Home தாபம் தீர்க்க வந்த தாரமேதாபம் தீர்க்க வந்த தாரமே CH 17

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 17

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 17: என்னை சாய்த்தாளே (Part 2) 😍

சித்தார்த்தின் பள்ளியில்….

சித்தார்த்தை அவனுடைய வகுப்பு அறையில் விட்டுவிட்டு ஆபிஸ் ரூமுக்கு சென்று கொண்டிருந்தான் விஷ்ணு. அப்போது ரெஸ்ட் ரூமின் அருகே தண்ணீர் இருந்ததை கவனிக்காத விஷ்ணு, கீழே விழ போனான்.

ஆஃபீஸ் ரூமில் கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே வந்த ஷாலினி, அவனை கவனித்து சரியான நேரத்தில் தாங்கிப் பிடித்தாள். ஷாலினியின் உதவியால் விஷ்ணு கீழே விழாமல் தப்பித்தான். முதல் சந்திப்பிலேயே ஷாலினியால் ஈர்க்கப்பட்டான் விஷ்ணு.
நேராக எழுந்து நின்ற விஷ்ணு, ஷாலினியை மேலும் கீழும் பார்த்தான். விஷ்ணுவை விசித்திரமாக பார்த்த ஷாலினி, இன்னும் அவன் ஃபார்மாலிட்டிக்காக கூட ஒரு தேங்க்ஸ் சொல்லவில்லையே என்று நினைத்தாள்.

விஷ்ணு: “யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்.. 😍”

ஷாலினி: அவனைப் பார்த்து முறைத்த 🤨 ஷாலினி, சில நொடி மௌனத்திற்குப் பின் “ஐ அம் ஷாலினி” என்றாள்.
விஷ்ணு: “நைஸ் டு மீட் யூ மிஸ். ஷாலினி. ஐ அம் விஷ்ணு” என்றான்.

ஷாலினி: “ம்ம்ம்” என்ற ஷாலினி எதுவும் பேசவில்லை.

விஷ்ணு: “ஏன் நீங்க அதிகமா பேச மாட்டீங்களா..?”

ஷாலினி: “தெரியாதவங்க கிட்ட தேவை இல்லாம பேச மாட்டேன்.”

விஷ்ணு: “அப்புறம் எப்படி பேசி பழகி தெரிஞ்சுக்குவீங்க..?”

ஷாலினியிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது. 🤨

விஷ்ணு: “வொய் யூ ஆர் சோ முறைச்சு ஃப்பைஇங்…? பாக்க அழகா இருக்கீங்க. சிரிச்சீங்கன்னா இன்னும் அழகா இருப்பீங்க. 😁 😁”

ஷாலினி: விஷ்ணுவை அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஆசிரியர் என்று நினைத்தவள், “நீங்க எந்த சப்ஜெக்ட் ஹேண்டில் பண்றீங்க……?” என்று கேட்டாள்.

விஷ்ணு: “நான் எந்த சப்ஜெக்ட் ஹேண்டில் பண்றேன்” என்று அவள் கேட்ட கேள்வியை அவளிடமே திரும்பக் கேட்டான்.

ஷாலினி: “அப்ப நீங்க டீச்சர் இல்லையா…?” என்று குழப்பமாக கேட்டாள். 🙄

விஷ்ணு: எங்கே அவன் டீச்சர் இல்லை, அவன் தான் இந்த ஸ்கூல் உடைய ஓனர் என்று சொன்னால்… அவள் பயந்து எங்கே தன்னை தவிர்த்து விடுவாளோ என்று நினைத்தவன், “ஆமா…!!! நான் டீச்சர்… நான் டீச்சர் தான்” என்றான் அவசரமான குரலில்.

ஷாலினி: “ஓகே… ஓகே.. புதுசா ஜாயின் பண்ணி இருக்கீங்களா…?”

விஷ்ணு: “ஆமா…!!! இன்னைக்கு தான் ஜாயின் பண்ணி இருக்கேன். 😁 😁”

ஷாலினி: “சரி…!!! லேட் ஆகுது நான் கிளாஸுக்கு போறேன். நீங்களும் கிளாஸுக்கு போங்க. ஃபர்ஸ்ட் டேவே லேட்டா போய் திட்டு வாங்காதீங்க.”
என்று சொன்னவள், அவனுடைய பதிலுக்கு கூட காத்திருக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

செல்பவளின் முதுகையே பார்த்து சிரித்துக் கொண்டே விஷ்ணு நேராக ஆபிஸ் ரூமுக்கு சென்று விட்டான்.
ஆபீஸ் ரூமிற்குள் வந்த விஷ்ணு, புதிதாக கட்டப்பட்ட வீட்டை சுத்தி பார்ப்பவன் போல அனைத்து பக்கங்களிலும் சென்று சுற்றிப் பார்த்தான். அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவனை மரியாதையுடன் நடத்தினர். அனைத்தையும் ஒரு பார்வை பார்த்த விஷ்ணு, அவனுக்கு என ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குள் சென்று விட்டான்.

சிறிது நேரம் அங்கு இருந்த கம்ப்யூட்டரை நோண்டிப் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு, அங்கு இருந்த லேண்ட்லைன் ஃபோனின் மூலம் ரித்திகாவை தொடர்பு கொண்டு அவளை தன்னுடைய அறைக்கு வரச் சொன்னான்.

இரண்டு நிமிடங்களுக்குள் விஷ்ணுவின் அறையை வந்தடைந்தாள் ரித்திகா.

ரித்திகா: “மே ஐ கம் இன் சார்..?”

விஷ்ணு: “எஸ் கம் இன்.”

ரித்திகா: “குட் மார்னிங் சார்.”

விஷ்ணு: “குட் மார்னிங்….” என்றவன், ஒரு நொடி நிறுத்திவிட்டு பின்…. “யூ மிஸ். ரித்திகா… அட்மின் ஆபீசர் ரைட்….?” என்றான்.

ரித்திகா: “எஸ் சார். யூ ஆர் ரைட்.”

விஷ்ணு: “ஓகே… ரித்திகா…. லிஸ்ட்டேன்… நீங்க இப்ப ஒரு மீட்டிங் ரெடி பண்ணுங்க. அந்த மீட்டிங்-ல நான் இந்த ஸ்கூல் ஓட ஓனர் -ன்னு யார் யாருக்கெல்லாம் தெரியுமோ அவங்க எல்லாருமே இருக்கணும். புரிஞ்சுதா..?”

மனசா: “ஓகே சார். இன்னும் 10 மினிட்ஸ்-ல நான் மீட்டிங் அரேஞ்ஜ் பண்ணிட்டு உங்க கிட்ட சொல்றேன்.”

விஷ்ணு: “குட். தேங்க் யூ.”

ரித்திகா: “இட்ஸ் மை பிளஷர் சார்” என்றவள், சொன்ன வேலையை செய்து முடிக்க சென்று விட்டாள்.

மீட்டிங் ஹாலில்…

அந்த பள்ளியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் அங்கே குழுமி இருந்தனர். ரித்திகா விஷ்ணுவின் அறைக்கு சென்று அவனை அழைத்து வந்தாள். அனைவரின் முன் ராஜாவை போல் கம்பீரமாக வந்து அமர்ந்தான் விஷ்ணு. அதே கம்பீரமான குரலில் பேச தொடங்கினான்.

விஷ்ணு: “குட் மார்னிங்… ஆல் ஆஃப் யூ. ரொம்ப நாள் கழிச்சு நான் உங்க எல்லாரையும் மீட் பண்றேன். நம்ப இந்த ஸ்கூல்ல ஸ்டார்ட் பண்ணி ஆறு மாசம் முடிய போகுது. இப்ப இந்த ஸ்கூல் நல்லா தான் போயிட்டு இருக்கு. இனியும் நல்லா போகும்-ன்னு நான் நம்புறேன். மேனேஜ்மென்ட் சைடு-ல இருந்து எந்த மாதிரியான co-operation தேவைப்பட்டாலும் நீங்க எல்லாரும் அதை தர ரெடியா இருப்பீங்க-ன்னு நம்புறேன்.” என்று தனது இனிமையான குரலில் நிதானமாக சொன்னான்.

“எஸ் சார்” என்று அங்கு இருந்த அனைவரும் கோரசாக சொன்னார்கள்.

மீண்டும் விஷ்ணு பேச தொடங்கினான். “நான் இந்த ஸ்கூலை மேனேஜ் பண்றேன்னு சும்மா வந்து ஒரு ரூம்ல உட்காந்து இருந்துட்டு போறதுல எனக்கு விருப்பம் இல்ல. நான் உங்களோட ஒருத்தனா இருந்து வேலை பாக்கணும் நினைக்கிறேன். நான் கிளியரா வே சொல்றேன். நான் இந்த ஸ்கூல்ல ஒரு டீச்சர் ஆ ஜாயின் பண்ணலாம்ன்னு இருக்கேன். நான் எம்.பி.ஏ. படிக்கிறதுனால தனியா என்னால மெயின் சப்ஜெக்ட் எதையும் ஹேண்டில் பண்ண முடியாது. பட் லாங்குவேஜ், எலக்டிவ் பேபர்ஸ், ஸ்கில்ஸ் டேவலப்மன்ட் ட்ரைநிங் இந்த மாதிரி பண்ண முடியும். சோ நான் இங்க ஒரு ஸ்பெஷல் டீச்சர் ஆ வர போறேன். நான் இப்படி உங்கள்ள ஒருத்தனா இருக்குறதுனால என்னால ஸ்டூடண்ட்ஸ் அண்ட் ஸ்டாப் சைடு இருக்கிற பிளஸ் அண்ட் மைனஸ் அ கரெக்ட்டா அனலைஸ் பண்ண முடியும்.” என்றவன் மானசாவை பார்த்து, “மிஸ். மானசா ஆபீஷியல் ஆ நீங்க எனக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட் லெட்டர் ரெடி பண்ணுங்க. நான் இன்னைக்கே இங்க டீச்சர் ஆ ஜாயின் பண்றேன்.” என்று அவளுக்கு கட்டளையிட்டான்.

மானசா: “ஓகே சார்.”

விஷ்ணு: அனைவரையும் பார்த்தவன், “இன்னொரு முக்கியமான விஷயம். நான் யாரு, என்னோட ரியல் ஐடென்டிட்டி என்னன்னு இங்க இருக்கிற உங்களை தவிர வேறு யாருக்கும் தெரிய கூடாது. இந்த ரூம்க்கு வெளிய போனதுமே நீங்க என்ன பாத்தா கூட ஒரு ஸ்டாப்பா மட்டும் தான் என்ன ட்ரீட் பண்ணனும். இன்னும் கரெக்டா சொல்லனும்ன்னா நான் யாருன்னு இங்க இருந்து வெளியில போறப்ப மறந்துட்டு போங்க. நான் சொல்றது எல்லாமே உங்களுக்கு புரிந்திருக்கும் -ன்னு நம்புகிறேன்” என்றான்.

அங்கு இருந்த அனைவரும் கோரசாக மீண்டும் “எஸ் சார்” என்றனர்.

விஷ்ணு: “ஓகே… தட்ஸ் ஆல். நீங்க எல்லாரும் கிளம்பலாம். நான் சொன்னத மட்டும் எப்பவும் ஞாபகம் வச்சுக்கோங்க” என்றவன், அந்த மீட்டிங் ஹாலில் இருந்து வெளியே சென்று விட்டான்.
பின் அனைவரும் அங்கு இருந்து சென்று விட்டனர். விஷ்ணு உடைய அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ஐயும், அவனுடைய டைம் டேபிள் ஐயும் தயார் செய்து அரை மணி நேரத்தில் அவனுடைய அறைக்கு கொண்டு வந்தாள் மானசா.

அதை பார்த்து திருப்தியாக புன்னகைத்த விஷ்ணு, அடுத்து அவன் செல்ல வேண்டிய வகுப்பு எது என்று பார்த்து அங்கு செல்வதற்கு தயார் ஆனவன், இனி அவன் ஆசிரியர்களுக்கான ஸ்டாஃப் ரூமில் இருந்து கொள்ளப் போவதாக ரித்திகாவிடம் சொல்லிவிட்டு அவனுடைய அறையில் இருந்து கிளம்பினான்.

விஷ்ணு வெளியே வருவதற்கும் இரண்டாவது பிரியேட் ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. ரித்திகா அவனுக்கு கொடுத்த டைம் டேபிள் இன் படி அவன் அட்டென்ட் செய்ய வேண்டிய கிளாஸுக்கு சென்று விட்டான். முடிந்தவரை அவனுக்கு ஹையர் செகண்டரி வகுப்புகளே போட்டு இருந்தாள் ரித்திகா.
அதனால் அவனுக்கு பாடம் எடுப்பதற்கு சுலபமாகவே இருந்தது. விஷ்ணு அனைவரிடத்திலும் எளிதாக பழகும் குணம் கொண்டவன் என்பதால் அங்கு இருந்த மாணவர்களுக்கு ஒரே பிரியட் இல் விஷ்ணு அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியராக மாறி விட்டான்.

வெற்றிகரமாக தன்னுடைய முதல் பிரியட் ஐ முடித்து விட்டு வெளியே வந்தான் விஷ்ணு. அப்போது இன்டர்வெல் பெல் அடித்தது.
அப்போது ஆசிரியர்கள், மாணவர்கள், என நிறைய பேர் அங்கு போவதும், வருவதுமாக இருந்தனர். விஷ்ணுவை கிராஸ் பண்ணி சென்ற அனைவரும் அவனை ஒரு நொடி பார்த்துவிட்டு சென்றனர்.

அவனுடைய அழகும் வசீகரத் தோற்றமும் அனைவரையும் அவன் பக்கம் ஈர்த்தது.
அங்கு இருந்த இளம் வயது பெண் ஆசிரியர்கள் அனைவரும் அவனைப் பார்த்து விட்டு “யார் இந்த புது ஆசிரியர்…? அழகாக இருக்கிறானே… 😍” என்று அவர்களுக்குள் பேசி சிரித்தபடி சென்றனர்.

அவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு ஷாலினியுடைய ஞாபகம் தான் வந்தது.
அங்கு இருந்த அனைவரும் அவனை பார்த்து ரசித்தாலும், அவன் பார்த்து ரசித்த; மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஒரே பெண் ஷாலினி தான். அவனுடைய கண்கள் அவளை மட்டும் தான் தேடியது.

ஆனால் எங்கு தேடியும் அவளை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. முதலில் ஷாலினியை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த விஷ்ணு அவனுக்கென ஒதுக்கப்பட்டு இருந்த ஆபீஸ் ரூமிற்கு சென்றான்.

தன்னுடைய சீட்டில் வசதியாக சாய்ந்து அமர்ந்த விஷ்ணு செக்யூரிட்டி ஆபீஸுற்ருகு தனது ஆஃபிஸ் ஃபோனில் இருந்து கால் செய்தான். அந்த செக்யூரிட்டி ஆபீஸரிடம் ஷாலினி பற்றிய அணைத்து தகவல்களும் வேண்டும் கேட்டவன், இதை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று ஆணையிட்டான். பின் அவனுடைய ரூமில் இருந்து சி.சி.டிவி. கேமரா ஃபுட்டேஜை செக் செய்த விஷ்ணு; அதில் அவனும், ஷாலினியும் சந்தித்த தருணத்தில் எடுக்கப்பட்ட கேமரா புட்டேஜ் ஐ கண்டு பிடித்து அதை தன்னுடைய ஃபோனில் சேவ் செய்து வைத்து கொண்டவன், மீண்டும் மீண்டும் அதை பிளே செய்து பார்த்து மகிழ்ந்தான். அவனுக்கு என்னவோ தன் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் அதுவாக தான் இருக்கும் என்று தோன்றியது.

-நேசம் தொடரும்….

(என்னை மறக்காமல் ‌பிரத்திலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured