Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 175

மூர்கனின் காதலி CH 175

by Thenaruvi Tamil Novels
25 views

அத்தியாயம் 175

எதையெதையோ சொல்லி மேகாவிடம் கெஞ்சி கூத்தாடி அவளை ஆபீஸுற்க்கு அழைத்துச் சென்றான் மகேஷ். காரில் செல்லும்போது கூட “நீ எங்க இருக்க விஷ்வா..?? இந்நேரம் நீ morning breakfast சாப்பிட்டு tablet சாப்பிட்டு இருக்கனுமே..!! நான் உன் கூடவே இருந்து உனக்கு இதையெல்லாம் ஞாபகப்படுத்தினா கூட நீ இத பெருசா care பண்ணி கரெக்டா செய்ய மாட்ட. இப்ப நீ எங்கயோ இருக்க. நீ எப்படி இருக்க..?? என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரியாம எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.” என்று நினைத்து கண்ணீர் சிந்தியபடி இருந்தாள்.

“ப்ளீஸ் மேகா அழுகாத. கொஞ்சமாவது நார்மலா இருக்க try பண்ணு. பாஸ் இல்லாம நீயும் நானும் மட்டும் ஆபீஸ் போனா அவர் எங்கென்னு கண்டிப்பா எல்லாரும் கேட்பாங்க.
So நான் எல்லார்கிட்டயும், பாட்டி இறந்ததுல பாஸ் கொஞ்சம் சோகமா இருந்தாரு. அதனால mind refreshmentகாக solo world tour போயிருக்காரு. சீக்கிரம் வந்துருவாருன்னு சொல்லப்போறேன். நீயும் அதையே maintain பண்ணிக்கோ. தெரியாம கூட யார்கிட்டயும் அவர் லெட்டர் எழுதி வச்சுட்டு காணாம போனத பத்தி எல்லாம் சொல்லிடாத. அதெல்லாம் investorsக்கு தெரிஞ்சா பெரிய problem ஆயிடும் மேகா. Mind it.” என்று சொல்லி சமாதானப்படுத்தி board meeting நடக்கும் இடத்திற்கு அவளை நேரடியாக அழைத்து சென்றான்.
விஷ்வாவின் advocate அந்த meetingஐ தனிப்பட்ட முறையில் arrange செய்திருந்ததால், கௌத்தம் உட்பட முக்கியமானவர்கள் அனைவரும் அங்கே ஆஜராகி இருந்தார்கள். விஷ்வாவை பற்றிய சிந்தனைகளில் தான் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் மகேஷ் உடன் meeting hall-ற்க்குள் நுழைந்த மேகா அங்கு இருந்தவர்களை பார்த்து சுதாரித்துக் கொண்டு “என்ன அண்ணா நடக்குது இங்க..?? advocate Sir ஏதோ என்கிட்ட பேசணும்னு சொன்னாருன்னு சொல்லி தானே என்ன ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்தீங்க..!! அப்புறம் எதுக்கு நம்ம இங்க meeting hallக்கு வந்திருக்கோம்..?? Board members வேற வந்திருக்காங்க..!! எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல.” என்று விரக்தியுடன் என்றாள்.

“please relax மேகா. நம்ம எல்லாரும் இப்ப ஏன் இங்க assemble ஆகி இருக்கோம்னு advocate sirஏ தெளிவா சொல்லுவாரு. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு. இது எல்லாமே விஷ்வா சாருக்காக, நம்ம MV Techகாக தான். விஷ்வா சாரை பத்தி rumours எல்லாம் spreadஆகி அது ஓஞ்சு, இப்பதான் 4, 5 மாசமா எல்லாமே கரெக்டா போயிட்டு இருக்கு. அது இனிமேலும் கரெக்டா இருக்கிறது உன் கையில தான் இருக்கு. இங்க யார் என்ன பேசினாலும், அத கேட்டு உடனே react பண்ணிடாத. உன் கூட supportiveஆ நான் இருக்கேன். Trust me எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.” என்ற மகேஷ் அவளுடன் சென்று அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தான்.
அனைவரையும் வரவேற்று சில நொடிகள் பேசிய MV Tech legalன் advisor and senior advocateஆன பரந்தாமன் ஏற்கனவே அவரிடம் மகேஷ் சொல்லி இருந்ததைப் போல விஷ்வா மன நிம்மதியை தேடி world tour சென்றிருப்பதாக சொல்லிவிட்டு அவன் தனது உடமைகள் மற்றும் பொறுப்புகளை மேகாவை கவனித்துக் கொள்ள சொல்லி அவளுக்கு power of attorney எழுதி கொடுத்திருப்பதாக அறிவித்தார்.
அதைக் கேட்டு மேகா உட்பட அனைவரும் ஷாக்காணர்கள்.

“என்னாச்சு ஏன் திடீர்னு பரந்தாமன் சார் இப்படி சொல்றாரு..?? மீனாள் மேடம் funeralல கூட விஷ்வா சார் சரியில்ல. இப்போ திடீர்னு விஷ்வா சார் எங்கயோ tourக்கு போயிட்டாரு. மேகா மேடமுக்கு power of attorney எழுதிக் கொடுத்து இருக்காருனு சொல்றாரு..‌ அவங்க விஷ்வா சாரோட wifeஆ இருக்கலாம். அதுக்காக அவரோட positionல இருந்து chairmanஆ எல்லாத்தையும் manage பண்ற அளவுக்கு இவங்களுக்கு experience and knowledge இருக்காதே! யார்கிட்டயும் எதுவும் சொல்லாம, board members opinion கேட்காம அவர் எப்படி தானா இப்படி ஒரு முடிவு எடுப்பாரு..?? அவர் ஏதோ முடிவு பண்ணிட்டாரு என்பதற்காக, இந்த சின்ன பொண்ணு கையில MV Techஐ ஈஸியா பொம்மை மாதிரி தூக்கி கொடுக்க முடியுமா…?? எனக்கு இதெல்லாம் சரியா இருக்கும்னு தோணல. விஷ்வா சார் நேர்ல வந்து நம்மகிட்ட இத பத்தி பேசியே ஆகணும்.” என்று அங்கே இருந்தவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு விதமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் பேசியது பரந்தாமனுக்கும், மேகாவிற்கும், மகேஷுற்க்கும் கூட தெளிவாக கேட்டது.

ஏற்கனவே advocate சொன்னதைக் கேட்டு “என்ன பண்ணி வச்சிருக்க விஷ்வா? என்னால எப்படி இந்த powerஐ எடுத்துக்க முடியும்..??” என்று யோசித்தவள், மற்றவர்கள் தன்னை பற்றி negativeஆக பேசியதை கேட்டுவிட்டு “இல்ல.. என்னால இது முடியாது. நான் இப்படி பண்ணா, கண்டிப்பா MV Techக்கு பெரிய loss வந்துரும். மகேஷ் அண்ணா சொன்ன மாதிரி, இந்த கம்பெனி என் விஷ்வாவோட கனவு. அவன் என் மேல இருக்கிற நம்பிக்கையில ஏதோ லூசு தனமா இப்படி என் பேர்ல power of attorney எழுதி வச்சுட்டு போய்ட்டான். ஆனா என்னால எப்படி இதையெல்லாம் அவன் இல்லாம தனியா handle பண்ண முடியும்..?? அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. இவங்க எல்லாரும் சொல்றது கரெக்ட் தான். I am not capable of doing this.” என்று நினைத்து “இல்ல என்னால இது முடியாது.” என்று மகேஷிடம் மெல்லிய குரலில் சொன்னாள்.

அங்கே trainல் ஜன்னலோர seatல் அமர்ந்திருந்த விஷ்வாவை அவன் அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருத்தி குறுகுறுவென வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன இவன்.. அப்படியே சிலை மாதிரி ஆடாம அசையாம உட்கார்ந்து இருக்கான். ஒருவேளை தூங்குறானா.. இல்ல heart attack ஏதாவது வந்து பொட்டுன்னுகீது போயிட்டானா.. ஐயையோ இவன் பக்கத்துல வேற நம்ம தானே உட்கார்ந்திருக்கோம்… இவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா, போலீஸ் கண்டிப்பா நம்ம கிட்டயும் விசாரிப்பாங்க. இதுக்கு மேல எதுக்காகவும் நம்மளால தமிழ்நாட்டில இருக்க முடியாது.” என்று நினைத்தவள், அவன் முகத்திற்கு முன்னே தன் ஒற்றைக் கையை அசைத்துப் பார்த்தாள்.

விஷ்வா தன் கண்களை மூடி இருந்ததால், அவள் அப்படி செய்தது அவனுக்கு தெரியவில்லை. அதனால் அப்போதும் அவன் அசையாமல் இருக்க, “Oh my God.. இவனுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது.” என்று நினைத்து பதறிய அந்த பெண் “ஹலோ சார் தூங்கறீங்களா..??” என்று பயந்த குரலில் கேட்டாள். அப்போதும் விஷ்வா பதில் சொல்லவில்லை.

“Shit.. நெஜமாவே இவன் செத்துட்டானா..?? பார்க்கவே வேற ஆளு ஒரு மாதிரி டெரரா இருக்கானே.. இவன் யாரு என்னன்னு தெரியலையே! ச்ச்சே.. இப்படி வந்து நல்லா மாட்டிக்குவேன்னு தெரிஞ்சிருந்தா, கால் வலிச்சாலும் பரவாயில்லைன்னு சீட் கிடைக்கிற வரைக்கும் நின்னுட்டே வந்திருப்பேனே..!! இப்ப என்ன பண்றது…?? பேசாம அப்படியே எந்திரிச்சு வேற எங்கேயாவது யாருக்கும் தெரியாம போய் ஓரமா நினைக்கலாமா..?? அப்பயும் நம்ம மேலதானே சந்திக்கப்படுவாங்க.. எதுக்கும் இன்னொரு தடவை இவன கூப்பிட்டு பாக்கலாம்.” என்று நினைத்து அவள் தன் ஆள்காட்டி விரலை அவன் தோள்களில் வைத்து ‌ லேசாக அழுத்தி “ஹலோ.. உங்கள தான் boss.. நீங்க தூங்கிட்டு இருக்கீங்களா..?? ஏன் இப்படி அசையாம அப்படியே கல்லு மாதிரி ‌ உக்காந்து இருக்கீங்க..??” என்று கேட்டாள்.

அவள் அப்படி செய்ததால் அதுவரை ஜன்னல் பக்கமாக ‌ தன் முகத்தை திருப்பிக் கொண்டிருந்த விஷ்வா இப்போது திரும்பி அவளைப் பார்த்தான். ‌கடந்த சில நாட்களாகவே சோகத்தில் இருந்த விஷ்வா தன்னை சரிவர பராமரித்துக் கொள்ளாததால் அவன் தலை முடி வளர்ந்து அவன் கழுத்து வரை தொங்கிக் கொண்டிருக்க, trim செய்யப்படாத தாடி மற்றும் மீசையுடன் கிட்டத்தட்ட அந்நியன் படத்தில் வரும் terror character விக்ரம் போலவே பயங்கரமாக இருந்தான்.‌ மொத்தத்தில் ‌இப்போது கண்ணாடியில் அவன் முகத்தை காட்டி‌ அவன்தான் MV Techன் chairman என்று சொன்னால், அவனே நம்ப மாட்டான்.
இருப்பினும், அவன் cap மற்றும் cooling glass போட்டு ‌ அவன் முகத்தை ஓரளவிற்கு மறைத்து இருந்ததால் அவளால் அவனை அடையாளம் காண முடியவில்லை.

“என்ன இவன் இப்படி இருக்கான்.. பாக்குறதுக்கு North Indian மாதிரி இருக்கான்.. அப்போ இவன்கிட்ட ‌ கொஞ்சம் carefulஆ தான் இருக்கணும்.” என்று நினைத்த அந்த பெண்ணிற்கு அவன் கண்ணாடி அணிந்து இருந்தாலும் ஏனோ அவன் தன்னை பார்த்து முறைப்பதை போலவே இருக்க, “sorry.. sorry… நான் உங்கள Distrub பண்ணிட்டேன்னு கோச்சுக்காதீங்க. உங்ககிட்ட ரொம்ப நேரமா movementஏ இல்லையா… அதான் என்னமோ ஏதோன்னு கொஞ்சம் பயந்துட்டேன். நீங்க தூங்குங்க.” என்று அவசரமான குரலில் சொன்னாள்.
பொதுவாகவே அவனுக்கு பெண்களிடம் பேச பிடிக்காது. இப்போது அவன் இருக்கும் மன நிலையில் இவளெல்லாம் அவனுக்கு ஒரு ஆளாகவே தெரியவில்லை.‌ அதனால் மீண்டும் தன் முகத்தை திருப்பி கொண்டு அதே positionல் அமர்ந்து கொண்டான் விஷ்வா.

அவனையே கவனித்துக் கொண்டிருந்த அந்த பெண் “இவன் சரியான சிடு மூஞ்சியா இருப்பான் போல.. என்ன மாதிரி ஒரு அழகான பொண்ணு பக்கத்துல வந்து உக்காந்து இருக்கறதுக்கு இந்நேரம் வேற எவனாவதா இருந்தா.. ஹாய்.. ஹலோ… யார் நீங்க..?? உங்க பேரு என்ன..?? எங்க இருந்து வரீங்க எங்க போறிங்க..?? உங்க mobile number கிடைக்குமா..?? அப்படி இப்படின்னு 1000 questionsக்கு மேல கேட்டிருப்பாங்க. ஆனா இவன் நம்மள கண்டுக்கவே மாட்டேங்கிறான்..!! பட் இதுதான் differentஆ நல்லா இருக்கு. Interesting..!! இந்த Trainஓட last stopping mumbai தான். ஒருவேளை இவனும் மும்பை போறதா இருந்தா.. நாளைக்கு ஈவினிங் வரைக்கும் இவன் என் கூட தானே travel பண்ணி ஆகணும். அதுக்குள்ள இவன பத்தி நான் தெரிஞ்சுக்கிறேன்.‌ எனக்கு என்னமோ இவனால இந்த journey bore அடிக்காம போகும்னு தோணுது.” என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள், தனது mobile phoneஐ பார்க்கத் தொடங்கி விட்டாள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured