Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 137

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 137

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 137: உயிர் உங்களுடையது தேவி (பார்ட் 2)

அவர்களைப் பார்த்து சிரித்த சுதாகர், “என்ன தான் இருந்தாலும் ஒரு பையன இப்படி அடிக்கிறது எல்லாம் தப்பு தான் மா ஷாலினி.” என்று சொல்ல, “நல்லா அப்படி சொல்லுங்க அப்பா. அப்பயாவது அத கேட்டு இவளக்கு அறிவு வருதான்னு பாப்போம். ஒரு பச்சை குழந்தைய போட்டு எப்படி எல்லாம் அடிக்கிறா தெரியுமா…?? அத எல்லாம் வெளியில சொன்னா எனக்கு தான் வெட்கக்கேடு.” என்று சொன்னவன் தன் கண்களில் இருந்து வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான். 😨 🥺

விஷ்ணு சொன்னதைக் கேட்டு மீண்டும் அவர்களை பார்த்து சிரித்த சுதாகர், “நான் இன்னும் பேசியே முடிக்கலையே விஷ்ணு…!!! ஏம்மா ஷாலினி, இனிமே ஆம்பள பையன இப்படி பப்ளிக்கா எல்லார் முன்னாடியும் வச்சு அடிக்காத மா. அவன் மேல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு தான். அதுக்காக நீ அவன தனியா கூட்டிட்டு போய் வச்சு கும்மு கும்முன்னு கும்மு. அத யார் கேட்கப் போறா…??? ஆனா பப்ளிக்கா அடிக்கிறது கொஞ்சம் தப்பு தான் மா… இனிமே பண்ணாத.” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். 😂 😂 😂

ஷாலினி: சுதாகரை பார்த்து தன்னுடைய கட்டைவிரலை உயர்த்தி தம்சப் சிம்பலைபலை காட்டியவள், “டபுள் டன் அப்பா. நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பனா..???” என்று நல்ல பிள்ளை போல் சொன்னாள். 😁 😁 😁

“ரைட்டு..!! எல்லாரும் கூட்டு சேந்துட்டாய்ங்கயா. இதுக்கு மேல நான் இங்கு இருந்தா, அது என் உயிருக்கு உத்திரவாதம் இல்ல.” என்று சொன்ன விஷ்ணு, ‘என்ன விட்டா போதும் டா’ சாமி என்பது போல ராகவியின் வீட்டில் இருந்த கிளம்பி விட்டான். 

நாராயணன் பேலஸில்…

பிராத்தனாவின் அறை…

தன்னுடைய தொப்புலுக்கு மேல் இருக்கும் கிராப் டாப்பும், முட்டிக்கு மேலே இருந்த ஷார்ட்சும் அணிந்து இருந்த பிராத்தனா, சொகுசான தன்னுடைய பஞ்சு மெத்தையில் சாய்ந்து அமர்ந்து, தன்னுடைய ஒரு காலின் மேல் மற்றொரு கால் ஐ போட்ட படி ஒய்யாரமாக தன்னுடைய மொபைல் போனை நோண்டிக் கொண்டு இருந்தாள். 

அவளுடைய அறையின் கதவு அரைகுறையாக சாத்தப்பட்டு இருந்தது. அப்போது அவளைக் காண அங்கே வந்த தர்ஷினியின் தம்பி சூர்யா, வெளியில் நின்று கொண்டு அவள் அறையின் காலிங் பெல்லை அடித்தான். 🚪 அந்த சத்தத்தால் கடுப்பான பிராத்தனா, “யாரது கதவு திறந்து தானே இருக்கு..!!! நேரா உள்ள வர வேண்டியது தானே..?? எதுக்காக அங்க நின்னு காலிங் பெல் -ல அடிச்சுட்டு இருக்கீங்க..???” என்று சிறு எரிச்சலுடன் கேட்டாள். 😒 அவள் பேசியதை கேட்டு பயந்து போன சூர்யா, “ஐயோ தெய்வமே… என்னோட மாரியாத்தா இப்பவே மலையேறிட்டாளே..!! இப்ப நான் உள்ள போனா, இருக்கிற கடுப்புல எனக்கு வேப்பிலை அடிச்சு விட்டுடுவாளே..!!!! அப்பனே முருகா நீ தான் உன் புள்ளைய காப்பாத்தணும்.” 🙏 என்று தன் மனதிற்குள் நினைத்தவன், தயங்கி தயங்கி அவளுடைய அறைக்குள் வந்தான். 

உள்ளே வந்த சூர்யா பிராத்தனா அணிந்து இருந்த அரைகுறை ஆடையை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தான். 😵 😵 😵 அவனுக்கு அவளை அப்படி பார்க்க மிகவும் அசோகர்யவாகவும், கூச்சமாகவும், இருந்தது. 😟 🙄 😦 உள்ளே வந்த சூர்யாவை கவனித்த பிராத்தனா, “ஓ..!! நீதானா பெல் அடிச்சது..?? நான் அப்பவே நினைச்சேன்.” என்று அவனைப் பார்த்து ஏளனமாக சொன்னவள்; தன் கையில் இருந்த மொபைல் போனை பெட்டில் தூக்கி போட்டு விட்டு நேராக அவனைப் பார்த்த படி அமர்ந்தவள் தன் முன்னே இருந்த சோபாவை கைகாட்டி, “என்ன அதிசயமா என்னோட ரூமுக்கு எல்லாம் வந்திருக்க..??? வந்து உட்காரு.” என்று சாதாரணமா சொன்னாள். 

பேயறைந்ததைப் போல் வந்து அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்த சூர்யாவின் கண்கள், தன் முன்னே அமர்ந்து இருந்தவளின் தலை முதல் கால் வரை மேய்ந்தன. 😍 பின் இறுதியாக அவனுடைய கண்கள் அவளுடைய உயிர் சுழியில் வந்து நிற்க, திடீரென்று தன்னை சுதாரித்துக் கொண்டவன் மானசீகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டு; “அடேய் சூர்யா, அத்த மகளா இருந்தாலும்; அவளோட பர்மிஷன் இல்லாம அத்துமீறி அங்க இங்கன்னு பாக்க கூடாது.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் நேராக அவளுடைய கண்களை பார்த்தான். 

அவளுடைய அந்த மையிட்ட போதை ஏற்றும் கண்களை பார்த்த பின் அவனுக்கு ஏற்பட்ட மயக்கம், அவன் மாண்டு போனாலும் அவனுக்கு தெளிய போவதில்லை. அந்த அளவிற்கு ஈர்ப்பு சக்தியுடன் இருந்தது அவளுடைய அழகிய கண்கள். 🧲  👀 😍 அவளுடைய கண்களுக்குள் விழுந்து தொலைந்து போன சூர்யா அவளுக்கு பதில் சொல்ல மறந்து விட்டான். தான் கேள்வி கேட்டும் சூர்யா எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக தன்னையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்ததால்; தன்னுடைய ஒரு கையை நீட்டி அவன் முன் சத்தமாக சொடக்கு போட்டு அவனை அழைத்த பிராத்தனா, “ஹலோ என்ன கண்ண தொறந்து கிட்டே கனவு கண்டுட்டு இருக்கியா..??? ஏன் என்னமோ நீ என்ன புதுசா பாக்குற மாதிரி இப்படி பாக்குற..???” என்று கேட்டாள்.

சூர்யா: “ஆமா நீ என் கண்ணுக்கு புதுசா, ஒரு தினுசா தான் தெரியுற.” என்று முனமுனுத்தான். 

பிராத்தனா: அவன் சொன்னது அவளுக்கு சரியாக கேட்கவில்லை. அதனால், “என்ன சொன்ன..???” என்று குழப்பமாக கேட்டாள். 🙄

சூர்யா: அவளுடைய கேள்வியில் சுதாரித்துக் கொண்டவன், “ஒன்னும் இல்ல நான் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சுன்னுனு சொல்ல வந்தேன்.” என்று தன் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தான்.

பிராத்தனா: “ஓ ஓகே…!! தென், நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க..??? இந்த வருஷம் ஆவது 12 த் பாஸ் பண்ணியா… இல்ல இன்னும் அதே பெஞ்சுல ஸ்கூல்ல உட்கார்ந்து பெஞ்ச தேய்க்கலாம்னு முடிவு பண்ணி இருக்கியா….???” என்று அவனை ஏளனமாக பார்த்து நக்கலாக கேட்டாள். 😂 😂 😂

நம் சூர்யாவிற்கு தான்  பிராத்தனாவிடம் சூடு சொரணையே இல்லையே…!! அதனால் வெட்கமின்றி அவளை பார்த்து புன்னகைத்தவன், “நான் இந்த தடவ கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் ஆயிட்டேன். இன்னும் காலேஜ்ல சேர வேண்டியது தான் பாக்கி. நான் நீ படிக்கிற காலேஜ்ல தான் நானும் சேரலாம்னு இருக்கேன். அதான் அத பத்தி உன்கிட்ட  கேட்கலாம்னு வந்தேன்.” என்று ஆர்வமான குரலில் உற்சாகமாக சொன்னான். 😍 

பிராத்தனா: யாரு நீ கஷ்டப்பட்டு படிச்சு பாசனியா..??  ஏன் டா இப்படி எல்லாம் காமெடி பண்ற..??? 😂 😂 😂 நீ ஒழுங்கா படிச்சு இருந்தா தான் ஃபர்ஸ்ட் அட்டம்ஸ்லையே பாஸ் ஆயிருப்பியே…!!! உன் பேப்பரை கரெக்ஷன் பண்ண டீச்சர் ஏதோ நல்ல மூட்ல இருந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் போனா போதுன்னு உன்ன பாஸ் பண்ணி விட்டு இருப்பாங்க.” என்று கிண்டலாக சிரித்து கொண்டே சொன்னாள். 🤣 🤣 🤣

சூர்யா: “நான் ஒன்னும் சுத்தமாக படிப்பே ஏறாததுனால 12த் கிளியர் பண்ணாம இல்ல. நீ இங்கிலீஷ் மீடியத்துல படிச்ச, அதனால உனக்கு இங்கிலீஷ் ஈசியா வருது. எனக்கு சின்ன வயசுலயே இங்கிலீஷ் ஒழுங்கா வராது. அதனால நான் தான் அடம் புடிச்சு ஆறாவது போய் தமிழ் மீடியத்துல சேர்ந்தேன். நான் முதல் தடவை எழுதும்போதே இங்கிலீஷ் தவிர மத்த எல்லா சப்ஜெக்ட்லையும் நல்ல மார்க் தான் வாங்கினேன். 

இந்த பாலா போன இங்கிலீஷ் தான் எனக்கு வந்து தொலைய மாட்டேன்னு கொஞ்சம் சதி பண்ணிருச்சு. அத பாஸ் பண்றதுக்கு தான் எனக்கு ரெண்டு மூணு அட்டெம்ப்ட் ஆயிடுச்சு.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான். 

பிராத்தனா: “அது சரி உங்க ஃபேமிலியே அப்படி தானே.. ஏதோ வைஷு அக்கா மட்டும் தான் கொஞ்சம் பரவால்ல. 12த் -ஐயே நீ இத்தனை அட்டெம்ப்ட் -க்கு அப்புறம் இப்ப தான் பாஸ் பண்ணிருக்க. இப்போ காலேஜ் போனா எல்லா சப்ஜெக்டும் இங்கிலீஷ்ல தானே இருக்கும்.. அத எப்படி படிப்ப..??? என்ன இங்கேயும் வந்து பிஏ தமிழ் படிக்க போறியா..??” என்று தன் கால் மேல் இன்னொரு காலை போட்டுக்கொண்டு ஏகத்தாளமாக அவனைப் பார்த்து கேட்டாள். 

சூர்யா: அவளை ஒரு சிறு  புன்னகையுடன் பார்த்தவன், “இல்ல நானும் உன்ன மாதிரி பி. பி. ஏ. தான் படிக்க போறேன்.” என்று உறுதியான குரலில் சொன்னான். 😁 😁

 பிராத்தனா: அவன் தன்னிடம் ஏதோ ஒரு பெரிய ஜோக் ஐ சொன்னதைப்போல்  குபிரென்று வெடித்து சிரித்தவள், “வாட்… நீ பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிக்க போறியா..?? முதல்ல பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு உனக்கு ஸ்பெல்லிங் தெரியுமா…??? சாதரண 12த் போர்டு எக்ஸாம்யே உன்னால ஃபர்ஸ்ட் அட்டம்டுல பாஸ் பண்ண முடியல. நீ எல்லாம் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சு, என்னத்த போய் பிசினஸ் பண்ணி கிழிக்க போற…???” 😂😂 😂 “பேசாம நான் சொன்ன மாதிரி பிஏ தமிழாச்சு படி. நாளைக்கு உன்னோட கல்யாண பத்திரிகையில போடறதுக்கு பேருக்கு ஒரு டிகிரி ஆவது இருக்கும்.” என்று நக்கலாக சொல்லி சிரித்தாள். 😂 😂 😂 😂

அவள் சொன்னதை கேட்டு எழுந்து நின்ற சூர்யா, “B U S I N E S S  A D M I N I S T R A T I O N” என்று ஒரே முச்சில் வேகமாக சொன்னான். 

 பிராத்தனா: “வாட்..???” என்று குழப்பமாக அவனைப் பார்த்து கேட்டாள். 🙄

சூர்யா: நீதானே மா பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு எனக்கு ஸ்பெல்லிங் தெரியுமான்னு கேட்ட. அத தான் இப்ப சொன்னேன். ஏன் கேட்ட உனக்கே அதோட ஸ்பெல்லிங் மறந்திருச்சா..???” என்று சிறு புன்னகையுடன் அமைதியான குரலில் கேட்டான். 😁 😁 😁

பிராத்தனா: “ஓ..!!! உனக்கு ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறதா  நினைப்பா..??? கோர்ஸ் ஓட ஸ்பெல்லிங் தெரிஞ்சுட்டா அந்த கோர்ஸ் ஐ  உன்னால படிச்சு பாஸ் பண்ணிட முடியுமா..??? புல் கோர்ஸ் என்ன முதல்ல ஃபர்ஸ்ட் செமஸ்டர் ஆவது தாண்டுவியா நீ..???” என்று ஏளனமாக அவனைப் பார்த்து நக்கலாக கேட்டு சிரித்தாள். 😂 😂 😂

சூர்யா: “நான் எனக்காக இல்லைனாலும், உனக்காக பாஸ் பண்ணி காட்டுறேன். என்னோட கல்யாண பத்திரிகையில சூரியகுமார் எம். பி. ஏ. -ன்னு போட்டு இருக்கும்.” என்று வெளியில் அவளிடம் உறுதியான குரலில் சொன்னவன், “நீ கண்டிப்பா அத ஒரு நாள் பார்த்து சந்தோஷப்படுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மிஸ்ஸஸ். பிராத்தனா சூர்யகுமார்.” என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

பிராத்தனா: “லெட்ஸ் சீ ” என்றவள், “சாரி, இப்ப நான் என்ன சொன்னேன்னு உனக்கு புரியாதுல்ல… இட்ஸ் ஓகே.  நானே இன்னொரு தடவை தமிழ்ல சொல்றேன். நான் சொன்ன மாதிரி, நீ பர்ஸ்ட் செம் அரியர் இல்லாமல் கிளியர் பண்றியானு பாக்கலாம்.” என்றாள். 😁 😁 😁

சூர்யா: ம்ம்ம்.. நாளைக்கே நான் காலேஜ்ல வந்து அட்மிஷன் போடுறேன். 

பிரார்த்தனா: நீ என்னமோ பண்ணிட்டு போ. ஆனா அங்க வந்து என்ன உனக்கு தெரிஞ்ச மாதிரி காமிச்சுக்கிட்டு, என்ன எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துறாத. எனக்குன்னு காலேஜ்ல ஒரு குட் நேம் இருக்கு. நீயே அங்க வந்து பார்த்து தெரிஞ்சுக்கோ, அந்த காலேஜோட  பியூட்டி குயின் நான் தான்.

 சூர்யா: “நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன். ஆனா நீ கண்டிப்பா மத்த எல்லார்கிட்டயும் ஒரு நாள், பெருமையா நான் உன்னோட மாமான்னு நீயாவே சொல்லுவ.” என்று சாந்தமான முகத்துடன் சொன்னான். 😌

 பிராத்தனா: அவனைப் பார்த்து முறைத்தவள், “என்ன சேலஞ்ச் பண்றியா..??? சும்மா டேய் ட்ரீம் பண்ணாத. இந்த ஜென்மத்துல நான் உன்ன மாமான்னு   கூப்பிட மாட்டேன்.” என்று தன்னுடைய ஆள்காட்டி விரலை அவன் முன்னிட்டு எரிச்சலான குரலில் சொன்னாள். 😒 🤨

சூர்யா: “பிராத்து மா நான் உன்கிட்ட சவால் எல்லாம் விடல. இப்படி நடந்தா, நல்லா இருக்கும்னு ஆசைப்படுறேன். நான் நினைக்கிறது பகல் கனவா, இல்ல பழிக்க போற கனவான்னு அது நடக்கும்போது தெரியும்.” என்று ஒரு புன்முறுவலுடன் சொன்னவன் அவள் அறையில் இருந்து வெளியே வந்தான். 😁 😁 😁

அவன் வெளியே சென்றவுடன், “பிளடி வில்லேஜ் கய். எதுவுமே தெரியலனாலும் வாய் பேசறதுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்ல. இவன பாத்தாலே கடுப்பாகுது. இன்னும் இவன் நம்ம காலேஜ்க்கே வந்து என்னென்னலாம் பண்ண போறானோ..!!! ச்சை..!!!” என்று சத்தமாக கத்தி சொன்ன பிராத்தனா தன் பெட்டில் இருந்த கரடி பொம்மையை எடுத்து அதை கோபத்தில் கசக்கி கீழே பிய்த்து எறிந்தாள். 😒 😡 🔥

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் என்ற ஃபேஸ்புக் குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured