Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 208

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 208

by Thenaruvi Tamil Novels
42 views

அத்தியாயம் 208: அழகிய குடும்பம் (பார்ட் 1)

ரித்திகாக்கு மயக்கம் தெளிந்த பின் அவளை விரைவாக கிளம்பும் படி சொன்ன வருண், தன்னுடைய வேலைகளை  பார்ப்பதற்காக தன்னுடைய ஸ்டடி ரூமிற்கு சென்று விட்டான். என்ன தான் அவளுக்கு மயக்கம் தெளிந்து இருந்தாலும், இன்னும் ரித்திகா சோர்வாக தான் உணர்ந்தாள். அதனால் மெதுவாக கட்டிலில் இருந்து எழுந்தவள், மீண்டும் தன்னுடைய வாட்ரோப் ஐ நோக்கி சென்றாள்.

வருண் அவளுக்கு தேர்வு செய்து கொடுத்து இருந்த பட்டுப்புடவை தண்ணீரில் விழுந்து நாசம் ஆகி இருந்தது. அதனால் தான் வேறு எந்த புடவையை கட்டலாம் என்று அங்கே இருந்த அனைத்து வாட்ரோப்களையும் திறந்து வைத்து கொண்டு குழப்பமுடன் பார்த்து கொண்டு இருந்தாள் . 🙄 அங்கே இருந்த அனைத்து புடவைகள் மற்றும் பிற ஆடைகள் அனைத்துமே நேர்த்தியாகவும், விலை உயர்ந்ததாகவும், அவளுக்கு பிடித்ததாகவும் இருந்தது. அதில் சிலவற்றில் பிரைஸ் டாக் கூட அகற்றப்படாமல் இருந்தது. அதனால் அதில் என்ன விலை போட்டு இருக்கிறது என்று செக் செய்த ரித்திகாவிக்கு ஒரு மினி ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டு சென்றது.

அங்கே இருந்த ஒவ்வொரு பட்டுப் புடவையின் விலையும் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் முதல் சில சுத்தமான தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவைகள் 10 லட்சம் வரை இருந்தது. அதை எல்லாம் பார்த்த ரித்திகாவிக்கு அந்த புடவையை தன்னுடைய கையால் தொடுவதற்கு கூட மிகவும் பயமாக இருந்தது. அப்போது சற்று நேரத்திற்கு முன் அவள் ஒரு புடவையை தண்ணீரில் போட்டு வீணாக்கியது அவளுக்கு ஞாபகம் வர, “ஆத்தாடி அது எவ்ளோ பிரைஸ்னு தெரியலையே..!!! நல்ல வேளை அவர் நான் அந்த சாரிய வேஸ்ட் பண்ணிட்டேன்னு என் மேல கோவிச்சுக்கல.” என்று நினைத்த ரித்திகா, வருண் தனக்கு தேர்வு செய்து கொடுத்த புடவையை போலவே அதே கலரில் உள்ள வேறு ஒரு புடவையை தன் கையில் எடுத்து கொண்டு உடை மாற்றுவதற்காக சேஞ்சிங் ரூமிற்கு சென்றாள். 

அவளுக்கு ஏற்கனவே நன்றாக புடவை கட்ட தெரியும் என்றாலும், அந்த விலை உயர்ந்த புடவையை பக்குவமாக கையால வேண்டும் என்று அவள் நினைத்ததால் மிக மெதுவாக ப்ளீட்ஸ் எடுக்க தொடங்கினாள். அவள் தேர்வு செய்து எடுத்து வந்த புடவைக்கு மேட்ச் ஆக இரண்டு மூன்று டிசைனர் பிளவுஸ்கள் அவளுடைய அளவில்  தைத்து வைக்கப்பட்டிருந்தது . அதில் டிரண்டியாக இருந்த ஒரு டிசைனை தேர்வு செய்த ரித்திகா , அதை அணிய முயன்றாள். ஆனால் அந்த பிளவுஸின் கொக்கி அவளுடைய முதுகு பக்கம் இருந்ததால் அவளால் அதை சரியாக போட முடியவில்லை. 

அதனால் டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியின் பிளவுஸ் மற்றும் இன்ஸ்கர்ட் உடன் நின்று கொண்டு இருந்த ரித்திகா, அந்த கொக்கியை போடுவதற்காக போராடிக் கொண்டு இருந்தாள். ஸ்டடி ரூமில் மும்முறமாக கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்த்து வேலை செய்து கொண்டு இருந்த வருண், எதேச்சையாக அதில் நேரத்தை கவனித்தான். அதில் நேரம் காலை 11: 30 மணி என்று காட்டியது. நேரத்தை பார்த்தவுடன் டாக்டர் சொன்னதும் ரித்திகாவை பற்றிய நினைவு அவனுக்கு வந்தது. டாக்டர் வருனிடம் ரித்திகாவை சரியாக நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார். 

ஏற்கனவே அவள் இன்று காலையில் இருந்து இரண்டு முறை மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டதால், இவள் சாப்பிடாமல் இருந்து மீண்டும் மயக்கம் போட்டு விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்து வருண், ரித்திகா என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்று பார்ப்பதற்காக தன்னுடைய அறையை நோக்கி விரிந்தான். 

வருண் அங்கு வரும் வரையில் கூட ரித்திகா தன்னுடைய பிளவுஸின் கொக்கியவுடன் தான் போராடிக் கொண்டு இருந்தாள். இதில் அவள் கண்ணாடியை பார்த்து ஒவ்வொரு புறமாக டிசைன் டிசைனாக திரும்பி தன்னுடைய முதுகை கண்ணாடியில் பார்க்க முயன்றாள். அப்போது அவளுடைய முக பாவனைகள் அஷ்ட கோணலாக இருந்தது. அவற்றை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்து லேசாக புன்னகைத்த வருண், “பிளவுஸ் ஓட ஹூக் ஐ கூட இவளுக்கு ஒழுங்கா போட தெரியல. இவள் எல்லாம் டீச்சரா வேல பாக்குற. ஸ்டுடென்ட்ஸ்க்கு இவ அங்க போய் என்ன தான் சொல்லி தரான்னு தெரியல. இவள மாதிரியான ஆளுக்கெல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் குடுத்து இருக்கான் பாரு விஷ்ணு, அவன சொல்லணும். நான் இந்த சூனியக்காரிகிட்ட  மாட்டிக்கிட்டதுக்கு மெயின் ரீசனே அந்த விஷ்ணு தான். அவன் ஏதாவது ஒரு விஷயத்துல வகையா மாட்டடும். அவனை நல்லா வச்சு செஞ்சி விட்றனும்.” என்று நினைத்த வருண் ரித்திகாவின்   அருகே சென்றான்.

ரித்திகா இன்னும் தன்னுடைய கவனத்தை அந்த பிளவுஸின் மீது தான் வைத்து இருந்தாள். அதனால்  தன் பின்னே வந்து கொண்டு இருக்கும் வருணை அவள் கவனிக்கவில்லை. வருண் ரித்திகாவின் மிக அருகில் வந்துவிடபோது தான் அவனை கவனித்தவள், அதிர்ச்சியில் வேகமாக தன் மார்பிற்கு  குறுக்கே தன்னுடைய இரு கைகளையும் வைத்து மறைத்துக் கொண்டாள், தான் இப்படி செய்தால் அவன் தன்னை பார்த்துவிட மாட்டான் என்ற நம்பிக்கையில்.

அவளுடைய இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. ❤️ 🥰 வெட்கம் அவளை பிடுங்கி தின்ன, வருணின் கண்களை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தன்னுடைய தலையை கீழே குனிந்து கொண்டாள் ரித்திகா. ☺️ அவளைப் பார்த்து நக்கலாக சிரித்த வருண், “அதான் நான் ஆல்ரெடி எல்லாத்தையும் பாத்துட்டனே..!!! இப்ப நான் எதை பார்க்க கூடாதுன்னு நீ கஷ்டப்பட்டு மூடுற..??” என்று குறும்பாக கேட்டான். 😂 😂 😂

அவன் சொன்னதை கேட்டு  கூச்சத்தில் நெலிந்த ரித்திகாவிக்கு தான் எங்கேயாவது சென்று ஒளிந்து கொள்ளலாமாம்  போல் இருந்தது. ☺️ ஆனால் பாவம் அவளால் வருணின் பார்வையில் இருந்து எங்கும் தப்பி சென்று விட முடியாதே.. அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டே இருந்தாள் ரித்திகா.  வருண் ரித்திகாவின் பின்னே நின்று கொண்டு கண்ணாடியில் தெரிந்த அவளுடைய பிம்பத்தை பார்த்தான். 

அப்போது அவன் அவள் கழுத்தில் கட்டிய ஈரம் காயாத மஞ்சள் தாலி அவனுடைய கண்ணில் பட்டது. அதைப் பார்த்தவுடன் ரித்திகாவை தன்னுடைய மனைவி என்ற எண்ணம் வருனுக்குள்ளும் எழுந்தது. அதனால் அவளுடைய இடுப்பில் தன்னுடைய ஒரு கையை போட்டு அவளை தன் பக்கம் வேகமாக இழுத்தவன், அந்த பிளவுஸின் ஹுக் ஐ அவளுக்கு போட்டு விட்டான். அவனை தயக்கத்துடன் கண்ணாடி வழியாக நிமிர்ந்து பார்த்த ரித்திகா, “தேங்க்ஸ்.”  என்று மெல்லிய குரலில் சொன்னாள். 😍 🥰

மீண்டும் அவளை பார்த்து குறும்பாக சிரித்த வருண், “உனக்கு சேரி ஆவது கட்ட தெரியுமா..?? இல்ல அதையும் கட்றதுக்கு என்னோட ஹெல்ப்ப் வேணுமா…???” என்று நக்கலாக கேட்டான். 😂 😂 😂 அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து போய் அவனை திரும்பி பார்த்த ரித்திகா, “ஐயையோ வேண்டாம் வேண்டாம். நானே கட்டுகிறேன். ப்ளீஸ் நீங்க கொஞ்ச நேரம் வெளில போய் வெயிட் பண்ணுங்க.” என்று அவசரமான குரலில் சொன்னாள். அதனால் வருண் “கம் சூன்.” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். 

பின் சிறிது நேரத்தில் ரித்திகா தயாராகி வெளியே வந்தாள். வருண் அவளை தலை முதல் கால் வரை தன்னுடைய கண்களால் ஸ்கேன் செய்து பார்த்தான். பச்சை நிற பட்டு புடவையில் தன்னுடைய நீண்ட கூந்தலை பின்னி முன்னே போட்டு… கழுத்தில் தாலி நெற்றியில் குங்குமம் என, புதிதாக பூத்த மலரை போல் பிரெஷ் ஆக இருந்தாள். பார்ப்பதற்கே மங்களகரமாக இருந்த ரித்திகாவை பார்க்கும் போதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை அவனுடைய மனதில் ஆணி அடித்ததை போல் மீண்டும் மீண்டும் அவள் உன்னுடைய மனைவி என்ற எண்ணம் மேலோங்கிக் கொண்டே இருந்தது. 

இப்படி ஒரு உணர்வு அவனுக்கு ஜான்வி இடம் கூட ஏற்பட்டது இல்லை என்று யோசிக்கும்போதே அவனுக்கு ஜான்வின் ஞாபகம் வந்துவிட, ரித்திகாவை பார்ப்பதை தவிர்த்த வருண் எதுவும் பேசாமல் அவன் பாட்டுக்கு எழுந்து கீழே செல்வதற்காக லிப்ட் இன் பக்கம் சென்று கொண்டு இருந்தான். “இருங்க நானும் வரேன்.” என்று சொன்ன ரித்திகா ஓட்டமும்  நடையுமாக அவன் பின்னே சென்றாள். பின் அவர்கள் இருவரும் லிப்டில் ஏறி கீழே வந்து சேர்ந்தனர்.  ஹாலில் ஷாலினி மற்றும் விஷ்ணுவுடன் விளையாடிக் கொண்டு இருந்த சித்தார்த் ரித்திகாவை பார்த்தவுடன், “ரித்திஅம்மா.” என்று சொல்லி அவளை சத்தமாக அழைத்து கொண்டே அவள் அருகே ஓடி சென்று  அவளுடைய கால்களை வழக்கம் போல் இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டான். 

பாசமாக அவனைப் பார்த்து புன்னகைத்த ரித்திகா, அவனை தூக்கி தன்னுடைய இருப்பில் அமர வைத்துக் கொண்டு அவனிடம் பேசிய படி நடக்கத் தொடங்கினாள். 😁 😁 😁 சித்தார்த் அங்கே வந்தவுடன் ரித்திகா வருணை கண்டு கொள்ளவில்லை. ரித்திகாவை பார்த்தவுடன், அங்கே வருண் என்ற ஒரு ஆள் இருப்பதையே சித்தார்த் கண்டு கொள்ளவில்லை. அதனால் கடுப்பான வருண் தாயையும், மகனையும், மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான். 😒

ரித்திகா கீழே வந்தவுடன் சுகந்தியை அழைத்த செண்பகம் இப்போது நேரம் நன்றாக இருக்கிறதா என்று பஞ்சாங்கத்தில் பார்த்துவிட்டு வரும் படி அவளை அனுப்பி வைத்தாள். சில நிமிடங்களில் அங்கே வந்த சுகந்தி, “இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு நேரம் நல்லா தான் அம்மா.” இருக்கு என்று சொன்னாள். “சரி நம்ம பிரிட்ஜில பூ வாங்கி வைத்திருந்தோம்ல்ல… அதை போய் நீ எடுத்துட்டு வா. ரித்திகா வச்சுக்கட்டும்.” என்று சுகந்தி  இடம் செண்பகம் சொல்ல, சில நிமிடங்களில்  பூக்கள் நிரம்பிய பெரிய கவருடனும், ஹேர் பின் உடனும் அங்கே வந்தாள் சுகந்தி. 

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured