Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 56

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 56

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 56 ‌

அர்ஜுனின் ஆர்டரின் பெயரில் கடல் வழியாக பத்தாயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புடைய  கொகையினை கடத்திச் சென்றவர்களை அவனது ஆட்கள் சுற்றி வளைத்தார்கள். 

ஆனால் அப்போதும் அந்தக் கடத்தல் கும்பல் அடங்காமல் அர்ஜூனுக்கு எதிராக செயல்பட்டார்கள். 

அதனால் இருந்த கோபத்தில் அவர்கள் அனைவரின் மீதும் குண்டு மழையை தன் ஆட்களை வைத்து பொழிய வைத்தான் அர்ஜுன். 

அதில் இரண்டு பக்கமுமே பெரிய அளவில் சேதாரம் ஆனது. அந்த நள்ளிரவு வேலையில் ஆக்ரோஷமான அலைகளுடன் இருந்த நடுக்கடலில் பழத்தை சத்தத்துடன் வெடித்து சிதறிய அந்த குண்டுகள் சுற்றியுள்ள பல கிலோமீட்டருக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

அவ்வளவு பெரிய குண்டுவெடிப்பு நடுக்கடலில் நடந்து இருந்தாலும், அது தொடர்பான செய்திகள் உடனே காட்டுத் தீயாக கடலோர காவல் படையினர் மத்தியிலும், இல்லீகள் பிசினஸ் செய்யும் கொள்ளையர்களின் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது. 

ஆனால் இப்படி ஒரு பெரும் சம்பவத்தை செய்த அர்ஜுனனின் டீமை எதிர்க்க யாரும் முன் வரவில்லை.‌ கவர்மெண்ட் கூட அவர்களின் சண்டையில் நாம் தலையிட வேண்டாம் என்று நினைத்து அமைதியாக எதையும் கண்டும் காணாததைப் போல இருந்தது மட்டும் அல்லாமல் அந்த செய்தி ஊடகங்களில் கசியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

தலைவன் இல்லாத குழு விரைவாக தரைமட்டம் ஆகிவிடும் என்பதால் உடனே அவனுடைய ஆட்கள் அனைவரும் அர்ஜுன் இருந்த பிரைவேட் ஜெட்டையும், கடலில் விழுந்த அவனுடைய ஆட்களையும் காப்பாற்றி உடனே ஒரு ஜெட்டில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கே உள்ளவர்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதால் காயங்கள் பட்டிருந்தும் கூட,

அந்த எமர்ஜென்சி சுச்சுவேஷனிலும் அர்ஜுனும் அவனுடைய ஆட்களும் முகத்தில் இருந்த மாஸ்கை கழட்டாமல் இருந்தார்கள். 

அவர்கள் இருந்த ஜெட்டில் மீட்புக் குழுவினர்கள் அவர்களுக்கு உதவ தயாராக இருந்தார்கள். 

ஏற்கனவே சென்ற முறை கோல்டன் ஸ்பேரோவை போட்டுத்தள்ள சென்றபோது அர்ஜுனின் கையில் பலமாக அடிபட்டிருந்தது. அந்த காயமே இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டிருக்கிறது.

அதற்குள் இங்கே வந்து அர்ஜுன் குண்டு வெடிப்பிற்கு நடுவில் மாட்டிக் கொண்டதால், 

அவர்கள் அதில் இருந்து தப்பிப்பதற்காக கடலில் குதித்த போது கை கால்களில் ஏற்பட்ட காயங்கள், குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட லேசான தீக் காயங்கள் என்று அர்ஜுன் மற்றும் அவனுடன் வந்தவர்களின் உடம்பில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது. 

அவர்கள் முகத்தில் மாஸ்க் போட்டு இருந்ததால் முகத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடத்தில் உள்ள காயங்களுக்கு மெடிக்கல் டீமில் உள்ளவர்கள் மருந்து போட்டார்கள். 

அனைத்தும் முடிந்தவுடன் தனக்கான சொகுசு அறையில் தனியாக ஜன்னல் அருகில் இருந்த சேரில் அமர்ந்து தேன்மொழியை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். 

அவன் கிளம்பும்போது அவளிடம் “உனக்காக நான்  பத்திரமா வருவேன்.” என்று சொல்லிவிட்டு வந்தது இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. 

அதனால் “இப்ப அவ என்ன பண்ணிட்டு இருப்பா? நம்மள பத்தி தான் யோசிச்சிட்டு இருப்பாளா? 

நம்ம வேற அவ கிட்ட எதுவும் சொல்லாம கிளம்பி வந்துட்டோமே! 

அதுக்கு அவளுக்கு நம்ம மேல கோவம் இருக்குமா? நம்ம நேர்ல போகும்போது என்ன சொல்லுவாளோ தெரியலையே!” என்று ஒரு நொடி யோசித்தவன்,

அவளுக்கு கால் செய்யலாம் என்று நினைத்து தனது சாட்டிலைட் மொபைல் ஃபோனை எடுத்தான். 

பின் “இந்த மாதிரி மிஷன்ல இருக்கும்போது நமக்கு பர்சனலா தெரிஞ்சவங்க ‌ யாரையும் காண்டாக்ட் பண்றது சேஃப் இல்ல. 

யாராவது இந்த காலை டிரேஸ் பண்ணிட்டா எல்லாருக்குமே பிராப்ளம்.

எப்படியும் நாளைக்கு கிளம்பி வீட்டுக்கு போயிடுவோம். 

நேர்ல போய் அவ கிட்ட பேசிக்கலாம். அவ எவ்வளவு கோபப்பட்டாலும் ஏதாவது சொல்லி சமாதானப்படுத்தி தானே ஆகணும்..

இது எல்லா ஆம்பளைங்களோட யுனிவர்சல் ப்ராப்ளம். எனக்கு மட்டும் இருக்காதா என்ன?” என்று நினைத்த அர்ஜுன் தேன் மொழியிடம் பேசும் எண்ணத்தை கைவிட்டான்.. 

ஆனால் அவனது என்ன ஓட்டம் முழுவதும் தேன்மொழி தான் நிறைந்து இருந்தாள். 

அவளை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட அர்ஜுன், “இந்த குட்டச்சி நம்மள ரொம்ப சோதிக்கிறா..

சியா பின்னாடியும் இப்படித் தான் ஒரு காலத்துல நான் வெக்கமே இல்லாம சுத்திட்டு இருந்தேன். 

பட் இதுக்கு முன்னாடி நான் சியாவை பற்றி இந்த அளவுக்கு யோசிட்டே இருந்தனான்னு எனக்கு தெரியல. 

அவளை விட என் மனசு முழுக்க இப்போ தேன்மொழி தான் நிரஞ்சு இருக்கா.

‌ இப்படி நான் யோசிக்கிறது தப்பா கூட இருக்கலாம்.

பழகினது கொஞ்ச நாளா இருந்தாலும் தேன்மொழி என் லைஃப்ல நிறைய மேஜிக் பண்ணிட்டு இருக்கா. 

என்னையே டோட்டலா அவ கொஞ்சம் கொஞ்சமா மாத்துர மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது. இது எல்லாம் புதுசா இருக்கு.” என்று நினைத்தவன், 

அவன் அவளை பிரிந்து வரும்போது அவர்களுக்கு அப்போது தான் ஃபர்ஸ்ட் நைட் நடந்து முடிந்திருந்தது.  

அதனால் அன்று இரவு நடந்த ஒரு சில சுவாரஸ்யமான விஷயங்கள் அவனுக்கு ஞாபகம் வர, 

அதுவரை நடந்த பிரச்சனையில் இறுக்கமாக இருந்த அவனது முகம் இப்போது பிரகாசமானது. 

தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு இருந்த தேன்மொழி இப்போது அவளது சொந்த விருப்பத்துடன் தன்னை திருமணம் செய்து கொண்டு தன்னுடன் சேர்ந்து வாழ தொடங்கி இருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் எத்தனை ஆச்சரியங்களை கொடுக்கிறது என்று நினைத்தான்.

அங்கே மகேஷ் சொன்னதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தேன்மொழி, 

“மகேஷ் சொன்னது கரெக்ட் தானே! இவர் கிட்ட என்ன இல்ல? 

இதுக்கு மேல இவர் எந்த வேலையும் செய்யாம இருந்தா கூட, 

இன்னும் பல தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு இவர் கிட்ட சொத்து இருக்கு. 

அதையும் கூட இன்னும் அவங்க அப்பாவே பார்த்துக்கிறாரு. 

ஹெல்ப் பண்றதுக்கு ஆகாஷ் இருக்கிறாரு. அப்படி இருக்கும்போது தேவையில்லாம எதுக்கு ரிஸ்க் எடுத்து இவர் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கணும்?

இந்த BSSனால வந்த போட்டி பொறாமை பிரச்சினையில தானே சியா இறந்து போனாங்க..

இவரும் கோமாவுக்கு போயிட்டாரு. அப்ப கூட இவர் நார்மல் ஆனதுக்கப்புறம் உடனே அவருக்கு பிரச்சனை பண்ணவங்க எல்லாரையும் கொன்னுட்டு அந்த இடத்துக்கு மறுபடியும் லீடர் ஆயிட்டாரு. 

இப்ப மறுபடியும் ஏதோ ஒரு பிரச்சனைன்னு கிளம்பி போயிட்டாரு.‌ 

எல்லாத்தையும் மறைக்காம என் கிட்ட சொல்றேன்னு இவர் என்னமோ சொல்லிட்டாரு ஈசியா..‌

ஆனா அத பத்தி எல்லாம் யோசிச்சா இவர் ஒவ்வொரு தடவை வெளிய போயிட்டு வீட்டுக்கு வரும்போதும், 

நல்லபடியா எதுவும் ஆகாம வரணுமேனு நினைச்சு நான் டெய்லியும் அழுதுட்டே இருக்கணுமா? 

சத்தியமா என்னால முடியாது. அவர் வீட்டுக்கு திரும்பி வரட்டும் அவருக்கு இருக்கு.” என்று நினைத்து சோகமாகவே இருந்தாள். 

அவள் அம்மா விஜயா, அர்ஜுனின் அம்மா ஜானகி, அவன் தங்கை ஜனனி என அனைவரும் தேன்மொழி சோகமாக இருப்பதை பார்த்து என்ன ஏது என்று விசாரித்தார்கள்.‌ 

அவள் வெளிப்படையாக அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. 

ஆனால் அவர்களாகவே அர்ஜுன் கிளம்பி சென்று மூன்று நாட்களுக்கு மேல் ஆகிறது. 

ஆனால் இன்னும் அவனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.‌ அதனால் தான் தேன்மொழி இப்படி சோகமாக இருக்கிறாள் என்று அவர்கள் அனைவரும் புரிந்து கொண்டார்கள். 

இத்தனை வருடங்களில் அவர்களுக்கு இதெல்லாம் பழகி இருந்தாலும் கூட, 

அர்ஜுனிற்க்கும் சியாவிற்கும் அப்படி நடந்த பிறகு ‌ அவர்களுக்கே இப்போது அவர்களே அர்ஜுனை நினைத்து கொஞ்சம் கவலையாகத் தான் இருக்க, தேன்மொழிக்கு என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று அவர்களுக்கும் தெரியவில்லை. 

அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு தான் வீடு திரும்பினான் அர்ஜுன். 

அதுவும் அவன் அங்கே வரும்போது நள்ளிரவு நேரமாகி இருந்தது. அதனால் வீட்டில் உள்ள அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். 

அதனால் யாரையும் தொந்தரவு செய்யாமல் வந்து தடம் தெரியாமல் அவர்கள் அனைவரும் அவர்களது ரூமிற்கு சென்று விட்டார்கள். 

தனது ரூமிற்கு சென்ற அர்ஜூன் ஒரு பெரிய தலையணையை கட்டிப்பிடித்தபடி உறங்கிக் கொண்டிருந்த தேன்மொழியை பார்த்துவிட்டு

“நம்ம கூட இருக்கிறதா நினைச்சு இவ இந்த பில்லோவை கட்டி புடிச்சிட்டு தூங்குறா போல!” என்று நினைத்து டோரை லாக் செய்துவிட்டு அவளை தொந்தரவு செய்யாமல் அவள் அருகில் அமைதியாக படுத்துக் கொண்டான். 

கும்பகர்ணனுடன் போட்டி போடும் அளவிற்கு வெகு நேரம் தூங்கும் தேன்மொழி வழக்கம்போல காலை 10 மணி அளவில் தன் கண்களை திறந்தாள்.

அப்போது அவள் அருகில் அர்ஜுன் திரும்பி படுத்து இருப்பதை பார்த்தவள், 

“எப்ப வந்தாரு இவரு? சத்தமே இல்லாம வந்து பக்கத்துல படுத்துட்டாரு போல!” என்று நினைத்து எழுந்து சென்று அவன் முகத்தைப் பார்த்தாள். 

எப்போதும் பொலிவுடன் இருக்கும் அவனுடைய வசீகரமான முகம் அப்போது சோர்வாக காணப்பட்டது. 

இத்தனை நாட்களாக அவனை நினைத்து அவனுக்கு என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்த தேன்மொழி அப்படியே தன் கண்களால் அவன் உடலை ஸ்கேன் செய்தாள். 

ஏற்கனவே அவனுக்கு கை உடைந்த போது போடப்பட்டிருந்த கட்டுக்கு பதிலாக இப்போது அதைவிட ஒரு பெரிய கட்டு அவன் கையில் இருந்தது. 

காலில் கூட வலி இருப்பது போல ஏதோ பெல்ட் அணிந்திருந்தான். 

அவன் ஷாட்ஸ் அணிந்திருந்ததால் அவனுடைய கால்களில் ஆங்காங்கே இருந்த தீக்காயங்களை அவளால் தெளிவாக பார்க்க முடிந்தது. 

அதனால் ஒரே நொடியில் அவளுடைய பயம் கூடிவிட, 

கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்த தேன்மொழி   “என்ன நெனச்சிட்டு இருக்கா இவன்? 

நமக்கு மேரேஜ் ஆயிடுச்சு. நம்மள நம்பி வீட்ல ஒருத்தி இருக்கா. நமக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கு.. 

நம்மளுக்காக இங்க இவ்வளவு பெரிய ஃபேமிலி இருக்கேன்னு இவனுக்கு கொஞ்சம் கூட தோனவே தோணாதா? 

இப்படி போய் அடிப்பட்டு வந்து படுத்து கிடக்கணும்னு இவனுக்கு என்ன தலையெழுத்தா?” என்று நினைக்கும் போது அவன் மீது வந்த கோபத்தில் இப்போதே அவனை எழுப்பி இதைப் பற்றி கேட்டு அவனுடன் சண்டை போட வேண்டும் என்று இருந்தது. 

பின் அடுத்த நொடி அவளே “வேண்டாம் வேண்டாம் எப்படியும் மிட் நைட்ல தான் வந்து படுத்திருப்பான்.  

இப்போ எழுப்பி நம்ம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். 

தூங்கி எந்திரிக்கட்டும் இவனுக்கு இருக்கு. 

இந்த பிரச்சனைக்கு நான் இன்னைக்கு முடிவு கட்டாமல் விட மாட்டேன்.”‌ என்று நினைத்து எழுந்து ரெப்ரெஷ் ஆவதற்காக சென்று விட்டாள். 

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured