்து call வந்தது. அதனால் விஷ்வா அதை அட்டென்ட் செய்யவில்லை. தொடர்ந்து அதே numberல் இருந்து அவனுக்கு இரண்டு மூன்று முறை கால் வந்து கொண்டே இருந்தது. அதனால் எரிச்சல் அடைந்த விஷ்வா “அடச்சி.. யார் இது கருமம்.. சும்மா call பண்ணிட்டே இருக்காங்க..‌ ஒரு தடவை நம்ம call பண்ணி யாராவது cut பண்ணி விட்டா, அவங்க busyயா இருப்பாங்கன்னு புரிஞ்சிக்கிற basic manners கூட இருக்காதா..??” என்று நினைத்து சலித்துக் கொண்டு அதை attend செய்து “ஹலோ யாரது..??” என்று கோபத்தில் சத்தமாக கத்தினான்.

“சார்.. சார்.. கோபபபடாதீங்க சார்.. என் பேரு நேத்ரா. நான் சௌபர்ணிகா மேடமோட personal assistant. நான் உங்ககிட்ட ஒரு Importantஆன‌ விஷயத்தை பத்தி பேசணும். அதான் சௌபர்ணிகா மேடம்  phoneல இருந்து அவங்களுக்கே தெரியாம உங்க numberஐ‌ எடுத்து call பண்ணேன்.” என்று அவள் சொல்ல, “சொல்லுங்க. என்ன விஷயம்? இப்ப அக்கா எங்க இருக்காங்க? நீங்களும் அவங்க கூட தான் இருக்கீங்களா..?? நாங்க call பண்ணா அவங்க ஏன் எடுக்க மாட்டேங்கறாங்க..??” என்று அடுக்கடுக்காக அவளிடம் கேள்விகள் கேட்டான் விஷ்வா.

“நானும் அவங்க கூட தான் சார் இருக்கேன்.‌ அவங்க உள்ள சேரன் சார் கூட busyஆ இருக்காங்க. அதான் உங்க callஐ attend பண்ணியிருக்க மாட்டாங்க.” என்று நேத்ரா சொல்ல, “இப்போ நீங்க எங்க இருக்கீங்க..??” என்று கேட்டான் அவன். “register officeல sir.” என்று அவள் சொல்ல,

“register officeலயா… அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க மூணு பேரும்..??” என்று விஷ்வா கேட்க, “எப்போ இதையெல்லாம் மேடம் plan பண்ணாங்கன்னு எனக்கே தெரியல சார். திடீர்னு அவங்க அவங்களோட எல்லா properties and sharesஐயும் சேரன் சாருக்கு எழுதி கொடுக்குறாங்க. இத பத்தி யாருக்கும் சொல்ல வேண்டாம்னு அவங்க முடிவு பண்ணிட்டாங்க போல. என்கிட்டயும் சொல்லல. இப்போ இங்க register officeல last minuteல சாட்சி கையெழுத்து போட ஆளில்லைன்ன உடனே ‌ எனக்கு call பண்ணி இங்க வர சொல்லி இருக்காங்க.‌
நான் ஏன் திடீர்னு இப்படி எல்லாம் பண்றீங்கன்னு அவங்க கிட்ட கேட்டேன். அவங்க அதுக்கு சரியா answer பண்ணாம, இத பத்தி இப்ப யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க. முக்கியமா உங்களுக்கு இதெல்லாம் தெரியக்கூடாதுன்னு சொன்னாங்க சார். அவங்க சொன்னதை மீறியும் நான் உங்ககிட்ட இத சொல்றதும் தப்புதான். But அவங்க உங்ககிட்டயே சொல்லக் கூடாதுன்னு சொன்னது தான் எனக்கு ரொம்ப தப்பா பட்டுச்சு சார். எனக்கு என்னமோ இப்போ மேடம் அவங்க husbandஐ கல்யாணம் பண்ண கொஞ்ச நாளிலயே நம்பி  அவங்ககிட்ட இருக்கிற எல்லாத்தையும் கொடுக்கிறது சரியா இருக்கும்னு தோணல. அதான் இத பத்தி உங்களுக்கு தெரியாம இருக்க கூடாதுன்னு call பண்ணேன் சார்.” என்றாள் நேத்ரா.

அவள் சொன்னதை அவனால் நம்பவே முடியவில்லை. இருப்பினும் அதனையும் உண்மை போல இருப்பதால், “எந்த register officeல நீங்க இப்ப இருக்கீங்க..?? Registration முடிஞ்சிருச்சா..??” என்று விஷ்வா அவசரமான குரலில் கேட்க, “சைதாப்பேட்டை register officeல இருக்கோம் சார். இன்னும் Registration முடியல. நீங்க சீக்கிரம் வந்தா இத stop பண்ணிடலாம்.” என்றாள் நேத்ரா. “ஓகே நான் அங்க உடனே வரேன். நீங்க அங்க என்னென்ன நடக்குதுன்னு எனக்கு update பண்ணிட்டே இருங்க.” என்று அவன் சொல்ல, “கண்டிப்பா சார்.” என்ற நேத்ரா அந்த அழைப்பை துண்டித்தாள்.

அவ்வளவு நேரம் விஷ்வா நேத்ராவுடன் phoneல் பேசியதை கேட்டு குழம்பிய மேகா “என்னாச்சு.. இப்போ நம்ம ‌register officeக்கு போறோமா..?? அங்க யாரு இருக்காங்க..??” என்று கேட்க, “நான் மட்டும்தான் போறேன். நீ ஏதாவது taxi officeக்கு போ.” என்ற விஷ்வா அவளைப் பேசவிடாமல் சாலையோரமாக இறக்கிவிட்டுவிட்டு  உடனே தனது காரில் அந்த register officeஐ நோக்கி அதித வேகத்தில் பறக்க, “என்ன நம்ம பாஸ் இப்ப வரவர நம்மகிட்ட எதுவும் சொல்லாம இப்படி திடீர் திடீர்னு அவர் பாட்டுக்கு எங்கயாவது கிளம்பி வெளியில போயிடுறாரு..!! போற வழியில மேகாவ வேற நடு ரோட்டில இறக்கி விட்டுட்டு போறாரு.. இப்ப புதுசா என்ன பிரச்சனைன்னு தெரியலையே..!!” என்று புலம்பியபடி மகேஷும், தயாளனும், அரவிந்தும் அவனை வேறு ஒரு காரில் பின் தொடர்ந்து சென்றார்கள்.

“sir அவங்க ரெண்டு பேரும் almost எல்லா processஐயும் complete பண்ணிட்டாங்க. registration ‌ முடியப்போகுது. சீக்கிரம் வாங்க..!!” என்று நேத்ரா விஷ்வாவிற்கு மெசேஜ் அனுப்ப, அதை பார்த்த விஷ்வா இன்னும் தனது காரின் வேகத்தை கூட்டி trafficஆன அந்த தார் ரோட்டில் தன் காரை வளைத்து நெளித்து ராக்கெட் வேகத்தில் ஓட்டி register officeஐ நோக்கி விரைந்தான்.

“இவர் இவ்ளோ வேகமா இந்த டைம்ல எங்க போயிட்டு இருக்காரு..??” என்று கார் ஓட்டிக் கொண்டிருந்த மகேஷ் கேட்க, “நாங்களும் உன் கூட தானேடா வர்றோம்.. எங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்..??” என்று கேட்டான் தயாளன். “டேய் இப்படியே உங்களுக்குள்ள பேசிட்டே இருந்து பாஸ்-ஓட கார மிஸ் பண்ணிடாதீங்க. ஒழுங்கா ரோட்டை பாத்து சீக்கிரம் போங்க.” என்று பின் சீட்டில் அமர்ந்திருந்த அரவிந்த் சொல்ல, “நான் வேகமா தான் போயிட்டு இருக்கேன். நீ வாய மூடுடா.“ என்ற மகேஷ் தானும் வேகமாக விஷ்வாவின் காரை follow செய்து சென்றான்.

சில நிமிடங்களுக்கு பிறகு விஷ்வாவின் கார் register officeன் வாசலில் சென்று நிற்க, அவனை பின் தொடர்ந்து சென்றவர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

மூச்சு வாங்க விஷ்வாவின் அருகே ஓடி சென்று நின்ற மகேஷ், “பாஸ் இப்ப எதுக்கு யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம நீங்க register office வந்தீங்க..?? எங்களை பயமுறுத்தி உங்க பின்னாடி ஓடி வர வைக்கிறதுக்கு தான் இப்படி எல்லாம் பண்றீங்களா நீங்க..??” என்று கேட்க,

“டேய் stupid மாதிரி பேசாத. அக்கா அவங்களோட propertiesஐ அவங்க husbandக்கு யாருக்கும் தெரியாம எழுதிக் கொடுக்கப் போறாங்கன்னு அவங்க assistant நேத்ரானு ஒரு பொண்ணு எனக்கு call பண்ணி சொன்னா. சீக்கிரம் போய் அது எங்க நடக்குதுன்னு பாருங்க. இன்னைக்கு அந்த registration நடக்க கூடாது.” என்ற விஷ்வா அவர்கள் மூவரையும் உள்ளே அனுப்பிவிட்டு தானும் சௌபர்ணிகாவை தேடி உள்ளே சென்றான். நேத்ராவிற்கு call செய்த மகேஷ் “ஏம்மா இப்ப நீங்க எல்லாரும் எங்க இருக்கீங்க..??” என்று கேட்டுவிட்டு விஷ்வாவுடன் அங்கே சென்றான்.  ‌

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured