Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 136

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 136

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 136

மம்மி! என்று கத்திக் கொண்டு ஜூலியின் ரூமில் இருந்து ஓடி வந்த சித்தார்த் நேராக ஜானகியின் ரூமிற்கு ஓடினான். “சித்து.. நில்லு நான் வரேன்.” என்று கத்திக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து ஓடி வந்த ஆருத்ராவும் ஜானகியின் ரூமை வந்து சேர்ந்தாள்.‌ தேன்மொழியுடன் தனது ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஜானகி குழந்தைகள் இருவரும் இப்படி அழுது கொண்டு அங்கே ஓடி வந்ததை பார்த்து பதட்டத்துடன் “என்னாச்சு உங்களுக்கு? ஏன் ரெண்டு பேரும் இப்படி அழுதுட்டு இருக்கீங்க? உங்களை யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா? இல்ல உங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கிட்டீங்களா?” என்று கேட்டாள்.

எழுந்து அவர்கள் அருகில் சென்ற தேன்மொழி “திரும்பவும் சண்டை போட்டீங்களா நீங்க? இப்படி ரெண்டு பேரும் அழுகிற அளவுக்கு அப்படி உங்களுக்குள்ள என்ன சண்டை? இங்க மம்மி கிட்ட வாங்க! என்னன்னு என்‌ கிட்ட சொல்லுங்க.” என்று கேட்க, அவளை புறக்கணித்துவிட்டு நேராக   ஜானகியை நோக்கி ஓடி சென்ற சித்தார்த் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு எதுவும் பேசாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான்.

அழுது கொண்டு இருக்கும் சித்தார்த்தையும், என்ன நடக்கிறது என்று புரியாமல் அங்கே நின்று கொண்டிருந்த ஜானகியையும், தன் அருகில் நின்று கொண்டிருக்கும் தேன்மொழியையும் கலங்கிய கண்களுடன் மாறி மாறி பார்த்த ஆருத்ரா “நீங்க என் கிட்ட பொய் சொல்லிட்டீங்களா?” என்று உடைந்த குரலில் கேட்டாள்.

“நான் இவ கிட்ட என்ன பொய் சொன்னேன்?” என்று யோசித்து குழம்பிய தேன்மொழி “என் ருத்ரா குட்டிக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கீங்க? உன் கிட்ட நான் என்ன டா பொய் சொன்னேன்?” என்று கேட்டபடி அவள் கண்ணீரைத் துடைத்தாள். தேன்மொழியின் கையை அப்போது பிடித்து தடுத்து நிறுத்திய ஆருத்ரா, “உங்க பேர் என்ன?” என்று கேட்டாள்.

திடீரென்று இவள் ஏன் சம்பந்தமே இல்லாமல் இப்படி தன்னிடம் கேட்கிறாள்? என்று புரியாமல் குழப்பத்துடன் அவளை பார்த்து திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த தேன்மொழி அப்பாவியாக எதை பற்றியும் யோசிக்காமல் “ஏன் என் நேம் என்னன்னு உனக்கு தெரியாதா?” என்று அவளிடம் கேட்க, நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜானகிக்கு ஓரளவிற்கு அனைத்தும் புரிவதைப் போல இருந்தது.

அதனால் எப்படியாவது தேன்மொழியை எச்சரிக்க வேண்டும் என நினைத்து “இந்த டைம்ல உங்க மம்மியோட நேம் என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்கு தான் நீங்க ரெண்டு பேரும் இப்படி அழுதுட்டு வந்தீங்களா? வாங்க.. நான் உங்களுக்கு பிடிக்குமேனு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி இருக்கேன். சுடா அத போய் சாப்பிடலாம்.” என்று ஜானகி குழந்தைகள் இருவரையும் தன்னுடன் வர சொல்லி அழைத்தாள்.

சித்தார்த் எதுவும் பேசாமல் அதே நிலையில் ஜானகியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருக்க, இன்னும் தன் கேள்விக்கு தேன்மொழி பதில் சொல்லாததால் அவளையை பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ரா “நீங்க சொல்லுங்க.. உங்க நேம் என்னன்னு. எனக்கு தெரியணும்.” என்று மீண்டும் அவளிடம் கேள்வி கேட்டாள்.

ஜானகி சூசகமாக ஆருத்ரா எதற்காக இப்படி கேட்கிறாய் என்று எப்படி எப்படியோ பேசி தேன்மொழிக்கு புரிய வைக்க பார்த்தாலும், எப்போதும் போலவே இப்போதும் சாதாரணமாக இருந்த தேன்மொழி “அடடா.‌.. இன்னைக்கு என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்? சம்பந்தமே இல்லாம என்ன என்னமோ பேசிட்டு இருக்கீங்க! உனக்கு என்ன இப்போ.. என் நேம் தானே தெரியணும்.. என் பேரு தேன்மொழி. போதுமா? இப்ப சந்தோஷமா உனக்கு?” என்று கேட்டுவிட்டு அவள் ஆருத்ராவின் கையைப் பிடிக்க, கண்களில் இருந்து அருவி போல நீர் கொட்ட பாவமாக அவளை பார்த்த ஆருத்ரா அவள் கையை எடுத்து விட்டாள்.

சோகமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஜானகி “போச்சு இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது!” என்று நினைத்தவள், சித்தார்த்திடம் “உங்க மம்மி எப்பயும் உங்க கூட தான் இருக்காங்க. தேவை இல்லாம எதையும் யோசிச்சு நீங்க ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் இல்ல சித்தார்த். தேன் மொழியை விட உங்களுக்கு பெஸ்ட் மதர் யாரும் இருக்க முடியாது.” என்றாள்.

ஜானகி வாயில் இருந்து தேன்மொழி என்ற பெயர் வந்த உடனேயே இருந்த கோபத்தில் அவளை விட்டு பிரிந்த சித்தார்த் “போதும் பாட்டி! நாங்க எந்த உண்மையைப் பத்தி கேட்க வந்தோமோ, அது எங்களுக்கு தெரிஞ்சிருச்சு. இதுக்கு அப்புறமா நீங்க எதுவும் பேசத் தேவையில்லை. எங்களை யாரும் பார்த்துக்க வேண்டாம். என் தங்கச்சியை நானே பாத்துக்குவேன்.”  என்று சொல்லிவிட்டு ஆருத்ராவின் அருகில் சென்று அவள் கையை பிடித்து “நீ என் கூட வா. இனிமே நீ என் கூட தான் இருக்கணும். உன்ன நான் பாத்துக்குறேன் ஆருத்ரா.” என்றான்.

அவனையும், தேன் மொழியையும் மாறி மாறி பார்த்த ஆருத்ரா உடைந்த குரலில் “அப்ப நீங்க என் மம்மி இல்லையா?” என்று கேட்க, அதுவரை என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்று கொண்டிருந்த தேன்மொழி அவளது கேள்வியால் மனம் உடைந்து கண்கள் கலங்க தரையில் அவள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்து “இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு? மம்மி மேல உங்களுக்கு ஏதாவது கோவமா? ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க? நான் தான் டா உங்க மம்மி! அதுல உங்களுக்கு என்ன டவுட்? உங்க ரெண்டு பேரையும் நானும், டாடியும் பத்திரமா பாத்துக்குவோம்.” என்றாள்.‌

ஆருத்ரா தேன்மொழியிடம் ஏதோ சொல்ல வருவதற்குள் முந்தி கொண்ட சித்தார்த் “போதும், நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எங்களுக்கு step mother தேவையில்லை ஆன்ட்டி. நீங்க எங்க டாடிக்கு வைஃப் மட்டும் தான். எங்களோட மம்மி இல்ல. எங்களோட ஒரிஜினல் மதர் சியா இறந்துட்டாங்கன்னு எனக்கு நல்லா தெரியும். இதுக்கு மேலயும் நீங்க நடிச்ச எங்களை ஏமாத்தாதீங்க. நீ வா ருத்ரா நம்ம போகலாம். இனிமே இந்த ஆன்ட்டி கிட்ட நம்ம பேசவே கூடாது.” என்று சொல்லிவிட்டு ஆருத்ராவின் கையைப் பிடித்து தன்னுடன் அவளை இழுத்துக் கொண்டு அவனது ரூமிற்கு சென்று விட்டான்.

நடக்கும் அனைத்தையும் ஏதோ சித்த பிரம்மை பிடித்தவளை போல பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள். அவள் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வர, “கடைசி வரைக்கும் இப்படி ஒரு நாள்  கூடாதுன்னு நான் கடவுளை வேண்டிட்டு இருந்தேன். ஆனா அவருக்கு எங்க மேல கருணையே இல்ல போல இருக்கு. இவ்ளோ சீக்கிரம் இந்த விஷயம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. இத பத்தி யார் இவங்க கிட்ட சொன்னதுன்னு தெரியலையே!

அட்லீஸ்ட் இந்த தேன்மொழியாவது நான் தான் உங்க அம்மா சியான்னு ஸ்ட்ராங்கா பேசி சமாளிச்சு இருக்கலாம். அவங்க ரெண்டு பேரும் எந்த அர்த்தத்துல கேக்குறாங்கன்னு தெரியாம இவ லூசு தனமா உளறிட்டா. கடவுளே.. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ!” என்று நினைத்து தேன் மொழியை சமாதானப்படுத்துவதற்காக அவள் அருகில் சென்று அமர்ந்து அவளது தோள்களில் கை வைத்தாள்.

பாவமாக ஜானகியை பார்த்த தேன்மொழி “சித்தார்த் இப்ப என்ன ஆன்டினா சொல்லிட்டு போனான் அத்தை! நான் ஆன்டியா அவங்களுக்கு? நான் ஜஸ்ட் அவங்க டாடியோட வைஃப் மட்டும் தான்னா,  அவங்களுக்கு நான் அம்மா இல்லையா? நான் என்ன தப்பு பண்ணினேன்னு அவன் என்ன பார்த்து இப்படி சொல்லிட்டு போறான்?

நீங்க போங்க அத்தை ப்ளீஸ்.. போய் அவங்க கிட்ட நான் தான் அவங்க அம்மான்னு சொல்லுங்க… அவங்க ரெண்டு பேரும் என் குழந்தைங்க தான்னு சொல்லுங்க. இனிமே அவங்க என்ன சும்மா ஆன்ட்டின்னு சொன்னா கூட எனக்கு கோபம் வந்துரும் பாத்துக்கோங்க!” என்று சொல்லிவிட்டு துக்கம் தொண்டையை அடைக்க கதறி அழ, அவளை தன்னுடன் சேர்த்து அனைத்து கொண்ட ஜானகி,

“இல்ல மா..‌ இல்ல.. நீ அழாத. அவங்க சின்ன பிள்ளைங்க தானே.. அதான் ஏதோ தெரியாம எமோஷனாகி அப்படியெல்லாம் பேசிட்டாங்க. நீ இத பெருசா எடுத்துக்காத. நான் சொல்றேன்.. நீதான் அவங்க அம்மா. அவங்க ரெண்டு பேரும் பொறந்ததுல இருந்து நான் அவங்கள பார்த்துகிட்டு இருக்கேன்.

சியா அவங்க கூட இருந்ததை விட நான் தான் அவங்க கூட இருந்து அவர்களை பத்திரமா பாத்துக்கிட்டேன். இப்ப நானே சொல்றேன்.. என்ன விட என் பேர பசங்கள நீ நல்லா பாத்துப்பன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீதான் ஆருத்ரா, சித்தார்த் இரண்டு பேருக்கும் அம்மா. ஏதோ ஒரு கன்ஃபியூஷன் நடந்து இருக்கு. அதான் அவங்க இப்படி பேசிட்டு போறாங்க. சியா இறந்து போனதை யாரோ அவங்க கிட்ட சொல்லி இருக்காங்க.

அதை தாங்க முடியாமல் தான் அவங்க இப்படி ரியாக்ட் பண்றாங்க. நான் அவங்க கிட்ட பேசி புரிய வைக்கிறேன். நீ இத்தனை நாளா அவங்கள பாசமா பாத்துக்கிட்டதை கண்டிப்பாக அவங்க மறக்க மாட்டாங்க. அவங்களுக்கு அம்மா வேணும் தேன்மொழி. நீதான் அவங்களோட அம்மா. யார் என்ன சொன்னாலும் நீ ஸ்ட்ராங்கா இருக்கணும். உன் பாசம் தான் அவங்கள மாத்தும். அதுவும் இல்லாம இப்ப உன் வயித்துல இன்னொரு குழந்தை வளருது.

நீ அதை பத்தியும் யோசி. இந்த வீட்டோட வாரிசு எல்லாருமே நமக்கு முக்கியம் தான்.‌ நீ எமோஷனல் ஆகாத சரியா? நான் போய் அவங்க கிட்ட பேசுறேன். நீ உன் ரூமுக்கு போ. நான் அர்ஜுனுக்கு கால் பண்ணி அவன வர சொல்றேன். எல்லாமே சரியாயிடும். குழந்தைங்க தானே.. அவங்க நம்ம எடுத்து சொன்னா புரிஞ்சிக்குவாங்க.” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.‌

பின் விஜயாவை தேன்மொழியுடன் இருக்க சொல்லிவிட்டு அர்ஜுனிற்க்கு கால் செய்து விஷயத்தை தெரிவித்த ஜானகி சித்தார்த்தின் ரூமிற்கு குழந்தைகளை பார்ப்பதற்காக சென்றாள். சித்தார்த் தனது மொபைல் ஃபோனில் உள்ள அவனது அம்மாவின் ஃபோட்டோவை பார்த்து அழுது கொண்டிருக்க, அவனது அருகில் அமர்ந்து அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுதபடி இருந்த ஆருத்ரா, “நெஜமாவே மம்மி நம்மள விட்டுட்டு தூரமா போயிட்டாங்களா சித்து அண்ணா? என்னால இதை நம்பவே முடியல. மம்மி ஏன் இப்படி பண்ணாங்க? அவங்களுக்கு நம்மளை பிடிக்கலையா?” என்று உடைந்த குரலில் கேட்டாள்.

அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஏற்கனவே அர்ஜுன் சியாவின் உடலை தோட்டத்தில் அடக்கம் செய்வதை பார்த்திருந்ததால் அவளை விட கடும் சோகத்தில் இருந்த சித்தார்த் எதுவும் பேச முடியாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான்.

  • மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured