Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 153

மூர்கனின் காதலி CH 153

by Thenaruvi Tamil Novels
32 views

அத்தியாயம் 153

சேரனுடன் அந்த partyக்கு வந்திருந்தாள் சௌபர்ணிகா. அவர்களை பின் தொடர்ந்து பிரியாவும், மகதியும் கூட அங்கே சென்றார்கள்.
“எல்லார் முன்னாடியும் அவன் கூட அப்படி dance ஆடுறியே உனக்கு அறிவு இருக்கா..??” என்று விஷ்வா கேட்க, “நான் அவன்கூட dance ஆடினது தப்புன்னா, நீ அந்த மேனாமினுக்கி கூட ‌dance ஆடுனது மட்டும் சரியா..?? அவ ஆளும் மூஞ்சியும். எனக்கு அவளை பார்த்தாலே பிடிக்கல. அதான் நானும் வேணும்னே அவன் கூட போய் dance ஆடுனேன். So it’s all your fault, okay..??” தானும் பதிலுக்கு கோபமாக சொன்னாள் மேகா.

“காவியா என் schoolmate. அவளா வந்து என்ன பாத்து பேசி, dance ஆடலாம்னு என்ன இழுத்துட்டு போயிட்டா.. அதுக்கு நான் என்னடி பண்றது..??” என்று அவன் கேட்க, “அப்போ கௌத்தம் என் friend. எனக்கு அவன் கூட dance ஆடனும்னு தோணுச்சு. அதான் நான் ஆடினேன்.” என்று தள்ளாடியபடி சொன்னாள் மேகா. அப்போது தான் அவளை சரியாக கவனித்த விஷ்வா “அடியேய் கிறுக்கி.. குடிச்சிருக்கியா நீ..??” என்று கேட்க, “ஈஈஈ.. லைட்டா..!!” என்று action உடன் சொன்னாள் மேகா‌.‌

“ஓஹோ.. குடிச்சிட்டு தான் இந்த ஆட்டம் ஆடிட்டு இருக்கியா நீ..?? என்னத்த குடிச்சு தொலைஞ்ச..!!” என்று அவன் கேட்க, “தெரியலையே.. ஆனா அது நல்லா இருந்துச்சு. நான் அத நாலஞ்சு தடவை குடிச்சேன் தெரியுமா..?? அது என்னன்னு server கிட்ட கேட்டு நீ எனக்கு இன்னொன்னு வாங்கி தரியா விஷ்வா ப்ளீஸ்..??” என்று கேட்டாள் அவள். அதனால் அவன் அவளை அடிக்கப் போவதைப் போல பாவாளா செய்ய, அவளும் உடனே பயந்ததை போல நடித்தாள்.

“அப்படியே ஒன்னு வச்சேன்னு வையேன்… உனக்குதான் drink பண்ற habit இல்லல்ல..‌ அப்புறம் என்ன ஏதுன்னே தெரியாம எதையாவது ஒன்ன எடுத்து இஷ்டத்துக்கு குடிச்சிட்டு இப்படித்தான் லூசு தனமா ஏதாவது பண்ணிட்டு இருப்பியா..??” என்று அவன் கேட்க, “sorry, next time உன்கிட்ட கேட்டுட்டு குடிக்கிறேன். ஓகேவா..??” என்று கேட்டுவிட்டு அவனைப் பார்த்து சிரித்தாள் அவள்.
இதற்கு மேல் அவனால் எப்படி அவள் மீது கோபப்பட முடியும்..?? அவள் சிரிப்பில் விழுந்துவிட்டான் விஷ்வா. “சப்பா.. உன்ன வச்சுக்கிட்டு.. சரியான இம்சைடி நீ.” என்றுவிட்டு லேசாக புன்னகைத்தவன், அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து party நடக்கும் இடத்திற்கு சென்றான். அங்கே ஓரமாக இருந்த tableல் சேரனுடன் அமர்ந்திருந்த சௌபர்ணிகா அவர்களைப் பார்த்தவுடன் ஹாய் சொன்னாள். அதனால் பதிலுக்கு தானும் “ஹாய் அக்கா..!! நீங்களும் வந்துட்டீங்களா..??” என்று கேட்ட மேகா துள்ளி குதித்து வேகமாக அவர்கள் அருகில் ஓடி சென்று சௌபர்ணிகாவை அணைத்துக்கொண்டு குழந்தை போல அவள் மடியில் அமர்ந்து கொண்டாள்.

“ஏய்.. மேகா.. லூசு எந்திரிடி. எல்லாரும் உன்னதான் பாக்குறாங்க. மானம் போகுது.” என்ற விஷ்வா அவள் கையை பிடித்து இழுக்க, “ம்ம்ஹிம்.. ம்ம்ஹிம்ம்.. அக்கா.. இங்க பாருங்க உங்க தம்பி லூசு பையன்.. மெட்டல் மண்டையன் என்ன திட்டிட்டே இருக்கான். நான் உங்களவிட்டு போக மாட்டேன். இவனை சும்மா இருக்க சொல்லுங்க.” என்றுவிட்டு அழுது சிணுங்கிய மேகா சௌபர்ணிகாவை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

“நான் இன்னும் எதுக்காக வாழனும்னு நினைக்கும் போதெல்லாம், எனக்கு உன் முகமும், என் தம்பி முகமும் தான் ஞாபகம் வரும் மேகா. விஷ்வா என்கூட பேசாம இருந்தப்ப எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா, அவ என்ன நல்லா புரிஞ்சுக்கவாளேன்னு நான் எத்தனையோ நாள் நெனச்சு ஏங்கி இருக்கேன்.
அதுக்கெல்லாம் பலனா தான் நீ எங்க வீட்டுக்கு வந்துருக்க. என் விஷ்வாவுக்கு நீ கிடைச்ச மாதிரி, எனக்கும் ஒரு நல்ல பையன் கிடைச்சிருந்தா என் lifeம் நல்லா இருந்திருக்கும்.” என்று நினைத்த சௌபர்ணிகா, “டேய் விடுடா. என் மடியில தானே உட்கார்ந்திருக்கா.. இருக்கட்டும். உனக்கு என்ன…?? அவ கை புடிச்சி இழுக்காத வலிக்கும்.” என்று சொல்ல, “ஆமா வலிக்கும்.. இழுக்காத.. போடா அந்த பக்கம்.” என்றாள் மேகா.

“ஐயோ.. ஓவரா குழந்தை மாதிரி பண்றாளே.. இனிமே இவளை எப்பவும் குடிக்கவே விடக்கூடாது.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட விஷ்வா, அதே tableல் அவர்களுடன் அமர்ந்து serverஐ அழைத்து அனைவருக்கும் உணவு பரிமாறச் சொன்னான். சௌபர்ணிகாவின் மடியில் அமர்ந்திருந்த மேகா அவள் கன்னங்களை தன் கைகளால் ஏந்தி “அக்கா..!!” என்று அழைக்க, “சொல்லுடி..!!” என்றாள் அவள் மேகாவின் கன்னத்தைப் பிடித்த விளையாட்டாக கிள்ளிவிட்டு.

“நீங்க ஏன்கா இப்பல்லாம் சோகமா இருக்கீங்க..??” என்று சோகமாக மேகா கேட்க, திடுக்கிட்ட சௌபர்ணிகா சேரணை ஒரு பார்வை பார்த்துவிட்டு சுதாரித்துக் கொண்டு “உனக்கும் உன் புருஷனுக்கு என்னடி ஆச்சு..?? மாறி மாறி ஒரே questionஐ கேக்குறீங்க..?? நான் நல்லாதான் இருக்கேன். நான் office workல கொஞ்சம் busyயா இருக்கிறதுனால உங்களுக்கு தான் அப்படி தோணுது.” என்றாள்.

“அப்ப நீங்க நிஜமாவே happyஆ இருக்கீங்களா..??” என்று மேகா கேட்க, “நீ happyஆ இருக்கியா..??” பதிலுக்கு அதே கேள்வியை அவளிடம் கேட்டாள் சௌபர்ணிகா.ன

“எனக்கு என்ன.. நான் ரொம்ப ரொம்ப ரொம்ப happyஆ இருக்கேன்.” என்று உற்சாகமான குரலில் மேகா சொல்ல, “ம்ம்.. நீ happyஆ இருந்தா, நானும் ‌happyஆ தான் இருப்பேன்.” என்றாள் அவள்.

அதனால் அவளை அணைத்துக் கொண்ட மேகா “I love so much akka.. எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் தெரியுமா..??” என்று போதையில் பிணாத்திகொண்டு இருக்க, “என்னடா இவ ஓவரா குடிச்சிட்டாளா..??” என்று விஷ்வாவை பார்த்து கேட்டாள் சௌபர்ணிகா.

“ஆமா குடிச்சிட்டு என்னென்ன அலப்பறை பண்ற பாருங்க.. ராட்சசி. இவ நார்மலா இருந்தாலே என்னால இவளை control பண்ண முடியாது. இப்ப சுத்தமா முடியல. நாக்கு தள்ளுது.” என்ற விஷ்வா “மேகா.. இங்க வந்து உட்காரு டி. பாவம் அக்கா. உன் weightஐ அவங்க எவ்ளோ நேரம் தாங்குவாங்க..?? இங்க வந்து உட்கார்றியா இல்லையா இப்போ..??” என்று கேட்டு அவளை மிரட்டினான்.

“ஆமாமா நான் weightஆ இருப்பேன். Sorry அக்கா.” என்ற மேகா சௌபர்ணிகாவின் மீது இருந்து எழுந்து சென்று விஷ்வாவின் மாடியில் அமர்ந்து கொண்டு “இப்போ ஓகேவா..??” என்று கேட்டாள். “சோதிக்காதடி என்னைய.. போதும். முடியல..!!” என்ற விஷ்வா அவளை தன் மடியிலேயே அமர வைத்து சாப்பிட வைத்தான். பின் இரவு 10 மணியளவில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி அவரவரது காரில் வீட்டை நோக்கி சென்றார்கள். போதையில் இருந்த மேகா தொடர்ந்து உளறிக்கொண்டே வர, “கொஞ்ச நேரம் வாய மூடுடி ப்ளீஸ்..!!” என்று அவளிடம் கெஞ்சினான் விஷ்வா.

“நான் எதுக்கு வாய மூடனும்..?? இந்த சுதந்திர இந்தியாவுல எனக்கு பேசக்கூட freedom இல்லையா..?? நான் நல்லா பேசுவேன். சத்தமா கத்தி கத்தி பேசுவேன். அப்புறம் எனக்கு புடிச்ச பாட்டயெல்லாம் உன் காது கிட்ட வந்து பாடுவேன்.” என்ற மேகா முதலில் ‌“ஆஆஆஆஆ…. ஊஊஊஊஊ… ஏஏஏஏஹேஹேய்ய்ய்ய்‌ லலாலா..லாலா…லாலா….!!!” என்று தனது அடி தொண்டையிலிருந்து கத்திவிட்டு பின் “இப்ப பாடுறேன் பாரு.. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன். காணாத கண்களை காண வந்தேன்…!!” என்று விஷ்வாவின் அருகே சென்று அவன் காதுக்குள் சத்தமாக பாடி அவனை torture செய்தாள்.

“அடியே வாய மூடுரியா.. இல்ல வாய் மேலயே ஒன்னு வைக்கவா.. ஸ்சு.. வாய மூடு. நீ கத்துற கத்தல ‌ ரோட்ல போறவன் வர்றவன் எல்லாம் நம்மளதான்டி திரும்பி பார்த்துட்டு போறான். வீட்டுக்கு போற வரைக்கும் ஒழுங்கா கம்முனு இரு. இல்லனா அப்படியே கார் doorஐ‌ தொடர்ந்து வெளிய தள்ளி விட்டுடுவேன் பாத்துக்கோ..!!” என்று விஷ்வா அவளை மிரட்ட, “நீ என்னோட நல்ல புருஷன்… செல்ல புருஷன். அப்படியெல்லாம் என்ன நீ கீழே தள்ளிவிட்டு கொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும். ஆனா நீ இப்படி சொல்லும்போது தான், எனக்கு இன்னும் நல்லா சத்தமா கத்தி பாடணும்ன்னு தோணுது.” என்ற மேகா மீண்டும் “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்.

டம்..டம்.. அங்கே குவிந்ததம்மா பெண்கள் எல்லாம் வண்டாட்டம்.. வண்டாட்டம்.. டம்டடட..டம்டடடம்ம்டடடம்ம்.. கொண்டாட்டம்.. அங்கே கொண்டாட்டம்..!!” என்று சத்தமாக பாடினாள்.

இம்முறை அவள் பாடுவதை கேட்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. “என்னடி பாட்டு இது.. இதை இப்படி பாடுற…??” என்று சிரிப்பை அடக்க முடியாமல் அவன் கேட்க, “இது சாமி பாட்டு. எனக்கு முருகன் ரொம்ப பிடிக்கும் தெரியுமா..?? எனக்கு பக்தி இப்ப முத்தி போயிருச்சு. முருகா.. ஓம் முருகா.. சீக்கிரம் உன்னை பார்க்க நான் உன் கோயிலுக்கு வரேன் முருகா. I miss you so much. ஆமா, பழனிக்கு போனா பஞ்சாமிர்தம் தருவாங்கல்ல.. இந்த டைம்ல போன இருக்குமா..?? சொல்லு முருகா.. எனக்கு நீ பஞ்சாமிர்தம் குடுப்பியா..??” என்று மேலே பார்த்து போதையில் உளறினாள் அவள்.

அதனால் காரை ஓரங்கட்டிய விஷ்வா “நீ என்ன பண்ணுவியோ பண்ணுடி.” என்று சொல்லி விட, தொடர்ந்து வேறு வேறு மாடுலேஷனில் விதவிதமான பாடல்களை பாடினாள் அவள். அதைப் பார்த்து ரசித்த விஷ்வா, “இருடி நாளைக்கு காலைல நார்மல் ஆவில அப்போ இருக்கு உனக்கு.” என்று நினைத்து அவள் செய்த அத்தனை சேட்டைகளையும் தன் mobile phoneல் videoவாக எடுத்து வைத்துக் கொண்டான். அது தெரியாமல் போதையில் இஷ்டத்திற்கு பிதற்றி கொண்டு இருந்தாள் அவள்.

அவர்களது காரை தன் காரில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கௌத்தம், மேகா பாடும் சத்தம் அவன் வரை தெளிவாக கேட்டதால் தனது காரை மறைவாக ஒரு இடத்தில் நிறுத்தி அவள் பாடுவதை அவனும் கேட்டு ரசித்தான். கூடவே “இந்த டைம்ல அங்க விஷ்வாவுக்கு பதிலா உன் கூட நான் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ல மேகா..?? ச்சே‌‌.. உன்ன மாதிரி ஒரு சூப்பர் பொண்ண நான் மிஸ் பண்ணிட்டேன். ஆனா தெரிஞ்சே இதுக்கப்புறம் மிஸ் பண்ணிட கூடாதுன்னு தோணுது. இனிமே நான் உன்னை விடமாட்டேன்.” என்றும் நினைத்தான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை இலவசமாக நமது தேனருவி தமிழ்  நாவல்ஸ் வெப்சைட்டில் படிக்கலாம் ✅)

You may also like

Leave a Comment

About Me

Featured