அத்தியாயம் 198: ரித்திகா வருனின் திருமணம் (பார்ட் 1)
நாராயணன் மருத்துவமனையில்…
ரித்திகாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து அவளுக்கு தங்களுடைய டாக்டரின் மூலம் சிகிச்சை கொடுத்த வருண், அவரிடம் ரித்திகாவிற்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கும் படி உத்தரவிடுகிறான். அவனுடைய இந்த முடிவைக் கேட்டு குழம்பிய ஹரி, ஏதேனும் தவறாக நடந்து இருந்தாலும் அதற்கு ரித்திகா பொறுப்பாக முடியாது என்ற நிலையில் இப்படி ஒரு டெஸ்ட் தேவையா என்று அவன் வருனிடம் கேட்க; நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியும் , நீ ராகவி கிடைத்துவிட்ட செய்தியை நாராயணன் மஹாலில் இருப்பவர்களிடம் சென்று தெரிவிக்குமாறு சொல்லி ஹரியை அங்கு இருந்து அனுப்பி வைத்து விட்டான்.
வருணின் பேச்சை தட்ட முடியாமல் அவன் சொன்னபடி கிளம்பி நாராயணன் மஹாலிற்கு வந்த ஹரி, நேராக செண்பகத்திடம் சென்று ரித்திகா கிடைத்துவிட்ட செய்தியை சொன்னான். அதை கேட்டு மகிழ்ந்த செண்பகம், ரித்திகாவின் பெற்றோர்களிடமும் அந்த செய்தியை உற்சாகமான குரலில் தெரிவித்தாள். முதலில் ரித்திகா கிடைத்துவிட்ட செய்தியை கேட்டு மகிழ்ந்த அனைவரும் பின் அடுத்த கேட்ட ஒரே கேள்வி, “அதான் நம்ம ரித்திகா கிடைச்சிட்டால்ல பா..!! அப்புறம் ஏன் நீங்க அவளை இங்கே கூட்டிட்டு வரல..??? வருண் தம்பி எங்க..?? அவர் ரித்திகா கூட தான் இருக்காரா..?? அவங்க ரெண்டு பேரும் எப்ப இங்க வருவாங்க..???” என்று மாறி மாறி ஹரியை கேள்வி கணைகளால் துலைத்தனர்.
ரித்திகா கிடைத்துவிட்ட செய்தியை தவிர அவர்களிடம் வேறு எதைப்பற்றியும் சொல்ல கூடாது என்று வருண் தன்னிடம் சொல்லி அனுப்பி இருந்ததால், “ ரித்திகா அண்ணி வருண் கூட தான் இருக்கான். அத மட்டும் தான் என்னால இப்ப உங்ககிட்ட சொல்ல முடியும். ரித்திகா அண்ணி நல்லா இருக்காங்க. நீங்க அவங்கள நினைச்சு கவலைப்பட வேண்டாம். மத்தது எல்லாத்தையும் நீங்க வருனும் ரித்திகா அண்ணியும் வந்ததுக்கு அப்புறம் அவங்க கிட்டயே கேட்டுக்கோங்க. என்னால இதுக்கு மேல வேற எதையும் சொல்ல முடியாது. புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.” என்று அனைவருக்கும் பொதுவாக சொன்னவன் இதற்கு மேலும் தான் இங்கே நின்று கொண்டு இருந்தால், தன்னை வேறுவேறு விதத்தில் கேள்விகளைக் கேட்டு இம்சிப்பார்கள் என்று நினைத்த ஹரி அங்கு இருந்து வேகமாக சென்று தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டான்.
ஹரி எப்படியும் வருணின் விஷயத்தில் பொய் கூற மாட்டான் என்ற நம்பிக்கையில் அனைவரும் எப்படி இருந்தாலும் வருண் ரித்திகாவை கூட்டி கொண்டு விரைவில் இங்கே வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் சற்று நிம்மதி அடைந்தனர். இருப்பினும் ரித்திகாவின் பெற்றோர்களுக்கும், ஷாலினிக்கும், முதலில் தங்களுடைய கண்களால் ரித்திகாவை பார்த்தால் தான் போன தங்களுடைய உயிர் மீண்டும் வந்ததைப் போல் இருக்கும் என்று தோன்றியது. விஷ்ணு அவர்களுடனே இருந்து அவ்வப்போது அவர்களை ஆறுதல் படுத்திக் கொண்டே இருந்தான்.
இரண்டு மணி நேரத்திற்கு பின்..
நாராயணன் மருத்துவமனையில்…
வருணை தன்னுடைய கபினுக்கு வரும்படி அழைத்த சீஃப் டாக்டர், யாருக்கும் தெரியாமல் அவர் தன்னுடைய மேற்பார்வையின் கீழ் ரித்திகாவை டெஸ்ட் செய்த ரிப்போர்ட்டினை வருண் முன் நீட்டினார். இந்த ரிப்போர்ட் எந்த மாதிரி வந்தால் வருண் அதை நினைத்து மகிழ்வான் என்று அந்த டாக்டருக்கு தெரியாததால் அந்த ரிபோட்டில் என்ன இருக்கிறது என்று அவனிடம் அவராக தன்னுடைய வாயை திறந்து சொல்ல அவருக்கு தைரியம் இல்லை.
உணர்ச்சியற்ற முகத்துடன் டாக்டரிடம் இருந்து அந்த ரிப்போர்ட்டை வாங்கி திறந்து படித்துப் பார்த்தான் வருண். அந்த ரிப்போர்ட்டில் தெளிவாக ரித்திகா இன்னும் கன்னி தன்மையுடன் தான் இருக்கிறாள் என்று போட்டு இருந்தது. அந்த ரிப்போர்ட் இப்படி தான் வரும் என்று அவன் ஏற்கனவே அறிந்து இருந்தாலும், இப்போது அவன் ஆதாரத்துடன் அதை தெரிந்து கொள்ளும்போது அவனை அறியாமல் அவனுடைய உதட்டோரம் சிறு புன்னகை மலர்ந்தது. 😁 😁 😁
அவனுடைய முகத்தில் திடீரென்று அரும்பிய அந்த புன்னகையை பார்த்தவுடன் தான் வருண் எதிர்பார்த்ததைப் போல தான் கொடுத்து இருக்கிறோம் போல என்று நினைத்து நிம்மதி அடைந்தார். தன்னுடைய கோட் பாக்கெட்டிற்குள் அந்த ரிப்போர்ட்டை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்ட வருண், அங்கே தொங்கிக் கொண்டு இருந்த வால் கிளாக்கில் நேரத்தை கவனித்தான். அதில் நேரம் இரவு 12: 39 என்று காட்டியது. விடியற்காலை 4 :15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வருணிக்கும் , ரித்திகா விற்கும் , திருமணம் நடக்கவிருக்கிறது.
அதனால் இப்போதே தான் ரித்திகாவுடன் இங்கே இருந்து கிளம்பினால் தான் சரியான நேரத்திற்கு மண்டபத்திற்கு சென்று கிளம்பி நல்லபடியாக திருமணத்தை நடத்தி முடிக்க முடியும் என்று நினைத்த வருண், “சார் இன்னும் 3 அண்ட் அ ஹால்ஸ் ஹவர்ஸ் -ல எங்களுக்கு மேரேஜ். சோ நான் இப்பவே அவளை இங்க இருந்து கூட்டிகிட்டு கிளம்பனும். நீங்க அவளை டிஸ்டார்ஜ் பண்ணுங்க.” என்றான்.
வருண் பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சீஃப் டாக்டர், “என்ன சார் சொல்றீங்க..?? நான் ஆல்ரெடி உங்ககிட்ட சொன்னேன்ல அவங்க அப்சர்வேஷன்ல இருக்கணும்னு. அண்ட் நீங்க அவங்களை கூட்டிட்டு போனாலும் பிரயோஜனம் இல்ல. எப்படியும் அவங்களுக்கு ஆஃப்டர் நூன் -க்கு மேல தான் மயக்கம் தெரியும். அவங்கள கண்டிப்பா மெடிக்கல் அப்சர்வேஷன்ல வெச்சிருக்கணும்.” என்று தங்கி தயங்கி சொன்னார்.
வருண்: “நீங்க சொல்றது எல்லாம் எனக்கு புரியுது டாக்டர். நீங்களே அவளை பாக்குறீங்கல்ல.. அவ எப்படி இருக்கான்னு… எங்க மேரேஜ் / நடக்க கூடாதுன்னு தான் யாரோ அவளை கடத்திட்டு போய் இப்படி பண்ணி இருக்காங்க. இன்னும் கரெக்டா சொல்லனும்னா, அவ என்ன கல்யாணம் பண்ணிக்கிறதுனால தான் அவளுக்கு இவ்ளோ ப்ராபளமே வந்து இருக்கு.
என்னால ஆல்ரெடி அவ நிறைய கஷ்டப்பட்டுட்டா. இப்ப நான் இந்த மேரேஜை போஸ்ட் பான் பண்ணி வேற ஒரு டேட்ல அரேஞ்ச் பண்ணா கூட, அப்பயும் இதே மாதிரி வேற ஏதாவது நடக்கும். என்னால இதுக்கு மேலயும் ரிஸ்க் எடுக்க முடியாது டாக்டர். வேணா நீங்களும், உங்க ஸ்டாஃபும், எங்க கூட வாங்க. ரித்திகா கூடியே இருந்து அவளை நல்லா பார்த்துக்கோங்க. உங்களுக்கு ஏதாவது மெடிக்கல் எக்யூப்மென்ட் தேவைன்னா சொல்லுங்க. அது எல்லாத்தையும் இங்க இருந்து அங்கி சிப்ட் பண்ணிக்கலாம். பட் அட் எனி காஸ்ட் இந்த மேரேஜ் நடக்கணும்.
வெளி ஆளுங்க யாராவது ரித்திகா எப்படி மயங்கி விழுந்தான்னு கேட்டா, அந்த பாம் ப்ளாஸ்ட் ஐ பார்த்த சாக்ல அவ அங்கேவே மயக்கம் போட்டு விழுந்துட்டா. அண்ட் அவளுக்கு ஹாய் பியூர் வந்துருச்சு. அவ ரொம்ப பயந்து போனதுனால அவளுக்கு ஃபீவரும் குறையல. மயக்கமும் தெரியல. இப்படி தான் நான் சொல்லுவேன். நீங்களும் அப்படி தான் சொல்லணும்.” என்று உறுதியான குரலில் சொன்னான்.
வருண் பேசும் விதத்தை வைத்து அவன் அனைத்தையும் ஏற்பாடு செய்து விட்டு தான் தன்னிடம் பேசி கொண்டு இருக்கிறான் என்று புரிந்து கொண்ட அந்த சீஃப் டாக்டர், “ஓகே சார் ஒரு டென் மினிட்ஸ் மட்டும் வெயிட் பண்ணுங்க. நான் டிஸ்சார்ஜ் ப்ரொசீஜர் எல்லாத்தையும் முடிச்சிட்டு உங்க கூட கிளம்பி வரேன். எனக்கு அசிஸ்ட் பண்றதுக்கு ரெண்டு நர்சையும் கூட கூட்டிட்டு போலாம். இந்த செகண்ட்ல இருந்து ரித்திகா என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. அவங்களுக்கு எதுவும் ஆகாம நான் பார்த்துக்கிறேன்.” என்று சொன்னவர் அவர் சொன்னது போல் அனைத்தையும் தயார் செய்து, அவர் ரித்திகாவை டிஸ்சார்ஜ் செய்தார்.
சிவாவிற்கு கால் செய்து நாராயணன் மஹால் ஐ தன்னுடைய ஆட்களை வைத்து சுற்றி வளைக்க சொன்னவன், பின் வாசலில் தனக்காக காத்திருக்கும் படி அவர்களுக்கு உத்தரவிட்டான். பின் ரித்திகாவை தூக்கி கொண்டு தன்னுடைய காரின் பின் சீட்டில் அவளை வசதியாக படுக்க வைத்த வருண், நாராயணன் மருத்துவமனையின் சீஃப் டாக்டரையும் அவருடன் வரும் இரண்டு செவிலியர்களையும் தன் பின்னே வேறு ஒரு காரில் பாலோ செய்யும் படி சொல்லிவிட்டு தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து நாராயணன் மஹாலை நோக்கி கிளம்பினான்.
நாராயணன் மஹாலில்…
சிவாவின் மூலம் வருண் ரித்திகாவை அழைத்துக்கொண்டு இங்கே வந்து கொண்டு இருக்கிறான் என்ற தகவலை தெரிந்து கொண்டவர்கள், மினி பார்ட்டி ஹாலில் ஒன்று கூடி அவர்களுடைய வருகைக்காக காத்திருந்தனர். ஒரு மணி நேரம் பயணத்திற்கு பின் ரித்திகாவை அழைத்து கொண்டு நாராயணன் மஹாலிற்கு வந்தான் வருண். அவன் வரும் வழியில் எல்லாம் எந்த பிரச்சனையும் அவர்களை நெருங்காமல் சிவா கவசமாக இருந்து அவர்களை பாதுகாத்தான்.
மயங்கிய நிலையில் இருக்கும் ரித்திகாவை தன்னுடைய கைகளில் ஏந்திக்கொண்டு அந்த மினி பார்ட்டி ஹாலிற்குள் நுழைந்தான் வருண். மயங்கி கிடக்கும் ரித்திகாவை பார்த்தவுடன் பதட்டமாக அனைவரும் வருணின் அருகே சென்று ரித்திகாவும் என்ன நேர்ந்தது என்று விசாரிக்க தொடங்கினர். கண்ணீர் நிறைந்த கண்களுடன் ரித்திகாவின் பெற்றோர்கள் தங்களுடைய மகள் இருக்கும் நிலையை கண்டு பதறினார்கள். 🥺 😥 😥
அவர்களை நிதானமாக பார்த்த வருண், “அவளுக்கு இப்போ கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் வேணும்னு டாக்டர் சொல்லிருக்காரு. அவளுக்கு எதுவும் ஆகல. நான் ஆகவும் விடமாட்டேன். இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். அவளுக்கு ட்ரீட்மென்ட் குடுக்க டாக்டர் இங்க வந்திருக்காரு. நான் முதல்ல ரித்திகாவ அவளோட ரூம்ல விட்டுட்டு வந்து உங்க கிட்ட பேசுறேன். என்று சொன்ன வருண் அவளுக்கென ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று அவளை அங்கு இருந்த பெட்டில் படுக்க வைத்தான்.
ரித்திகா சோர்வாக இருந்ததால் தான் கையோடு கொண்டு வந்திருந்த குளுக்கோஸ் டிப்ஸ் ஐ டாக்டர் ரித்திகாவுக்கு போட்டுவிட்டார். கவலை நிறைந்த முகத்துடன் தங்களுடைய மகளை பார்த்துக் கொண்டு இருந்த ரித்திகாவின் பெற்றோர்கள், வருணின் வார்த்தையை நம்பி அந்த டாக்டரிடம் கூட தன்னுடைய மகளைப் பற்றி எதுவும் விசாரிக்காமல் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.
பல மணி நேர ஓட்டத்திற்கு பின் ஓய்விற்காக அவனுடைய கால்கள் அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருக்க சோர்வாகத் தன்னுடைய அறைக்கு வந்த வருண், அங்கு இருந்த சோபாவில் அசதியில் சாய்ந்து அமர்ந்தான். இப்போது ரித்திகாவின் அறையில் இருந்து வருணின் அறைக்கு வந்த அனைவரும் ரித்திகாவை பற்றி அவனிடம் விசாரிக்க தொடங்கினர்.
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)