முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் ஒருவன் சந்தோஷுடம் ஏடாகுடமாக பேசிக் கொண்டிருக்க, அதைக் கேட்டு கடுப்பான சந்தோஷ் அவன் கழுத்தை பிடித்து நெறித்தான். “நீ யாரா வேணா இருக்கலாம். அதுக்காக உன் இஷ்டத்துக்கு எனக்கு ஆர்டர் பண்ற ரைட்ஸ் உனக்கு இருக்குன்னு நினைக்காத. எதை எப்ப எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியும். சோ நீ #### மூடிக்கிட்டு இருக்கணும் சரியா?” என்று சந்தோஷ் தன் பற்களை கடித்துக் கொண்டு கேட்க, “சரி டா, நீ என்னமோ பண்ணு. நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன். முதல்ல என்ன விடு. என்னால மூச்சு விட முடியல.” என்று அந்த மாஸ்க் அணிந்திருந்தவன் மூச்சுவிட சிரமப்பட்டபடி திக்கித் திணறி சொன்னான்.
எதற்காக இருந்தாலும் கண்டிப்பாக அவன் தனக்கு தேவைப்படுவான் என்று நினைத்த சந்தோஷ் அவனை விட்டுவிட்டு “இனிமே நீ என் வழியில குறுக்க வரக் கூடாது. எதை எப்ப எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியும். என்ன நடக்குதுன்னு வேடிக்கை மட்டும் பாரு.” என்று சொல்லி அவனை மிரட்டி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அங்கே ஆருத்ரா, சித்தார்த் இருவரையும் பிடித்து வைத்து வலுக்கட்டாயமாக பேசிக் கொண்டு இருந்த ஜூலியின் மனதில் ஏராளமான திட்டங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அது தனக்கு தெரியாது என்றாலும் கூட; அவள் அருகில் இருப்பது பிடிக்காமல் ஆருத்ரா வெளியில் செல்ல பார்க்க, “ஹே பேபி ஒன் மினிட்! உங்களுக்கு நியூ sibling வரப்போறது எல்லாம் நல்ல விஷயம் தான். அந்த சந்தோஷத்துல இன்னும் கொஞ்ச நாள்ல உங்க டாடி மம்மிக்கு லவ் ஆனிவர்சரி வரப்போறதை நீங்க மறந்துட்டீங்களா? அந்த டேட்ல தானே அவங்க ரெண்டு பேரும் கல்யாணமும் பண்ணிட்டாங்க! அந்த டேவை நாம கிராண்டா செலிப்ரேட் பண்ண வேண்டாமா?” என்று கேட்டாள் ஜூலி.
அவள் அப்படி கேட்ட பிறகு தான் ஆருத்ரா, சித்தார்த் இருவருக்கும் அந்த நாளை பற்றியே ஞாபகம் வந்தது. அவர்களைப் பொறுத்தவரை இப்போது சில நாட்களுக்கு முன்பு தான் தேன்மொழி, அர்ஜுன் இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. அதனால் அதற்குள் அவர்கள் ஆனிவர்சரி பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. ஆருத்ரா “ஆனா டாடிக்கு மம்மிக்கும் இப்ப தானே ரிசென்ட்டா மேரேஜ் ஆச்சு.. அதுக்குள்ள அவங்க ஆனிவர்சரி எப்படி வரும்?” என்று அப்பாவியாக கேட்க, “அப்படி கேளு டி என் செல்லக்குட்டி.. இதுக்காகத் தானே நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்!” என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட ஜூலி “இப்போ மேரேஜ் ஆனது உங்க டாடிக்கும் உங்களோட step motherkum. என்ன இருந்தாலும் சியா தானே உங்க ஒரிஜினல் மதர்! உங்க டாடிக்கும், சியாவுக்கும் மேரேஜ் ஆன டேட் உங்களுக்கு ஸ்பெஷல் இல்லையா? நீங்க அதை செலிபிரேட் பண்ணனும்னு ஆசைப்படலையா?” என்று சக்கரை தடவி பேசினாள்.
அதுவரை சியா, தேன்மொழி என்று தனித்தனியாக யோசித்து இதில் தங்கள் அம்மா யார் என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாமல் இருந்த குழந்தைகள் இப்போது ஒரு புதிய யோசனைக்குள் மூழ்கினார்கள். சித்தார்த்திற்கு ஏதோ புரிவதைப் போல இருந்தது. ஆனால் ஆருத்ரா மட்டும் நடப்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்காதால் “என்ன ஆன்ட்டி சொல்றீங்க? மம்மி இங்கதான் இருக்காங்க! டாடி கோமாவுல இருந்து சரியானதுக்கு அப்புறம் மறுபடியும் அவங்க ரெண்டு பேரும் இன்னொரு தடவை மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க அப்புறம். அதுக்காக அவங்களோட ஃபர்ஸ்ட் மேரேஜ் அனிவர்சரியை அவங்க எப்படி மறைப்பாங்க? நாங்களும் மறக்க மாட்டோம். கண்டிப்பா டாடி மம்மி கூட சேர்ந்து அந்த டேவை கிராண்டா செலிப்ரேட் பண்ணுவாரு.” என்றாள்.
“என்ன மா சொல்ற நீ? அப்ப தேன்மொழியை நீ உங்க மம்மி சியானு நினைச்சுட்டு இருக்கியா?” என்று ஜூலி எதுவும் தெரியாதவளை போல கேட்க, இப்போது தான் அனைத்து உண்மைகளும் வெளியில் வருகிறது என்பதை புரிந்து கொண்ட சித்தார்த் “அப்போ மம்மியோட இன்னொரு நேம் தான் தேன்மொழி. அதனால தான் எல்லாரும் அவங்கள அப்படி கூப்பிடறாங்கன்னு பாட்டி சொன்னது பொய்யா? நெஜமாவே டு இயர்ஸ் பேக் மம்மி இறந்துட்டாங்களா? நான் டாடி அவங்கள ஒரு பாக்ஸ்ல வெச்சு குழிக்குள்ள போட்டு மூடுறத பார்த்தேன்.
என்னால அது உண்மையா நடந்துச்சுன்னு இப்ப வரைக்கும் நம்ப முடியல. நான் கேட்டதுக்கு அப்போ எல்லாருமே மம்மி abroad போயிருக்காங்க. டாடியோட பிசினஸை அவங்க தான் ஹேண்டில் பண்றாங்க. அதனால தான் அவங்க எங்களை பார்க்க வரலைன்னு சொன்னாங்க. அது எல்லாமே நீங்க பொய்னு சொல்றீங்களா ஆன்ட்டி?” என்று கண்கள் கலங்க கேட்டான்.
அவன் இப்போது எட்டாம் வகுப்பு படித்து முடித்து ஒன்பதாம் வகுப்பு படிக்கப் போகிறான் என்பதால் அவன் வயதிற்கு அவனால் நடப்பதை ஓர் அளவிற்கு யூகிக்க முடிந்தது. மற்றவர்களிடம் கேட்டால் உண்மையை சொல்வார்களா மாட்டார்களா என்ற சந்தேகம் அவனுக்குள் இருந்ததால், உண்மையை தெரிந்து கொள்ள ஜூலியை விட்டால் தனக்கு வேறு ஆப்ஷன் இல்லை என்று நினைத்தான் சித்தார்த்.
“Oh my God! இவ்வளவு பெரிய உண்மையை உங்க கிட்ட இருந்து மறைச்சி இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் வேற தெரியாம உளறிட்டேனே! ஐ அம் சாரி சித்தார்த், ஆருத்ரா. நீங்க நான் சொன்னது எல்லாத்தையும் மறந்துடுங்க. இனிமே இத பத்தி நீங்க யார் கிட்டயும் டிஸ்கஸ் பண்ண வேண்டாம்.
இப்ப நீங்க உங்க நியூ மம்மி கூட ஹேப்பியா தான இருக்கீங்க! Step mother-ஆ இருந்தாலும் தேன்மொழி உங்க மேல பாசமா தான் இருக்காங்க. நீங்களும் அவங்க கூடையும் உங்க டாடி கூடையும் சேர்ந்து ஹாப்பியா இருக்கீங்க. அப்புறம் யோசிக்கிறதுக்கு வேற என்ன இருக்கு? இப்படி நீங்க எல்லாரும் ஃபேமிலியா சந்தோஷமா இருக்கிறத சியா எங்க இருந்து பார்த்தாலும் அவங்களும் உங்களுக்காக சந்தோஷப்படுவாங்க.” என்று ஜூலி எதுவும் சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் என்று வெளியில் நடித்துவிட்டு அனைத்தையும் குழந்தைகளுக்கு புரியும் படி அழுத்தி அழுத்தி சொல்லிக் கொண்டு இருந்ததால்,
“அப்படின்னா தேன்மொழி மம்மி வேற. சியா மம்மி வேற. டாடி சியா மம்மி இறந்துட்டதனால செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டாரா.. இத்தனை நாளா அதை சொல்லாம எங்க கிட்ட எல்லாரும் பொய் சொல்லிய எங்களை ஏமாத்தி இருக்காங்க. It’s Totally unfair.” என்று சொல்லிவிட்டு சித்தார்த் இறந்து போன தன் அம்மா சியாவை நினைத்து அழத் தொடங்கிவிட,
அவன் தெளிவாக அனைத்தையும் சொன்ன பிறகு நடந்தது என்னவென்று புரிந்து கொண்ட ஆருத்ராவும் அழ தொடங்கினாள். இருப்பினும் தேன்மொழியிடம் தாய் பாசத்தில் அவள் எந்த வித்தியாசத்தையும் கண்டதில்லை என்பதால் அவளை தவறாக நினைக்க கூடாது என்று நினைத்த ஆருத்ரா அனைத்தையும் உறுதி செய்து கொள்வதற்காக “நீங்க சொல்றது உண்மையா ஆன்ட்டி? நெஜமாவே டாடி தேன்மொழி மம்மியை செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டாரா? அவங்க எங்களோட சியா மம்மி இல்லையா? ஆனா அவங்க பாக்குறதுக்கு எங்க மம்மி மாதிரி தானே இருக்காங்க! நீங்க எங்க கிட்ட பொய் சொல்றீங்களா? இல்ல பிராங்க் மாதிரி ஏதாவது பண்ணி விளையாடுறீங்களா? ப்ளீஸ் ஆன்ட்டி இந்த விஷயத்துல விளையாடாதீங்க. உங்களுக்கு இத பத்தி ஏதாவது தெரிஞ்சதுன்னா உண்மைய மட்டும் சொல்லுங்க. கண்டிப்பா இதைப் பத்தி நான் டாடி கிட்டையும் கேட்பேன்.” என்று உடைந்த குரலில் கேட்டாள்.
அவளது கண்களில் இருந்து நீர் வடிய, பாவமாக ஜூலியை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. “கண்டிப்பா கேக்கணும்! நீங்க ரெண்டு பேரும் அவன் கிட்ட போய் சியா எங்கன்னு கேட்கணும். அவன் ஏன் உங்க கிட்ட பொய் சொன்னான்னு கேட்கணும். தேன்மொழி உங்களுடைய ஒரிஜினல் மதர் இல்லைன்னு சொல்லி சண்டை போடணும்.
இதனால தேன்மொழிக்கும் உங்களுக்கும் நடுவுல இருக்கிற பாண்டிங் மொத்தமா ஸ்பாயில் ஆகணும். அப்ப தான் அர்ஜுன், தேன்மொழிக்கு நடுவுல ஒரு கேப் வரும். அந்த சின்ன கேப் எனக்கு போதும். அதுக்காக தானே இதையெல்லாம் பண்ணிட்டு இருக்கேன்!” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட ஜூலி,
“இந்த விஷயத்தை என் வாயால உங்க கிட்ட சொல்றதுக்கு எனக்கு கஷ்டமா தான் இருக்கு. உங்களுக்கு இத பத்தி எதுவும் தெரியாதுன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா, கண்டிப்பா நான் இந்த பேச்சையே எடுத்திருக்க மாட்டேன். ஆனாலும் நீங்க இவ்வளவு தூரம் கேட்கும் போது, என்னால நடந்த உண்மையை சொல்லாம இருக்க முடியல.
அதுவும் எனக்கு எல்லாமே தெரியும் போது, மத்தவங்க மாதிரி வேணும்னே அதை உங்ககிட்ட மறைக்கிறதுக்கு எனக்கு மனசு வரமாட்டேங்குது. உங்க மம்மி சியாவை எனக்கு நல்லா தெரியும். உங்க டாடியும் அவங்களும் லவ் பண்ணிட்டு இருக்கும்போது கூட நாங்க எல்லாரும் ஃபிரண்ட்ஸா தான் இருந்தோம்.” என்று குழந்தைகளின் நம்பிக்கையை பெறுவதற்காக இஷ்டத்திற்கு அடித்து விட்டாள்.
ஆனால் அதை எல்லாம் கேட்கும் பொறுமை இல்லாததால் ஆருத்ரா நேரடியாக “நெஜமாவே சியா மம்மி இறந்துட்டாங்களா ஆன்ட்டி?” என்று விஷயத்திற்கு வர, “ஆமா பேபி! டு இயருக்கு முன்னாடி உங்க டாடி கோமாவுக்கு போனாரு இல்ல.. அந்த டைம்ல தான் உங்க சியா மம்மி இறந்துட்டாங்க.
ரொம்ப நாள் ஆனதுக்கு அப்புறம் உங்க டாடிக்கு கான்ஷியஸ்னஸ் வரவே இல்லைன்னு உங்க பாட்டி, தாத்தா எல்லாரும் ரொம்ப கவலைப்பட்டாங்க. சியா இறந்து போன சோகத்தை தாங்க முடியாம தான் இன்னும் அர்ஜுன் கோமாவுல இருக்கான்னு நினைச்சு அவன சரி பண்றதுக்காக தான் சும்மா அவனை மாதிரியே இருக்கிற இந்த தேன்மொழியை உங்க டாடிக்கே தெரியாம அவர் கோமால இருக்கும்போது கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.
பாவம் தேன்மொழி. அந்த பொண்ணு இங்க என்ன நடக்குதுன்னு புரியாம ஸ்டார்டிங்ல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் அவங்களை உண்மையாவே சியான்னு நம்ப ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் அவங்களும் உங்களுக்கு மம்மியா நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கடைசி வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் சியா இறந்து போனது தெரியவே கூடாதுன்னு நினைத்து இன்னும் ஆக்டிங்கை கன்டினியூ பண்றாங்கன்னு நினைக்கிறேன்.
எப்படி இருந்தாலும் உங்க அம்மா இறந்து போயிட்டாங்கன்னு நினைச்சு நீங்க ஃபீல் பண்றதுக்கு பதிலா, நீங்க தேன்மொழியை சியான்னு நினைச்சு அவங்க கூட சேர்ந்து நீங்க எல்லாரும் ஒரு ஃபேமிலியா வாழ்றது கூட நல்லா தானே இருக்கும்! என்ன ஆனாலும் இறந்துபோன சியாவால மறுபடியும் உங்க கிட்ட வர முடியாது. சோ உங்க கூட இருக்கிற தேன்மொழியை நீங்க உங்க மம்மியா ஏத்துக்கிட்டு இதே மாதிரி எப்பயும் நீங்க ரெண்டு பேரும் ஹேப்பியா இருக்கணும். அதான் என்னோட ஆசை.
ப்ளீஸ்.. உங்க ரெண்டு பேருக்கும் இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சிருச்சுன்னு நீங்க யார் கிட்டயும் காட்டாதீங்க. முக்கியமா நான் உங்க கிட்ட இத சொன்னது தெரிஞ்சா, எல்லாரும் என்னை தப்பா நினைப்பாங்க.” என்று ஜூலி பேசிக்கொண்டு இருக்கும்போதே அதற்கு மேல் அங்கே நின்று அதைக் கேட்க முடியாமல் சித்தார்த் மம்மி என்று கத்திக் கொண்டு கதறி அழுதபடி வெளியில் ஓடினான்.
“சித்து அண்ணா நில்லு நானும் வரேன். நானும் மம்மிய பாக்கணும்.” என்ற ஆருத்ராவும் அழுதபடி அவன் பின்னே ஓடினாள்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)