Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 203

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 203

by Thenaruvi Tamil Novels
46 views

அத்தியாயம் 203: ரித்திகாவை அறைந்த வருண் (பார்ட் 1)

வருண் அரையில்…..

அவனுடைய அந்த காதல் நிறைந்த அனைப்பில் சிறிதளவு சந்தில் மாட்டிக் கொண்டு தவிக்கும் எலிக்குட்டியாய் தவித்துக் கொண்டு இருந்தாள் ரித்திகா. பின் அவனிடம் இருந்து தன்னை விளக்கிக் கொள்ள போராடி கலைத்துப் போனவள், இறுதியில் அமைதியாக நின்று விட்டாள்.

ரித்திகாவின் தோள்களில் தன்னுடைய முகத்தை புதைத்துக் கொண்ட வருண், “ஏன் ஜானு என விட்டுட்டு ஏன்  போன..!!! நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு உனக்கு தெரியாதா..?? உன் கூட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..?? ஆனா என் கூட இருக்கும்போது உனக்கு அவ்ளோ சந்தோஷமா இல்லையா..?? அதான் நீ என்ன விட்டு போயிட்டியா..??” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் கேட்டவன், ஜான்வி உடன் அவன் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து அழ தொடங்கினான். 😭 😭 😭

முதலில் தான் சரியாக வருண் விடம் மாட்டி கொண்டதாக நினைத்த ரித்திகாவிற்கு நேரம் செல்ல செல்ல, வருணின் மனதில் இருக்கும் வேதனையை உணர்ந்து அதில் தன்னை தொலைக்க தொடங்கி விட்டாள். அவனை தன்னிடம் இருந்து எப்படியும் பிரிக்க முடியாது என்று உணர்ந்தவள், அவனை அனைத்த படி மெது மெதுவாக அவனை அழைத்துக் கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள். பின் அவனை தன் மீது இருந்து நகர்த்தியவள், அவனுடைய முகத்தை தன்னுடைய இரு கைகளாலும் ஏந்தினாள்.

இன்னும் அவனுடைய கன்னத்தில் கண்ணீர் கோடுகள் இருந்தன. பாசமாக அவனை பார்த்த ரித்திகா, “அவங்க போய்ட்டாங்கன்னு நினைச்சு நீங்க வருத்தப்படாதீங்க. இறந்து போனவங்க எல்லாம் கடவுளுக்கு சமம். எங்கேயாவது இருந்து அவங்க உங்களை பார்த்துட்டு தான் இருப்பாங்க. நீங்க இப்படி கஷ்டப்பட்டா, அவங்களும் உங்களை நினைச்சு கஷ்டப்படுவாங்க.” என்று சொன்னவள், வருணின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளை தன்னுடைய கைகளால் துடைத்து விட்டாள். 

ரித்திகாவின் பேசிய வார்த்தைகள் எல்லாம் அவனுடைய செவிகளை தொட்டு மூளையை சென்று சேரவில்லை. அவனை பொறுத்தவரை வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் அவன் ஜான்வியை பார்க்கிறான். அவள் அவன் அருகே இருக்கிறாள். அதனால் மீண்டும் காதலுடன் ரித்திகாவை ஜான்வி என்று நினைத்து காதலுடன் பார்த்த வருண், “நீ என்ன இன்னும் லவ் பண்ற தானே..!!!” என்று வலி நிறைந்த குரலில் கேட்டான். 😥 😣 இப்போது எங்கே தான் இல்லை என்று இவனிடம் சொல்லிவிட்டால்.. ஜான்வியே தன்னை காதலிக்கவில்லை என்று சொல்கிறாள் போல என்று நினைத்து இவன் மீண்டும்  அழ தொடங்கி விடுவான் என்று நினைத்து பயந்த ரித்திகா, “ஆமா நான் உங்கள லவ் பண்றேன்.” என்று பொய் சொன்னாள். 
ரித்திகா சொன்ன பொய்யை ஜான்வி தான் உண்மையாக அவளுடைய காதலை தன்னிடம் சொல்கிறாள் போல என்று நினைத்து மகிழ்ந்த வருண், “லவ் யூ டூ ஜானு.” என்றவன், ரித்திகாவின் இதழ்களை தன்னுடைய இதழ்களால் சிறை செய்து உணர்ச்சி பொங்க அவளை ஆழ முத்தமிட்டான். 😍 🥰 ❤️ முதலில் அந்த முத்தத்தால் அதிர்ந்து போன ரித்திகா, பின் அவனுடைய அந்த இதமான இதழ் முத்தம் தந்த உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு தன்னை அறியாமல் அதை ரசிக்க தொடங்கியவள், அவளும் அவனுடன் இணைந்து அந்த முத்த போரில் பங்கேற்றாள். அவள் ஏன் இப்படி செய்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அவளுக்கு இந்த உணர்வு மிகவும் பிடித்து இருந்தது. 🤗 😚 😘

பிறை தேடும் இரவிலே உயிரே…

எதை தேடி அலைகிறாய்…

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…

அன்பே நீ வா…

இருளில் கண்ணீரும் எதற்கு…

மடியில் கண்மூட வா…

அழகே இந்த சோகம் எதற்கு…

நான் உன் தாயும் அல்லவா…???

❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

இந்த நொடி ரித்திகா வருணை  தன்னுடைய கணவனாக தான் பார்த்தாள். வெகு நேர இதழ் முத்தத்திற்கு பிறகு போதையில் ரித்திகா அந்த கட்டிலில் சரிந்தான் வருண். இப்போது அவனுடைய உடல் ரித்திகாவின் மீது படர்ந்து இருந்தது. ரித்திகாவின் இதயம் வேகமாக துடித்து கொண்டு இருந்தது. ❤️ அப்போது அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அவளுடைய மூளை ஓட்ட பந்தயத்தில் ஓடும் குதிரையை போல வேகமாக ஓடி கண்டதை யோசித்து அவளை பயமுறுத்தியது.

ஒரு வேளை இப்போது வருண் தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்டால் கூட அவன் தன்னுடைய கணவன் தானே என்று அவள் அமைதியாக இருந்து விட்டாலும், அவன் தன்னை அப்படி அவனுடைய மனைவியாக நினைக்கவில்லையே… என்ற எண்ணம் அவளுள் எழுந்து அவளை இன்னும் வேதனையில் ஆழ்த்தியது. அந்தக் கணம் சற்று நேரத்திற்கு முன் தனக்கு  வருண் கொடுத்த முத்தம் அவளுக்கு ஞாபகம் வர, அப்போது கூட அவன் தன்னை ஜான்வி என்று நினைத்து தானே தன்னை நெருங்கி வந்தான் என்று நினைத்தவள், போதையில் இருக்கும் வருணை இதற்கு மேல் முன்னேற விடுவது தவறு என்று நினைத்து தயங்கி மீண்டும் அவனைத் தன்னிடம் இருந்து பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். 

ஆனால் ஒவ்வொரு முறை அவள் அவனிடம் இருந்து விடுபட முயலும் போது எல்லாம், வருண் இன்னும் அவள் அருகே நெருங்கி வந்தான். இனி அவ்வளவு தான் அனைத்தும் தன்னுடைய கையை மீறி செல்ல போகிறது என்று ரித்திகா தித்… திக்..  இதயத்துடன் வருணின் முகத்தை பார்க்க, எதிர்பாராத விதமாக போதையில் எதைஎதையோ உளறிய படி வருண் தூங்க தொடங்கி விட்டான். இருப்பினும் அவன் உண்மையாகவே தூங்கிவிட்டானா இல்லையா என்ற சந்தேகத்தில் “வருண்” என்று மெல்லிய குரலில் அவனை அழைத்துப் பார்த்தாள் ரித்திகா. ஆனால் அவனிடம் இருந்து ஒரு அசைவும் தெரியவில்லை. அதனால் அவனுடைய கன்னத்தில் தன்னுடைய ஆள்காட்டி விரலை வைத்து லேசாகிய குத்தியவள், அவன் எழுந்து கொள்கிறானா என்று செக் செய்து பார்த்தாள்.

அப்போதும் வருண் துளியும் அசையவில்லை. அதனால் அவன் நிஜமாகவே தூங்கிவிட்டான் என்று நினைத்து நிம்மதி அடைந்த ரித்திகா , அவனை தன்னிடம் இருந்து விலக்கி விட்டுவிட்டு தானும் தனக்கு இருக்கும் அசதியில் விரைவாக தூங்கலாம் என்று நினைத்தாள். ஆனால் வருண் ஓ, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவள் மீது தன்னுடைய முழு உடலையும் போட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தான். 😍 🥰 👩‍❤️‍👨

ஏற்கனவே மெல்லிய தேகம் உடைய ரித்திகா இப்போது இன்னும் சோர்வாக இருந்ததால், அவனை தன் மீது இருந்து விளக்க முடியாமல் போராடினாள். அவளுடைய இந்த செய்கையால் அவளுக்கு வேகமாக மூச்சு வாங்கியதும், கை வலி வந்ததையும் தவிர அவளாக்கு வேறு எந்த பயனும் அதில் கிடைக்கவில்லை. அதனால் சோர்ந்து போன ரித்திகா, அப்படியே வருணின் நெஞ்சில் தன்னுடைய முகத்தை புதைத்து தூங்க தொடங்கினாள். 

ஷாலினியின் அறையில்…

விஷ்ணுவை வம்பு இழுப்பதற்காக அவள் வேணும் என்றே அவனிடம் பேசிவிட்டு இங்கே வந்து இருந்தாலும், அவன் சொன்னது போலே அவளுக்கும் தான் விஷ்ணுவோடு வாழப்போகும்  இடம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு வேளை விஷ்ணு இதைப்பற்றி அவளிடம் பேசவில்லை என்றால் கூட, இப்படி எல்லாம் ஷாலினி யோசித்துப் பார்த்து இருக்க மாட்டாள். ஆனால் இப்போது சும்மா இருந்த அவளை விஷ்ணு சொரிந்து விட்டு சென்று விட்டதால் அவளுக்கு இப்போதே சென்று ஒரு முறையாவது விஷ்ணுவின் அறை எப்படி தான் இருக்கிறது என்று பார்த்துவிட்டு வந்துவிடலாமா என்று தோன்றி க்கொண்டே இருந்தது. இப்போது விஷ்ணு ஏற்கனவே அவளிடம் ஒரு முறை பேசும் போது  ஷாலினிக்கு பிடித்த கலர் பிங்க் மற்றும் விஷ்ணுவிற்கு பிடித்த கலர் ரெட் என்பதால் அவன் இந்த இரண்டு கலரையும் இணைத்து அதே காம்பினேஷனில் தன்னுடைய அறை முழுவதையும் தயார் செய்து வைத்திருப்பதாக சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது. 

அதை யோசித்து பார்த்த ஷாலினிக்கு இப்போதே சென்று அந்த அறையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதனால் வெகு நேரமாக தூக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருந்த ஷாலினி, தன்னுடைய மொபைல் போன் ஐ எடுத்து அதில் நேரத்தை பார்த்தாள். அதில் நேரம் இரவு 11:45 மணி என்று காட்டியது. அதனால் இன்னும் சற்று நேரம் கடந்துவிட்டால் அனைவரும் தூங்கி இருப்பார்கள் அப்போது தான் சென்று விஷ்ணுவை சந்தித்து விட்டு வரலாம் என்று நினைத்த ஷாலினி அதுவரை எப்படி நேரத்தை கடத்துவது என்று தெரியாமல் அந்த அறைக்குள் அங்கும் இங்கும் நடந்த படியும் தன் மொபைல் ஃபோனை மீண்டும் மீண்டும் எடுத்து நேரத்தை செக் செய்த படியும் இருந்தாள் ஷாலினி. 

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured