அத்தியாயம் 215: ஃபர்ஸ்ட் நைட் (பார்ட் 2)
ரித்திகா : “ஐ அம் சாரி ஆராதனா. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு எனக்கு தெரியல. நடந்த எதிலும் உங்க தப்பு இல்ல. ஆனா நீங்க இதுல நிறைய அஃபெக்ட் ஆகி இருக்கீங்க. இப்போ நீங்க நினைச்சாலும் சரி இல்ல வருண் ஏதாவது பண்ணனும்னு நினைச்சாலும் சரி இந்த சிச்சுவேஷன்ல யாராலயும் எதுவும் பண்ண முடியாது. சோ வெயிட் பண்ணுங்க. எல்லாமே நல்லதா நடக்கும்னு நம்புவோம். அதை விட்டா வேற வழியில்லை.” என்று வருத்தமான குரலில் சொன்னாள். 😟
இதுவரை காதல் என்றால் என்னவென்றே அறிந்து இருக்காத ரித்திகாக்கு ஆராதனா தன்னுடைய காதலை பற்றி சொன்னதெல்லாம் புதிதாக இருந்தது. காதல் எத்தனை சுகமானதோ அத்தனை கடினமானது என்று ஆராதனாவின் கதையை வைத்து புரிந்து கொண்ட ரித்திகா , தன்னால் முடிந்தால் ஆராதனாவிற்கு உதவினால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஆராதனா: “நீங்க சொன்ன மாதிரி தான் வருண் அண்ணாவும் என்கிட்ட சொன்னாரு. அவர் என்னையும் ஹரியையும் சேர்த்து வைப்பாருன்ற நம்பிக்கையில தான் நான் இங்க வந்தேன். இன்னைக்கு நாராயணன் குரூப்ஸ் இப்படி இருக்குன்னா அதுக்கு ஒரே ஒருத்தர் தான் காரணம், மிஸ்டர் வருண் நாராயணன். எனக்கு தெரிஞ்சு அவரால முடியாததுன்னு எதுவுமே இருந்ததில்லை. ஆனா இப்ப அவராலயே இந்த விஷயத்துல எதுவும் பண்ண முடியலைங்கும் போது எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.
ஒரு பக்கம் இவங்க யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம எங்கேயாவது போயிடலாமான்னு தோணும். பட் அட் தி சேம் டைம் என் ஹரி இல்லாம என்னால வாழவே முடியாதுனு தோணுது. அதான் என்ன பண்றதுன்னு தெரியாம யோசிச்சுக்கிட்டே இருக்கேன்.” என்றவள், பெருமூச்சு ஒன்றை விட்டாள். பின் சிறிது நேரம் ஆராதனாவுடன் பேசி கொண்டு இருந்த ரித்திகா, அவளை சாப்பிடுவதற்காக உள்ளே அழைத்து சென்றாள். ஆராதனா ரித்திகாவுடன் வந்ததால் அவளை செண்பகம் எதுவும் சொல்லாமல் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட அனுமதித்தாள். அதனால் வருண் தன்னிடம் மேஜிக் நடந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்ன மேஜிக் ஐ வருண் இடத்தில் இருந்து ரித்திகா நடத்திக் காட்டி விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்ட ஆராதனா, மகிழ்ச்சியுடன் சாப்பிட்டாள். 😁 😁 😁
இதற்கிடையில் தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்த வருண் நேராக அவருடைய அறைக்குள் சென்றான். அவனுடைய அறையின் ஒவ்வொரு மூளை முடுக்கும் ஃபப்ர்ஸ்ட் நைட்டிற்காக தயாராகி அவனுடைய அறை முழுவதும் பல வண்ண லைட்டுகளாலும், மலர் டெக்கரேஷன்களாலும்லும், நிறைந்து இருந்தன. இதில் அவனுடைய பெட்டின் நடுவே ரோஜா பூவின் இதழ்களால் ஹாட் வரையப்பட்டு அதில் வருண், ரித்திகா, என்று எழுதி இருந்தது. அவற்றையெல்லாம் பார்த்து கடுப்பான வருண் இது பற்றி செண்பகத்திடம் கேட்பதற்காக கீழே டைனிங் ஹாலுக்கு வந்தான்.
அவன் வேகவேகமாக தன்னை நோக்கி வருவதை பார்த்த உடனேயே அவன் என்ன கேட்கப் போகிறான் என்று புரிந்து கொண்ட செண்பகம், “என்ன வருண் உன்னோட ரூம்ல இருந்த டெக்கரேஷன் எல்லாத்தையும் பாத்துட்டு ரொம்ப வேகமா வர போல… உங்களுக்குள்ள நடக்க வேண்டியது எல்லாம் கரெக்டா நடந்துச்சானு தெரியல. அதான் நான் இதை ரெடி பண்ணி இருக்கேன் உனக்கு கொஞ்சமாவது என் மேல மரியாதை இருந்தா, இத பத்தி என்கிட்ட எந்த கேள்வியும் கேட்காத. என்னோட மனசு கோணாத மாதிரி நடந்துக்கோ வருண்.” என்ன செண்பகம் வருணை பதில் பேசவிடாமல் பேசிவிட்டு அங்கு இருந்து எழுந்து தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.
ஆனால் பாவம் மற்றவர்கள் தான் இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்துடன் வருணின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர். அதனால் கடுப்பான வருண் மீண்டும் தன்னுடைய அறைக்கே சென்று விட்டான்.
வருணின் அறையில்..
அந்தக் கட்டிலில் போடப்பட்டு இருந்த ஹார்ட் டிசைனை பார்க்க பார்க்க வருணிற்கு பற்றி கொண்டு வந்தது. அதனால் அதன் மீது விக்கப்பட்டு இருந்த மெத்தை விரிப்பை தன்னுடைய இரு கைகளாலும் வெறித்தனமாக பிடித்து இழுத்து அதில் இருந்தவற்றை கீழே கொட்டி விட்டான் வருண். பின் அங்கே ஏற்றி வைக்கப்பட்டு இருந்த கேண்டில்களை கடுப்பில் ஊதி ஊதி அணைத்துக் கொண்டு இருந்தான்.
அப்போது தான் சாப்பிட்டு முடித்துவிட்டு தங்களுடைய அறைக்கு திரும்பிய ரித்திகா, வருண் மெழுகுவர்த்தியை அனைத்து விளையாடிக் கொண்டு இருப்பதையும் அங்கு இருந்தால் டெக்கரேஷன்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். 😱 பின் வருணின் அருகே தயங்கி தயங்கி சென்றவள், “என்னங்க இதெல்லாம்…??” என்று அமைதியான குரலில் கேட்டாள்.
வருண்: “நீ என்ன குழந்தையா.. இதெல்லாம் என்னன்னு உனக்கு தெரியாதா..?? உண்மைய சொல்லு.. இதுல உனக்கும் பங்கு இருக்கு தானே… அம்மா உன்னை கேட்டு தானே இதெல்லாம் பண்றாங்க…??” என்று எரிச்சலான குரலில் கேட்டான்.😒
ரித்திகா: ஐயோ சத்தியமா இதை பத்தி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாதுங்க. நான் கீழ ரொம்ப நேரமா சித்தார்த் கூடையும் ஆராதனா கூடையும் தான் இருந்தேன். உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லனா நீங்க வேணா அவங்க கிட்டயே கேட்டு பாருங்க.” என்று அப்பாவியாக சொன்னாள்.
வருண்: “போதும். சும்மா நடிக்காத டி. இதே வீட்ல இருக்க இங்கே உனக்கு தெரியாம தான் ஏதாவது நடக்க போகுதா..?? ஒழுங்கா இந்த டெக்கரேஷன் எல்லாத்தையும் ரிமூவ் பண்றதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணு. இதெல்லாம் பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப இருட்டாகுது. எனக்கு நீ ஹெல்ப் பண்ணா தான் இதுல உன்னோட வேலை எதுவுமே இல்லைன்னு நான் உன்ன நம்புவேன்.” என்று சொன்னபடியே அவர்களுடைய கட்டிலை சுற்றி மாட்ட பட்டு இருந்த மல்லிகை பூ சரங்களை ஒவ்வொன்றாக பிரித்து எரிந்து கொண்டு இருந்தான்.
அதனால் ரித்திகாவும் அவனுக்கு உதவ நினைத்து அதில் இருந்த மல்லிகை பூ சரங்களை அகற்ற முயன்றாள். ஆனால் அவளுடைய உயரத்தை விட அது மிக உயரத்தில் கட்டப்பட்டு இருந்தது. அதனால் மேலே பார்த்தபடி எக்கி எக்கி குதித்துக் கொண்டு இருந்த ரித்திகா தன்னுடைய ஒரு கையை மேலே நீட்டி அதை இழுத்து அகற்ற முயன்று கொண்டு இருந்ததில் அவள் தான் வருணிற்கு மிக அருகே வந்துவிட்டதை உணராத ரித்திகா , அப்படி அவள் குதித்துக் கொண்டு இருக்கும்போது தெரியாமல் அவள் வருணின் மேலே மோதி அவன் மீது விழ அவன் தன்னுடைய கட்டிலின் மீது விழ, ரித்திகா பாதி இழுத்து வைத்து இருந்த மல்லிகை சரங்கள் அவர்கள் மீது மாலையாக விழுந்து அவர்களை சுற்றிக் கொண்டது.
வருணின் மீது விழுந்து கிடந்த ரித்திகா பயந்த கண்களுடன் அவனை திக் திக் இதயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். ❤️ வருனும் அவளையே தான் குறுகுறுவென்று பார்த்து கொண்டு இருந்தான். 😒 அவனுடைய பார்வையின் கதிர்வீச்சை தாங்க முடியாத ரித்திகா அவனிடம் இருந்து பிரிவதற்காக வேகமாக எழ முயன்றாள். ஆனால் பாவம் அவள் வருனிடம இருந்து தப்பிக்கும் ஆர்வத்தில் தங்களை பாம்பு போல் வளைத்து சுற்றி பிடித்து வைத்து இருக்கும் மல்லிகை பூ சரங்களை பற்றி அவள் மறந்து விட்டாள்.
அதனால் மீண்டும் ரித்திகா வருணின் மீது விழ, அவன் என்னவோ அவளை பார்த்து முறைத்துக் கொண்டு தான் இருந்தான். 😒 🤨 ஆனால் அவளுக்கு அந்த பார்வை அவளுடைய வயிற்றுக்குள் பல நூறு பட்டாம்பூச்சிகளை பரக்கச் செய்தது. 💗 அதனால் மெய்மறந்து வருணை பார்த்துக்கொண்டு இருந்த ரித்திகா அவனுடைய கண்களுக்குள் தன்னை தொலைத்து விட்டாள்.😍 💗 👩❤️👨
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்…
ரித்திகா ரொமான்டிக்காக வருணை பார்த்து கொண்டு இருக்க எரிச்சலுடன் அவளை பார்த்த வருண்; “என்ன இப்படியே இருக்கிறது ரொம்ப நல்லா இருக்கா …??” என்று கடுப்பான குரலில் கேட்டான். 😒 ஏதோ ஒரு சிந்தனையில் இருந்த ரித்திகா அவன் தன்னிடம் என்ன கேட்கிறான் என்று சரியாக தன் காதில் வாங்காமல், “ஆமா நல்லா இருக்கு.” என்று தன்னை அறியாமல் சொல்லிவிட்டாள். அவள் சொன்னதைக் கேட்டு இன்னும் கடுப்பான வருண், “இருக்கும் டி.. இருக்கும். முதல்ல என் மேல இருந்து எந்திரிக்கிறியா இல்லையா…?? பார்க்க தான் நீ தமாத்துண்டு இருக்க. ஆனா எவ்ளோ வெயிட் தெரியுமா நீ…??” என்றவன், அவளை தன் மீது இருந்து கீழே தள்ளள முயற்சித்தான்.
அவர்கள் இருவரும் அசைந்ததில் அந்த மல்லிகை பூ சரங்கள் நன்றாக அவர்கள் மீது இன்னும் சுற்றிக் கொண்டது. அதனால் கடுப்பான வருண் பெருமூச்சு ஒன்றை விட்டவன், “சப்பா முடியல.” என்றான் சலிப்பாக. 😒 “நீங்க இப்படி கோபப்பட்டு பிச்சு எடுத்தீங்கனா வராது. பொறுமையா எடுக்க்கலாம்.” என்ற ரித்திகா , பொறுமையாக அதை தங்களின் மீது இருந்து அகற்ற முயன்றாள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)