Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 154

மூர்கனின் காதலி CH 154

by Thenaruvi Tamil Novels
40 views

அத்தியாயம் 154

மறுநாள் காலை சாதாரணமாக வழக்கம் போல் கண் விழித்த மேகா தூங்கிக் கொண்டிருந்த விஷ்வாவை எழுப்பி விட்டாள். அரை தூக்கத்தில் எழுந்து அவளை பார்த்த விஷ்வாவிற்கு நேத்து நடந்ததெல்லாம் ஞாபகம் வர, தொடர்ந்து அவளைப் பார்த்து ஹிஹிஹி என்று வாய்விட்டு சிரித்துக் கொண்டே இருந்தான். “என்னாச்சு இவனுக்கு.. photoக்கு சிரிச்ச மாதிரி pose கொடுக்க சொன்னா கூட கஞ்சப்பையன் மாதிரி இவன் கொஞ்சமா தான் சிரிப்பான்.

இன்னைக்கு என்ன என்னை பாத்து சும்மா பைத்தியம் பிடிச்ச மாதிரி ஹிஹிஹி ஹிஹிஹின்னு இழிச்சுட்டே இருக்கான்..!!” என்று நினைத்த மேகா, “இப்ப எதுக்கு என்னை பார்த்து சிரிச்சிட்டே இருக்க நீ..??” என்று கோபமாக கேட்டாள்.
“அதுவா.. அது போக போக உனக்கே தெரியும். நீ சீக்கிரம் கிளம்பி trainingக்கு கீழ வா. நான் முன்னாடி போறேன்.” என்ற விஷ்வா refresh ஆகிவிட்டு கீழே சென்றான்.

“reason எதுவா இருந்தா என்ன? முன்னாடி எல்லாம் இவன் கொரில்லா குரங்கு மாதிரி மூஞ்சிய உர்ருனு வெச்சிக்கிட்டு யார்கிட்டயும் ஒழுங்கா பேசாம, சிரிக்கிறதுன்னா என்னன்னே தெரியாம இருந்தான். அதுக்கு இவன் இப்படி இளிச்ச மாதிரி இருக்கிறது எவ்வளவோ பரவால்ல.‌ எல்லா புகழும் இந்த மேகாவிற்கே..!!” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட மேகா கிளம்பி கீழே சென்றாள்.
தினசரி training session முடிந்த உடன் வியர்த்து வடிய ஓரமாக இருந்த stone Benchல் அனைவரும் அமர்ந்தார்கள்.

“நான் தான் ரொம்ப நாளா training எடுத்துக்கிறனே.. இந்த இத்தனை நாள்ல நான் நிறைய கத்துக்கிட்டேன். என்கிட்ட யாராவது வம்பு பண்ணா, அவங்கள அப்படியே ஈசியா அடிச்சு தூக்கி போட்டுருவேன்.” என்று confidentஆக சொன்ன மேகா, “இனிமே இதெல்லாம் எனக்கு தேவை இல்லைன்னு நினைக்கிறேன். உனக்கு என்ன தோணுது…?? நான் இப்ப நல்லா train ஆகிட்டேன் தானே..!!” என்று கேட்க, “எனக்கு எல்லாம் ஒன்னும் தோணல. உனக்கு இன்னும் training தேவையா இல்லையான்னு ‌‌வா test பண்ணி பாத்திரலாம்.” என்ற விஷ்வா அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.

“விஷ்வா என்ன பண்ண போற.. என் கைய விடு வலிக்குது.” என்று அவள் சினுங்க, “நான் சும்மா பிடிச்சதுக்கே உனக்கு வலிக்குதா…?? இதான் நீ training எடுத்த லட்சணம். இப்ப வா… வந்து என்ன Attack பண்ணு. பதிலுக்கு நான் உன்ன attack கூட பண்ண மாட்டேன். just defence தான். நீ அடிக்கிற ஒரே ஒரு அடி மட்டும் என் மேல விழுந்துடட்டும். நாளையில இருந்து உனக்கு no training.” என்றான் விஷ்வா.

அதனால் மகிழ்ந்த மேகா “வாவ்.. இந்த offer நல்லா இருக்கே..!! இவன வெளுத்து வாங்க இது உனக்கு கிடைச்ச நல்ல chance மேகா. இத மிஸ் பண்ணிடவே பண்ணிடாத நல்லா பூந்து விளையாடு.” என்று நினைத்து, “ஒரே ஒரு அடி தானே அடிக்கணும்.. அதெல்லாம் எனக்கு சப்பை matter. என்கிட்ட அடி வாங்கிட்டு நீ அழுதுட்டு நிக்காம இருந்தா சரி.” என்றுவிட்டு ஏதோ boxing செய்ய போவதை போல தன் கைகளை ரெடியாக வைத்துக்கொண்டு அவன் அருகில் சென்றாள்.

‌ அவனும் வா.. வா.. என்பதைப்போல அவளை தன் பக்கம் வரச் சொல்லி சைகை செய்தான். வேகமாக அவனை நோக்கி ஓடிச் சென்ற மேகா அவனை உதைக்க முயற்சி செய்ய, நகர்ந்துவிட்டான் விஷ்வா. அவள் அவன் கைகளில் குத்த பார்க்க, அப்படியே பின் பக்கமாக சாய்ந்து தப்பித்தான் அவன்.

“என்ன தப்பிச்சுக்கிட்டே இருக்கியா நீ..?? இருடா.. பொக்குனு உன் மூஞ்சிலேயே குத்தறேன்.” என்று நினைத்த மேகா தன் கையை முறுக்கி கொண்டு அவனது அழகிய முகத்தை target செய்து குத்த போக, அவளது அந்த தாக்குதலிலும் இருந்து அசால்டாக தப்பித்தான் விஷ்வா.

இப்படியே கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு மேல் மேகா தொடர்ந்து விஷ்வாவை தாக்க முயற்சி செய்து தோற்றுப் போனாள். அவனை அடிக்கச் சென்று அவளுக்குத்தான் tired ஆனதே தவிர,

அவளைப் பார்த்து நக்கலாக சிரித்த விஷ்வா “என்னடி அவ்வளவுதான் நீ எடுத்த trainingஆ..?? நான் ஒண்ணுமே பண்ணாம சும்மா நிக்கும் போதே உன்னால என் முடிய கூட தொட முடியல. இதுல நான் உன்ன attack பண்ணா நீ எப்படி self defence பண்ணி உன்னை காப்பாத்திக்குவ..??” என்று கேட்டான். “அதெல்லாம் நான் என்ன காப்பாத்திக்குவேன். மத்தவங்கள அவங்க அசர்ற டைம்ல attack பண்றது தான் கஷ்டம். சும்மா defence பண்ணிட்டே இருக்கிறது எல்லாம் ஈசி தான். கஷ்டமா இருக்கிறத என்ன பண்ண சொல்லிட்டு, ஈஸியா இருக்கிறத நீ பண்ணிட்டு, எனக்கு எதுவும் தெரியலைன்னு குறை சொல்றியா..??” என்று கேட்டாள் அவள்.

ஏதோ படம் பார்ப்பதைப்போல அங்கு நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் அனைவரும்‌ இவர்களை பார்த்து தங்களுக்குள் கிண்டல் செய்து சிரித்து கொண்டு இருந்தார்கள்.

“ஓஹோ நீ அப்படி வர்ற.. அப்போ.. வா… position change பண்ணிக்கலாம். நான் உன்ன attack பண்ணேன். நீ எப்படி defence பண்றேன்னு பாக்கலாம்.” என்ற விஷ்வா அவளை அடிப்பதற்கு தயாராக,

“அய்யயோ.. என்ன இவன் நெஜமாவே நம்மளை அடிக்க ரெடி ஆயிட்டான்… இவன் சும்மாவே நம்மள ஒரே செகண்ட்ல லாக் பண்ணிடுவான். இப்போ என் கூட போட்டி போடுற mind setல சண்டைக்கு வந்தான்னா, சொல்லவே தேவையில்லை. அன்னைக்கு மாதிரி என்ன இத்தனை பேர் முன்னாடி தூக்கி தலைகீழா தொங்க விட்டாலும் விட்ருவான். இவன நம்ப முடியாது.” என்று நினைத்து பயந்த மேகா “எனக்கு already tiredஆ‌ இருக்கு. இதுக்கு மேல எல்லாம் என்னால யார் கூடயும் சண்டை போட்டுட்டு இருக்க முடியாது.” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வேகமாக உள்ளே ஓடி சென்று விட்டாள்.

“சின்ன புள்ளைங்க மாதிரி எப்படி ஓடுறா பாரு..!!” என்று நினைத்து தன்னையும் மறந்து லேசாக அவளைப் பார்த்து சிரித்த சௌபர்ணிகா சொல்ல, “ஆமா ஒரு குழந்தையை பெத்து அது ஓடி ஆடி விளையாடுறத பார்த்து ரசிக்கிற வயசுல… நீ இவள பார்த்து சிரிச்சிட்டு இருக்க.. நல்லா விளங்கும்.” என்று முனுமுனுத்த சேரன் அங்கிருந்து எழுந்து சென்று விட்டான். வாடிய முகமாக அவனை பின் தொடர்ந்து சென்றாள் சௌபர்ணிகா.

சில மணி நேரத்திற்கு பிறகு…
‌விஷ்வாவும் மேகாவும் ‌ MV Techன் main branchல் இருந்தார்கள். இதுவரை அவர்கள் செய்த அனைத்து projectகளும் successful ஆனதால் புது project தொடர்பாக தனது clients, business partners மற்றும் புதிதாக startup companies தொடங்கியுள்ளவர்களுடன் தனது officeல் ஒரு meeting arrange செய்திருந்தான் விஷ்வா. அதில் விருப்பமுள்ளவர்கள் தங்களது new projects தொடர்பான ideasஐ மற்றவர்களுடன் share செய்யலாம். அதில் அனைவராலும் ஈர்க்கப்படும் ideaவை select செய்து அந்த ‌company உடன் tie up செய்து அந்த குறிப்பிட்ட projectற்க்கு sponsor செய்யவிருக்கிறது MV Tech. அதனால் அந்த meetingல் கலந்து கொள்ள ஏராளமானவர்கள் வந்து இருந்தார்கள்.

அனைத்து ஏற்பாடுகளும் சரியாக இருக்கிறதா என்று check செய்துவிட்டு விஷ்வாவின் கேபினுக்கு சென்ற மகேஷ் “சார் வர வேண்டியவங்க எல்லாரும் வந்துட்டாங்க. நீங்களும் மேகாவும் வந்துட்டா ‌ meetingஐ start பண்ணிடலாம்.” என்று சொல்ல,

அவனது ரூமில் உள்ள மினி அறையில் இருந்து வெளியே வந்த மேகா “நாங்க ரெடி தான் வாங்க போலாம். நம்ம new projectகாக நானும் கொஞ்சம் ideas வச்சிருக்கேன். அத பத்தி தான் நாங்க discuss பண்ணிட்டு இருந்தோம்.” என்றவள், விஷ்வாவுடன் meeting hallக்கு சென்றாள்.
விஷ்வாவும், மகேஷும், வந்திருப்பவர்களை வரவேற்று formalityகாக ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு சென்று அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள். கிட்டத்தட்ட அந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள 50க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். Meeting start ஆனவுடன் அதில் ஒவ்வொருவராக வந்து தனது ideasஐ பற்றி அனைவரின் முன்னிலையிலும் பேசிவிட்டு அது தொடர்பான சில முக்கிய தகவல்களை projector மூலமாக presentation செய்தார்கள். அனைத்தையும் விஷ்வா கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, அவன் அருகில் அமர்ந்து இருந்தாள் மேகா.

அப்போது formal wearல் tip topஆக வந்து அனைவரின் முன்னிலையிலும் நின்ற இளைஞன் ஒருவன் தன் முன்னே இருந்தவர்களை பார்த்து “hello everyone.. I’m கௌதம் சுவாமிநாதன். From cloud technologies.“ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது project தொடர்பான ‌detailsஐ explain செய்ய தொடங்கினான்.

“யார் இவரு.. இவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..!!” என்று நினைத்த மேகா handsome and stylishஆக இருந்த கௌத்தமையே வைத்த கண் வாங்காமல் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்க, “ஐயோ மறுபடியும் இவனா..?? இங்கயும் வந்துட்டானா.. நேத்து நீ என் பொண்டாட்டி கூட dance ஆடினதுக்கே நான் உன் கைய, கால ஒடச்சி விட்டிருக்கணும். அதை நான் செய்யாததனால தைரியமா என் ஆபீஸ்கே வந்து என் முன்னாடியே நெஞ்ச நிமித்தி பேசுறியாடா நீ..?? உன் project எவ்ளோ நல்லா இருந்தாலும் சரி, நான் அதை என்ன ஆனாலும் select பண்ண மாட்டேன்டா.” என்று நினைத்த விஷ்வா அவனை எரித்துவிடும் பார்வை பார்த்தான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ youtube-ல் ஆடியோ நாவல்களை இலவசமாக கேட்டு மகிழுங்கள்!)

You may also like

Leave a Comment

About Me

Featured