அத்தியாயம் 211
ஹாஸ்பிடலில் இருந்த அனைவரையும் ஒருவழியாக டிஸ்டார்ஜ் செய்து பிரான்சில் இருந்த தங்களது கெஸ்ட் ஹவுஸுற்க்கு அழைத்து வந்து இருந்தார் பிரதாப். பிரிட்டோவிற்கு மட்டும் ஏராளமான காயங்கள் இருந்ததால் அவனை அடிக்கடி செக்கப் வர சொல்லி இருந்தார்கள்.
தன்னால் தான் பிரிட்டோவிற்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது என நினைத்து சோகமே உருவாக சுற்றிக் கொண்டு இருந்த ஜனனி அவன் ஹாஸ்பிடலில் இருக்கும்போதும் சரி, வீட்டிற்கு வந்த பிறகும் சரி அவனுடனே இருந்து ஒரு குழந்தை போல அவனை கவனித்துக் கொண்டாள்.
கிளாராவின் பிரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்த பிரிட்டோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தான். அதனால் தனக்கு ஜனனி அத்தனை பணிவிடை செய்ததையும் கூட அவன் உணரவே இல்லை. ஒரு ரோபோ போல உணர்ச்சி அற்று நடை பிணமாக அவன் வாழ்ந்து கொண்டு இருந்தான்.
தன் குழந்தைகளை கவனிப்பதில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் என்ன ஆனாலும் பிரிட்டோவை அப்படியே விட்டுவிடக் கூடாது என்று தெளிவாக இருந்த ஜனனி அவன் தான் இருப்பதை கண்டு கொள்ளவே இல்லை என்றாலும் கூட அவனுக்கு தேவையான அனைத்தையும் அவன் அருகில் இருந்து செய்தாள்.
சந்தோஷ் செய்த காரியத்தில் இருந்து வெளிவர அமளுக்கும் கொஞ்சம் நேரம் தேவைப்படும் என்பதால், அவள் மனதிற்கு பிடித்ததை செய்யட்டும் என நினைத்து யாரும் அவளை எதுவும் கேட்கவில்லை. இன்னொரு பக்கம் தேன்மொழியும், குழந்தையும் வீட்டிற்கு வந்தது தெரிந்தும் அவர்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து அர்ஜுன் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு பைத்தியக்காரன் போல தொடர்ந்து குடித்துக் கொண்டே இருந்தான்.
அவன் தன் வாழ்க்கையில் இத்தனை வருடங்களில் குடித்ததை விட இப்போது தான் அவன் அதிகப்படியான மதுபானங்களை குடுத்துக் கொண்டு இருந்தான். தனது மனநிலையும் உடல் நிலையும் சரியில்லை என்ற போதிலும், அர்ஜுன் எப்படி இருக்கிறான் என்று ஆதவன் மூலம் கேட்டு தெரிந்து கொண்ட தேன்மொழி “நான் மாமா கிட்டயும் அத்தை கிட்டையும் பேசணும். போய் அவங்க ரெண்டு பேரையும் வர சொல்லு.” என்றாள்.
தேன்மொழியின் முகம் இறுக்கமாகவும், அவளது கண்கள் உணர்ச்சிகள் அற்றும் காணப்பட்டதால் இப்போது அவள் என்ன செய்யப் போகிறாளோ என நினைத்து பயந்த ஆதவன் “இப்ப எதுக்கு அக்கா அவங்கள வர சொல்ற? அவங்களே மாமா யார் பேச்சையும் கேட்காம குடிச்சுக்கிட்டே அந்த ரூம்குள்ளயே அடஞ்சி கிடக்கிறாருன்னு வருத்தத்துல இருக்காங்க. பிரதாப் மாமா அர்ஜுன் மாமா கிட்ட பேசுறதே இல்லை போல இருக்கு.
ஜானகி அத்தை தான் அப்பப்ப அவர் ரூமுக்கு போய் அவர் கிட்ட பேசி அவர் சாப்பிட வச்சுட்டு இருக்காங்க. ஆகாஷ் மாமா கூட அந்த ரூம் பக்கம் போய் நான் பாக்கல. இந்த சிச்சுவேஷன்ல நீ வேற தேவையில்லாம யார் கிட்டயும் எதுவும் சொல்லிட்டு இருக்காத கா.
நம்ம ஊருக்கு போனதுக்கு அப்புறம் நீ ஒரு நல்ல சைகாட்ரிஸ்டா பாரு. உன்னுடைய ஹெல்த்த முதல்ல நம்ம சரி பண்ணலாம். நீ நார்மல் ஆயிட்டாலே மாமா நார்மல் ஆயிடுவாரு. அவர் நார்மல் ஆயிட்டா எல்லாம் சரியாயிடும்.” என்று தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பொறுமையாக அட்வைஸ் செய்தான்.
தான் யார் சொல்வதையும் கேட்க தயாராக இல்லை என்பதைப் போல கையில் இருந்த தன் குழந்தையை அருகில் இருந்த தொட்டிலில் மெதுவாக படுக்க வைத்த தேன்மொழி சிவந்த கண்களுடன் ஆதவனை பார்த்து “என்னால எந்திரிச்சு நடக்க முடியல. அதனால தான் உன்ன போய் அவங்கள கூட்டிட்டு வர சொன்னேன். இப்ப உன்னால போக முடியுமா முடியாதா?” என்று கோபமாக கேட்டாள்.
திருமணம் நடப்பதற்கு முன்பாக இருந்த தேன்மொழிக்கும் அர்ஜுனனின் மனைவியான பிறகு இருக்கும் தேன்மொழிக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கு . இப்போதெல்லாம் இவள் அதிகம் பிடிவாதம் பிடிக்கிறாள் என நினைத்த ஆதவன் எங்கே மீண்டும் எமோஷனலாகி பைத்தியம் பிடித்தவளை போல நடந்து கொண்டால் என்ன செய்வது என யோசித்து பயந்தான்.
அவள் கிளாராவின் பெயரை சொல்லி பிதற்றுவதையும், தன் கையால் அவள் ஒருவனை கொன்றதால் தன்னைத் தானே கொலைகாரி என்று சொல்லிக் கொண்டு அவள் வெறி பிடித்தவளை போல தன்னைத் தானே அழித்துக் கொள்வதையும் நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்ட ஆதவன் “சரி நான் போய் கூட்டிட்டு வரேன். நேத்து நைட்டு ஃபுல்லா தூங்காம இருந்ததினால இப்ப தான் அம்மாவை தூங்க சொல்லி அனுப்பி வச்சிருக்கேன். உன்னை தனியா நாங்க விட மாட்டோம். அத்தையும் மாமாவும் இங்க வந்தாலும் நான் உன் கூட தான் இருப்பேன். என்னை வெளிய போக சொல்லக் கூடாது ஓகேவா?” என்று கேட்டான்.
அதற்கு தேன்மொழி ம்ம்.. என்று மட்டும் சொல்ல, வெளியே எழுந்து சென்ற ஆதவன் ஜானகி மற்றும் பிரதாப் இருவரையும் அழைத்துக் கொண்டு அவரது ரூமிற்கு வந்தான். “என்னம்மா தேனு உனக்கு ஏதாவது வேணுமா? இல்ல குழந்தைக்கு ஏதாவது வேணுமா? எதுவா இருந்தாலும் சொல்லு. இப்பவே நான் ஆளுங்களை அனுப்பி வாங்கிட்டு வர சொல்றேன்.” என்று பிரதாப் அக்கறையுடன் விசாரிக்க,
“ஆமாமா எதுவா இருந்தாலும் அத்தை கிட்ட சொல்லு. நான் வீட்டுக்கே ஒரு டாக்டர் வர வைக்கலாம்னு இருக்கேன். இங்க யாருக்கும் மனசும் சரியில்ல. உடம்பு சரியில்ல. அடிக்கடி ஏதாவது ஒன்னு வந்துகிட்டே இருக்கு.” என்றாள் ஜானகி.
அவர்கள் பேசி முடிக்கும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த தேன்மொழி தன் குழந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு “எனக்கு இங்க இருக்க பிடிக்கல. நான் இந்தியா போகணும். முக்கியமா என் வீட்டுக்கு போகணும். என்னால என் குழந்தைய வச்சிக்கிட்டு இதுக்கு மேல இங்க இருக்க முடியாது.” என்றாள்.
“நீ சொல்றது எனக்கு புரியுதுமா. உன்ன மாதிரி தான் அர்ஜுனும் மனசளவுல ரொம்ப உடைஞ்சு போய் இருக்கான். கிளம்பனும்னா உடனே கிளம்பலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. பட் இந்த சுச்சுவேஷன்ல நாம போயி கூப்பிட்டா அவன் உடனே வருவானான்னு தெரியலையே!” என்று ஜானகி சோகமாக சொல்ல, “நான் யாரையும் என் கூட வர சொல்லி சொல்லவே இல்ல. என்னால இங்க இருக்க முடியல. நானும் என் குழந்தையும் உடனே இங்க இருந்து கிளம்பி ஆகணும் அவ்வளவு தான்.” என்று உணர்ச்சிகள் அற்ற குரலில் சொன்னாள் தேன்மொழி.
உடனே ஜானகி அவளிடம் ஏதோ பேச வர, அவள் கையை பிடித்து தடுத்த பிரதாப், “நான் உடனே எல்லாரும் கிளம்பறதுக்கு அரேஞ்ச் பண்றேன். வர விருப்பம் இருக்கிறவங்க வரட்டும். இங்கயே இருக்கணும்னு நினைக்கிறவங்க இருக்கட்டும். நான் உன் கூட வரேன் மா.
உங்க அம்மாவும் உன் தம்பியும் உன் கூட இருப்பாங்க. ஒரு அப்பாவா உன் கூட நான் இருப்பேன். இனிமே உனக்கு என்ன வேணும்னாலும் நீ அதை தாராளமா டைரக்டா வந்து என் கிட்ட கேட்கலாம். எனக்கு நீயும் ஜனனியும் ஒன்னு தான். இனிமே நீ எப்பயுமே சந்தோஷமா இருக்கணும். அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்.” என்று தேன்மொழியின் தலையில் ஆசிர்வாதம் செய்வதை போல தன் கையை வைத்து சொல்லிவிட்டு அங்கே இருந்து சென்று விட்டார்.
“அர்ஜுனும் தேன்மொழியும் ஒரே மாதிரி தான் இருக்காங்க. இவங்க ரெண்டு பேர் கிட்டயும் நம்ம பேசி புரிய வைக்கிறதுக்கு எல்லாம் எதுவும் இல்ல. அவங்களா நடந்ததை புரிஞ்சுகிட்டு ஏத்துக்கிட்டு இதுல இருந்து வெளியே வந்தா தான் உண்டு.” என்று நினைத்த ஜானகி பெருமூச்சு விட்டுவிட்டு “நானும் எப்பயும் உன்னை தனியா விட மாட்டேன் தேன்மொழி. உன்னை அர்ஜுனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் தான் நினைச்சேன். எல்லாத்தையும் நான் தான் பண்ணேன். உன்ன நல்லபடியா பார்த்துக்க வேண்டிய ரெஸ்பான்சிபிலிட்டி எனக்கு இருக்கு. நான் போய் திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்றேன். உனக்கு ஹெல்ப் பண்ண ஆள் அனுப்பி வைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டாள்.
அவர்கள் சென்ற பிறகு தன் பெட்டில் சாய்ந்து அமர்ந்த தேன்மொழி “சர்வன்ட்ஸ் வந்ததுக்கு அப்புறமா அம்மாவை இங்க வர சொல்லு. நம்ம திங்ஸ் எல்லாத்தையும் பார்த்து கரெக்டா பேக் பண்ணுங்க. இன்னைக்கு நைட்டுக்குள்ள நாம இந்தியா போயாகணும்.” என்று உறுதியான குரலில் சொன்னாள்.
இடமாற்றம் நடந்தால் மனமாற்றம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்த ஆதவன் “ஓகே அக்கா! நாம கிளம்பலாம்.” என்றான்.
மீண்டும் வருவாள் 💕