Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 200

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 200

by Thenaruvi Tamil Novels
86 views

அத்தியாயம் 200: ரித்திகா வருணின் திருமணம் (பார்ட் 3)

ரித்திகாவின் பெற்றோர்கள் தன்னுடைய அறையில் இருந்து சென்ற பின், சிறிது நேரம் ஓய்வை வேண்டி கட்டிலில் வந்து படுத்தான் வருண். அவனுடைய கண்கள் தூக்கத்திற்காக ஏங்கினாலும் அவனுடைய மனம் அவனைத் தூங்க விடுவதாக இல்லை. அவனுக்கு இப்போது அவன் முதல் முதலில்  ஜான்வியை சந்தித்த நிகழ்வும், ஜான்வி இடம் அவன் தன்னுடைய காதலை தெரிவித்த நிகழ்வும், அவன் அவளை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்ட நிகழ்வும், அவனுடைய மன கண்ணில் நிழல் படமாக ஓடியது.

என்ன தான் அவன் மற்றவர்களின் முன்னே சாதாரணமாக தன்னை காட்டிக் கொண்டாலும், இன்னும் சில மணி நேரங்களுக்குப் பிறகு தன்னுடைய ஜான்வின் இடத்தை வேறு ஒருத்திக்கு தரப்போவதை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் முடியவில்லைை. அவனுக்கு இந்த திருமணம் பிடிக்காத திருமணமாக இருந்தாலும் அதை அவன் பிடித்து செய்து கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறான். அதனால் அனைவரிடமும் தனக்கு ஓய்வு வேண்டும் என்று சொல்லிவிட்டு தன்னரைக்கு  வந்த வருண், ஒரு நொடி கூட தூங்கி ஓய்வெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தவன்; அவனுடைய கட்டிலில் கிடந்த ஒரு தலையணையை ஜான்வி என்று நினைத்துக் கொண்டு அதை கட்டிப்பிடித்துக் கொண்டு அவளுக்கான தன்னுடைய காதலை கண்ணீரில் கரைத்து அவளுக்கு உருகி கொண்டு இருந்தான்.

இப்படியே அந்த ஒரு மணி நேரம் கடந்து விட்டது. வருண் சொன்னதைப் போல் இந்த திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று நம்பிக்கை செண்பகத்திற்கு இருந்தாலும், ரித்திகா இன்னும் மயக்க நிலையில் இருக்கும்போது இந்த திருமணத்தில் அவன் எப்படி செய்து முடிப்பான் என்று நினைத்து குழம்பியவள், அது பற்றி பேசுவதற்காக வருணின் அறைக்கு வந்தாள். செண்பகம் அங்கே வரும்போது வருண் ஒரு தலைகணியை கட்டிப்பிடித்துக் கொண்டு அதற்குள் தன்னுடைய முகத்தை புதைத்து வைத்துக் கொண்டு இருந்தான்.

அவனுடைய இந்த நிலையை வைத்து அவன் சோகமாக இருக்கிறான் என்று புரிந்து கொண்ட செண்பகம் அதற்கான காரணத்தையும் உணர்ந்து கொண்டவள், இவனைத்தான் இப்படியே விடக்கூடாது  அவனிடம் தான் வந்த விஷயத்தை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தால் . என்ன தான் வருண் இந்த திருமணத்திற்கு சம்மதித்து இருந்தாலும், இறந்து போன ஜான்வியின்  நினைப்பில் அவன் ரித்திகாவின் கழுத்தில் தாலி கட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவளுள் இருந்து கொண்டே இருந்தது. 

செண்பகம்: “வருண்..!!!” என்று அழுத்தமான குரலில் அவனை அழைத்தாள். 

வருண்: தன்னுடைய கண்களில் இருந்து வடிந்த நீரை செண்பகத்திற்கு தெரியாமல் துடித்துக் கொண்டவன், “சொல்லுங்க அம்மா.” என்று உணர்ச்சியாற்ற குரலில் சொன்னான். 

செண்பகம்: “இப்ப தான் வருண் நான் போய் ரித்திகாவை பாத்துட்டு வந்தேன். அவளுக்கு இன்னும் மயக்கம் தெளியல. உங்க கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் தான் இருக்கு. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்னு நீ ஸ்ட்ராங்கா சொல்ற. ஆனா அவ மயக்கத்துல இருக்கும் போது அது எப்படி நடக்கும்…???” என்று தங்கி தங்கி கேட்டாள். 

வருண்: “அதெல்லாம் எனக்கு தெரியாது மா. ஆனா இந்த கல்யாணம் எப்படியாவது நடக்கணும். நான் நடத்துவேன். நீங்க எல்லாரையும் போய் கிளம்ப சொல்லுங்க. ரித்திகாவை எந்த குறையும் இல்லாம பக்காவா ரெடி பண்ணுங்க.” என்றவன் தன்னுடைய கட்டில் இருந்து எழுந்து நின்று, “நானும் போய் ரெடி ஆகுறேன்.” என்று சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூமின் உள்ளே சென்று புகுந்து கொண்டான். 

வருணின் மனதில் என்ன இருக்கிறது என்று செண்பகத்திற்கு தெரியவில்லை என்றாலும், இப்போது இந்த திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்ற பரிபூரணமான நம்பிக்கை அவளுக்கு வந்தது. அதனால் மகிழ்ச்சியுடன் தன்னுடைய அறைக்கு சென்றவள், தூங்கிக் கொண்டு இருந்த சித்தார்த்தை எழுப்பி அவனை கிளப்பி விட்டுவிட்டு தானும் கிளம்பி மற்றவர்கள் கிளம்பி விட்டார்களா என்று செக் செய்து அவர்களையும் சீக்கிரமாக ரெடி ஆகும் படி உற்சாகத்தில் சொல்லிக் கொண்டு இருந்தாள். 

ரேவதியும், ஷாலினியும், சீக்கிரமாக கிளம்பி விட்டு ரித்திகாவின் அறைக்கு வந்தனர். ரித்திகா இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள். ஆனால் அவளுக்கு டவல் பாத் கொடுக்கப்பட்டு அவளுடைய ஆடைகள் மாற்றப்பட்டு இருந்தன. அவளை ஒரு சேரில் அமர வைத்து, சிலர் அவளுடைய ஹேர் ஸ்டைலையும், சிலர் அவளுடைய மேக்கப் ஐயும் சரி செய்து கொண்டு இருந்தனர். 

இந்த காட்சியை பார்த்த ரேவதிக்கும், ஷாலினிக்கும், ஒரு வேளை ரித்திகாவுக்கு சீக்கிரம் மயக்கம் தெளிந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் வருண் இவர்களை ரித்திகாவை தயார் செய்த சொல்லி இருக்கிறான் போல என்று நினைத்துக் கொண்டவர்கள், அவர்களும் அந்த ஆர்டிஸ்ட் டீமிற்கு உதவ தொடங்கினர்.

இரண்டு மணி நேரத்திற்கு பின்…

அது விடியற்காலை நேரமாக இருந்தாலும் இது   வருண் உடைய திருமணம் என்பதால் அவன் யார் யாருக்கு எல்லாம் பத்திரிக்கையை அனுப்பி வைத்து இருந்தானோ, அவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். இன்னாருக்கு இந்த சீட் என்று ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த அனைத்து இடங்களும் நிரம்பி வழிந்தன. அரசியல் வட்டாரத்தில் இருப்பவர்கள் முதல் தொழில் வட்டாரத்தில் இருப்பவர்கள் வரை முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் அங்கே வந்து குவிந்திருந்தனர். 

வெகு நேரமாக புரோகிதர் மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.  அவர் சொல்ல சொல்ல வருனும் அனைத்து மந்திரங்களையும் திரும்பச் சொல்லிக் கொண்டு இருந்தான். இந்த காட்சிகள் அனைத்தையும் பின் வரிசையில் இருப்பவர்கள் வரை கண்டுகளிப்பதற்காக ஆங்காங்கே பெரிய எல். இ. டி. ஸ்கிரீனை வைத்து லைவ் ஆக டெலிகாஸ்ட் செய்து கொண்டு இருந்தனர். 

வருண் அவன் சொல்ல வேண்டிய மந்திரங்கள் அனைத்தையும் சரியாக சொல்லி முடித்து விட, “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்றர் புரோகிதர். அவர் அப்படி சொன்னதும் சிவாவை ஒரு பார்வை பார்த்தான் வருண். அதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட சிவா, ஷாலினி மற்றும் ரேவதியின் உதவியுடன் ரித்திகாவை ஒரு பில் சாரில் அமர வைத்து அங்கே தள்ளிக் கொண்டு வந்தனர். இன்னும் ரித்திகா மயக்கத்திலேயே தான் இருந்தாள். 

மணப்பெண் ஏன் இப்படி இருக்கிறார் என்று மற்றவர்கள் குழப்பத்துடன் திருமண மேடையை பார்த்துக் கொண்டு இருந்தனர். அதை புரிந்து கொள்ள வருண் ஒரு மைக்கை வாங்கி, அவன் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்து கதையை ஒரு வார்த்தை கூட மாறாமல் அப்படியே அனைவரிடமும் ஒப்பித்தான். என்ன என்ன கதை எல்லாம் சொல்றான் பாருங்க இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று சிலர் ஆங்காங்கே முணுமுடித்துக் கொண்டு இருந்தாலும், அதை சொல்வது வருண் என்பதாலேயே பலர் அந்த கதையை நம்பினார். 

வருணை குழப்பத்துடன் பார்த்த புரோகிதர், “என்ன தம்பி இந்த பொண்ணு இப்படி மயக்கத்திலேயே இருந்தா, இவ பண்ண வேண்டிய சடங்கு எல்லாத்தையும் எப்படி பண்றது..?? நம்ப அது எல்லாத்தையும் பண்ணாம விட்டுட்டா இந்த கல்யாணத்துல அது ஒரு குறை ஆகிறதா..??” என்று கேட்க, “இனிமே நானும் அவளும் ஒன்னு தான் இந்த உலகத்துக்கு சொல்றதுக்காக தானே இந்த மேரேஜ் ஏ நடக்குது..!!! சோ நான் பண்ணா என்ன..?? அவ பண்ணா என்ன..?? அவ என்ன எல்லாம் பண்ணனும்னு சொல்லுங்க. அது எல்லாத்தையும் நானே பண்றேன்.” என்று சொல்லிவிட்டு அந்த ஐயர் சொல்ல சொல்ல ஒவ்வொரு சடங்குகளையும் முறையாக செய்தான் வருண். 

ஐயர் வருண் மற்றும் ரித்திகாவின் தங்களுடைய மாலையை மாற்றி கொள்ள சொல்ல, ரித்திகாவின் கையை பிடித்து தன் கழுத்தில் தானே அவளுடைய கழுத்தில் இருந்த மாலையை போட்டுக் கொண்ட வருண், தன் கழுத்தில் இருந்த மாலையை ரித்திகாவின் கழுத்தில் போட்டான். இப்படி ஒரு திருமணம் இந்த உலகத்திலேயே எங்கும் நடந்திருக்காது என்பது போல, அந்த திருமணத்திற்கு வந்த அனைவரும் அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தனர். 

மீண்டும் எவனாலும் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது  என்று நினைத்த வருண், நாராயணன் மஹாலின் பாதுகாப்பை நான்கு மடங்கு அதிகப்படுத்தி இருந்தான். சில பிரபல தொலைக்காட்சிகள் வருணின் இந்த வித்தியாசமான திருமணத்தை லைவ் டெலிகாஸ்ட் செய்து கொண்டு இருந்தனர். அதனால் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வருண் ரித்திகாவின் திருமணத்தை லைவ் இல் பார்த்துக் கொண்டு இருந்த பிரவீன், தான் இவ்வளவு செய்தும் வருண் ரித்திகாவை திருமணம் செய்து கொள்ள போகிறானே என்ற வயிற்றெரிச்சலில்… வருண் என்று நினைத்து தன்னுடன் இருக்கும் தன்னுடைய ஆட்களையே சரமாரியாக அடித்து வருணின் மீதான தன்னுடைய கால்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ள முயற்சித்தான். 

வருண் ரித்திகாக்கு பக்கத்துணையாக அவள் அருகே இருந்துச் அவளுக்கு மயக்கம் தெலியாததால் கிட்டத்தட்ட அனைத்து சடங்குகளையும் செய்து முடித்து விட்டான். மயக்கத்தில் இருக்கும் பெண்ணை வைத்து இவ்வளவு தூரம் அனைத்தையும் சரியாக செய்து விட்டானே என்று நினைத்து ஆச்சரியப்பட்ட போகிதர் அதே ஆச்சரியத்துடன்… “சர்வ மங்கள மாங்கல்யே .. ” என்ற மந்திரத்தை சொல்லிவிட்டு கெட்டி மேளம்.. கெட்டி மேளம்… என்று சொன்னபடியே தாலியை எடுத்து வருணின் முன்னே நீட்டினார். அதை நடுங்கிய கைகளுடன் வாங்கிய வருண் மயக்கத்தில் இருக்கும் ரித்திகாவின் கழுத்தில் கட்டினான். 

திருமணத்திற்கான மந்திரத்தை அந்த ஐயர் சொல்லிக் கொண்டே இருக்க, ரித்திகாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு போட்டு முழுமையாக  தன்னுடைய மனைவி என்று ஸ்தானத்தை கொடுத்த வருண், அவளுடைய  நெற்றியில் பொட்டு வைத்து அவளை தன்னுடைய பாதியாக்கினான். இப்போதும் ரித்திகா மயக்கத்தில் இருந்து கண் விழித்திருக்கவில்லை. ஆனாலும் அதை பொருட்படுத்தாத வருண், சிறிதும் தயக்கமின்றி ரித்திகாவை திருமணம் செய்து கொண்டான். தாங்கள் இத்தனை பாடுபட்டு இறுதியாக ரித்திகாவின் கழுத்தில் வருண் தாலி கட்டி அவளை முழுமையாக தன்னுடைய மருமகள் ஆக்கிவிட்டதால், மகிழ்ந்த செண்பகம் ரேவதியை கட்டிப்பிடித்துக் கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை அவளிடம் வெளிப்படுத்தினாள். 

அனைத்தும் நடந்து முடியும் வரை ரித்திகா மயக்கத்தில் இருந்தாள் என்பதை தவிர வேறு எந்த சிறு குறையும் இன்றி,  ரித்திகாவோட ஆன தன்னுடைய திருமணத்தை ஒரு வழியாக நடத்தி முடித்தான் வருண் . ரித்திகாவுக்கு இன்னும் மயக்கம் தெலியாததால் திருமணம் முடிந்த உடனேயே நாராயணன் குடும்பத்தினர்கள் மற்றும் ரித்திகாவின் பெற்றோர்கள் ரித்திகாவை அழைத்து கொண்டு நாராயணன் பேலசுக்கு வந்துவிட்டனர்.  இத்தனை பெரும் முயற்சிகளுக்கு பின்பு தனக்கு பிடிக்காத ரித்திகாவை தானே திருமணம் செய்து கொண்டதால் விரக்தியில் இருந்த வருண், நாராயணன் மஹாலில் இருந்து வந்தவுடன் ரித்திகாவை தன்னுடைய அறையில் விட்டுவிட்டு நேராக தன்னுடைய மினி பாரிற்கு சென்று கண் முன் தெரியாமல் குடிக்கத் தொடங்கினான். 

தன்னுடைய திருமண நாளன்று வருண் இப்படி குடித்து கொண்டு இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த சிவா, அவனைப் பார்க்க வந்தவர்களிடம் வருண் பிஸியாக இருப்பதாகவும், பின் சில நிமிடங்கள் கழித்து அவன் மிகுந்த கலைப்பில் இருப்பதால் ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி சமாளித்தான். 

ரித்திகாக்கு இன்னும் மயக்கம் தெலியாததால், அவளுக்கு மயக்கம் தெளிந்த பின் அவளுக்கு நடந்த இந்த திருமணத்தை பற்றி அவளிடம் சொல்லி அவள் இப்போது எப்படி இருக்கிறாள் என்று தங்களுடைய கண்களால் பார்த்துவிட்டு தான் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று நினைத்து ரித்திகாவின் பெற்றோர்களும் ஷாலினியும் இன்னும் நாராயணன் பேலஸில் தான் இருந்தனர். கிட்டத்தட்ட சாயங்கால வேலையில் தான் திடீரென்று மயக்கத்தில் இருந்து லேசாக கண் விழித்தாள் ரித்திகா. 

ரித்திகாவுக்கு மயக்கம் தெளியும்போது அவள் வருணின் அறையில் தான் இருந்தாள். ஆனால் அவள் மயங்குவதற்கு முன் நடந்த அனைத்து சம்பவங்களையும் நினைவு கூர்ந்தவள், தன்னை யாரோ கடத்திவிட்டார்கள் என்ற பதட்டத்தில்் இருந்ததால், தான் வருணின் அருகில் பத்திரமாக இருப்பதை அவள் உணரவில்லை. பயத்துடன் வேகமாக அவள் எழுந்து அமர, அவளுடைய கழுத்தில் வருண் கட்டிய தாலி  தொங்கி கொண்டு இருந்தது. ஆனால் பாவம் இந்த தாலியை தன்னுடைய கழுத்தில் கட்டியது வருண் தான் என்று அறிந்து இருக்காத ரித்திகா, யாரோ தன்னை கடத்தி திருமணம் செய்து விட்டதாக நினைத்து பயந்தவள், வேகவேகமாக அந்த கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள். 

அந்தக் கடுமையான மயக்க மருந்தின் தாக்கத்தால் இப்போது கூட அவளுடைய தலை சுற்றுவதை போல் உணர்ந்தாள் ரித்திகா. இது கூட தன்னை கடத்தியவர்களின் வேலையாக தான் இருக்கும் என்று நினைத்து பயந்து, வேகமாக வருணனின் அறையை விட்டு  எழுந்து வெளியே வந்தாள். இதற்கு முன் அவள் வருணின் அறைக்கு வந்து இந்த இடத்தை எல்லாம் சுற்றி பார்த்ததில்லை என்பதால், இன்னமும் தான் இருப்பது நாராயணன் பேலஸில் தான் என்று ரித்திகாவால் உணர முடியவில்லை.

அதனால் அதை மயக்கத்தில் தன்னுடைய தலையை பிடித்துக் கொண்டு சுவற்றோடு சுவராக உரசியபடி, மெல்ல மெல்ல நடந்து வருணின் அறைக்கு அருகே இருந்த செண்பகத்தின் அறைக்கு வந்து சேர்ந்தாள். எதேச்சையாக ரித்திகா தன்னுடைய அறைக்குள் வருவதை கவனித்த செண்பகம், “ரித்திகா உனக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சா மா…??? உன்னோட உடம்புக்கு இப்ப ஒன்னும் இல்லையே நீ நல்லா இருக்கியா..???” என்று மகிழ்ச்சியான குரலில் கேட்டவள் உற்சாகத்தில் ரித்திகாவை ஆற தழுவிக் கொண்டாள். செண்பகத்தின் அணைப்பிற்கு பின்பு தான் சற்று தெளிவான ரித்திகா, “நான் இப்ப எங்க இருக்கேன்..?? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?? யார் என் கழுத்துல தாலி கட்டுனது..??” என்று திக்கி திக்கி கேட்டாள். 

  • நேசம் தொடரும்… 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)
      

You may also like

Leave a Comment

About Me

Featured