அத்தியாயம் 218: கொலை முயற்சி
நேரம் காலை 10:00 மணி..
பிரவீனின் அலுவலகத்தில்…
தன்னுடைய அறையில் அவனுடைய மேனேஜர் சங்கருடன் அமர்ந்து பேசி கொண்டு இருந்தான் பிரவீன்.
பிரவீன்: “என்ன டா மாட்டிக்கிட்ட நம்மளோட ஆளுங்க எல்லாத்தையும் புடிச்சு வச்சுக்கிட்டு இந்த வருண் வெறித்தனமா விசாரிச்சிட்டு இருக்கான் போல… அவன் கல்யாணத்தப்ப ரித்திகாவ கடத்துனது நம்ப தான்னு கண்டு பிடிச்சுருவான்னோ..???” என்று சந்தேகமான குரலில் சங்கரிடம் கேட்டான்.
சங்கர்: “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை சார். அவங்க கேங்குல இருந்த ஒருத்தனுக்கு மட்டும் தான் உங்கள பத்தி தெரியும். அவனையும் ஏன்னு தெரியல வருண் சுட்டு கொன்னுட்டான். மத்தவங்க எல்லாரும் சும்மா சாதாரண அடியாளுங்க தான் சார். அவனுங்களுக்கு இந்த அசைன்மென்ட்ட கொடுத்தது யாருன்னு தெரியாது. சோ வருண் அவனுங்கள எவ்வளவு விசாரிச்சாலும் யூஸ் இல்ல.” என்று நக்கலாக சிரித்துக் கொண்டே சொன்னான். 😂 😂 😂
பிரவீன்: “அது ஓகே டா. கரெக்டா ரித்திகாவ நம்ம அங்க தான் வச்சிருக்கோம்னு அவன் எப்படி கண்டுபிடிச்சான்..??” என்ற குழப்பமான குரலில் கேட்டான். 🙄
சங்கர்: “அந்த வருண் நல்லா தெளிவா இருந்திருக்கிறான் சார். அந்த ரித்திகா போட்டு இருந்த ஏதோ நெக்லஸ்ல ஜி. பி. எஸ். இருந்திருக்கும் போல. அதனால க்ரிஷாவ வெச்சு அவங்க லொகேஷன ஈஸியா கண்டுபிடிச்சிட்டான். அந்த ஜி. பி. எஸ். லொகேஷன் மட்டும் அவங்களுக்கு கிடைக்கலைன்னா, ரித்திகாவை என்ன ஆனாலும் அவங்களால கண்டுபிடிச்சு இருக்கவேவே முடியாது.” என்று எரிச்சலான குரலில் சொன்னான். 😒
பிரவீன்: “அப்ப அந்த க்ரிஷாவை ஏதாவது பண்ணனும் டா. எங்க சைல்டு ஹொட் டேஸ்லயே எனக்கு அவ மேல ஒரு கண்ணு இருந்துச்சு. ஆனா அவ தான் கடைசி வரைக்கும் என்னை கண்டுக்காம அந்த ஹரி பின்னாடி சுத்திட்டு கிடந்தா. இப்போ அவளால வருனோட டெக்னிக்கல் டீம் ரொம்ப ஸ்ட்ராங்காயிடுச்சு. சோ அவள போட்டு தள்ளிரு. நம்ம ஆக்சிடென்ட் பண்ணா கூட எப்படியாவது அவ பிழைக்கிறதுக்கு ஒரு சான்ஸ் இருக்கும். அதனால ஆள் செட் பண்ணி டைரக்டா அவள போட்டுறு.” என்று வில்லத்தனமாக புன்னகைத்தபடி சொன்னான். 😂 😂 😂
ஷங்கர்: “அந்த பொண்ண இப்பவே கொள்ளனுமா சார்..??” என்று சந்தேகமான குரலில் கேட்டான்.
பிரவீன்: “பின்ன நம்ப நாராயணன் குரூப்புக்கு எதிரா பண்ண எல்லா சதி வேலையும் அவ இருந்து கண்டுபிடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ண சொல்றியா..??” என்று எரிச்சல் ஆனா குரலில் கேட்டான். 😒
சங்கர்: இல்ல சார் இப்ப தான் ரித்திகாவை கடத்தி பாம் பிளாஸ்ட் எல்லாம் பண்ணி.. பெருசா நிறைய சம்பவம் பண்ணி இருக்கோம். அதான் இப்பவே இது வேணுமான்னு கேட்கிறேன்.
பிரவீன்: “நான் சொல்ற வேலைய அப்படியே செய்யறதுக்கு தான் நான் உனக்கு சேலரி கொடுக்கிறேன். இப்படி நின்னு என்ன தேவை இல்லாம கொஸ்டின் பண்றது உன்னோட வேலை இல்ல. போய் நான் சொன்னதை செய்.” என்று அதிகார தோரணையில் தன்னுடைய காலின் மேல் காலை போட்டுக்கொண்டு சுழல் நாற்காலியில் அமர்ந்து அதை ஒரு சுற்று சுற்றியபடி சொன்னான்.
“ஓகே சார்.” என்று பவ்வியமான குரலில் சொன்ன சங்கர், பிரவீன் தனக்கு கொடுத்த வேலையை செய்து முடிப்பதற்காக விரைவாக அங்கு இருந்து சென்றான்.
நாராயணன் பேலஸ் இல்…
வருணின் அறையில் ரித்திகா இன்னும் அசதியில் காலை இவ்வளவு நேரம் ஆகியும் எழுதிரிக்காமல் தூங்கிக் கொண்டே இருந்தாள். வருண் சாப்பிட்டு கிளம்பி தன்னுடைய ஆபீஸ் -க்கு சென்றே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் ரித்திகா தூங்கிக் கொண்டு தான் இருந்தாள். டைனிங் டேபிளில் அமர்ந்து செண்பகத்துடன் வழக்கம் போல் சாப்பிட்டு முடித்துவிட்ட ஷாலினி தயக்கத்துடன் செண்பகத்தை பார்த்து, “மேடம் ரித்திகா அக்கா இன்னும் கீழ வரவே இல்ல. வருண் சாரும் கிளம்பி போய் ரொம்ப நேரம் ஆகுது. நான் போய் அவங்க என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வந்துடட்டுமா..?? எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.” என்று தயங்கி தயங்கி கேட்டாள்.
செண்பகம்: “அவளை போய் பார்க்கறதுனா, பாத்துட்டு வாம்மா. இதுக்கு எதுக்கு என்கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்க..??” என்று சாப்பிட்டுக் கொண்டே கேஷுவலாக கேட்டவள், மீண்டும் சாப்பிட தொடங்கினாள்.
செண்பகம் தன்னை இந்த குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒரு ஆளாக நினைப்பதும் இல்லை, நடத்துவதும் இல்லை என்று நினைத்து மகிழ்ந்த ஷாலினி, வேகவேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு வருணின் அறைக்கு சென்றாள். அந்த அறையின் கதவு லேசாக சாற்றப்பட்டு இருந்தது ஆனால் பூட்டப்படவில்லை. அதனால் சிறு தயக்கத்துடன் கதவைத் திறந்து உள்ளே சென்றாள் ஷாலினி. அவள் ஏற்கனவே பார்த்து இருந்த விஷ்ணுவின் அறையை விடவே வருணின் அறை மிகவும் பிரமாண்டமாக இருந்தது.
அதனால் ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் அந்த அறையை சுற்றி பார்த்தபடியே உள்ளே வந்த ஷாலினி, ஒரு பெரிய குயின் சைஸ் பெட்டில் வசதியாக படுத்து கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த ரித்திகாவை பார்த்தாள். தூங்கிக் கொண்டு இருக்கும் ரித்திகாவை தொந்தரவு செய்யாமல் வருண் சென்றிருப்பதை நினைத்துப் பார்த்த ஷாலினி, “நம்ம தான் ரித்திகா அக்கா வாழ்க்கை என்னாகுமோன்னு நெனச்சு தேவை இல்லாம பயந்துட்டோம் போல. இவங்க நல்ல ஜாலியா தூங்கிட்டு தான் இருக்காங்க. வருண் மாமாவும் ரித்திகா அக்காவ நல்லா தான் பாத்துக்கிறாரு.” என்று நினைத்தவள், இதற்கு மேலும் ரித்திகா தூங்கிக் கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து அவள் அருகே சென்று அவளை அழைத்தாள்.
ஷாலினியின் அழைப்பால் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்த ரித்திகா , “என்ன டி மார்னிங் ஏ இங்க வந்திருக்க..?? அதுக்குள்ள சீக்கிரமா எழுந்திருச்சு குளிச்சு ரெடி ஆயிட்டியா நீ…??” ஏண்டி கொட்டாவி விட்டபடியே ஷாலினியை பார்த்து கேட்டாள். “ஹான்.. சொல்லுவீங்க.. அக்கா சொல்லுவீங்க. இது மார்னிங் ஆ உங்களுக்கு..?? இன்னும் கொஞ்ச நேரம் ஆச்சுன்னா, ஆப்டர் நூனே ஆயிடும். மார்னிங் ல இருந்து ரேவதி அம்மா உங்களுக்கு கால் பண்ணிட்டே இருந்து இருக்காங்க. நீங்க அட்டென்ட் பண்ணலன்னு எனக்கு கால் பண்ணிாங்க. நான் அப்புறம் செண்பகம் மேடம் கிட்ட பர்மிஷன் கேட்டு இங்க உங்கள பாக்குறதுக்காக வந்தேன்.” என்றாள் ஷாலனி.
ஷாலினி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரித்திகா வேகமாக தன்னுடைய பெட்டில் இருந்து கீழே இறங்கியவள், அங்கு ஓரமாக ஒரு சுவரில் மாட்ட பட்டு இருந்த வால் கிளாக்கில் நேரத்தை பார்த்தாள். அதில் நேரம் மணி 11 :23 என்று காட்டியது. “அய்யய்யோ இவ்ளோ நேரமா நம்ம தூங்கி இருக்கோம்..?? அப்ப இந்நேரம் அவர் கிளம்பி ஆபீஸ்க்கு போயிருப்பாருல்ல…!!! அப்படி இருந்தும் அவர் ஏன் நம்மளை எழுப்பல..??” என்று நினைத்த ரித்திகா , “அவர் சாப்பிட்டு கிளம்பிட்டாரா..??” என்று அவசரமான குரலில் கேட்டாள்.
ஷாலினி: “அவருன்னா… நீங்க எவர பத்தி அக்கா கேக்குறீங்க…???” என்று ஒன்றும் தெரியாதவளை போல் கேட்டாள்.
ரித்திகா “அவர் தான் டி… உன்னோட மாமா.” என்று சிறு வெக்கத்துடன் சொன்னாள். ☺️😁 😁 😁
ஷாலினி: “ஓ…!!! ஹரி மாமாவ பத்தி கேக்குறீங்களா…?? நான் அவர பாக்கவே இல்ல அக்கா.” என்று வேண்டுமென்றே தன்னுடைய முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு சொன்னாள்.
ரித்திகா: அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பாக்கி ஷாலினியின் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தவள், “நான் யாரை பத்தி கேட்கிறேன்னு உனக்கு நிஜமாகவே தெரியதுல்ல…!!!” என்று எரிச்சலான குரலில் கேட்டாள். 😒
ஷாலினி: ரித்திகாவின் கையை தன் மீது இருந்து எடுத்து விட்டவள், “அட கிள்ளாதீங்க அக்கா வலிக்குது. வருண்மாமா எல்லாம் சீக்கிரமா எந்திரிச்சு ஜாக்கிங் போயிட்டு வந்து சாப்பிட்டு அவர் ஆஃபீஸ்க்கே கிளம்பி போய் ரொம்ப நேரம் ஆகுது. ஆனா எனக்கு ஒன்னு வாய்ச்சு இருக்கு பாருங்க… நல்லா எருமை மாடு மாதிரி இன்னும் தூங்கிட்டு இருக்கு. அக்காவும் தம்பியும் எப்படி தான் இந்த விஷயத்தில எல்லாம் ஒரே மாதிரி இருக்கீங்களோ தெரியல.” என்று கிண்டலாக சொன்னாள்.
ரித்திகா : “ஏய் என்ன நீ சைடு கேப்புல என்ன எருமை மாடுன்னு சொல்றியா நீ..??” என்று கேட்டு விளையாட்டுத்தனமாக கோவப்பட்டு அவளை பார்த்து முறைத்தாள். 😒 🤨
ஷாலினி ரித்திகாவை பார்த்து அழகாக சிரித்து வைத்தாள். 🤣 🤣 🤣 அப்போது அந்த அறையின் வாசலில் வந்து நின்று கொண்டு இருந்த சிலர், “நாங்க உள்ள வரலாமா மேடம்..??” என்று தங்களுடைய ஒரு தலையை மட்டும் உள்ளே நீட்டி ரித்திகாவை பார்த்து பர்மிஷன் கேட்டனர். அவர்களை பார்த்து “ஒரு நிமிஷம்” என்று குரல் கொடுத்த ரித்திகா, “நான் போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன். நீ போய் யாருன்னு பாரு.” என்று ஷாலினி இடம் சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.
5 நிமிடத்தில் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்து பார்த்தாள் ரித்திகா. ஷாலினி அவர்களை உள்ளே அழைத்து வந்து அங்கே இருந்த சோபாவில் அமர வைத்து இருந்தாள். இவர்கள் ஏன் இங்கே வந்து இருக்கிறார்கள் என்பது போல கேள்வியாக ஷாலினியை ரித்திகாவை பார்க்க, “உங்க பாத்ரூம் டைல்ஸ் ஸ்லிப்பர்யா இருக்குன்னு வருண் சார் இவங்க கிட்ட சொல்லி அதை சேஞ்ச் பண்ண சொல்லி இருக்காராம் அக்கா. இவங்க இப்போ டைல்ஸ் டிசைன்ஸ் ஐ கொண்டுட்டு வந்து இருக்காங்க. நீங்க அது எல்லாத்தையும் பாத்துட்டு உங்களுக்கு புடிச்சத சூஸ் பண்ணி சொன்னீங்கன்னா டூ ஹார்ஸில அத சேஞ்ச் பண்ணி குடுத்துடுவாங்கலாம்.” என்றாள் ஷாலினி.
ஷாலினி சொன்னதை கேட்டவுடன் நேற்று அவள் வருனிடம் பேசுகையில் பாத் ரூம் இன் டைல்ஸ் ஸ்லிப்பரியாக இருந்ததால் தான் கீழே வழுக்கி விழுந்து விட்டதாக சொல்லி அவன் அதை கண்டுகொள்ளாமல் இருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் இப்போது அவன் அதை மாற்ற ஆள் அனுப்பி இருப்பதை வைத்து, “நான் ஒரு தடவை விழுந்ததற்காக இவர் டோட்டலா ஒரே நாள்ல டைல்ஸ் ஐயே சேஞ்ச் பண்ற அளவுக்கு என்ன கேர் பண்றாரு. ஆனா அத வாயைத் திறந்து சொல்ல மாட்டேங்குறாரு. ஒரு வேளை வெளியில பாசமா இருக்கிற மாதிரி காமிச்சுகிட்டா அவரோட கெத்து குறைஞ்சு போயிரும்னு நினைக்கிறாரு போல.” என்று நினைத்துக் கொண்ட ரித்திகா, மகிழ்ச்சியுடன் அவர்கள் கொண்டு வந்த டிசைன்களை பார்த்து அதில் தனக்கு பிடித்தவற்றை தேர்வு செய்து அவர்களை அனுப்பி வைத்தாள்.
அவர்கள் அந்த குளியல் அறையின் நீளம் மற்றும் அகலத்தை அளந்து கொண்டு அதற்கு தேவையான டைல்ஸை கொண்டு வருவதாக சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றனர். அவர்கள் சென்றவுடன் ரித்திகாவை பார்த்து புன்னகைத்தபடி அவள் அருகே வந்த ஷாலினி, “என்ன அக்கா நடக்குது இங்க..?? ஒரே நாள்ல நீங்க இந்த அளவுக்கு வருண் மாமாவ கரெக்ட் பண்ணிடுவீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. பெரிய ஆளு தான் அக்கா நீங்க. அமைதியா இருந்துட்டு சத்தமே இல்லாம எல்லா வேலையையும் பாக்குறீங்க.” எங்க இரட்டை அர்த்தத்துடன் அவளைப் பார்த்து கிண்டலாக சொன்னாள். 😂 😂 😂
ரித்திகா : “அட ஏன் டி நீ வேற..!!!” என்று சலித்து கொண்டே சொன்னவள், “நான் நேத்து பாத்ரூம்ல வழுக்கி மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அதனால தான் அவரு உடனே ஆளை விட்டு அதை மாத்த சொல்லி இருக்காரு. மத்தபடி அவருக்கு என் மேல வேற எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல.” என்றாள்.
அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷாலினி, ரித்திகாவுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்து இருந்தும் இதே வீட்டில் இருக்கும் தனக்கே அது தெரிவிக்கப்படவில்லையே என்று நினைத்து ரித்திகாவின் மீது கோபப்பட்டாள். 😡 “கோச்சுக்காத ஷாலு. பாரு நான் உன்கிட்ட சொன்ன உடனே இப்ப நீ டென்ஷன் ஆகிற மாதிரி தானே எல்லாரும் டென்ஷன் ஆவாங்க. நான் நல்லா தான் இருக்கேன். அதான் நாங்க இது ஒரு விஷயமே இல்லைன்னு யார்கிட்டயும் சொல்லல.” என்ற படியே ஷாலினியின் தோள்களின் தன்னுடைய ஒரு கையை போட்டபடி அவளிடம் சொன்னாள்.
ஷாலினி: தன் மீது இருந்த அவளுடைய கையை விளக்கி விட்டவள், “மத்தவங்க கிட்ட சொல்லலைனா கூட ஓகே அதுக்காக நீங்க என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம இருப்பீங்களா..?? உங்கள பாத்துக்கறதுக்கு தான் நான் இங்கே இருக்கேன். உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, நான் அம்மா அப்பாவுக்கு பதில் சொல்லணும். ஆனா நீங்க என்னன்னா இதெல்லாம் ஒரு விஷயமான்னு சாதாரணமா கேக்குறீங்க..!!!” என்று கோபமாக அவளை பார்த்து கேட்டாள். 😒
ரித்திகா : “அட விடுடி. அதான் எனக்கு எதுவும் ஆகலைல்ல… இனிமே எதுவா இருந்தாலும் நான் உன்கிட்ட கண்டிப்பா சொல்றேன் ஓகேவா..???” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தியவள், அவளை அழைத்து கொண்டு தன்னுடைய அறைக்கு சென்று அங்கே இருந்த வார்ட்ரோக்களில் தனக்காக சென்பகம் வாங்கி வைத்து இருந்த பொருட்களையும், ஆடைகளையும், அவளிடம் காட்டி மகிழ்ந்தாள். 😍 🥰
அவை அனைத்தையும் பார்த்து மனதார சந்தோஷப்பட்ட ஷாலினி, அவள் மீது இருந்த கோவங்கள் அனைத்தையும் மறந்து விட்டாள். பின் ஷாலினியின் உதவியோடு தனக்கான ஒரு ஆடையை தேர்வு செய்த ரித்திகா, பாத்ரூம் டைல்ஸ் சரி செய்ய வந்தவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்குள் தான் குளித்துவிட்டு தயாராக வேண்டும் என்று நினைத்து வேகமாக கிளம்பச் சென்றாள்.
நாராயணன் குரூப்ஸ் அலுவலக கட்டிடம்…
க்ரிஷாவும் சந்தோஷ் -ம் தங்களுடைய டீமிற்காகவும், பிராங்கிளின் பார்த்துக்கொள்ள இருக்கும் புதிய ஆபீஸில் அவனுக்கு கீழே வேலை செய்யப் போபவர்களையும், ஏற்கனவே இன்டர்வியூ வைத்து செலக்ட் செய்து வைத்து இருந்தனர். அவர்களுடைய ட்ரெய்னிங் எல்லாம் இன்னும் ஒரு வாரத்தில் முடிய இருப்பதால், அவர்களுக்கு தனியாக சீட் ஒதுக்கி தரும் முயற்சியில் அவர்கள் இறங்கி இருந்தனர்.
அதற்காக 100 கம்ப்யூட்டர்களுக்கு மேல் பிரபல கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆர்டர் செய்து இருந்தாள் க்ரிஷா. அந்த கம்பெனியில் இருந்து க்ரிஷவிற்கு ஃபோன் செய்த மேனேஜர், “மேடம் நீங்க ஆர்டர் பண்ண எல்லா கம்ப்யூட்டர்ஸும் ரெடி ஆயிடுச்சு. நீங்க சொன்ன எல்லா எக்ஸ்ட்ரா ஃப்பிச்சர்ஸ் ஐயும் நாங்க அதுல இன்ஸ்டால் பண்ணிட்டோம். நாங்க இப்போ கம்ப்யூட்டர்ஸ் ஐ டைரக்டாநாங்க இப்போ கம்ப்யூட்டர் ஆபீஸ் ல கொண்டு வந்து டெலிவர் பண்ணிறதா, இல்ல நீங்களே இங்க வந்து எல்லாத்தையும் செக் பண்ணிட்டு கலெக்ட் பண்ணிட்டு போறீங்களா…???” என்று கேட்க,
“நானே அங்க வரேன் நான் சொன்ன மாதிரி எல்லாம் கரெக்டா வந்து இருக்கான்னு நான் செக் பண்ணனும். பால்ட்ஸ் இருந்துச்சுனாலும் அப்படியே அங்கயே கரெக்ஷன் பண்ண சொல்லி வாங்கிக்கலாம். சோ நானே வரேன்.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்த க்ரிஷா, சந்தோஷ் ஐ தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த கம்ப்யூட்டர் ஷோரூம் -க்கு நேரடியாக தானே தன்னுடைய காரில் செல்ல தொடங்கினாள்.
சந்தோஷ் அவளுடைய காரை ஐ டிரைவ் செய்ய, க்ரிஷா தன்னுடைய ஐபாடில் எதையோ பார்த்தபடி வந்து கொண்டு இருந்தாள். டிரைவ் செய்து கொண்டு இருந்த சந்தோஷ், அவ்வப்போது ஓர கண்ணால் க்ரிஷாவை சைட் அடித்த படி இருந்தான். அதை உணர்ந்து கொண்ட க்ரிஷா லேசான புன்னகையுடன், “டேய் ஒழுங்கா ரோட் ஐ பார்த்து டிரைவ் பண்ணு. இன்னொரு தடவ இந்த் பக்கம் திரும்பி பார்த்தீன்னா, உன்னோட கண்ணு ரெண்டையும் நோண்டிடுவேன்.” என்று தன்னுடைய டாப்பில் இருந்து கண்களை விளக்காமல் அவனிடம் சொன்னாள். 😁 😁 😁
“பார்ரா இவங்களுக்கு எல்லா பக்கமும் கண்ணு இருக்கும் போலவே…!!! அங்க பாத்துக்கிட்டே நம்ப என்ன பண்றோம்னு கூட நோட் பண்றாங்க பா… அதான் அவங்க நமக்கு பாஸ் ஆ இருக்காங்க. நான் அவங்க கிட்ட வேலை பார்க்கிறேன் போல. இதுக்கெல்லாம் ஒரு திறமை வேண்டும்.” என்று நினைத்த சந்தோஷ் மீண்டும் தனக்குள் சிரித்து கொண்டே காரை டிரைவ் செய்ய தொடங்கினான். 😁 😁 😁
அதுவரை மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்த சந்தோஷ், ஒரு சிறிய ரோட்டிற்குள் செல்வதற்காக காரை திருப்பினான். ஆனால் அங்கே சாலையை சீர் அமைக்கும் பணி நடப்பதால் இந்த வழியாக வாகனம் செல்லாது என்று டேக் டைவர்ஷன் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த சந்தோஷ் வேறு ஒரு சாலையை தேர்ந்தெடுத்து அதற்குள்ளே செல்ல தொடங்கினான். அந்த சாலை அதிக ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி போய் கிடந்தது.
அங்கே வேகமாக சென்று கொண்டு இருந்த அவர்களுடைய காரின் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தத்தையும் சந்தோஷால் கேட்க முடியவில்லை. அதனால், “அது பிசியான ரோடு தானே… அந்த ரோர் ஐ கவர்மெண்ட் மெயின்டனன்ஸ் -காக ப்ளாக் பண்ணி வெச்சிருக்கும் போது, அது வழியா போறவங்க எல்லாரும் இந்த ரோடு வழியா தனை போயாகணும். ஆனா நம்மளைய தவிர இங்க வேற யாரும் போகிற மாதிரி தெரியலையே…!!!” என்று நினைத்து குழம்பிய சந்தோஷ், “சோ வாட்..?? தேவை இல்லாமல் யோசிக்கிறதை விட்டுட்டு டிராபிக் இல்லாம இருக்கேன்னு நெனச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.” என்று தானே கேள்வி கேட்டு தானே தனக்குள் பதிலும் சொல்லிக் கொண்டான்.
சந்தோஷ் மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான். அப்போது திடீரென்று பறந்து வந்த ஒரு பெரிய கல் அவர்களின் விலை உயர்ந்த காரின் முன்பக்க கண்ணாடியை பலத்த சத்தத்துடன் தாக்கி விட்டு கீழே விழுந்தது. க்ரிஷாவின் காரில் விலை உயர்ந்த தரமான கண்ணாடிகளை ப்ரொடெக்ஷனுக்காக யூஸ் செய்து இருந்ததால், அந்த பெரிய கல் இவர்களின் கார் கண்ணாடியை லேசாக சேதப்படுத்திவிட்டு சொன்னதே தவிர முழுதாக உடைத்து விடவில்லை.
இருப்பினும் அதனால் கடுப்பான க்ரிஷா, இதை யார் செய்தது என்று பார்ப்பதற்காக எழுந்து வெளியே செல்ல முயன்றாள். அவளுடைய கையைப் பிடித்து வேகமாக தடுத்து நிறுத்திய சந்தோஷ், “ப்ளீஸ் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க மேடம். இந்த ஏரியால ஆள் நடமாட்டமே இருக்காது. இப்ப நம்ம வெளியில போறது சேஃப் இல்ல யாரோ நம்மள வெளிய வர வைக்கிறதுக்கு தான் இப்படி கல்லை தூக்கி கார் மேல அடிச்சிருக்காங்க.” 🚘 என்று சொன்னபடியே அந்த கார் ஐ ரிவர்ஸ் எடுத்து மீண்டும் தான் வந்த வழியிலேயே வேகமாக செல்ல முயற்சித்தான் சந்தோஷ்.
அவன் பேசியதை கேட்டு கடுப்பான க்ரிஷா, “எவனோ ஒருத்தன் என்னோட கார் கண்ணாடிய ஈஸியா ஒடச்சிட்டு போவான்.. நான் அவன அப்படியே விட்டாறணுமா..?? அது யாருன்னு நான் பார்த்தே தீரணும். நீ முதல்ல கார் ஐ ஸ்டாப் பண்ணு.” என்று கோபமாக சொன்னாள். 😡 🔥
சந்தோஷ்: “ஐயோ மேடம் சொன்னா புரிஞ்சுக்கோங்க. நம்ப ரெண்டு பேர் தான் இருக்கோம். அவனுங்க கேங் ஆ வந்து இறங்கிட்டானுங்கன்னா, நம்ம ரெண்டு பேரால என்ன பண்ணிட முடியும்…?? கார் கிளாஸ் தானே போன போயிட்டு போகுது. நமக்கு நம்ம உயிர் தான் முக்கியம். இப்ப அதை எப்படி காப்பாத்திக்கிறதுன்னு தான் யோசிக்கணுமே தவிர யாரால ஆபத்துன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்க கூடாது.” என்று சொல்லி அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.
க்ரிஷா: “ஹே இடியட்.. இந்த காரோட வேல்யூ என்னன்னு தெரியுமா உனக்கு…??? இதோட ஒரிஜினல் ஹை புரடக்சன் கிளாஸ் எதுவுமே இந்தியால கிடைக்காது. இப்ப நான் அதை அமெரிக்கால இருந்து ஆர்டர் பண்ணி வாங்கணும்னா, எவ்வளவு 1000 -ஸ் செலவாகும் என்று தெரியுமா உனக்கு..??? நீ சரியான தொட நடுங்கியா இருக்கலாம். ஆனா நான் அப்படி இல்லை. எவனாவது சும்மா கார் மேல கல்ல விட்டு எரிஞ்சு விளையாடி பார்த்திருப்பான். அத பாத்து என்னால பயந்து எல்லாம் ஓட முடியாது. இப்ப நீ ஒழுங்கா கார் ஐ ஸ்டாப் பண்றியா இல்லையா..??” என்று உச்ச ஸ்ருதியில் கத்தினாள். 😒 😡 🔥
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)