அத்தியாயம் 201: என் பக்கத்துல வா (பார்ட் 1)
ரித்திகாவை மெதுவாக அழைத்துக் கொண்டு போய் தன்னுடைய கட்டிலில் சென்று அமர வைத்த செண்பகம், ரித்திகா காணாமல் போனதில் இருந்து அவர்கள் திருமணம் நடந்து முடிந்தது வரை அனைத்தையும் அவளிடம் தெளிவாக சொன்னாள். அதை அனைத்தையும் பொறுமையாக கேட்ட ரித்திகாவிடம் மனதில் இரண்டே விஷயங்கள் தான் இறுதியில் நிலைத்து நின்றது.
ஒன்று அவளுக்கும் வருணிக்கு திருமணம் நடந்து விட்டது. இனி அவள் அதிகாரப்பூர்வமாக ரித்திகா வருண் நாராயணன் அக போகிறாள். இரண்டாவது, அவள் தொலைந்து போன பின் நாராயணன் குடும்பத்தை சேர்ந்த சிலர் அவளை சந்தேகப்பட்டது மட்டும் அல்லாமல், வருண் அவளுக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் ஐ வேறு எடுத்திருக்கிறான் என்பது மட்டும் தான்.
அதனால் அவற்றை எல்லாம் பற்றி யோசித்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள் ரித்திகா. அவள் வெகு நேரமாக எதையோ யோசித்துக் கொண்டு இருப்பதை கவனித்த செண்பகம் ஒரு வேளை அவளுக்கு சுய நினைவு இல்லாத வேலையில் தாங்கள் இந்த திருமணத்தை நடத்திவிட்டதால் தான் தங்களின் மீது கோபத்தில் அவள் இருக்கிறாள் போல என்று நினைத்துக் கொண்டு,
“நீ உடம்பு சரி இல்லாம இருக்கும்போது கூட நாங்க இந்த கல்யாணத்தை விடாம நடத்திட்டோம்னு எங்கள தப்பா நினைக்காத மா ரித்திகா . இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு தான் யாரோ உன்னை திட்டம் போட்டு கடத்தி இருக்காங்க. அதனால இப்போ உனக்கு உடம்பு சரியில்லன்னு நம்ம இந்த கல்யாணத்தை நிறுத்திட்டா, அவனுங்க நினைச்சது ஈஸியாக நடந்திடும்னு வருண் தான் பிடிவாதமா இருந்து இந்த கல்யாணத்தை நடத்திட்டான்.” என்று சொன்னவள், ரித்திகாவின் முக பாவனைகளை வைத்து அவளுடைய மனதில் என்ன ஓடுகிறது என்று கண்டுபிடிப்பதற்காக அவளுடைய முகத்தை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தாள்.
இறுதியாக செண்பகம் பேசியதை கேட்ட பின்பு தான் பிராக்டிக்கலாக யோசிக்க தொடங்கினாள் ரித்திகா. அதனால் தன்னுடைய அமைதி செண்பகத்தை பலவாறு யோசிக்க வைக்கும் என்று உணர்ந்தவள், “எந்த சிச்சுவேஷன்ல இந்த மேரேஜ் ஐ நீங்க பண்ணிருப்பீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது மா. இது நம்ம ஆல்ரெடி டிசைட் பண்ண மேரேஜ் தானே. அப்புறம் அதை எப்படி பண்ணா என்ன…!!! இதுல நான் உங்கள தப்பா நினைக்கிறதுக்கு எதுவுமே இல்லை.” என்று அவள் சொல்லி கொண்டு இருக்க, ரித்திகா வருணின் அறையில் இல்லாததால் அவளை தேடி கொண்டு செண்பகத்தின் அறைக்கு ரேவதியும், சுதாகரும், வந்தனர்.
வெகு நேரமாக மயக்க நிலையில் இருந்த தன்னுடைய மகளை இப்போது நார்மலாக பார்ப்பது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் வேகமாக தங்களுடைய மகளின் அருகே சென்று அவளை ஆர தழுவிக் கொண்டு தங்களுடைய அன்பு மழையை அவள் மீது பொலிந்தனர். 😍 🤗 ❤️ பின் சிறிது நேரத்தில் விஷ்ணுவும், ஷாலினியும், அவர்களுடன் இணைந்து கொள்ள.. அவர்கள் அனைவரும் சேர்ந்து நடந்து முடிந்த வருண் மற்றும் ரித்திகாவின் திருமணத்தைப் பற்றி தான் பேசி கொண்டு இருந்தனர்.
இப்படியே இவர்கள் நேரம் போவது தெரியாமல் பேசி கொண்டு இருக்க எதேச்சையாக ரித்திகாவின் சோர்வான முகத்தை கவனித்த ரேவதி, அப்போது தான் ரித்திகா வெகு நேரமாக எதுவும் சாப்பிடவில்லை என்று அவளுக்கு ஞாபகம் வர தயக்கத்துடன் செண்பகத்தை பார்த்தவள், “சம்மந்தி அம்மா.. ரித்திகா சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆச்சு. டாக்டர் வேற ஆல்ரெடி அவர் ரொம்ப வீக்கா இருக்கான்னு சொல்லிட்டு போனாரு. நம்ம அவளை சாப்பிட கூட்டிட்டு போலாமா..??” என்று தங்கி தங்கி கேட்டாள்.
அப்போது தான் இதைப் பற்றி தான் துளியும் யோசிக்கவில்லை என்று யோசித்துப் பார்த்த செண்பகம் என்ன தான் இருந்தாலும் ஒரு வரை யார் பத்திரமாக பார்த்துக் கொண்டாலும் அது தாய்க்கு ஈடாகாது என்று நினைத்துக் கொண்டவள், “பாருங்களேன் சம்பந்தி… அம்மான்னா.. அம்மா தான். ரித்திகாவுக்கு சரியாயிட்ட சந்தோஷத்துல நான் இத பத்தி எல்லாம் யோசிக்காம விட்டுட்டேன். மணி இப்பவே எட்டுக்கு மேல ஆயிடுச்சு. வாங்க எல்லாருமே போய் சாப்பிடுவோம். ரித்திகாவுக்கு இப்ப தான் உடம்பு சரியாகிர்க்கு. அதனால அவ சீக்கிரம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று சொல்லி அவர்கள் அனைவரையும் சாப்பிடுவதற்காக கீழே அழைத்து சென்றாள்.
தரை தளத்தில் சமையல் அறையின் அருகே இருந்த டைனிங் ஹாலில் அவர்கள் அனைவரும் வந்து அமர்ந்தனர். இன்று வருணின் திருமணம் என்பதால் சைவம், அசைவம், என அனைத்திலும் ஸ்பெஷலான உணவுகளை அவர்களுடைய உணவகத்தில் பணியாற்றும் மாஸ்டர் செப்பை வைத்து சமைத்து இருந்தனர். இரண்டு மூன்று முறை ரித்திகாவின் பெற்றோர்கள் நாராயணன் பேலஸிற்கு வந்து இருந்ததால், அவர்கள் இந்த பிரம்மாண்டத்திற்கு எல்லாம் பழகிப்போய்் இருந்தார்கள். இருப்பினும் புதிதாக எதையாவது பார்க்கும்போது அவர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
இன்று தாங்கள் இந்த வீட்டின் சம்பந்தியாகி இருக்கிறோம். தங்கள் வீட்டின் பெண் இந்த வீட்டின் மருமகளாக இருக்கிறாள். அதைத் தாண்டி அவள் இந்த உலகமே போற்றும் சிறந்த பணக்காரர்கள் மற்றும் பிசினஸ் மேன்களின் ஒருவரான வருண் நாராயணனை திருமணம் செய்து இருக்கிறாள். இது பலர் ஏங்கி தவிக்கும் கனவு வாழ்க்கை. அப்படி ஒரு வாழ்க்கையை நிஜமாகவே தங்களுடைய மகள் வாழப் போகிறாள் என்பது நிஜம் என்பது அவர்களால் நம்ப முடியவில்லை. இப்போதும் தங்கள் ஏதோ ஒரு கனவில் இருப்பதைப் போல நினைத்து அந்த பூரிப்பில் இருந்தனர்.
மதிய வேளையில் குடிக்க தொடங்கிய வருண், அவனுக்கு போதை தெளிந்த பின் மீண்டும் மீண்டும் இப்போது வரை போதையை ஏற்றுக் கொண்டு இருந்தான். சிவா அவன் அருகே இருந்து கொண்டு அவனை நிறுத்துவதற்காக போராடிக் கொண்டு இருந்தான். ஆனால் அவன் தன்னிடம் பேசுவதை கேட்டு கடுப்பான வருண் போதையில் அவனை கீழே தள்ளி விட்டவன், “இப்ப என்ன டா உனக்கு பிரச்சனை..??? உங்க எல்லாருக்காகவும் எல்லாத்தையும் நான் பார்த்து பார்த்து தானே செய்கிறேன்…!! இப்ப என் அம்மாவுக்காக போயும் போயும் அந்த ரித்திகாவ கூட கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா இப்போ என்னோட சந்தோஷத்துக்காக நான் குடிக்க கூட கூடாதா..?? சும்மா வந்து நோய்ன்னு.. நோய்ன்னு… ஏதாச்சும் பேசிட்டே இருக்காத. எனக்கு இரிடேட் ஆகுது.” என்று சத்தமாக சொன்னவன், தன்னுடைய இரு கைகளையும் முறுக்கிக் கொண்டு ஆக்ரோஷத்தில் வெறி பிடித்தவனை போல், “ஆஆஆ…!!” என்று அலறினான்.
பின் அங்கு இருந்த சில மது பாட்டில்களை தூக்கி கீழே போட்டு உடைத்த வருண், அதை சரமாரியாக உடைத்து எறிந்தான், போதையில் தள்ளாடிய படி எழுந்து சென்றான். இந்த நிலையில் வருண் கீழே செல்வது சரி இல்லை என்று நினைத்த சிவா அவனை, “ப்ளீஸ் சார்…!! இப்ப நீங்க எங்கேயும் போக வேண்டாம். ரித்திகா மேடமுக்கு வேற இப்ப தான் மயக்கம் தெளிஞ்சு இருக்கு. நீங்க இந்த நிலைமையில அங்க போய் அவங்க கிட்ட ஏதாவது பேசி சண்டை போட்டு மறுபடியும் உங்களுக்கு ஏதாவது ஆயிரப்போகுது.” என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி அவனை தடுக்க முயன்றான்.
ஆனால் அவன் என்ன சொன்னாலும் அதைக் கேட்கும் மன நிலையில் வருண் இல்லை. “சும்மா சும்மா நீ என்னோட வே -ல வந்து என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்க டா சிவா. உனக்கு அவ்வளவு தான் மரியாதை பார்த்துக்கோ. போ டா அங்கிட்டு .” என்று போதையில் உளறி கொண்டே சொன்னவன், மீண்டும் சிவாவை தள்ளிவிட்டு வீட்டு விட்டு அங்கு இருந்து தள்ளாடிய படியே லிஃப்ட் இன் உள்ளே சென்றான்.
வருண் தனக்கு முன்னே கீழே சென்று எந்த பிரச்சனையும் செய்து விட கூடாது என்று நினைத்து பயந்த சிவா, அவன் பயணிக்கும் லிஃப்ட் கீழே செல்வதற்குள் வேகவேகமாக மாடி படிக்கட்டுகளில் வழியாக கீழே ஓடி வந்தான். அவன் மூச்சு வாங்க லிஃப்ட் இன் அருகே வந்து நிற்க, லிப்ட்ல் இருந்து வெளியே வந்த வருண், போதையின் தள்ளாடிய படி அவன் மேலே விழப் போனான். அவனைத் தாங்கி பிடித்த்த சிவா, “ப்ளீஸ் சார்..!!! இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கெஸ்ட் ரூம்ல தங்கிக்கோங்க. எனக்கு உங்களை இப்படி பாக்குறதுக்கே பயமா இருக்கு.. உங்களால ஏதாவது பிரச்சனை வந்துருமான்னு.” என்று பாவமாக சொன்னான்.
சிவாவிடம் இருந்து வேகமாக தன்னை விடுவித்துக்கொண்ட வருண், “why… ஒய்.. ஒய்..??? நான் போய் எதுக்கு கெஸ்ட் ரூம்ல தங்கனும்..?? நான் அங்க போய் தங்குரத்துக்கா இவ்ளோ பெரிய வீட்டை கஷ்டப்பட்டுடப்பட்டு கட்டினேன்..?? நான் இப்ப என்னோட ரூமுக்கு போகணும். எங்க என்னோட ரூம்..?? வேர் இஸ் மை ரூம்..??” என்று உலறியப்படியே சுற்றிமுற்றி பார்த்த வருண், ஒரு வழியாக தன்னுடைய அறையை கண்டுபிடித்தவன்; “அதோ அங்க இருக்கு என்னோட ரூம்.” என்று டோரா புஜ்ஜி யில் சொல்வதைப்போல சொல்லிவிட்டு அவனுடைய அறையை நோக்கி சென்றான்.
அவன் பின்னே ஓடி சென்ற சிவா, அவனை தடுக்க முயன்றான். ஆனால் அவனை எதையெதையோ சொல்லி திட்டிய வருண் அவனை கண்டுகொள்ளாமல் வேகமாக தன்னுடைய அறைக்குள் சென்று அதன் கதவை தாழிட்டுவிட்டான். ஒரு முறை அந்த கதவு பூட்டப்பட்டு விட்டால்; ஒன்று அதை பாஸ்வேர்ட் போட்டு திறக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கான டிஜிட்டல் சாவியை பயன்படுத்தி அதை திறக்கலாம். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் இவை இரண்டையுமே வருணால் மட்டும் தான் செய்ய முடியும்.
அதைப்பற்றி யோசித்துப் பார்த்துவிட்டு கடுப்பானன சிவா, இதற்கு மேல் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் இனி அனைத்தும் ஆண்டவன் விட்ட வழி என்று நினைத்துக் கொண்டு அங்கு இருந்து தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)