அத்தியாயம் 215
சென்னை வந்திருந்த தேன்மொழி அர்ஜூனுடன் அவள் தங்கி இருந்த அதே ரூமில் இருந்தால் மீண்டும் மீண்டும் அவனது ஞாபகம் வந்து தன்னை டிஸ்டர்ப் செய்வதாக உணர்ந்தாள். அதனால் வேறு ஒரு ரூமிற்கு அவள் மாறிவிட, தன் அம்மாவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்திருந்த ஆருத்ரா தனது திங்க்ஸ்களை எடுத்துக் கொண்டு அவளது ரூமிற்கு வந்து “மம்மி நான் உங்க கூடவும் சக்தி கூடயும் இங்கயே ஸ்டே பண்ணிக்கவா?” என்று கேட்டாள்.
அவள் அருகில் சென்ற தேன்மொழி “நீ ஆசைப்பட்டா தாராளமா இங்க ஸ்டே பண்ணிக்கலாம் ருத்ரா. பட் சக்தி இப்போ ரொம்ப குட்டி பேபில.. சோ நைட் எல்லாம் தூங்காம அவன் அடிக்கடி அழுதுகிட்டே இருப்பான். நான் அவனோட தொட்டில் பக்கத்துல உங்க விஜயா பாட்டிக்கு ஒரு பெட் போட சொல்லலாம்னு இருக்கேன். நைட் வந்து என் கூட இருந்து அவங்க உன் தம்பியை பார்த்துக்கிறேன்னு சொன்னாங்க. நீ இங்க தூங்குனா அவன் அழும்போது உனக்கு டிஸ்டர்பன்ஸா இருக்குமே.. என்ன பண்ணலாம்?” என்று கேட்டாள்.
“பரவால்ல மம்மி! அவன் நைட் அழுதா நானும் உங்க கூட இருந்து அவனை பாத்துக்குறேன். அவன்தான் டே டைம்ல ரொம்ப நேரம் தூங்குறானே.. இனிமே அவன் எப்ப தூங்குறானோ அப்போ நானும் தூங்குறேன். அவன் எப்போ எந்திரிச்சு அழுகிறானோ அப்போ நான் அவன் கூட சேர்ந்து விளையாடுறேன். சோ எங்க ரெண்டு பேருக்கும் ஜாலியா இருக்கும் இல்ல! அவன் இந்த க்யூட்டான அக்காவை பார்த்தவுடனே அழுகிறதை ஸ்டாப் பண்ணிடுவான்.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் ஆருத்ரா.
அதை சொல்லும்போது உண்மையாகவே ஆருத்ரா க்யூட்டாக இருப்பதாக நினைத்த தேன்மொழி “ஆமா, என் லிட்டில் பிரின்சஸ் நெஜமாவே ரொம்ப க்யூட் தான். உன் கூட இருக்கும்போது எல்லாரும் ஹேப்பியா தான் டா இருப்பாங்க.” என்று சொல்லிவிட்டு விளையாட்டாக ஆருத்ராவின் பொசு பொசு கன்னங்களை பிடித்து கில்லினாள்.
தன்னிடம் இருந்த ஹேண்ட் கன் ஒன்றை எடுத்த சித்தார்த் அதை யாருக்கும் தெரியாமல் தனது இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டு நேராக தேன்மொழியின் ரூமிற்கு வந்தான். அப்போது ஆருத்ராவும் அவளும் பேசிக் கொண்டது அவன் காதில் விழுந்தது.
அதனால் நேராக உள்ளே சென்ற சித்தார்த் “நானும் உங்க கூட தான் இங்க இருக்க போறேன் மம்மி.” என்றான். அதனால் குரல் வந்த திசையை நோக்கி தேன்மொழி ஆருத்ரா இருவரும் திரும்பி பார்க்க, அவர்களுக்கு அருகில் சென்ற சித்தார்த் “உங்களுக்கு ப்ரொடக்சன் குடுக்குறதுக்காக தாத்தா சொன்னதுனால பிரிட்டோ அங்கிள் இங்க நம்ம கூட வந்திருக்காரு. பட் அவர் இன்னும் டோட்டலா ரெக்கவர் ஆகல. சோ அவரால உங்கள புரோடெக்ட் பண்ண முடியாது. ரஷ்யால இருந்தா கிளாரா ஆன்ட்டியை பத்தியே அவர் யோசிச்சுக்கிட்டு இருப்பாரு. அதான் நானும் எதுவும் சொல்லல.
இங்க நம்ம கூட எத்தனை பாடிகார்ட்ஸ் இருந்தாலும், நான் உங்க கூடவே இருந்து உங்க மூணு பேரையும் ப்ரோடெக்ட் பண்ண போறேன். இனிமே நீங்க மூணு பேரும் என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. விஜயா பாட்டிக்கு பெட் அரேஞ்ச் பண்ணும்போது எனக்கும் இங்க பக்கத்துல இன்னொரு பெட் போடுங்க. நான் உங்க யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம சைலண்டா இங்க ஸ்டே பண்ணிக்கிறேன்.” என்றான்.
அவன் வயதில் இருக்கும் வேறு யாராவது ஒரு சிறுவன் இதை சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவன் தன்னிடம் விளையாடுகிறான் என்று தான் தேன்மொழி நினைத்து இருப்பாள். ஆனால் சித்தார்த் மற்ற சாதாரண சிறுவர்களை போன்றவன் இல்லையே… அந்த மாலில் பல மோசமான சம்பவங்கள் நடக்கும் போது அவள் உட்பட அனைவரும் பதட்டத்தில் அங்கும் இங்கும் திரிந்த போது கூட, சித்தார்த் சிறிதும் அலட்டிக்காமல் பொறுமையாக இருந்தான். தங்களது எதிரி தன்னை நோக்கி வரும்போது எப்படி சரியாக தாக்கி அவர்களை அளிக்க வேண்டும் என்று கூட அவனுக்கு தெரிந்து இருந்தது.
அதை நினைத்து பார்த்து பெருமூச்சு விட்ட தேன்மொழி “இல்ல தேன்மொழி அன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் டோட்டலா மறந்துடு. அதுதான் உனக்கு நல்லது.” என தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சித்தார்த்தின் அருகில் சென்று அவனை கட்டிப்பிடித்து “thanks my boy! கண்டிப்பா உன் கூட இருக்கும் போது நாங்க எல்லாரும் ரொம்ப safe and securedஆ இருப்போம். பட் எப்பயும் இப்படி நீ அலர்டாவே இருக்க தேவையில்லை. Life is unpredictable. But we have to be careful. At the same time, we all have only one life. கிடைச்சிருக்கிற இந்த லைஃபை ரொம்ப ஹேப்பியா மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழனும். உன் வயசுல எங்களுக்கு எல்லாம் கஷ்டம்னா என்னன்னு கூட தெரியாது. இனிமே இப்படி ரொம்ப சீரியஸா இருக்காம உன்னோட ஏஜ் குரூப்ல இருக்குற பசங்க கூட ஃபிரண்ட்ஷிப் பண்ணி ஜாலியா அவங்கீ கூட சேர்ந்து விளையாடு. மம்மி உன்னை அப்படி பார்க்கணும்னு தான் நினைக்கிறேன்.” என்றாள்.
அவள் சொன்னது எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்த சித்தார்த் இறுதியில் அப்படி நடந்தாலும் நன்றாக தான் இருக்கும் என நினைத்தான். இருப்பினும் அவன் அப்பா அருகில் இல்லாத போது இந்த குடும்பத்தின் மூத்த வாரிசாக அவனுக்கு என்று இருக்கும் சில பொறுப்புகளை அவன் சரியாக நிறைவேற்ற விரும்பினான்.
தன்னை வார்த்தைகளால் சுட்டெரித்துக் கொண்டு இருந்த பிரதாப்பை அர்ஜுன் பாவமாக பார்த்தான். “நீதான் நெக்ஸ்ட் பிரதாப். இல்ல இல்ல இந்த பிரதாப்ப விட பெட்டர் ஆனவன். உன்னால தான் இந்த குடும்பத்தை கடைசி வரைக்கும் காப்பாத்த முடியும்னு நான் நம்பிட்டு இருந்தேன் அர்ஜூன். இதுவரைக்கும் நீயும் அப்படித் தான் இருந்த. உன்னை பையனா பெத்ததுக்கு நான் என்ன நெனச்சு பெருமைப்படாத நாளே இல்ல. பட் இப்ப உன் மூளை மொத்தமா மழுங்கி போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
அதான் ஸ்டுப்பிட் மாதிரி உன் இஷ்டத்துக்கு கொஞ்சம் கூட யாரை பத்தியும் எதுவும் யோசிக்காம என்னென்னமோ பண்ணிட்டு இருக்க நீ.. நீ உனக்கு தெரிஞ்ச உண்மையை எப்பயும் போல மத்தவங்க கிட்ட மறைச்சது எல்லாம் தப்பே இல்லை. பட் அதை நீ என் கிட்டயும் ஆகாஷ் கிட்டயும் சொல்லி இருக்கணுமா இல்லையா? இதையெல்லாம் ஹேண்டில் பண்றது நமக்கு என்ன புதுசா?
இந்த பொசிஷன்ல இப்படியே இருக்குறதுக்கு இந்த கையில எத்தனை ரத்த கரையை நாம பாக்க வேண்டியது இருக்கும்ன்னு எனக்கு தெரியாதா? எப்படியோ இது எல்லாம் நடக்கப்போகுது. நீ பிளான் பண்ணிட்ட ஓகே fine. பட் அந்த பிளான்ல எதுக்கு நம்ம டோட்டல் ஃபேமிலியையும் நீ இன்வாழ்வ் பண்ணுன ? இது தான் உன் லைஃப்லையே நீ பண்ண பெரிய தப்பு அர்ஜுன்.
உனக்காக உன்னை காப்பாத்துறதுக்காக சியா ஒருத்தி நடுவுல வந்து செத்துப் போனது உனக்கு பத்தலையா? நம்ம ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரையும் அப்படி ஒரு சுச்சுவேஷன்ல கொண்டு போய் தள்றதுக்கு உனக்கு எப்படி மனசு வந்ததுச்சு? ஏதாவது தப்பா நடந்து யாருக்காவது ஏதாவது ஆகி இருந்தா என்ன பண்ண முடியும்? இல்ல டோட்டலா நம்ம எல்லாரும் மேல போய் சேர்ந்து இருந்தா நம்ப குடும்பமே ஒன்னு இல்லாம போயிருக்குமே.. அப்ப என்ன பண்ணி எல்லாத்தையும் சரி பண்ணுவ அர்ஜுன்?
இப்படி பண்ண போறதா நீ ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, உன் கூட நானும் உங்க அம்மாவும் வந்திருப்போம். சரி போய் தொலையுதுன்னு அந்த சந்தோஷை நம்ப வைக்கிறதுக்காக நாம ஆகாசையும் கூட நம்ம கூட கூட்டிட்டு போய் இருக்கலாம்.
அதை விட்டுட்டு இந்த குடும்பத்தோட வாரிசுங்க, இந்த குடும்பத்தை நம்பி வாழ வந்த பொண்ணுங்க, நான் பெத்த பொண்ணுன்னு எல்லாரையும் எதுக்கு இதுகுள்ள இழுத்துவிட்ட? இந்த மாதிரி சண்டை, ரத்தம்.. உயிர் பொழைக்கிறதுக்காக ஓடுறதுன்றது எல்லாம் நமக்கு பழகிருச்சு. பாவம் மத்தவங்க எல்லாரும் என்னடா பண்ணுவாங்க? லைப் லாங் அந்த டே அவங்க மைண்ட்ல ஒரு பெரிய tragedyஐ ரெஜிஸ்டர் ஆயிடும்.
எனக்கு தெரிஞ்சும் தெரியாமலும் நீ உன் லைஃப்ல என்னென்னமோ பண்ணி இருக்க. உனக்கு உன் உயிரைப் பத்தியே கவலையில்லைன்னு எனக்கு தெரியும். அப்படி இருக்கிற உன்னாலயே உன் கண்ணு முன்னாடி உன் பொண்டாட்டி செத்ததை தாங்க முடியாம நீ கோமாவுக்கு போயிட்ட.. உன்ன காப்பாத்துறதுக்கு தேன்மொழியின்னு ஒருத்தி வரவேண்டியதா இருந்துச்சு.
பாவம் அந்த பொண்ணு தேன்மொழி.. அவளையும் குழந்தைகளையும் காப்பாத்துறதுகாக அவ கையால ஒருத்தனை சுட்டுக் கொன்னு இருக்கா. சித்தார்த் அவன் கையால ஒருத்தனை கொன்னு இருக்கான். அவங்க முன்னாடியே கிளாரா செத்து போயிருக்கா. இது எல்லாத்துல இருந்தும் அவங்களால உடனே வெளிய வர முடியுமா? அவங்க மூணு பேரையும் mentally இது எவ்ளோ அஃபெக்ட் பண்ணும்னு யோசிச்சு பாத்தியா அர்ஜுன் நீ?” என்று ஆத்திரம் பொங்க கேட்டார் பிரதாப்.
அவரது ஒவ்வொரு கேள்வியும் நியாயமானது என்பதால் அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அர்ஜுன் பேச்சாற்று தலை குனிந்து நின்றான். பிரதாப் பேச பேச அன்று நடந்ததெல்லாம் அவனது மன கண்களில் ஒரு படம் போல ஓட தொடங்கியது.
மீண்டும் வருவாள் 💕