Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 210

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 210

by Thenaruvi Tamil Novels
57 views

அத்தியாயம் 210: ரித்திகாவின் பதிலடி (பார்ட் 1)

துர்க்கை அம்மன் கோவிலில்…

வெகு நாட்களுக்குப் பின் இப்போது தான் அவன் தன்னுடைய மகனை தன்னுடைய கைகளால் தூக்குகிறான். அதனால் அந்த மகிழ்ச்சி அவனுக்குள் இருந்தாலும், தன்னுடைய மகனை தான் தூக்கி கொஞ்சுவதற்கு கூட, ரித்திகாவின் ரெக்கமண்டேஷன் தனக்கு தேவைப்படுகிறது என்று நினைத்த வருண்; ரித்திகா வின்  மீது கோபப்பட்டான். 😒 😡

ரித்திகா உட்பட அனைவரும் அந்த தரை மிகவும் சூடாக இருந்ததால் வேக வேகமாக நடந்து கோவிலின் உள்ளே சென்று விட்டனர். ஆனால் வருண் மட்டும் தன்னுடைய மகனுடன் தான் சேர்ந்து செலவிடுவதற்கான கிடைத்த இந்த அரிய வாய்ப்பை வேகமாக சென்று வீணாக்கி விட கூடாது என்று நினைத்தவன், அவனுடைய பாதங்களை பதம் பார்த்துக்கொண்டு இருக்கும் வெப்பத்தை கூட கண்டுகொள்ளாமல் சித்தார்த்தை பாசமாக தூக்கி கொண்டு மெதுவாக நடந்தான். 

வருண் மெதுவாக நடந்து வருவதை கவனித்த அனைவரும் இவன் ஏன் இப்படி வருகிறான்..?? என்று நினைத்து குழம்பினார்கள். ஆனால் ரித்திகாவிக்கும்  செண்பகத்திற்கும்  வருணின் மனதில் இருக்கும் சித்தார்த்திற்கான தந்தை பாசம் தெளிவாக புரிந்தது. இருப்பினும் ரித்திகா வருணை ஆச்சரியம் நிறைந்த கண்களுடன்  பார்த்து கொண்டிருந்தால் . அவள் பார்த்த வரைக்கும் வருண், நாராயணன் குடும்பத்தினர் அனைவரின் மீதும் உள்ள பாசத்தை அவன் பெரிதாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள்ளே அதிக பாசத்துடன் தான் இருக்கிறான். அவளிடமும் சில நேரங்களில் நல்லபடியாக சிரித்து பேசுகிறான்.

ஆனால் சில சமயங்களில் மட்டும் திடீரென்று அவன் ஏன் தன்னிடம் மட்டும் கோபப்பட்டு வெறி பிடித்தவனை போல் நடந்து கொள்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. யோசிக்காமல் கோபப்படுவது, புரிந்து கொள்ளாமல் பேசுவது, கோபத்தில் வருண் அவளை அடித்தது, என அனைத்தையும் பற்றி யோசித்துப் பார்த்த ரித்திகாவிற்கு இப்போது வருண் நல்லவனா இல்லை கெட்டவனா..?? என்ற கேள்வி தான் ரித்திகாவின் மனதிற்குள் ஓடிக் கொண்டு இருந்தது. 

இதற்கிடையில் வருண் சித்தார்த்தை தூக்கிக்கொண்டு அவர்களின் அருகே வந்து சேர்ந்தான். ரித்திகாவை பார்த்தவுடன் தன்னை கீழே இறக்கிவிடும் படி சொன்ன சித்தார்த் ஓடி சென்று மீண்டும் அவளுடைய கைகளை பற்றிக் கொண்டான். அந்த காட்சியைக் கண்டு பொறாமையில் பொங்கிய வருண், “நான் இவனுக்காக என்ன பண்ணாலும் இவன் அவ மேல தான் பாசமா இருப்பான் போல. என்னைக்கு தான் இவனுக்கு நான் இவன் மேல வச்சிருக்கிற பாசம் புரியுமோ தெரியல.” என்று நினைத்து கவலைப்பட்ட வருண், சோகமான முகத்துடன் ரித்திகா மற்றும் சித்தார்த்தை பின் தொடர்ந்து வெளி பிரகாரத்தை சுற்றி சாமி கும்பிட்ட விட்டு மூலஸ்தானத்தின் அருகே சென்றான். 

திருமணத்திற்கு பின் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் வருண் வெளியே வந்திருப்பதை அறிந்த பத்திரிக்கையாளர்களின் குழு அந்த திருக்கோயிலை நோக்கி படையெடுக்க தொடங்கினர். திருமணத்தின் போது ரித்திகா மயக்கத்தில் இருந்ததால் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி அனைவருடைய மனதிலும்் இருந்தது. அது மட்டும் இன்றி வருண் அவர்களிடம் சொன்ன கதை உண்மை தானா என்று அவர்கள் ரித்திகாவிடம் இடமே கேட்டு தெரிந்து கொள்ள விரும்பினர். அதனால் அந்த ஊரின் லோக்கல் சேனல் முதல் முக்கிய செய்தி தொலைக்காட்சிகள் வரை அனைவரும் தங்களுடைய கேமரா மற்றும் மைக்கைகளுடன் அந்த கோயிலின் உள்ளே வர தொடங்கினார். 

ஆனால் இது போன்ற பிரசிக்த்தி பெற்ற கோவிலுக்குள் யாருக்கும் தங்களுடைய கேமராக்களை எடுத்து வர அனுமதி இல்லை என்பதால், அவர்கள் கோயில் நிர்வாகத்தால் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த செய்தியை அறிந்த லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் ஐ சேர்ந்த இன்ஸ்பெக்டர், தானாக தன்னுடைய டீம் உடன் முன்வந்து வருண் மற்றும் அவனுடைய குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுத்தார். இதற்கு முன் செண்பகத்துடன் பல முறை இந்த கோயிலுக்கு வருண் வந்திருக்கிறான் . ஆனால் அப்போது எல்லாம் அவன் வாசலிலேயே நின்று விடுவான் என்பதால் வருண் என்ற ஒருவன் இங்கே வந்ததற்கான அடையாளமே இருக்காது. 

கடந்த சில நாட்களாக வருணின்  திருமணம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பேசும் பொருளாகி விட்டதால், திருமணத்திற்கு பின் அவன் முதன்முதலில் இந்த கோயிலுக்கு வந்திருப்பதால் சில நிமிடங்களிலேயே அது தலைப்பு செய்தி ஆகிவிட்டது. நாராயணன் குடும்பத்தினரின் மரியாதையுடன் வரவேற்ற கருவறையில் இருந்தால் அர்ச்சகர், வருணிற்கு பூரணகும்ப மரியாதைாதை செய்துவிட்டு, சாமி கழுத்தில் இருந்து இரு மாலைகளைக் கொண்டு வந்து அதை வருணின் கையில் கொடுத்த அர்ச்சகர்; “சாமி முன்னாடி புதுசா கல்யாணம் ஆன தம்பதிகள் நீங்க ரெண்டு பேரும் இந்த மாலைகளை மாத்திக்கோங்க. எந்த நோய் நொடியும் வராம சீரும் சிறப்புமா பதினாறு செல்வங்களையும் பெற்று நீங்க இரண்டு பேரும் ரொம்ப காலத்துக்கு சந்தோஷமாமா வாழ்வீங்க.” என்று மனதார ஆசீர்வதித்தார். 

வழக்கம் போல் நம் வருணிக்கு  இதையெல்லாம் செய்ய துளியும் விருப்பமில்லை என்றாலும். இருந்தாலும் என்ன பண்ணித் தொலைகிறது என்று நினைத்துக் கொண்ட வருண், ஐயர்  சொன்னது போலவே செய்தான். பின் வருனும், ரித்திகாவும், இணைந்து அம்மனிடம்  விழுந்து வணங்கினார்கள் பின்பு செண்பகத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். பின் விநாயகருக்கும்  முருகனுக்கு ஆரத்தி காட்டிய அர்ச்சகர் வருண் மற்றும் அவனுடைய குடும்பத்தினர் அனைவரின் ராசி நட்சத்திரத்தை கேட்டு அவர்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, தீப ஆராதனை தட்டை முதலில் வருனிடம் நீட்டினார். அதைத் தொட்டுக்கொண்டு தன்னுடைய நெற்றியில் திருநீரை வைத்துக் கொண்டான் வருண். 

பின் ரித்திகாவிடம் அவர் அந்த தட்டை நீட்ட அதில் இருந்து குங்குமத்தை எடுத்து தன்னுடைய நெற்றியில் வைக்கப்போன ரித்திகாவை தடுத்த செண்பகம், ஓர கண்ணால் வருணை பார்த்தாள். அந்த பார்வையின் அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்ட வருண், “இப்ப என்ன அம்மா இவளுக்கு நானே அந்த குங்குமத்தை வச்சு விடனும் அதானே..!!!” என்று நக்கலாக கேட்டவன் எல்லாம் என் நேரம் என்று நினைத்துக் கொண்டு ரித்திகாவின் நெற்றியிலும், அவளுடைய தாலியிலும், குங்குமத்தை வைத்து விட்டான். 

ஏன் என்று தெரியவில்லை வருண் அதை செய்யும்போது தன் மனதிற்குள் சந்தோசம் பட்டுக் கொண்டாள் ரித்திகா. 🥰 அவன் இதை என்ன மன நிலையில் செய்கிறான் என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. ஆனால் அவன் தனக்காக தன்னுடன் இணைந்து செய்யும் ஒவ்வொரு சிறிய செயலையும் அவள் ரசிக்க தொடங்கினாள். 😍 💕 இந்த உலகமே பார்த்து வியக்கும் மனிதர்களில் ஒருவன், இப்போது அவளுடைய கணவனாக அவள் அருகே நிற்கிறான் என்று யோசிக்கும்போது அதை நினைத்து அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  அதனால் தன்னுடைய தாலியை கையில் ஆசையாக எடுத்துப் பார்த்த ரித்திகா, “நீ இப்போ மிஸ்ஸஸ் வருண் நாராயணன் ஆயிட்ட ரித்திகா .” என்று தனக்குள் நினைத்து சிரித்து கொண்டு தன் தாலியை எடுத்து மீண்டும் உள்ளே போட்டுக் கொண்டாள். 

ரித்திகாவுடன் இருக்கும்போது எல்லாம் தன்னுடைய மனம் லேசாக அவள் பக்கம் சாய்வதை உணர்ந்த வருண், ஆனாலும் எரிச்சலுடன் ரித்திகாவை பார்த்தான். 😒 இவளிடம் அப்படி என்ன தான் மாயாஜாலம் இருக்கிறது என்று யோசித்த அவனுடைய மனம், இதற்கு மேலும் தான் இவளோடு தன்னுடைய நேரத்தை செலவிட்டு கொண்டு இருந்தால் இவள் தன்னையே மொத்தமாக மாற்றி விடுவாள் என்று நினைத்து பயப்பட வருண். விஷ்ணுவுடன் அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல சொல்லிவிட்டு அவன் அந்த கோவிலில் இருந்து அப்படியே தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று விட்டன். ஆனால் செல்வதற்கு முன் தன்னுடைய குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக சில பாடி கார்டுகளை ஏற்பாடு செய்துவிட்டு தான் அங்கு இருந்து சென்றான்  வருண்.

சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த நாராயணன் குடும்பத்தினரை மீடியா ஆட்கள் சூழ்ந்து கொண்டனர். தன்னுடைய குடும்பத்தினரை வருணின் ஸ்தானத்தில் இருந்து இப்போதுதான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த விஷ்ணு முன்னே சென்று, “ப்ளீஸ் வழி விடுங்க. பப்ளிக் பிளேஸ்ல இந்த மாதிரி நீங்க கும்பலா கூடி இருந்தீங்கன்னா, இதனால பப்ளிக் ரொம்ப சபர் ஆவாங்க.” என்று சொன்னவன் பாடி கார்டுகளின் உதவியுடன் ரித்திகாவையும், தன்னுடைய குடும்பத்தினரையும், அழைத்துக் கொண்டு தங்களுடைய காரின் அருகே சென்று கொண்டு இருந்தான். அப்போது ஒரு செய்தி சேகரிப்பாளர், “இந்த மேரேஜ் ரித்திகா மேடம் ஓட சம்மதம் இல்லாம தான் நடந்ததுன்னு தொடர்ந்து நிறைய ரூம்பர்ஸ் வந்துட்டு இருக்கு. அதை பத்தி நீங்க என்ன மேடம் சொல்ல நினைக்கிறீங்க…???” என்று ரித்திகாவை பார்த்து கத்தி கேட்க, அதுவரை நடந்து கொண்டு இருந்த ராகவி அந்த நிருபரை பார்த்த படி அப்படியே திரும்பி நின்றாள். 

பின் விஷ்ணு தன்னை தடுப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் அந்த நிருபரின் அருகே சென்ற ரித்திகா , “நீங்களே எங்க மேரேஜ் ஐ பத்தி வந்ததெல்லாம் ரூமர்ஸ்னு சொல்றீங்க. அப்புறம் தனியா வேற நான் அத பத்தி என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க..?? எங்களோட மேரேஜ் நாங்க ரொம்ப நாளைக்கு முன்னாடியே டிசைட் பண்ணது. நானும் என்னோட ஹஸ்பண்டும் எங்களோட மேரேஜ் -காக ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருந்தோம். நாங்க நாராயணன் மஹாலுக்கு போகும்போது திடீர்னு அப்படி ஒரு பாம் பிளாஸ்ட் நடக்கும்ன்னே நாங்க யாருமே எதிர்பார்க்கல. என்னோட ஹஸ்பண்ட் ஆல்ரெடி மீடியா கிட்ட சொன்ன மாதிரி அந்த பாம் பிளாஸ்ட் -னால நான் ரொம்ப சிவியர் அஃபெக்ட் ஆயிட்டேன். ரொம்ப பக்கத்துல இருந்து அத பாத்ததனால என்னால அதில இருந்து வெளியில வர முடியாம எனக்கு ஹை ஃபீவர் வந்துருச்சு. 

அதான் நான் எங்களோட மேரேஜ் அப்போ கூட மயக்கமவே இருந்தேன். அதுக்காக சிலர் அவங்க இஷ்டத்துக்கு எனக்கு இஷ்டம் இல்லாமலேயே இந்த கல்யாணம் நடந்துச்சுன்னு சொல்லி ரூமர்ஸ் ஐ கிளப்பிவிட்டு இருக்காங்க. எங்கள பத்தியும் எங்களோட மேரேஜ் ஐ பற்றியும் காசிப் பண்றவங்களுக்கு எல்லாம் நான் ஒன்னே ஒன்னு தான் சொல்ல நினைக்கிறேன், நானும், வருனும், லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களோட அழகான குட்டி உலகத்துல நானும் அவரும் எங்க பையனும், ரொம்ப சந்தோஷமா வந்துட்டு இருக்கோம். சோ ப்ளீஸ் இந்த மாதிரி ரூமர்ஸ் ஸ்பிரட் பண்றது எல்லாத்தையும் இப்பவே ஸ்டாப் பண்ணுங்க.” என்று ஒரே மூச்சில் சொன்னவள், அதற்கு மேலும் அந்த நிருபரை தன்னிடம் எந்த குறுக்கு கேள்வியும் கேட்க விடாமல் தாங்கள் வந்த காரை நோக்கி வேகமாக சென்றுவிட்டாள்.

காருக்குள் அமர்ந்த படி தன்னுடைய மருமகள் பேசியவை அனைத்தையும் பார்த்து ரசித்த செண்பகம், தன்னுடைய மூத்த மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாளோ அதே போல் ரித்திகா இருப்பதால் தன்னுடைய செலக்ஷனைக் கண்டு தன்னை தானே மெச்சிக் கொண்டவள் உள்ளம் மகிழ்ந்தாள். 😍 தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து கொண்டே கிளம்பிய விஷ்ணு நாராயணன் பேலஸிற்கு அவன் திரும்பி வரும் வரை ரித்திகாவை பாராட்டி கொண்டே இருந்தான். ஷாலினியும் தன்னுடைய பங்கிற்கு ரித்திகாவை பாராட்டி தள்ளினாள்.

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured