Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 197

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 197

by Thenaruvi Tamil Novels
59 views

அத்தியாயம் 197: வருணின் விபரீத முடிவு (பார்ட் 2)

மீதம் இருந்தவர்களை வருணின் ஆட்களும் சிவாவும் வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்க தன்னுடைய நண்பன் வருணின் கைகளில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு இருப்பதை கவனித்த ஒருவன், வேகமாக வருணின் அருகே சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் இடுப்பில் சொருகி வைத்து இருந்த அந்த துப்பாக்கியை தன் கைகளில் எடுத்துக் கொண்டு வருணை நோக்கி நீட்டி, “அவனை விடுடா. இல்லனா நான் உன்னை சுட்டு கொன்றுவேன்.” என்று நடுங்கிய கைகளுடன் சொன்னான். 

அவனைப் பார்த்து கோணலாக புன்னகைத்த வருண், “எங்க சுடுடா பாப்போம்.” என்று சொன்னபடியே தன் கையில் இருந்தவனை விட்டுவிட்டு தன்னை நோக்கி துப்பாக்கியில் குறி வைத்திருப்பவனை நோக்கி வந்து கொண்டு இருந்தான். அந்த அடியாள், “கிட்ட வராதடா சுட்றுவேன்.” என்று சொன்ன படியே பயத்தில் பின்னோக்கி சென்று கொண்டு இருந்தான். 😨 அவனோடு இப்படி விளையாடிக் கொண்டு இருப்பதற்கு எல்லம் வருணிக்கு நேரம் இல்லை என்பதால், அவனுடைய செய்கைகளால் கடுப்பான வருண், இரண்டெட்டில் அவன் அருகே சென்று அவனுடைய கையில் வேகமாக எட்டி உதைத்தவன், லாபகமாக அவன் கையில் இருந்து மேலே பறந்த துப்பாக்கியை தன் கையால் எட்டி பிடித்து அதை அவனுடைய நெற்றி பொட்டில் வைத்தான். 

ஒரு நொடியில் தன் கையில் இருந்த துப்பாக்கி அவனுடைய கைகளுக்கு சென்று விட்டதை பார்த்து பயத்தில் நடுங்கிய அந்த ரவுடி, “சார்.. சார்.. ப்ளீஸ் என்ன விட்ருங்க சார். நீங்க தேடி வந்த பொண்ணு அந்த ரூம்ல தான் இருக்கா.” என்று சொன்னவன் பயத்தில் ஒரு அறையை கை காட்டினான். 😥😨 🙏 அவனை ஒரு உதை உதைத்து தள்ளிய வருண், வேகமாக அவன் கைகாட்டிய அறையின் அருகே சிவா உடன் சென்றான். அந்த அறை உள்ளே இருந்து தாளிடப்பட்டு இருந்தது. 

உள்ளே ரித்திகாவுடன்  இருந்த ஒரு ரவுடி, அவனுடைய இதழின் மூலம் தீர்த்து கொள்ள முடியாத தன்னுடைய இச்சையை அவளுடைய தேகம் எங்கும் தன்னுடைய கைகளால் ஊர்வலம் நடத்தி தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தான். அப்போது வெளியே இருந்து வருண் அந்த கதவை உடைக்கும் முயற்சிக்கும் சத்தம் அவனுக்கு கேட்டது. அதனால் பயந்துபோனவன், வேகவேகமாக அவள் மீது இருந்து எழுந்து நின்றான். அவன் இந்த அறையில் இருந்து தான் தப்பிப்பதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டு இருப்பதற்குள், வருண் அந்த அறையின் கதவை உடைத்துக் கொண்டு சிவா உடன் உள்ளே வந்தான். 

ரித்திகா அணிந்து இருந்த சேலை சற்று கலைந்து அவளுடைய எலுமிச்சை நிறத் தேகத்தை ஆங்காங்கே வெளிச்சம் போட்டு காட்டி கொண்டு இருக்க, அவள் அருகே பயத்துடன் நின்று கொண்டு இருந்தவனை பார்த்தவுடன் வருணின் கோபம் தலைக்கு ஏறியது. 😤 😡 🔥 அவன் இங்கே வருவதற்கு முன் ரித்திகாவிடம்  இவன் என்ன செய்து கொண்டு இருந்திருப்பான் என்று கூட அவனால் யூகித்து பார்க்க முடியாதா என்ன..??? அதனால் பார்த்த இடத்திலேயே ரித்திகாவிடம்  இடம் அத்துமீறியவனின் நெற்றியில் சரமாரியாக குண்டுகளை இறக்கி அவனை அப்படியே கொன்று விட்டான். அந்தத் துப்பாக்கி சத்தத்தை கேட்டு அங்கே ஓடி வந்தான் ஹரி. 

ரித்திகாவின் ஆடைகளை சரி செய்த வருண், அவளை தூக்கிக்கொண்டு அங்கு இருந்து யாருடனும் பேசாமல் வெளியே நடக்கத் தொடங்கி விட்டான். சிவா வருணின் பின்னே ஓடி வந்தான். வருண் ரித்திகாவை தன்னுடைய காரின் அருகே தூக்கிக்கொண்டு வர, காரின் கதவை திறந்தான் சிவா. பதட்டமாக அவர்களின் அருகே ஓடி வந்த ஹரி, “அண்ணிக்கு என்ன ஆச்சு..??”  என்று அவசரமான குரலில் கேட்டான்.

வருண் இன்னும் க்ரிஷாவின் கால் ஐ கட் செய்யாமல் இருந்ததால், அவன் அணிந்து இருந்த ப்ளூடூத் இன் மூலம் ரித்திகாவை பற்றி விசாரித்தாள் க்ரிஷா. அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அந்த காலை துண்டித்த வருண், தன் காரில் இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து அதில் இருந்த தண்ணீரை ரித்திகாவின் முகத்தில் தெளித்து அவளுடைய கன்னத்தில் தட்டி “ரித்திகா வேக் அப்.” என்று மீண்டும் மீண்டும் சொன்னான். ஆனால் ரித்திகாவின் உடலில் துளி அசைவும் இல்லை. அதனால் பயந்து போன வருண், யாரையும் கண்டு கொள்ளாமல் சிவாவை கூட காரில் ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து ஹாஸ்பிட்டலை நோக்கி சென்றான்.

வருண் எப்படியும் ரித்திகாவை  அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு தான் சென்றிருப்பான் என்று நினைத்த ஹரி, அங்கு இருந்த ஆட்களை சிவாவையும் வைத்து இறந்து போனவனின் டெட் பாடியை அப்புறப்படுத்திவிட்டு, ரித்திகாவை  கடத்தியவர்களில் உயிரோடு இருப்பவர்களை தங்களுடைய இடத்தில் அடைத்து வைக்க சொல்லிவிட்டு, ரித்திகா இங்கே இருந்ததற்கான அனைத்து தடயங்களையும் அழித்துவிடும் படி உத்தரவிட்டுவிட்டு அருகே உள்ள நாராயணன் மருத்துவமனைக்கு சென்றான். 

வருண் தன்னுடைய தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டதால் ஹரிக்கு கால் செய்த க்ரிஷா, ரித்திகாவை பற்றி விவிசாரித்தாள். ரித்திகா கிடைத்துவிட்டால் என்பதை தவிர அவளைப் பற்றி வேறு எந்த தகவலையும் ஹரி அவளிடம் சொல்லவில்லை. 

நாராயணன் மருத்துவமனையில்…

அவசர சிகிச்சை பிரிவில் ரித்திகாவை  அனுமதித்து விட்டு அவள் இருந்த அறைக்கு வெளியே காத்திருந்தான் வருண். ரித்திகாவை  செக் செய்த டாக்டர்கள் பின் அவள் ஏன் மயங்கி இருக்கிறார் என்று காரணத்தை தெரிந்து கொள்வதற்காக அவளுடைய பிளட்டையும் எடுத்து டெஸ்ட்க்கு அனுப்பி வைத்தனர். லேபிள் இருந்து ரித்திகாவின்  பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்கி வருவதற்காக ஒரு நர்ஸ் சென்றிருந்தாள். அதுவரை ரித்திகா மிகவும் பலவீனமாக இருந்ததால் அவளுக்கு டிரிப்ஸ் போட்டுவிட்ட டாக்டர்கள் அவளை கண்காணித்தபடி இருந்தனர்.

சில நிமிடங்களுக்கு பின் அந்த நர்ஸ் ரிப்போர்ட்டுடன் உள்ளே வர அதை செக் செய்த டாக்டர் ரித்திகாவின் இப்போதைய கண்டிஷனை பற்றி வருணின் சொல்வதற்காக வெளியே வந்தார். அப்போது அங்கே சரியாக ஹரியும் வந்து சேர்ந்தான்.

வருண்: “அவளுக்கு என்ன ஆச்சு டாக்டர் அவ ஏன் இன்னும் மயக்கத்திலேயே இருக்கா..???” என்று பதட்டமான குரலில் கேட்டான். 

டாக்டர்: அவங்க ஆல்ரெடி ரொம்ப வீக்கா இருக்காங்க. இதுல யாரோ அவங்களுக்கு ஹை பவர் அனஸ்தீசியா.. அதுவும் அதிகமான டோஸ் கொடுத்திருக்காங்க. அதோட பவர் கொறஞ்சி அவங்க கண் முழிக்கிறதுக்கு மினிமம் 10 ஹவர்ஸ் ஆவது ஆகும். அதுக்கு மேலேயே கூட டைம் ஆகலாம்.

ஹரி: “என்ன டாக்டர் சொல்றீங்க நாளைக்கு அவங்களுக்கும் வருணுக்கும் மேரேஜ். அவங்க மயக்கத்துல இருந்தா மேரேஜ் எப்படி நடக்கும்..??” என்று அவசரமான குரலில் கேட்டான். 

வருண்: நீங்க ஏதாவது அவளுக்கு ட்ரீட்மென்ட் பண்ணி அவளை மயக்கத்தில இருந்து எழுப்ப முடியாதா..?? 

டாக்டர்: “நோ சான்ஸ் மிஸ்டர் வருண். அவங்க கண்டிப்பா ரொம்ப நேரத்துக்கு மயக்கத்திலேயே இருக்கணும்னு தான் இந்த மாதிரி டோஸ் ஐ அவங்களுக்கு கொடுத்து இருக்காங்க. இப்போ நம்ம அவங்கள மயக்கத்துல இருந்து எழுப்பிய ஆகணும்னு அவங்களுக்கு ஏதாவது ஆன்ட்டி டோட் குடுத்தோம்னா அது அவங்களோட உயிருக்கே ஆபத்தாயிடும். இப்போதைக்கு அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம மெடிக்கல் அப்சர்வேஷன்ல வெச்சிக்கிறது தான் அவங்களுக்கு நல்லது.” என்று உறுதியான குரலில் சொன்னார். 

“இப்போ நம்ம என்ன டா பண்ணப் போறோம்..??” என்பது போல வருணின் முகத்தை பார்த்தான் ஹரி. சில நொடிகள் எதையோ அமைதியாக யோசித்த வருண் அந்த டாக்டரை தீர்க்கமான பார்வை பார்த்து, “தட்ஸ் ஃபைன். அதை நான் பார்த்துக்கிறேன். இப்ப அவ நல்லா இருக்கிறா தானே எனக்கு அது போதும். ரித்திகா இங்க அட்மிட் ஆனதையும் இப்ப நான் உங்ககிட்ட சொல்லப்போரதையும் நீங்க ரொம்ப கான்ஃபிடன்சியலா வச்சுக்கணும்.” என்று புதிராக சொன்னான். 

டாக்டர்: ஓகே சார். சொல்லுங்க. 

வருண்: “உடனே ரித்திகாவுக்கு  வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுங்க. அதோட ரிசல்ட் என்னவா இருந்தாலும், லேப்ல டெஸ்ட் பண்ற டாக்டர்கே கூட அவர் யாரோட ரிப்போர்ட்ட டெஸ்ட் பண்ணி சப்பிட் பண்ண போறாருன்னு தெரிய கூடாது. அந்த அளவுக்கு இந்த டெஸ்ட் நீங்க சீக்ரெட்டா எடுக்கணும். 

எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த டெஸ்டை எடுத்து என்கிட்ட ரிப்போட்ட கொண்டு வந்து குடுங்க.  எப்போவாவது இந்த விஷயத்துல ரித்திகாவோட பேர் எங்கையாவது வெளியில வந்தா, அதுல சம்மந்தப்பட்ட ஒருத்தரையும் உயிரோட விடமாட்டேன். அதை மனசு வெச்சுக்கோங்க.” என்று சொல்லி வெளிப்படையாக அவரை மிரட்டினான். 

வருண் சொன்னதை கேட்டு பயந்துபோன அந்த சீப் டாக்டர், “ஓகே ஓகே சார்.. எல்லாத்தையும் நானே கூட இருந்து பாத்துக்கிறேன். யூ கேன் டிரஸ்ட் மீ. எந்த தப்பும் நடக்காது.” என்று தயங்கி தயங்கி சொன்னவர் வருண் தனக்கு கொடுத்த முக்கியமான வேலையை யாருக்கும் தெரியாமல் செய்வதற்காக அங்கு இருந்து கிளம்பினார்.

டாக்டர் செல்லும்வரை பொறுமையாக இருந்த ஹரி வருணை குழப்பமான ஒரு பார்வை  பார்த்தவன், “இப்ப இந்த டெஸ்ட் எல்லாம் தேவையா டா..?? நம்ம தான் எதுவும் நடக்கறதுக்குள்ள அங்க போயிட்டோம்ல அப்புறம் எதுக்கு இந்த டெஸ்ட்..?? எனக்கு என்னமோ இது தேவை இல்லாத வேலைன்னு தோணுது. நம்ப அங்க போறதுக்குள்ள ஏதாவது நடந்து இருந்தாலும் பாவம் அவங்க அதுக்கு என்ன பண்ணுவாங்க..?? அவங்களுக்கே தெரியாம ஏதாவது ஒன்னு நடந்தா, அதுக்கு அவங்க எப்படி பொறுப்பாக முடியும்..??” என்று அவசரமான குரலில் கேட்டான்.

வருண்: “நான் என்ன பண்றேன்னு எனக்கு தெரியும் ஹரி. நீ இந்த விஷயத்தை பத்தி யார்கிட்டயும் சொல்லாத. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். அந்தக் கோழி பண்ணையில இருக்கிற சி. சி. டிவி.  ஃபுட்டேஜ் -ல, அதுக்கு வெளியில இருக்கிற ஏதாவது ஒரு இடத்துல எங்கேயாவது கேமரா இருந்து அதுல நம்ப ரித்திகாவை  கூட்டிட்டு வந்தது, அவனுங்க அவளை கடத்திட்டு போனது ரெக்கார்டு ஆகி இருந்துச்சுன்னா.. நமக்கு ஒரு காபி எடுத்துக்கிட்டு அது எல்லாத்தையும் டெஸ்ட்டிராய் பண்ணிடு.

ரித்திகா காணாம போனதும் சரி, அவ திரும்ப கிடைச்சதும் சரி, அத பத்தின எந்த நியூஸுமே வெளியில வரக்கூடாது. நான் சொன்னது எல்லாத்தையும் செஞ்சுட்டு நீ சிவாவை கூட்டிக்கொண்டு நாராயணன் மஹாலுக்கு போய் ரித்திகா கிடைச்சுட்டானு மட்டும் சொல்லு. வேற எத பத்தியும் சொல்ல வேண்டாம்.” என்று உத்தரவிடும் தோனியில் சொன்னான்.

ஹரிக்கு வருணை மறுத்து பேசியும் பழக்கம் இல்லை, அதற்கான தைரியமும் இல்லை. அதனால் அமைதியாக தன்னுடைய அண்ணன் சொன்ன வேலையை செய்வதற்காக அங்கு இருந்து  கிளம்பி சென்றான். 

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured