Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 116

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 116

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 116: எனக்கே உன் மேல கோவம் வருது (பார்ட் 1)


ரித்திகாவின் வீட்டில்…

மனம் முழுக்க வேதனையுடன் கால் போன போக்கில் சென்று கொண்டு இருந்த விஷ்ணு, தன்னை அறியாமல் ரித்திகாவின் வீட்டு வாசலில் வந்து நின்றான். அவனுக்கு இப்போது ரித்திகாவிடம் இது பற்றி பேசி, ஷாலினியை சமாதானப்படுத்த அவளிடம் உதவி கேட்கலாம் என்று தான் தோன்றியது. ஆனால், இந்நேரத்தில் அவளை சென்று தொந்தரவு செய்ய வேண்டுமா என்று யோசித்த படி ரித்திகாவின் வீட்டு வாசலிலேயே சிறிது நேரம் நின்று கொண்டு இருந்தான். சில நிமிடத்திற்கு மேல் அவனால் அங்கே அமைதியாக நிற்க முடியவில்லை. அவனுடைய மனம் யாருடனாவது தன்னுடைய வேதனையை சொல்லி அழுதுவிடு என்று அவனிடம் சொல்லிக் கொண்டே இருந்தது. 😥 💔 அதனால் வேறு வழி இன்றி ரித்திகாவின் வீட்டின் காலின் பெல்லை அடித்தான். சுதாகர் தான் வந்து கதவை திறந்தார். கண்ணீர் நிறைந்த கண்களோடு, கையில் ஒரு புடவையை வைத்துக்கொண்டு நின்ற விஷ்ணுவை பார்த்தவுடன் அவர் அதிர்ச்சி அடைந்தார். 😳

சுதாகர் ஐ பார்த்தவுடன் தன்னுடைய கண்ணீரை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத விஷ்ணு, அவரை “அப்பா” என்று அழைத்த படி அழ தொடங்கினான். இவன் வீட்டு வாசலில் நின்று இப்படி அழுது கொண்டு இருந்தால் வெளியே இருந்து பார்ப்பவர்கள் தங்களை தவறாக நினைத்து விடுவார்கள், என்று நினைத்து வேகமாக அவனை உள்ளே அழைத்து வந்த சுதாகர் கதவை சாத்தினார். ரித்திகாவின் வீட்டிற்குள் வந்த விஷ்ணு, தன் கையில் இருந்த புடவையை கீழே போட்டுவிட்டு தரையில் மண்டியிட்டு அழ தொடங்கினான். 😭 😭 😭 அவன் அந்த புடவையை கீழே போட்டதில் அதற்குள்ளே இருந்த பணக்கட்டுகள் எல்லாம் வெளியே வந்து விழுந்தன. சுதாகருக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அதனால் அவனை அதிர்ச்சியாக பார்த்தவர், “என்னாச்சு விஷ்ணு…!! இது யாரோட சேரி..??? இதுல இவ்ளோ காசு வேற இருக்கு..!!! என்ன பா நடந்துச்சு..??? நீ எதுக்காக இப்படி அழுதுட்டு இருக்க…???” என்று பதட்டமான குரலில் கேட்டார். 😦 அவர்களுடைய பேச்சு சத்தத்தை கேட்டு ரித்திகாவும், ரேவதியும், கூட இங்கு வந்து சேர்ந்தனர். 

விஷ்ணுவைப் பார்த்து அதிர்ந்த ரித்திகா அவன் அருகே சென்று அமர்ந்து, “ஏய்..!!! ஏன் டா இப்படி அழுதுட்டு இருக்க..?? இது யாரோட சாரீ, இதுல இவ்ளோ கேஷ் வேற இருக்கு..???” என்று அவசரமான குரலில் கேட்டவர்களுக்கு ஏதோ ஞாபகம் வர, “அப்ப இது நீ ஷாலினிக்கு வாங்கி குடுத்த சாரீயா..!!! இது ஏன் இப்படி கசங்கி போய் கிடக்கு…?? ஷாலினிக்கு என்ன ஆச்சு..??? அவ நல்லா இருக்கா தானே..!!!  உங்களுக்குள்ளே ஏதாவது பிரச்சனையா..??? ஏதாவது சொல்லு விஷ்ணு. ஏன் இப்டி அழுதுகிட்டு இருக்க..??? எனக்கு பயமா இருக்கு.” என்று அவனுடைய தோளை பிடித்து உலுக்கிய படி கேட்டாள். 😟

“அக்கா” என்று ரித்திகாவை பார்த்து அழுது கொண்டே சொன்ன விஷ்ணு, அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான். 😭😭 😭 விஷ்ணுவின் ஒவ்வொரு செய்கைகளும் இன்னும் ரித்திகாவை பதட்டப்படுத்திக் கொண்டே இருந்தது. இருந்தாலும் தன்னுடைய பயத்தை மறைத்துக் கொண்டு அவனை சமாதானப்படுத்த முயன்றவள், “ஒன்னு இல்ல விஷ்ணு. அழுகாம முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு.” என்று ஒரு குழந்தையிடம் கேட்பதைப் போல பொறுமையாக அவனிடம் விசாரித்தாள். அவளிடம் இருந்து பிரிந்து அவளுடைய முகத்தை நேராக பார்த்த விஷ்ணு அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு, “அக்கா ஷாலினி என்னை விட்டு மொத்தமா விலகி போயிருவாளோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ப்ளீஸ்..!! அக்கா, நீங்க ஏதாவது பண்ணுங்க. அவ லூசு மாதிரி என்னென்னமோ பண்ணிட்டு இருக்கா. எனக்கு அவளை பாக்குறதுக்கே பயமா இருக்கு.” என்று வலி நிறைந்த குரலில் சொன்னான். 😖 😥 😭 💔

ரித்திகா“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது விஷ்ணு. நீ என்ன நடந்துச்சுனு என் கிட்ட கிளியரா சொன்னா தான் நான் ஏதாவது பண்ண முடியும்.” என்று நிதானமான குரலில் சொன்னாள்.

தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட விஷ்ணு, ரித்திகாவிடம் நடந்தவற்றை அனைத்தையும் தெளிவாக சொன்னான். அவன் சொன்னவற்றை கேட்ட ரேவதியும், சுதாகரும், கூட அவனை பாவமாக பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்களுக்கு ஷாலினி விஷ்ணு இருவருமே நெருக்கமானவர்கள் என்பதால், உண்மையாக இவர்கள் இருவரும் காதலிக்கும் போது ஏன் இப்படி அர்த்தமற்ற விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போட்டு; தங்களுடைய உறவை கெடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைத்த அவர்களுக்கு வருத்தமாக இருந்தது. 😣

ரித்திகாவிற்கு இப்போதே சென்று தான் ஷாலினியை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் விஷ்ணுவையும் அவளால் அப்படியே விட்டுவிட்டு செல்ல முடியவில்லை. விஷ்ணுவை அழைத்துக் கொண்டு அவனை சோபாவில் சென்று அமர வைத்த ரித்திகா, அவனுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுத்து அவனை சற்று ஆசுவாசப்படுத்தினாள். ரேவதியும், சுதாகரும், கூட விஷ்ணுவை சமாதானப்படுத்த முயன்றனர்.

ரித்திகா: “நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல..!!! இந்த உண்மையை பற்றி நீயே அவ கிட்ட சொல்லிரு. அவளுக்கா தெரிஞ்சுதுன்னா அவ உன் மேல ரொம்ப கோபப்படுவான்னு…!! உண்மைய சொல்லணும்னா அவளுக்கு இப்போ உன் மேல இருக்கிறது கோபம் கூட இல்ல. நீ அவ கிட்ட உண்மையா மறச்சிட்டியேன்ற வருத்தம் தான். அதுக்காக அவளால ரொம்ப நேரத்துக்கு இப்படியே உன் மேல கோவமா இருந்துட்டு, உன் கிட்ட பேசாம எல்லாம் இருக்க முடியாது. நான் அவ கிட்ட பேசுறேன். நீ பீல் பண்ணாத.” என்றாள் அக்கறையாக. 

ரேவதி: “ஆமா பா விஷ்ணு, நானும் போய் அவ கிட்ட பேசுறேன். அவ சின்ன பொண்ணு. இந்த சிச்சுவேஷன எப்படி கரெக்டா ஹேண்டில் பண்றதுன்னு தெரியாம, அவ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கா. நீ அவள நினைச்சு வருத்தப்படாத. நீ பண்ணது தப்புன்னா, இப்ப அவ பண்ணிட்டு இருக்கறதும் தப்பு தான். நாங்க அவ கிட்ட பேசுறோம். நாங்க சொன்னா அவ புரிஞ்சுப்பா.” என்று ஆறுதலாக சொன்னாள்.

அவர்களுடன் பேசிய பின்பு தான் விஷ்ணு சற்று சகஜ நிலைக்கே வந்தான். தரையில் கசங்க கிடந்த அந்த புடவையை எடுத்து மடித்து வைத்த ரித்திகா விஷ்ணுவை பார்த்து, “இந்த சாரீ இங்கயே இருக்கட்டும். அவளுக்கு உன் மேல இருக்கிற கோபம் போயிருச்சுனா, அப்புறம் இது எங்கேன்னு தான் தேடுவா. நான் அப்போ இத அவ கிட்ட குடுத்துக்கறேன். நீ இந்த பணத்தை எடுத்துட்டு போய் அவ பண்ணது தப்புன்னு சொல்லி வைஷாலி கிட்டயே குடுத்திரு. அப்புறம் நீ இப்படியே தேவதாஸ்   மாதிரி சுத்திட்டு இருக்காத. உன்னோட க்ளோஸ் பிரண்டோட சிஸ்டருக்கு தானே என்கேஜ்மென்ட்… சோ, நீ அங்க போ. நீ அங்க போகலைன்னா, உன் பிரண்டு கோச்சுவான்ல…!! அண்ட் நீ தனியா இருந்தாலும், அவள பத்தியே யோசிச்சிட்டு இருப்ப. அதுக்கு போய் உன் பிரெண்ட்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்ணு. இத பத்தி நீ யோசிச்சு பீல் பண்ணாத. உன்னையும், ஷாலினியையும், சேத்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.” என்று நம்பிக்கையாக சொல்லி விஷ்ணுவை தன்னுடைய வீட்டில் இருந்து அனுப்பி வைத்த ரித்திகா, தன்னுடைய அம்மாவுடன் ஷாலினியின் வீட்டிற்கு சென்றாள். 

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured