அத்தியாயம் 143: வருணை சந்தித்த கௌதம் (பார்ட் 2)
ஏற்கனவே தனக்கு உடல் நிலை சரி இல்லாததால், இதற்கு மேலும் இந்த விஷயத்தில் தலையிட்டு தன்னுடைய உடம்பை கெடுத்துக்கொள்ள விரும்பாத செண்பகம், “என்னமோ பண்ணி தொலைங்க.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து சென்று விட்டாள். தன்னுடைய அறைக்கு கண்ணீர் நிறைந்த கண்களுடன் வந்த ஆராதனா அவளுடைய ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். அங்கே வந்த வருண், “இது நடக்கனும்னு நெனச்சு தான் பிரவீன் இது எல்லாத்தையுமே பண்ணி இருக்கான். நீயும் அவன் நினைச்சது போலவே நடந்துக்க போறியா…??? நான் தான் உன்ன இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். நீ என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. உனக்கு என் மேல கொஞ்சமாவது மரியாதை இருந்தா, நீ இந்த வீட்டை விட்டு வெளியில போக கூடாது.” என்று உறுதியான குரலில் சொல்ல, அதை கேட்ட ஆராதனா கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்து, “ஏன் அண்ணா நீங்களும் இப்படி பண்றீங்க..??? பாவம் ஆன்ட்டி அவங்களுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல. என்னால அவங்க டெய்லியும் டென்ஷன் ஆகி அவங்களுக்கு இன்னும் எதாவது உடம்பு சரி இல்லாம போயிடும்மோன்னு எனக்கு பயமா இருக்கு. நீங்க இப்படி சொன்னா, என்னால எப்படி இங்க இருந்து போக முடியும்..???” என்று அப்பாவியாக அவனைப் பார்த்து கேட்டாள். 😭 😭 😭
வருண்: “நீ இங்க தான் இருக்கணும். நான் அவ்ளோ தான் சொல்லுவேன்.” என்றும் ஆணையிடும் தோரணையில் சொன்ன வருண், அங்கே இருந்து கிளம்பி மீண்டும் தன்னுடைய ஆபீஸ் -க்கே சென்று விட்டான்.
ரித்திகா ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லை என்ற காரணத்தை லாவண்யாவிடம் கேட்டு தெரிந்து கொண்ட கௌத்தம், ரித்திகாவிடம் பேசினாள் எந்த பிரயோஜனம் இல்லை, நேரடியாக வருனிடம் பேசிவிடலாம். என்று நினைத்து நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்திற்கு சென்றான். வருணை யார் சென்று பார்க்க வேண்டும் என்றாலும் அவனிடம் அப்பாயிண்ட்மெண்ட் ஏற்கனவே வாங்கி இருத்தல் வேண்டும். அதனால் செல்லும் வழிலேயே அங்கே ரிசெப்ஷனில் இருக்கும் பெண் தன் பாட்டிற்கு சென்று கொண்டு இருக்கும் கௌத்தமை தடுத்தாள் . கௌத்தமிடம் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாததால் வருணை அவனால் சந்திக்க முடியாது என்று அவனிடம் அந்த ரிசப்ஷனில் இருந்த பெண் சொல்லிக் கொண்டு இருக்க, அதைக் கேட்டு கடுப்பான கௌத்தம், சிவாவிற்கு கால் செய்து அவனை கீழே வரும்படி அழைத்தான்.
கௌத்தமிடம் இருந்து கால் வரும் போது சிவா, வருணின் கேபினில் தான் இருந்தான். “நீ கீழயே இரு டா. நான் அங்க வரேன். என்று சிவா போனில் யாரிடமோ சொல்லிக் கொணடு இருப்பதை வருனும் கவனிக்கத்தான் செய்தான். ரிசப்ஷனுக்கு வந்து சேர்ந்த சிவா கௌத்தமை பார்த்து, “இப்ப நீ திடீர்னு எதுக்கு டா இங்க வந்த..???” என்று அவசரமான குரலில் கேட்டான். “நான் இப்பவே உங்க சார் ஐ பாத்து பேசணும்.” என்று கடுப்பான குரலில் சொன்னான் கௌத்தம். 😒
சிவா: “அப்படி எல்லாம் நீ நினைக்கும் போதெல்லாம் அவர பாக்க முடியாது. ஆல்ரெடி அவர் டென்ஷன்ல இருக்காரு. நீ பேசுற டோனே வேற சரியில்ல. நீ இன்னைக்கு அவர பார்க்க வேண்டாம்.” என்று சொல்லி அவனை வெளியில் அனுப்ப பார்த்தான்.
கௌத்தம்: “இல்ல, நான் இன்னைக்கு அவர பாக்காம போக மாட்டேன். நான் அவர் கிட்ட பேசணும்.” என்று உறுதியான குரலில் சொன்னான்.
சிவா: “அப்படி என்ன டா உனக்கு அவர்கிட்ட முக்கியமா பேச வேண்டியது இருக்கு..??? ரித்திகாவை பத்தி தானே இப்ப பேச போறேன்..???? இங்க பாரு உன் கிட்ட நான் ஏற்கனவே பல தடவை சொல்லிட்டேன். அந்த பொண்ணு எங்களோட ஃபியூச்சர் லேடி பாஸ். அத முதல்ல நீ உன்னோட மனசுல நல்லா ஏத்தி வச்சுக்கோ. உன்னோட ஒன் சைட் ஃபீலிங்ஸ் எல்லாத்தையும் தூக்கி குப்பையில போட்டுட்டு போய் வேற வேலைய பாரு. அதான் உனக்கு நல்லது. வருண் சார் அவங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாரு. உனக்கு புரியுதா இல்லையா…???” என்று எரிச்சலான குரலில் கேட்டான்.
அவர்கள் இருவரும் மெதுவாக பேசிக் கொண்டு இரந்தாலும்; ரிசப்ஷனில் வேலை பார்க்கும் பெண்ணும் மற்றும் சிலரும் அவர்களுடைய பேச்சுவார்த்தையை கவனித்துக் கொண்டு இருந்தனர். சிவா என்ன சொல்லி கௌத்தமை சமாதானப்படுத்த முயன்றாலும், அவன் சொல்வதைக் கேட்கும் மன நிலையில் கௌத்தம் இல்லை. அதனால் மீண்டும் மீண்டும்.. “நான் உங்க வருண் சார் பாக்காம இங்க இருந்து போக மாட்டேன்.” என்று சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தான்.
சிவா சென்று இவ்வளவு நேரம் ஆகியும் அவன் மீண்டும் திரும்பி வராததால் அவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்று சி. சி. டிவி. கேமராவில் செக் செய்த வருண் அவன் கௌத்தமுடன் பேசிக் கொண்டு இருப்பதை கவனித்தவன், சிவாவிற்கு கால் செய்து; “நீ கௌத்தம கூட்டிட்டு என்னோட கேபின்க்கு வா.” என்று சொல்லிவிட்டு கட் செய்தான். அதனால், வேறு வழி இன்றி சிவா, கௌத்தமை அழைத்து கொண்டு வருணின் கேபினுக்கு சென்றான்.
கௌத்தமையும், சிவாவையும், தனக்கு முன்னே இருந்த சாரில் அமர சொன்ன வருண், “என்ன விஷயம் கௌத்தம்..?? நீ காரணம் இல்லாம இவ்ளோ தூரம்லாம் வரமாட்டியே…!!! என்ன பாக்கிறதுக்காக வந்தியா…??? இல்ல உன்னோட பிரெண்ட பாக்குறதுக்காக வந்தியா..???” என்று நேரடியாக கேட்டான்.
சிவா: கௌத்தம் பதில் சொல்வதற்குள் முந்தி கொண்டவன், “அவன் என்ன பாக்க தான் சார் வந்தான்.” என்று பொய் சொன்னான்.
கௌத்தம்: சிவாவை பார்த்து முறைத்தவன், “இல்ல சார். நான் உங்களை தான் பாக்க வந்தேன்.” என்றான் சிறிதும் தயக்கமின்றி.
வருண்: “ஓகே டெல் மீ. வாட் ஹேப்பண்ட்..???” என்று சாதாரண குரலில் கேட்டான்.
கௌத்தம்: சிவா இருக்கும் வரை தன்னால் தன் மனதில் இருப்பதை வருனிடம் பேச முடியாது என்று நினைத்தவன், “நான் உங்ககிட்ட தனியா பேசணும்.” என்றான்.
அவன் சொன்னதை கேட்ட வருண் சிவாவை பார்க்க, அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் வேறு வழி இன்றி எழுந்து வெளியே சென்றான். சிவா சென்றதும் மீண்டும் கௌத்தமை பார்த்த வருண், “இப்ப சொல்லு.” என்றான்.
கௌத்தம்: “நான் நம்ம ரித்திகாவை பற்றி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.’ என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
வருண்: “அவள பத்தி நீ என்ன பேசணும்..???” என்று குழப்பமாக அவனை பார்த்து கேட்டான். 🙄
கௌத்தம்: “அவள பத்தி நான் தான் பேசணும், பேசுவேன். ஏன்னா நான் அவளை லவ் பண்றேன்.” என்று தயக்கமின்றி நெஞ்சை நிமித்தி கொண்டு சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டு முதலில் சற்று அதிர்ச்சியும் எரிச்சலும் அடைந்த வருண், பின் அவனிடம் நிதானமான குரலில்…. “என்ன டா சொல்ற..?? நீ நிஜமாகவே அவளை லவ் பண்றியா..??? நீ மட்டும் தான் அவளை லவ் பண்றியா.. இல்ல அவளும் உன்ன லவ் பண்றாளா..???” என்று அர்த்தத்துடன் கேட்டான். ஏனென்றால் அவனுக்கு ரித்திகா ஏற்கனவே கௌத்தமை காதலித்து ஏமாற்றிவிட்டு, பின் பணத்திற்காக தான் தன்னை திருமணம் செய்கொள்கிறாளா..?? என்று தெரிய வேண்டியது இருந்தது.
தான் மட்டும் ஒரு வார்த்தை ரித்திகாவும் தன்னை காதலிப்பதாக சொன்னால், அதை வருண் கண்டிப்பாக நம்பி விடுவான் என்று கௌதமிருக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், அவன் அப்படி ஒரு பொய் ஐ சொல்ல விருப்பமில்லை. அதனால், “நான் மட்டும் தான் அவளை லவ் பண்றேன். ஒரு வேளை நீங்க நடுவுல வராம இருந்து இருந்தீங்கன்னா, கண்டிப்பா அவளும் என்னை லவ் பண்ணிருப்பா.” என்று அவனுடைய கேள்விக்கு உண்மையாக பதில் சொன்னான். ஏனென்று தெரியவில்லை கௌத்தமின் இந்த பதிலை கேட்டவுடன், வருணின் மனம் நிம்மதி அடைந்தது.
இப்போது அவன் ஏன் இங்கே வந்து இருக்கிறான் என்று புரிந்து கொண்ட வருண், “இட்ஸ் டு லேட் கௌத்தம். நீ இத பத்தி என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும். இப்போ எல்லாமே என்னோட கைய மீறி போயிருச்சு. சித்தார்த் அவள அவனோட அம்மாவாவே நினைக்க ஆரம்பிச்சுட்டான். அண்ட் மோர் ஓவர்.. நான் அவளை கல்யாணம் பண்ணிப்பேன்னு என் அம்மாவுக்கு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன். நானே நினைச்சாலும், இப்ப இந்த கல்யாணத்தை என்னால நிறுத்த முடியாது.யாருக்கு விருப்பம் இல்லைனாலும், எனக்கே விருப்பம் இல்லைன்னாலும், இந்த கல்யாணம் நடக்கும். இத யாராலையும் மாத்த முடியாது. ஐ அம் சாரி.” என்று உறுதியான குரலில் சொன்னான்.
அவன் பேசியதை கேட்டு கடுப்பான கௌத்தம், அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கு இருந்து கோபமாக எழுந்து வெளியே சென்று விட்டான். ஏற்கனவே அவனுடைய குணத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த வருண், அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. கௌத்தம் அங்கே இருந்து வெளியே சென்றவுடன், உள்ளே வந்த சிவா பதட்டத்துடன் வருணை பார்த்து; “சார் அவன் உங்ககிட்ட என்ன உளறி இருந்தாலும், அத நீங்க பெருசா எடுத்துக்காதீங்க. இவனுக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு இன்னும் அறிவு வளரல. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு சார். ரொம்ப நாளைக்கு முன்னாடி இவனே போய் டைரக்ட்டா ப்ரொபோஸ் பண்ணும் போது கூட, எனக்கு உன் மேல அந்த மாதிரியான எண்ணம் எல்லாம் இல்லைன்னு அந்த பொண்ணு ஸ்ட்ரெயிட்டா ஏற்கனவே சொல்லிட்டாங்க. இவன் தான் அத கேட்காம அந்த பொண்ணு பின்னாடியே இன்னும் சுத்திட்டு இருக்கான். நான் எப்படியாவது இவன்கிட்ட பேசி புரிய வைக்கிறேன் சார். நீங்க இவன் மேலயும் கோபப்படாதீங்க.” என்று மூச்சு விடாமல் பேசினான்.
வருண்: “எனக்கு புரியுது விடு. இப்ப எதுக்கு நீ இப்டி கேப் இல்லாம பேசிட்டு இருக்க..?? இப்ப வந்து பேசிட்டு போனது அகன்றதுனால தான் நான் போன போகுதுன்னு அவன சும்மா விட்டேன். அது அவனுக்கே நல்லா தெரியும். இருந்தாலும் அவன் கிட்டட சொல்லி வை. நாளைக்கு அவன் என் பொண்டாட்டி பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தா, நான் அப்பவும் பாத்துட்டு இப்படி சும்மா இருக்க மாட்டேன்.” என்று கண்டிப்பான குரலில் சொன்னான்.
சிவா: “ஓகே சார். நான் அவன பாத்துக்குறேன்.” என்று அவனுக்கு உத்திரவாதம் கொடுத்தான்.
சில மணி நேரத்திற்கு பின்…
நாராயணன் பேலஸுல்…
அனைவரும் தூங்கிய பின், ஜான்வியின் கல்லறைக்கு வந்தான் வருண். அந்த இடமே மயான அமைதியில் இருந்தது. அந்த அடர்ந்த இரவு நேரத்தில் பறவைகளின் சத்தமும், பலமாக காற்று வீசும் சத்தமும் வருணிற்கு அப்போது தெளிவாக கேட்டது. வழக்கம்போல் அங்கு இருந்த ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து அதற்கான ஸ்டாண்டில் ஏற்றி வைத்தான் வருண். ஆனால் அது அவன் ஏற்றி வைத்த அடுத்த கனமே அணைந்து விட்டது. அதனால் மீண்டும் அந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தான் வருண். மீண்டும் அது அணைந்துவிட, மீண்டும் அதை பற்ற வைத்தான். 🕯️
இதற்கு முன் இரவு நேரங்களில் அவன் எத்தனையோ முறை இப்படி பலமாக காற்று அடிக்கும் போது கூட, இங்கு வந்து மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து இருக்கிறான். 🕯️ ஆனால் அப்போது எல்லாம், ஒருபோதும் அது இப்படி அணைந்து போனதே இல்லை. 🕯️ இப்போது மட்டும் ஏன் தான் எத்தனை முறை ஏற்றி வைத்தாலும், அது அணைந்து கொண்டே இருக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை. 🕯️ அதனால் குழப்பமாக தன் முன்னே இருந்த ஜான்வியின் கல்லறையும், ஓரமாக மாட்டப்பட்டு இருந்த அவளுடைய பெரிய புகைப்படத்தையும், பார்த்தான். 🙄
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)