அத்தியாயம் 202: என் பக்கத்துல வா (பார்ட் 2)
வருணின் அறையில்….
செண்பகத்துடன் இணைந்து சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னுடைய அறைக்கு வந்த ரித்திகா, திருமண புடவையை மாற்றுவதற்கு கூட உடம்பில் தெம்பு இல்லாமல் சோர்வில் அப்படியே வருணின் கட்டிலில் சரிந்தாள். அவள் இப்போது ஒரு நொடி தன்னுடைய கண்களை மூடினால் கூட உடனே அவளை தூக்கம் தழுவிக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தாள் அவள். வருண் அவளுடைய கழுத்தில் கட்டிய மஞ்சள் தாலியின் மனம் அவளுடைய நாசிகளில் சென்று நுழைந்தது.
அதனால் அதை தன்னுடைய கைகளில் இறுக்கமாக பற்றி கொண்ட ரித்திகா, வருனுடன் தன்னுடைய திருமணத்தை பற்றி யோசித்துப் பார்த்தாள். இப்போது அவள் வருனை பற்றி யோசிக்கும்போதே கூடுதலாக அவன் தன்னுடைய கணவன் என்ற எண்ணம் அவளுக்குள் மேலோங்கியது. அதனால் தனக்குள் சிரித்துக் கொண்டவள், “இனி நீ ரித்திகா இல்ல… மிஸ்ஸஸ் வருண்நாராயணன்.. நோ ரித்திகா வருண் நாராயணன்.” என்று தனக்குள் சொல்லிப் பார்த்தவள், “பார்றா… இப்படி சொல்லும்போதே நல்லா இருக்கே..!!!” என்று தனக்குள் நினைத்து சிரித்துக் கொண்டாள். 😁 😁 😁
வருண் குடித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் செல்வதையும், அவனை தடுக்க முயன்ற சிவா அதில் தோற்றுப் போய் சொல்வதையும் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்ட விஷ்ணு, வருண் இந்த நிலையில் இருக்கும்போது அவர்களுக்குள் ஏதாவது ஒரு நல்லது நடக்கட்டும் என்று நினைத்து குறும்பாக சிரித்தவன், அங்கு இருந்து தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். 😁 😁 😁
ஷாலினி ரித்திகாவின் துணை பெண்ணாக இருந்ததால், அவளை ரித்திகாவின் குடும்பத்தை சேர்ந்த ஒரு நபராகவே பாவித்த செண்பகம்; ரித்திகாவிற்கு குணமாகும் வரை, அவள் இந்த வீட்டின் சூழலுக்கு பழகும் வரை குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆவது அவளுடன் இங்கேயே தங்குமாறு ஷாலினியிடம் கேட்டுக் கொண்டாள். இதில் அவளுக்கான அறையை ஒதுக்கும் பொறுப்பை விஷ்ணுவிடம் ஒப்படைத்தாள். அதைக் கேட்டு பாலுக்கு பூனை காவலா என்பது போல தனக்குள் சிரித்துக் கொண்ட விஷ்ணு, “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் மா. ஷாலினி நம்ம ரித்திகா அண்ணியோட தங்கச்சி மாதிரி. சோ, நான் அவளை பத்திரமா பாத்துப்பேன். அப்புறம் நான் அவளுக்கு பிடிக்காத மாதிரி ஏதாவது பண்ணிட்டா ரித்திகா அண்ணி என்கிட்ட கோச்சுகுவாங்க.” என்று நல்லவனைப் போல் தன்னுடைய முகத்தை வைத்துக்கொண்டு அப்பாவியாக சொன்னான்.
விஷ்ணு அவனுக்கு ரித்திகாவின் மீது இருக்கும் மரியாதையால் தான் இப்படி எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறான் என்று நினைத்த செண்பகம், அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. செண்பகம் அங்கு இருந்து சென்றவுடன், ஷாலினியின் கையை பிடித்த விஷ்ணு, “சரி வா.. நம்ம ரூமுக்கு போலாம்.” என்று குறும்பாக சிரித்து கொண்டே சொன்னான். 😂 😂 😂
ஷாலினி: அவனைப் பார்த்து முறைத்தவள், “நம்ம ரூம் ஆ அது எங்க இருக்கு..???” என்று கேட்டாள். 😒 🤨 🤔
விஷ்ணு: “என்னோட ரூம் ஐ தான் சொல்றேன். அது உன்னோட ரூம் -ம் தானே..!!! அதான் உன்ன வா அங்க போலாம்னு கூப்பிடுறேன்.” என்று அப்பாவியாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு சொன்னான்.
ஷாலினி: “நமக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் அது உன்னோட ரூம் மட்டும் தான். இப்போ என்னோட ரூம் எங்க இருக்குன்னு காட்ட போறியா இல்ல நான் நீ என்கிட்ட இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறேன் சொல்லி செண்பகம் மேடத்துகிட்ட போய் கம்பளைண்ட் பண்ணட்டுமா..??” என்று எரிச்சலான குரலில் கேட்டாள். 😒
விஷ்ணு: “போ.. போய் சொல்லு. எனக்கு என்ன..?? அம்மா என்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டாங்கன்னா, நான் உன்ன லவ் பண்றேன். அதுனால தான் உன்கிட்ட இப்படியெல்லாம் பேசுனேன்னு நான் உண்மைய சொல்லுவேன். அதுக்கு அப்புறம் அவங்க கேட்கிற கொஸ்டினுக்கு எல்லாம் நீ ஆன்சர் பண்ணிக்கோ.” என்று அசால்டாக சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு கடுப்பான ஷாலினி மீண்டும் அவனைப் பார்த்து முறைத்து, “இப்போ நீ எனக்கு வேற ரூம் ஐ காட்டுறியா இல்ல நான் என் வீட்டுக்கு கிளம்பி போட்டுமா..??” என்று உண்மையான எரிச்சலுடன் கேட்டாள். 😒
தான் இதற்கு மேலும் ஷாலினியை வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தால் அவள் நிஜமாகவே இங்கு இருந்து கிளம்பி சென்று விடுவாள் என்று நினைத்து பயந்த விஷ்ணு, அவனுடைய அறைக்கு அருகே இருந்த ஒரு அறையில் ஷாலினியை தங்க வைத்தான். அவன் காட்டிய அறைக்குள் சென்ற ஷாலினி வேகமாக கதவை சாற்றிவிட்டு அதன் சிறிதளவு இடைவெளியில்… “ஓகே பாய் குட் நைட்.” என்று சொல்லிவிட்டு முழுமொதமாக அந்த கதவை சாற்ற முயன்றாள்.
ஆனால் அவளை அந்த கதவை சாத்த விடாமல் தடுத்த விஷ்ணு, “ஓய்…!!! என்னோட ரூம் எப்படி இருக்கும்னு கூட நீ இதுவரைக்கும் பார்த்ததில்லை. இன்னைக்கு கிடைச்ச மாதிரி இதுக்கு மேல ஒரு சான்ஸ் கிடைக்குமோ என்னமோ தெரியல. என்னோட ரூம் குள்ள உன்னை நிக்க வச்சு பாக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. ஆனா உனக்கு அந்த மாதிரி எல்லாம் தோணாதா டி…?? நம்ம சேர்ந்து வாழப்போற இடம் எப்படி இருக்கும்னு உனக்கு பாக்க வேண்டாமா..???” என்று பாவமாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு கேட்டான். 😓
“அதெல்லாம் நான் ஒன்னும் பாக்க வேண்டாம். பாக்க வேண்டியது எல்லாத்தையும் நான் கல்யாணத்துக்கு அப்புறமே பாத்துக்குறேன்.” என்று சொன்ன ஷாலினி, வேகமாக அந்த கதவை அறைந்து சாற்றி தாழிட்டாள். அதனால் வடை போச்சே என்பது போல சோகமாக தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான் விஷ்ணு.
வருண் அறையில்…
கையில் தன்னுடைய தாலியை பிடித்துக் கொண்டு வருனை பற்றி யோசித்துக் கொண்டு ரித்திகாவிற்கு. அப்போது மது வாசம் வீச, உள்ளே திடீரென்று வந்த வருண். அவனைக் கண்டு பயந்து போன சட்டு என்று வேகமாக எழுந்து அமர்ந்து கொண்டாள். 😣 இப்போது இவன் எதற்கு இங்கே வந்து இருக்கிறான் என்று அவளுடைய மனம் யோசித்து பதற, அவளுடைய மூளை “அடியே லூசு.. இது அவரோட ரூம். இங்க அவர் வராம வேற யார் வருவாங்க..??? அவரை பொறுத்தவரைக்கும் இப்ப நீ தான் இங்க எக்ஸ்ட்ரா்ரா லக்கேஜ். ஆனா இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்ல… ஒரு வேளை அதுக்காக தான் இங்கே வந்திருப்பாரோ..!!! ஒரு வேளை அவருக்கு அதில எல்லாம் இன்ட்ரஸ்ட் இருக்குமோ..?? இப்போ அவர் வேகமா வந்து உன் மேல பாஞ்சுட்டா நீ என்ன பண்ணுவ..???” என்று அவளுடைய மூளை பலகாரக யோசிக்க,
“சேச்சே..!! இவர் ரொம்ப ஜென்டில் மேன். இவர் அந்த மாதிரி எல்லாம் பண்ணக்கூடிய ஆள் இல்ல. அவர் கேஷுவலா இங்க தூங்க வந்திருப்பாரு. அதான் இவ்ளோ பெரிய பெட் இருக்கே… நம்ம ஒரு ஓரமா தூங்குனா, அவர் ஒரு ஓரமா தூங்கிட்டு போகட்டும்.” என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டவள், பயம் நிறைந்த கண்களுடன் வருணை பார்த்தாள். 😨
தள்ளாடியப்படியே தன்னுடைய கட்டிலின் அருகே வந்த வருண் ரித்திகாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவனுடைய செய்கைகளில் இருக்கும் வித்தியாசத்தை கண்டு கொண்ட ரித்திகா அவன் மீது வரும் ஆல்கஹாலின் வாசனையை வைத்து அவன் குடித்திருக்கிறான் என்று உணர்ந்தவள், “இவர் ட்ரிங்க்ஸ் பண்ணியிருக்காரா..??? ஐயோ இவருக்கு இந்த ஹேபிட் எல்லாம் வேற இருக்கா..!!! இன்னும் வேற என்னென்ன கெட்ட பழக்கத்தை எல்லாம் கத்து வச்சிருக்காரோ தெரியலையே…!!! இப்ப இவர் என்ன பண்ண காத்திருக்கிறாரோ..!!” என்று நினைத்து கேள்வியாக வருணை பார்த்தாள்.
வருண் அதிகமாக குடுத்திருந்ததால் அவனுக்குள்ளே சென்று இருந்த ஆல்கஹால் அவன் அதிகமாக இறந்து போன ஜான்வியை பற்றிய யோசித்து கொண்டு இருந்ததால், அவன் கண் முன்னே இருக்கும் ரித்திகாவை அவனுக்கு ஜான்வியை போல் தெரிந்தாள். போதையில் இருந்த வருணிற்கு தான் இவ்வளவு நேரம் ஜான்வியை மிஸ் செய்ததால் அவள் அதை புரிந்து கொண்டு தானே தன்னிடம் வந்துவிட்டாள் போல என்று தோன்ற, “ஜானு…!!! நீ திரும்ப வந்துட்டியா..??? நீ எனக்காக வந்தியா டி…??” என்று ரித்திகாவை பார்த்து கேட்டான்.
“ஜானுவா.. அது யாரு…??” என்று ஒரு நொடி யோசித்த ரித்திகாக்கு அவன் ஜான்வியை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று புரிய, “ஒரு வேளை இவர் குடிச்சசுருக்கிறதுனால இவர் கண்ணுக்கு நம்ம ஜான்வி மேடம் மாதிரி தெரியுரமோ…??” என்று யோசித்தவள், இது என்ன புது பிரச்சினையாக இருக்கிறது என்று நினைத்து அதிகம் பயந்தாள். 😥
“நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன்னு உனக்கு தெரியுமா டி..?? இத்தனை நாள் நீ என்ன மட்டும் தனியா விட்டுட்டு எங்க போன..???” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் கேட்ட வருண் நடக்க முடியாமல் தள்ளாடியப்படியே ரித்திகாவின் அருகே வந்து அவளை கட்டி பிடித்துக் கொண்டான். 🤗 😍 ❤️
அவனுடைய இந்த திடீர் செய்கையால் அதிர்ந்து போன ரித்திகா விழி பிதுங்க நின்று கொண்டு இருந்தாள். 😨 🙄 அவன் ஜான்வியாக நினைத்துக் கொண்டு இருக்கும் அவனுடைய ரித்திகா தன் வாயை திறந்து அவனிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்ததால், “ப்ளீஸ் டி ஜானு ஏதாவது பேசு. உன் வாய்ஸ் கேட்டு எத்தனை வருஷம் ஆயிடுச்சு..!!! முன்னாடி எல்லாம் நீ என்கிட்ட சண்டை போட்டு என்னை இரிடேட் பண்ற மாதிரி பேசினா அதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனா நீ இப்போ என்கிட்ட பேசுறத கேட்டா மட்டும் போதும்னு இருக்கு டி. சோ நீ ஏதாவது பேசு. என்கூட சண்டை போடு. என்னை திட்டு. இல்லனா உனக்கு என்ன பாக்க பாவமா இருந்துச்சுன்னா ஒரு ஐ லவ் யூ சொல்லு..!!!” என்று கெஞ்சும் குரலில் கேட்டான்.
இதையெல்லாம் தன்னால் எப்படி சொல்ல முடியும் என்று நினைத்து தயங்கிய ரித்திகா, முதலில் அவனிடம் இருந்து தன்னை விடிவித்துக்கொண்டு இந்த அறையில் இருந்து வெளியே ஓடி சென்று விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள்; “சார் ப்ளீஸ் என்ன விடுங்க. நீங்க என்ன டைட்டா புடிச்சு அழுத்திகிட்டு இருக்கீங்க . என்னால மூச்சே விட முடியல.” என்று சொன்னபடியே அவனுடைய நெஞ்சில் தன்னுடைய இரு கைகளையும் வைத்து அழுத்தி அவனை தன்னிடம் இருந்து தள்ளி விலக்க முயன்றாள். அதை உணர்ந்த வருண், “அகைன் நீ என்ன விட்டுட்டு போக பாக்குறியா..??? நோ நெவர் நான் உன்னை என்னை விட்டுட்டு போக விட மாட்டேன். என்றவன் இன்னும் ரித்திகாவை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டான். 😍 ❤️ 🥰
அவனுடைய அந்த காதலின் நிறைந்த அனைப்பில் சிறிதளவு சந்தில் மாட்டிக் கொண்டு தவிக்கும் எலிக்குட்டியாய் தவித்துக் கொண்டு இருந்தாள் ரித்திகா . அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க போராடி கலைத்துப் போனவள், இறுதியில் அமைதியாக நின்று விட்டாள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)