Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே 199

தாபம் தீர்க்க வந்த தாரமே 199

by Thenaruvi Tamil Novels
73 views

அத்தியாயம் 199: ரித்திகா வருணின் திருமணம் (பார்ட் 2)

ரித்திகா காணாமல் போன செய்தியை இவர்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்து இருப்பதால் தான் ஏற்கனவே தயார் செய்து வைத்து இருந்த பொய்யை இவர்களிடம் சொல்ல முடியாது என்று நினைத்த வருண், தன்னுடைய திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காக பிளான் செய்து யாரோ ஒருவன் ரித்திகாவை கடத்தி விட்டதாகவும், நான் ஒரு வேளை அவளை கண்டுபிடித்து விட்டாலும் கூட இந்த திருமணம் நடக்க கூடாது என்று நினைத்ததால் அவன் ரித்திகாக்கு அதிகம் படியான மயக்க மருந்தை கொடுத்து இருப்பதாகவும், அதனால் தான் அவள் இன்னும் மயக்கத்தில் இருப்பதாகவும், நான் அவளுடைய பென்டில் இருக்கும் ஜிபிஎஸ் சிக்னலை வைத்து கண்டு பிடித்து ஹாஸ்பிடலில் சேர்த்து அவளுக்கான சிகிச்சையை கொடுத்துவிட்டு பின் அவளை இங்கே அழைத்து வந்ததாகவும் அவர்கள் அனைவரிடமும் தெளிவாக சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டு மிகவும் பயந்து போன ரித்திகாவின் பெற்றோர்களுக்கு ஒரு புறம் திருமணத்திற்கு முன்பே வருணால் ரித்திகாவிற்கு இத்தனை ஆபத்து வருகிறது.  இன்னும் அவனை தன்னுடைய மகள் திருமணம் செய்து கொண்டால் திருமணத்திற்கு பின்பு அவளை எத்தனை ஆபத்துகள் துரத்துமோ என்று நினைத்து பயம் இருந்தாலும், இன்னொரு புறம் தாங்கள் ஏற்கனவே பாதிக்கடலை கடந்து வந்து விட்ட பின் இதற்கு மேல் தங்களால் திரும்பி செல்ல முடியாது என்னும்போது இனி அதைப்பற்றி யோசித்து பயனில்லை என்று நினைத்தவர்கள், கடவுளின் மீதும் வருணின் மீதும் தங்களுடைய பாரத்தை போட்டுவிட்டு தங்களுடைய மகள் நன்றாக இருப்பாள் என்று நம்புவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

சுதாகர்: “வருண் அருகே சென்று அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டவர், “ரொம்ப தேங்க்ஸ் பா. நீங்க எங்ககிட்ட சொன்ன மாதிரியே என்னோட பொண்ண காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டீங்க. ஆனா இப்பவும் அவ காணாம போனத பத்தி நினைச்சா, எனக்கு நெஞ்செல்லாம் பதறுது. இப்ப அவளோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைனாலும், இனிமேலும் இந்த மாதிரி எதுவும் நடக்காம இருக்குமான்னு அவள பெத்தவங்களா எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு. அதனால நீங்க எனக்கு அவளை நல்லா பாத்துப்பேன்னு ப்ராமிஸ் பண்ணுவீங்களா..??? நாளைக்கு உங்களுக்குள்ளயே ஏதாவது பிரச்சனை சண்டைன்னு வந்தா கூட நீங்க அவளை விட்டுட்டு போகாம அவ கூட இருந்து அவளுக்கு எந்த ஆபத்து வராம அவளை பத்திரமா பாத்துக்குவேன்னு எனக்கு சத்தியம் பண்ணி குடுங்க.” என்று சொல்லிவிட்டு வருண் முன் தன்னுடைய ஒரு கையை நீட்டி தனக்கு சத்தியம் செய்யும்படி கேட்டார்.

சுதாகரின் கையின் மீது தன்னுடைய கையை வைத்து அவருக்கு சத்தியம் செய்த வருண், “இப்போ நடந்த விஷயம் என்ன மீறி எனக்கு தெரியாம நடந்துருச்சு. நான் என்ன ரீசன் சொன்னாலும், இப்படி நடக்க விட்டது என்னோட மிஸ்டேக் தான் அங்கிள். இனிமே இப்படி எப்பவும் நடக்காம பார்த்துக்கிறேன். எப்போ ரித்திகா என்னோட வைஃப் ஆகுறாளோ அந்த செகண்ட்ல இருந்து அவ என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. எங்களுக்குள்ள என்ன நடந்தாலும் சரி. அட் எனி சிச்சுவேஷன், அட் எனி காஸ்ட், நான் அவளை ப்ரொடெக்ட் பண்ணுவேன். ஐ ப்ராமிஸ் யு அங்கிள். ப்ளீஸ் யூ டோன்ட் வரி.” என்று உறுதியான குரலில் சொன்னான்.

அனைவரும் ரித்திகா பத்திரமாக கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தனர். அப்போது வருண் அருகே வந்த சீதா அவ கிடைச்சிட்டா சரி ஆனா நீ இப்போ அவளை கல்யாணம் பண்ணிக்கபோறியா…??? அதுவும் அவ மயக்கத்துல இருக்காளே… அப்புறம் எப்படி இந்த கல்யாணம் நடக்கும்..??” என்று நக்கலாக கேட்டாள். 

வருண்: “நம்ம பிக்ஸ் பண்ண டைம்ல நான் அவளை கல்யாணம் பண்ணிக்க தான் போறேன். இந்த கல்யாணம் நடக்கக்கூடாதுன்னு யாரெல்லாம் ஆசைப்பட்டாங்களோ, அவங்களுக்காகவே நான் இந்த கல்யாணத்தை நடத்தி காட்டுவேன்.” என்று உறுதியான குரலில் சொன்னான்.

அது வரை இந்த திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற பயத்திலும் குழப்பத்திலும் இருந்த செண்பகம், இறுதியாக வருண் சொன்னதை கேட்டு அவன் இவ்வளவு உறுதியாக பேசுகிறான் என்றால் இந்த திருமணத்தை சரியாக நடத்தி முடிப்பதற்கு அவனிடம் ஏதாவது திட்டம் இருக்கும் என்று நினைத்து நிம்மதி அடைந்தாள். ஆனால் சீதாவோ விடாமல், “அவ கிட்டத்தட்ட நாலு அஞ்சு மணி நேரத்துக்கு மேல மயக்கத்திலயே கிடக்கிறா. நீ அவளை காப்பாத்தி கூட்டிட்டு வரதுக்கு முன்னாடி அவளை கடத்தி வெச்சிருந்தவங்க அவளை என்னென்ன பண்ணாங்களோ யாருக்கு தெரியும்..?? இப்படி ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கனும்னு உனக்கு என்ன தலை எழுத்தா வருண்..??” என்று எரிச்சலான குரலில் கேட்டாள். 😒 😡

சீதா இதைப் பற்றி பேசிய உடன் தான் அங்கு இருந்த அனைவரும் இந்த கோணத்தில் யோசிக்க தொடங்கினர். செண்பகமும் சீதா சொன்னது குறித்து யோசித்துப் பார்த்தாள். ஆனால் அவளுக்கு… ரித்திகாவோ திருமணம் ஆகாத இளம் பெண். வருனோ தன்னுடைய மனைவியை இழந்துவிட்டு தன்னுடைய பையனுடன் இருப்பவன். தன்னுடைய மகன் இப்படி இருக்கும் போது, அவள் தன்னுடைய மகனை திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்பதற்காக ஒரு கும்பல் அவளை கடத்தி அப்படி அவளை ஏதாவது செய்திருந்தால் கூட அதற்கு அவள் பொறுப்பாகாத நிலையில் தான் எப்படி அவளை குறை கூற முடியும் என்று நினைத்தவள், நடந்தது எதுவாக இருந்தாலும் ரித்திகா தான் தன்னுடைய மருமகள் என்று தெளிவாக இருந்தாள். 

சீதா சொன்னதை கேட்ட ரித்திகாவின் பெற்றோர்களின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. தங்களுடைய மகளுக்கு அப்படி ஏதேனும் ஒரு கொடுமை நடந்திருக்குமா என்று கூட அவர்களால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. அப்படி நடந்திருக்காது என்று அவர்களால் நம்ப முடிந்தாலும் அதைப்பற்றி வருனிடம் அவனுடைய குடும்பத்தினரிடமும் என்ன பேசுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை அதனால் வலி நிறைந்த கண்களுடன் வருனை பார்த்தனர். 😥 🥺 😣

வருண்: சீதாவை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தவன், “அப்படிலாம் அங்க எதுவாக தப்பா நடக்கல. அவங்க அவளை கட்டி போட்டு வச்சிருந்தாங்க. நான் போய் அவளை காப்பாத்தி கூட்டிட்டு வந்தேன். அவ்ளோ தான்.” என்று உறுதியான குரலில் சொன்னான்.

சீதா: “அவளை கடத்தினவங்க அவளுக்கு நிறைய மயக்க மருந்து கொடுத்ததனால தான் இன்னும் அவ மயக்கத்துல இருக்கான்னு நீதானே பா சொன்னா.. அப்புறம் அவளை கட்டி போட்டு வச்சிருந்தாங்கன்னு சொல்ற…!! ஏற்கனவே மயக்கத்துல இருக்குறவங்கள எதுக்காக அவங்க கட்டி போடணும்..??” 🤔 என்று லாஜிக்காக ஒரு கேள்வியை கேட்டாள். 

வருண்: “அவனுங்க அவளை கட்டிப்போட்டதுக்கு நான் என்ன அத்தை பண்ண முடியும்…?? நீங்க ரொம்ப யோசிச்சு தேவை இல்லாம இமாஜின் பண்றீங்க.” என்று கேஷுவலாக சொன்னான். 

சீதா: “நீ என்ன சொன்னாலும் எதுவும் நடக்கலைன்னு என்னால நம்ப முடியல வருண். அவன் அவன் சும்மா ரோட்ல போற பெண்ணையே விட்டு வைக்க மாட்டேங்குறானுக்க… இதுல இவ இத்தனை மணி நேரமா மயக்கத்துல இருந்து இருக்கா. அப்ப அவனுங்க எதுவும் அவளை பண்ணாமையா இருந்திருப்பான்..??” என்று மீண்டும் அவனை சந்தேக கண்களுடன் பார்த்து கேட்டாள். 

தான் ஆதாரப்பூர்வமாக இதை நிரூபிக்காத வரை தன்னுடைய அத்தை இதை விடப்போவதில்லை என்று நினைத்த வருண், தன்னுடைய கோர்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரித்திகாவுக்கு வெர்ஜிடிட்டி டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுத்து சீதாவின் முன்னே நீட்டியவன், “நாளைக்கு இப்படி அவளை யாரும் சந்தேக கண்ணோட பாத்து தேவை இல்லாம எந்த கேள்வியையும் கேட்ற கூடாதுன்னு தான் நான் ஏற்கனவே ஹாஸ்பிடல் அவளுக்கு வெஜினிட்டி டெஸ்ட் எடுத்துட்டேன். இது அதோட ரிப்போர்ட். 

உங்களுக்கு படிக்க தெரியலேனா படிக்க தெரிஞ்சவங்க வேற யார்கிட்டயாவது குடுத்து படிக்க சொல்லி கேட்டு தெரிஞ்சுக்கோங்க. இந்த ரிப்போர்ட்ல அவ விர்ஜின் அதாவது கன்னித்தன்மையோட தான் இருக்கான்னு வந்துருக்கு. இதுக்கு மேல இதை பத்தி யாரும் எதுவும் பேச வேண்டாம். போய் ஒரு ஒன் ஹார் எல்லாரும் ரெஸ்ட்் எடுங்க. அதுக்கப்புறம் எல்லாரும் கிளம்பி ரித்திகாவை  ரெடி பண்ணுங்க. பிக்ஸ் பண்ண டைம்க்கு எங்க மேரேஜ் நடக்கும். நான் என்னோட ரூமுக்கு போறேன். அங்கயும் வந்து என்கிட் ஏதாவது கொஸ்டின் கேட்டு என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. ஆல்ரெடி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. ப்ளீஸ் லீவ் மீ அலோன்.” என்று சொன்ன வருண் ரித்திகாவின் டெஸ்ட் ரிப்போர்ட்டை அங்கு இருந்த மேஜையில் வைத்து விட்டு எழுந்து சென்று ரெஃப்ரெஷ் ஆகுவதற்காக ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்து கொண்டான். 

முதலில் அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டை தன் கையில் எடுத்த சீதா, அதை வைஷாலி இடம் கொடுத்து வருண் சொன்னதைப் போல் தான் அதில் எழுதி இருக்கிறதா என்று கேட்டாள். அந்த ரிப்போர்ட்டை நன்கு படித்துப் பார்த்த வைஷாலியும் வருண் சொன்னது உண்மை தான் என்று சொல்ல, “சரி வா வைஷு.. நம்ப தூங்க போகலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்த நேரம் வேற வந்துரும். நம்ம சீக்கிரமா எந்திரிச்சு கிளம்பனும்.” என்று சொல்லிவிட்டு தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு அங்கு இருந்து சென்று விட்டாள்.

தனியாக தூங்கி கொண்டு இருக்கும் சித்தார்த் திடீரென்று எழுந்து தான் ரித்திகாவை பார்க்க வேண்டும் என்று சொல்லி மீண்டும் அழத் தொடங்கி விட்டால் என்ன செய்வது என்று நினைத்த செண்பகம், தானும் தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள். வருண் கொண்டு வந்த ரிப்போர்ட்டை படித்துப் பார்த்த ரித்திகாவின் பெற்றோர்கள், அதை பத்திரமாக தங்களுடன் வைத்து கொண்டனர். இந்தப் பிரச்சனை வருவதற்கு முன் வருண் இப்படி ஒரு டெஸ்ட் எடுத்திருந்தால்,  கண்டிப்பாக அவர்கள் அவன் மீது கோபப்பட்டு இருப்பார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு அந்த டெஸ்டின் அவசியம் என்னவென்று புரிந்து விட்டதால், அவர்கள் மனதார வருணிக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கு இருந்து நிம்மதியாக தங்களுடைய அறைக்கு சென்றனர்.

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured